Thursday, 30 July 2009

வன்னி வதை முகாம்கள்: 180 நாள் கணக்கு என்று தொடங்கும் என்று முடியும்.


பிள்ளையார் தனது தாய் உமாதேவியிடம் நச்சரித்தாரம் எனது திருமணம் எப்போது என்று. அவரின் ரோதனை தாங்காத தாயார் இந்தா சுவரில் எழுது நாளைக்கு உனக்குத் திருமணம் என்று சொன்னாராம். அப்படியே பிள்ளையாரும் செய்தாராம். மறுநாள் பிள்ளையார் வந்து திருமணத்தைப் பற்றிக் கேட்டபோது என்ன எழுதி இருக்கிறாய் என்றுபார் என்றாராம். நாளைக்கென்றுதானே எழுதி இருக்கிறாய். நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்றாராம். இப்படி பிள்ளையாருக்கு இன்றுவரை தாயார் சொல்லிவருகிறாராம்.

இப்படித்தான் வன்னியில் உள்ள வதை முகாம்களின் அடைக்கப் பட்டுள்ள தமிழர்களின் கதியும். மே மாதத்தில் சொன்னார்கள் இன்னும் 180 நாட்களுக்குள் இவர்கள் மீள்குடியேற்றப் பட்டுவிடுவார்கள் என்று. இந்தியாவும் வீரம் பேசியது. உடனடியாக கண்ணிவெடிகள் அகற்றும் பணி ஆரம்பிக்கப் படவேண்டும் இல்லையேல் எமது படையினர் இலங்கை சென்று அதைச் செய்வார்கள் என்று. இதை உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளின் கொத்தடிமைகள் வெகுவாகப் புகழ்ந்தனர். இந்தியா தமிழர்கள் தொடர்பாக ஒரு தீர்ககமான நிலையில் இருக்கிறது என்று.

பின்னர் இலங்கை அறிவித்தது 80 விழுக்காட்டினர் 180 நாட்களில் மீள் குடியேற்றப் படுவார்கள் என்று. பின்னர் சர்வ தேச நாணய நிதியத்திடம் அதை 70 விழுக்காடாகக் குறைத்துக் கொண்டனர். சர்வதேச நாணய நிதியம் கடன் கொடுப்பதாக அறிவித்தவுடன் 60,000 படையினரக் குடும்பங்களுடன் குடியமர்த்திய பின்னே முகாமிலுள்ள அகதிகள் குடியேற்றப் படுவார்கள் என்று இலங்கை அரசு இப்போது கூறுகிறது.

பயங்கர வாத ஒழிப்பு என்ற போர்வையில் இலங்கை இனக் கொலைக்கு உதவியது இந்தியா. ஒரு விடுதலைப் புலிப் போராளி இப்படிக் கூறுகிறார்:
வட்டுவாகல் தாண்டும் போது வரவேற்றவர்களில் நான் ஒரு சீக்கிய இந்திய தளபதியைக் கண்டேன். சிறிது தூரத்தில் சிங்களப் படை சிப்பாயின் சீருடையில் ஒரு வெள்ளை இன அதிகாரியை சந்திக்க நேர்ந்தது.

இவர்கள் இப்போது என்ன செய்யப் போகிறார்கள். இணைத் தலைமை நாடுகள் என்று ஒன்று இலங்கை இனப் பிரச்சனையைத் தீர்க்கப் போவதாகக் கூறியது அது இப்போது எங்கே?

தமிழ்நாட்டில் என்ன செய்யப் போகிறார்கள்?
இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி என்னிடம் கலந்து பேசுவதற்காக இலங்கை அமைச்சர் தொண்டமான் தலைமையில் என்னைச் சந்தித்தனர். தமிழ்நாட்டில் இருந்து ஒரு குழு இலங்கைக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். மத்திய அரசின் அனுமதியை பெற்று கலந்து பேசிதான் செயல்பட முடியும் என்று கூறினேன். நிச்சயம் அவர்கள் வாழ்வுரிமையை பெற நாம் ஒன்றாக செயல்படுவோம். விரைவில் நல்ல பதில் கிடைக்கும்,” என்றார் கருணாநிதி. இவர் இப்போது என்ன செய்கிறார்?
சிதம்பரம் ஐயா எங்கே? போர் முடிந்தவுடன் சிதம்பரம் ஐயா சொன்னது:

இலங்கைத் தமிழர்களை இந்தியா பாதுகாக்கத் தவறியுள்ளது ன்பதனை ஏற்க முடியாது என இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்திடமும், தமிழீழ விடுதலைப் புலிகளுடமும் தமிழர் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தி வந்த போதிலும் இரு தரப்பினரும் அதனை உதாசீனம் செய்தே வந்தனர்.

தற்போதும் இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்தும் பணிகளை இலங்கை அரசாங்கம் சரியான முறையில் மேற்கொள்ளவில்லை என காரைக்குடியில் நடைபற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நிவாரணப் பொருட்களை நேரடியாக வழங்குலுக்கான அனுமதி, இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு செல்ல ஊடகங்களுக்கு அனுமதி, என்பனவற்றில் இலங்கை அரசுகவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்த அவர், இலங்கையில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்தியா ஐநாறு மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த 500கோடு ரூபா தமிழர்களுக்கான உதவியாஅல்லது இந்தியாவின் போரை இலங்கை முடித்ததற்கான கைக்கூலியா?


இந்தியா செய்யப் போவது என்ன?

தமிழர் பகுதிகளில் மெதுவாகக் காலூன்ற இந்தியா திட்டமிட்டுள்ளதை, அதன் அண்மைய நடவடிக்கைகள் தொளிவாக காட்டுகின்றன.

யாழ் காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலையை இந்தியாவின் பிர்லா நிறுவனமும்,

சம்பூரில் அனல் மின்னிலையம்,

தற்போது கடலடித்தடம் மூலம் மின்சாரம்

என பல வழிகளில் இலங்கையில் கால் பதித்து, அதன் மூலம் தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தககது.

இந்தியாவிற்குப் போட்டியாக சீனாவும், பாகிஸ்தானும் ஆதிக்க முனைப்பில் ஈடுபட்டு, பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு இணக்கம் தெரிவித்துள்ளன.


1 comment:

Anonymous said...

சிறிலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் வன்னியில் உச்சகட்டமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் இந்தியப் புலனாய்வு நிறுவனமான 'றோ' அமைப்பின் முகவர்கள் ஐம்பது பேர் சிறிலங்கா அரசுக்குத் தெரியாமல் வன்னியில் இருந்ததாக ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க குற்றம் சாட்டியிருக்கின்றார்.

தமிழனை அழிப்பதற்கு இப்படி எல்லாம் செய்தது மானம் கெட்ட இந்தியா....அது உதவுமா? தமிழனுக்கு பாக்கு நீரிணையின் இரு புறத்திலும் வாழும் தமிழர்களுக்கு எதிரி இந்தியாதான்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...