Wednesday, 29 July 2009

நடுக் கடலில் மானம் கெட்ட இந்தியக் கரையோரக் காவற்படை - இந்திய அரசு ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்?


நடுக்கடலில் பழுதடைந்த இந்திய மீனவர்களின் படகைக் கட்டி இழுத்துச் செல்வதற்கு இந்தியக் கரையோரக் காவற் படையினர் தயாராகிக் கொண்டிருந்த வேளை அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் இந்தியர்கள் மீது சரமாரியாகச் சுடத் தொடங்கினர். பயந்து நடுங்கிய இந்தியக் கரையோரக் காவற் படையினர் தமது கைகளை உயர்த்தி அவர்களிடாம் சரணடைந்தனர். அவர்கள் கப்பலுக்குள் ஏறி சோதனையிட்ட பின் இலங்கைக் கடற்படையினர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

தமிழ் மீனவர்களைப் பொறுத்தவரை கண்டவுடன் சுடும் கொள்கை
இந்தச் சம்பவத்திலிருந்து புலப்படுவது இலங்கைக் கடற்படை தமிழ் மீனவர்களைப் பொறுத்தவரை கண்டவுடன் சுடும் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது என்பதாகும்.

இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை வருத்தம் தெரிவிக்காதது ஏன்?
இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை அரசு இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இக் கடற்பகுதியப் பொறுத்தவரை இலங்கைக் கடற்படை தான் தோன்றித் தனமாக நடந்து கொள்ளலாமா?

இந்திய அரசு ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்?
இந்த சம்பவத்திற்கு இதுவரை இந்திய அரசு இலங்கை அரசிடம் ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அது சிங்களவனுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பதா? இது கடலில் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஹிந்து ராம் போன்றோர்கள் மற்ற தமிழினத் துரோகிகளுடன் சிங்களத் தூதுவன் ஹ்ம்சாவுடன் விருந்து உண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

4 comments:

Anonymous said...

நாலு மணி நேர உண்ணாவிரதத்தின் மூலம் இது தீர்க்கப் படலாம்.

Anonymous said...

Poor little India.

Anonymous said...

Citizens of India!!! Shame on you!!!!
Naakai pidungik kondu saahalam!

Anonymous said...

தமிழன் இந்தியன் அல்ல!

பஞ்சாபின் சர்தாரும்,
குஜ்ராத்தின் மோடிகளுந்தான் இந்தியர்கள்.
அவமானப் படுவது தமிழ் அநாதைகள் தானே.அவர்கள் பேசியே சாகட்டும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...