ஐக்கிய நாடுகள் சபையில் சென்ற ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி வழங்குவதை தடுப்பீர்களா என்று பிரித்தானியப் பிரதிநிதியிடம் கேட்டபோது அதற்கும் தமிழர் பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை என்று பிரத்தானியப் பிரதிநிதி பதிலளித்தார். சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கைக்கான கடனுதவி வாக்கெடுப்புக்கு வந்தபோது பிரித்தானியப் பிரதிநிதி எதிர்த்து வாக்களிக்க வில்லை. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட்டார். இலங்கைக்கு பிரித்தானியா இரகசியமாக ஆயுத விற்பனையும் செய்தது.
சென்ற ஆண்டு அமெரிக்கா இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பாக ஒரு 73 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவ்வாண்டின் ஆரம்பத்திலிருந்தே கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுரகம் பலதரப்பிலிருந்தும் முக்கியமாக பன்னாட்டுத் தொண்டர் அமைப்புக்களிடம் இருந்தும் தினசரி போர்முனைத் தகவல்களைத் திரட்டியுள்ளது என்பது அவ்வறிக்கையைப் பார்க்கும் போது புலப்படுகிறது. இந்த அறிக்கை சிங்களவர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது. அதைத் தொடர்ந்து அமெரிக்க செனட் சபைக்கு ஒரு அறிக்கை (சரத் பொன்சேக்கா அமெரிக்க வேண்டுகோளின் பேரில் தேர்தல் களத்தில் இறங்கியபின்) சமர்க்கிக்கப் பட்டது. அதில் அமெரிக்கா சிங்களவர்களைத் திருப்திப் படுத்தும் நோக்கத்தில் தயாரிக்கப் பட்டது.
இந்து சமூத்திரத்தில் இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை இலங்கையின் அயல்நாடான இந்தியாவிற்கு முன்னர் அமெரிக்கா நன்கு உணர்ந்து கொண்டது.உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பகுதி இந்து சமுத்திரத்தின் ஊடாகவே நடை பெறுகிறது. நீர் மூழ்கிக் கப்பல்களுக்கிடையிலான தொலை தொடர்பு நிலையம் அமைப்பதற்கு இலங்கை மிக உகந்ததாக கருதப் படுகிறது. இலங்கைக்கு இந்தியா வெளியுறவுத் துறை கொடுக்கும் முன்னுரிமையிலும் பார்க்க அதிக முன்னுரிமையை அமெரிக்கா இலங்கை சுதந்திரம் அடைந்தில் இருந்தே கொடுக்கத் தொடங்கிவிட்டது. இதே வேளை சீனா ஒரு காத்திரமான நட்புறவை இலங்கையுடன் நிதானமாகவும் நீண்ட கால அடிப்படையிலும் கட்டி வளர்த்து வந்தது. சீனா மத்திய கிழகில் இருந்து இறக்குமதி செய்யும் தனது எரிபொருள்களும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வரும் மூலப் பொருட்களினது தடையின்றிய விநியோகத்திற்கு இலங்கியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தே இதைச் செய்தது. இப்போது இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சீனா முதலாம் இடத்தைப் பிடித்து விட்டது. இந்தியாவிற்கு ஒருபுறம் சீன-பாக்கிஸ்த்தானிய நட்பு அச்சு ஒரு சவால். இன்னொரு புறத்தின் சீன-மியன்மார் நட்பு ஒரு சவால். அத்துடன் நிற்காமல் சீன-இலங்கை-ஈரானிய நட்பு அச்சு இன்னொரு புறமாக இந்தியாவிற்கு ஆப்பு வைக்கிறது. இலங்கை தான் கூட்டுச் சேராக் கொள்கையுடைய நாடு என்று சொல்லிக் கொண்டே இந்த இந்திய எதிர்ப்புக் கூட்டணிகளில் இணைந்து கொண்டது.
இந்தப் பின்னணியில் தமிழர்கள் சரத் பொன்சேக்காவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று மேற்குலகப் பத்திரிகைகள் ஆலோசனை தெரிவிக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் மேற்குலகம் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு தொடர்பாக தமது கருத்துக்கள் என்ன என்பதை தெளிவு படுத்தவில்லை. முன்பு அதிகாரப் பரவலாக்கம் என்று கூறிவந்த மேற்குலக நாடுகள் இப்போது அதிகாரப் பரவலாக்கம் என்ற சொல்லைப் பாவிப்பதில்லை. அதிகாரப் பரவலாக்கம் என்ற பதம் சிங்களவர்களுக்கு பிடிக்காது என்று அவை உணர்ந்து கொண்டுள்ளன. கேந்திர முக்கியத்துவம் வாயந்த ஒரு நாட்டின் பெரும் பான்மை சமூகத்தின் அதிருப்தியை சம்பாதிப்பதில்லை என்று அவை எண்ணுகின்றன. ஆனால் இலங்கை இனப் பிரச்சனை இலங்கைத்தீவில் அமைதிக்கு என்றும் பங்கமாக இருக்கும் என்று அவை நன்கு அறியும் அதற்காக அவை தமது நிலைப்பாட்டில் இரு அம்சங்களைக் கொண்டுள்ளன:
- இலங்கையில் இனங்களுக்கிடையிலான இணக்கப் பாடு தேவை.
- இலங்கை இனப் பிரச்சனைக்கான தீர்வு இலங்கைக்குள் இருந்தே உருவாக வேண்டும். வெளியில் இருந்து திணிக்க முடியாது.
இப்படிச் சிங்கள மக்களின் விருப்பிற்கேற்ப கருத்து வெளியிடும் மேற்குலக கருத்துக்க்களை தமிழ் மக்கள் நம்பக் கூடாது.
2 comments:
தமிழர்கள் யாரையும் நம்புவதற்கில்லை மேற்குலகமும் எம்மை அழித்ததில் பங்காளிகள் தான் அப்படித் தான் நம்பினாலும் பரவாயில்லை இந்தியாவை நம்புவதிலும் மேற்குலகு பரவாயில்லை
இப்போதைய கையறு நிலைக்கு தற்காலிக தீர்வு பற்றித் தான் தமிழர்கள் சிந்திக்க வேண்டும்
மூஞ்சூறு தான் போக வழியைக் காணொம் விளக்குமாற்றையும் இழுத்துக் கொண்டு போவது போல் தான்
தமிழர்களின் பேரம் பேசும் சக்தியை, வலுவை அழித்து விட்டு பேசுங்கள் என்று சொல்வது எவ்வளவு கேலிக்கூத்து
இப்போது கொடுப்பதை வாங்குவதை தவிர தமிழர்களிடம் எதுவுமில்லை ஆனால் கொடுப்பதற்கும் யாருமில்லை
தமிழர்களுக்கு இந்த தேர்தல் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கின்றது சிங்களவர்களை மோத விடவும் முதல் எதிரியை தோற்கடிக்கவும் மூச்சு விட சில காலமும் மட்டுமே
நாங்கள் தொடங்கிய இடத்திற்கு மீண்டும் வந்திருக்கின்றோம் ஆனால் ஒரு வித்தியாசம் எம்மைப் பற்றி ஒப்புக்காவது கதைக்கும் நிலையில் இருக்கின்றோம்
அதை விடுத்து தமிழீழம் சுயாட்சி என்பதெல்லாம் மேற்குலகம் இந்தியா உலக ஆதிக்கம் என்றெல்லாம் பேசுவது ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல் தான்
வெறும் வீரவசனம் மட்டுமே
யாரையும் குழப்பாதீர்கள் சரத் வெல்லட்டும் என்னதான் நடக்குது என்று பார்போம்
sarath is best and better to this nation ok mahinda is monkey.so his mind also like monkey so sarath want to win............
Post a Comment