Thursday 31 January 2013

இஸ்ரேல் விமானத் தாக்குதல்: சிரியப் போரில் திடீர்த் திருப்பம்

சிரியா "விஞ்ஞான ஆய்வு மையம்" என்று சொல்லும் நிலையத்தின் மீது இஸ்ரேலிய விமானம் தாக்குதல் நடாத்தியது. இத்தாக்குதலை சிரியாவும் உறுதி செய்துள்ளது. இத்தாக்குதலை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. லெபனான் தனது வான் பரப்பினூடாக இஸ்ரேலிய விமானம் பறந்ததை உறுதி செய்துள்ளது.

பன்னாட்டுச் சமூகத்தின் பாரா முகம்
சிரியாவில் தொடரும் கடும் உள்நாட்டுப் போரில் பல அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். நாற்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டும் பன்னாட்டுச் சமூகம் எனத் தம்மை அழைத்துக் கொள்வோர் ஏதும் செய்யாமல் இருக்கிறார்கள். மாலியில் அல் கெய்தா பெரும் நிலப்பரப்பை கைப்பற்றிய செய்தி வந்தவுடன் விரைந்து களத்தில் இறங்கியது பிரெஞ்சுப் படை.

முரண்பட்ட செய்திகள்
இஸ்ரேலிய விமானம் சிரியாவில் இருந்து லெபனான் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த ஒரு பார ஊர்தியைத் தாக்கியதாக ஒரு செய்தி சொல்கிறது. இன்னொரு செய்தி சிரியாவின் "விஞ்ஞான ஆய்வு மையம்" ஒன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடாத்தியதாகச் சொல்கிறது. இஸ்ரேலிய அரசு மௌனமாக இருக்கிறது. சிரிய அரசு "விஞ்ஞான ஆய்வு மையம்" மீது குண்டுத்தாக்குதல் நடந்தது என்றும் இருவர் பலியானதுடன் ஐவர் காயம் என்றும் சொல்கிறது. 2007-ம் ஆண்டு இஸ்ரேல் சிரியா அணுக்குணு உற்பத்தியில் ஈடுபட முயன்ற போது இஸ்ரேலிய விமானங்கள் அணு ஆய்வு மையத்தின் மீது குண்டு வீசி அழித்தது.

வேதியியல்(இரசாயன) குண்டுகள் அழிக்கப்பட்டதா.
சிரியாவிடம் வேதியியல் குண்டுகள் இருக்கின்றன என்றும் அக்குண்டுகளை அதிபர் பஷார் அல் அசாத் தனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்கள் மீது வீசலாம் என்ற அச்சம் நீண்ட நாட்களாக இருக்கிறது. ஐக்கிய அமெரிக்கா இது தொடர்பாக சிரிய அரசைக் கடுமையாக எச்சரித்திருந்தது.  சிரிய வேதியியல் படைக்கலங்களை லெபனானியப் போரளி இயக்கமான ஹிஸ்புல்லாவிற்கு சிரிய அதிபர் அசாத் கொடுத்து விடுவாரா என்றபயம் நீண்ட நாட்களாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. அது மட்டுமல்ல சிரியாவில் இருந்து ஹமாஸ் இயக்கத்திற்கு இரசியத் தயாரிப்பு SA-17 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் அனுப்பப்பட்டு விடுமா என்ற பயமும் இருக்கிறது. இஸ்ரேலும் ஐக்கிய அமெரிக்காவும் சிரியாவைத் தமது தீவிர கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளன. சிரியாவில் இருந்து ஏதாவது படைக்கலன்கள் ஹமாஸிற்குப் போய்ச் சேருகிறதா என்பதை செய்மதிகள் மூலமும் தமது உள்வாளிகள் மூலமும் கண்காணித்த படியே இரு நாடுகளும் இருக்கின்றன. சிரியாவின் அழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்கள் ஹிஸ்புல்லாவிற்கு மட்டுமல்ல சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் மத்தியில் இருக்கும் இசுலாமியப் போராளிகள் கைகளுக்குப் போவதையும் இஸ்ரேலும் அமெரிக்காவும் விரும்பவில்லை. ஹிஸ்புல்லாவிற்கும் பஷார் அல் அசாத்திற்கும் நெருங்கிய நட்பு உண்டு. இஸ்ரேலியப் பிரதமர் சில்வன் ஷலோம் சிரியப் படைக்கலன்கள் இசுலாமியத் தீவிரவாதிகள் கைகளுக்கு இடம் மாறுவது சகல ஆபத்து எல்லைகளையும் தாண்டுவதாக இருக்கும் என எச்சரித்திருந்தார். Movement of chemical weapons to Islamist rebels in Syria or to the Hezbollah guerrilla group in Lebanon would be “a crossing of all red lines that would require a different approach, including even preventive operations.

லெபனானுடாக பறப்பு
சிரியா "விஞ்ஞான ஆய் மையம்" வுஎன்று சொல்லும் நிலையம் உண்மையில் வேதியியல் படைக்கலக் கிடங்கு என்று சொல்லப்படுகிறது. இதைக் கைப்பற்ற சிரியக் கிளர்ச்சியாளர்கள் கடும் முயற்ச்சியில் ஈடுபட்டும் கைப்பற்ற முடியாமம் இருக்கின்றனர். இஸ்ரேலில் இருந்து வந்த ஆளில்லா விமானம் "விஞ்ஞான ஆய் மையத்தின் மீது குண்டுகளை வீசியதாக நம்பப்ப்டுகிறது. சிரிய கதுவி(ரடார்)களுக்குள் மண்ணைத் தூவுவதற்காக அவ்விமானம் தாழப்பறந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. லெபனானினூடாகவே இஸ்ரேலிய விமானம் பறந்து சிரியாவிற்குள் புகுந்தது. 29-01-2013 செவ்வாய் கிழமை முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் 12 இஸ்ரேலிய விமானங்கள் தமது வான்பரப்பிற்குள் அத்து மீறி நுழைந்ததாக லெபனானிய அரசு உறுதி செய்துள்ளது. கடைசிப் பறப்பு செவ்வாய்க் கிழமை இரவு 7.00 அளவில் நிகழ்ந்தது என்கிறது லெபனான். சியா முஸ்லிம்கள் ஒரு அணுகுண்டு தயாரிப்பில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். ஈரான் இதில் கணிசமான அளவு முன்னேறியுள்ளது. ஈரான் அணு ஆய்வு மையங்களில் மீது தாக்குதல் நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.

இஸ்ரேலின் விமான ஆதிக்கம்
லெபனான் மீதும் பலஸ்தீனத்தின் மீதும் இஸ்ரேலிய ஆதிக்கத்தின் ஆணி வேராக இருப்பது அதன் விமானப்படையின் வலிமையும் இஸ்ரேலுக்கு எதிராக செயற்படும் ஹிஸ்புல்லாவிடமோ அலல்து ஹமாஸிடமோ தகுந்த விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இல்லாமல் இருப்பதே. சிரியாவிடம் இருக்கும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ஹிஸ்புல்லாப் போராளிகள் கைக்குப் போனால் இஸ்ரேலிம் விமான ஆதிக்கம் பலவீனமடைந்து படைத் துறை சமநிலையை இஸ்ரேலுக்குப் பாதகமாகத் திருப்பும்.  சிரியாவிடம் சிறந்த விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் நீண்டதூரம் தாக்கக்கூடிய SCUD ஏவுகணைகளும் இருக்கின்றன. லிபியாவில் செய்தது போல் நேட்டோப் படைகள் சிரியாவில் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க இரசியா தனது சிறந்த புதிய ரக விமான எதிர்ப்பு முறைமையை சிரியாவில் நிறுவியிருந்தது. இரசியாவின் படைத்தளம் உள்ள ஒரே ஒரு நாடு சிரியா மட்டுமே.  இஸ்ரேலிய விமானப் படைத் தளபதி Major General Amir Eshel இஸ்ரேலில் நடந்த பன்னாட்டு மாநாடு ஒன்றில் உரையாற்றும் போது சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் இறுதியில் எப்படி முடியும் என்பது யாருக்கும் தெரியாது; அங்கு பெரும் இன மோதல் உருவாகலாம்; போரின் பின்னர் சிரியாவின் பெரும் தொகையான  சிறந்த படைக்கலன்கள் அவற்றில் மரபு வழிப் படைக்கலன்களும் உண்டு; அவை யார் கைகளில் போய் முடியும் என்றார்.
"Country falling apart. Nobody has any idea right now what is going to happen in Syria on the day after, and how the country is going to look. This [sectarian crisis] is happening in a place with a huge weapons arsenal, some of which are new and advanced, and some of which are not conventional."

ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலும் 2006-ம் ஆண்டு 34 நாட்கள் மோதிக் கொண்டன அதன்போது 1200 ஹிஸ்புல்லாவினரும் 160 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் இருதரப்பும் மோதிக் கொள்ளவில்லை. ஆனால் ஹிஸ்புல்லா போராளித் தலைவர்களை அவ்வப்போது இஸ்ரேல் இரகசியமாகக் கொன்று வருகிறது. 2012இல் ஹங்கேரியில் இஸ்ரேலிய உல்லாசப் பயணிகளை ஈரானும் ஹிஸ்புல்லாவும் இணைந்து கொலை செய்தன என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியது. 2006இன் பின்னர் ஹிஸ்புல்லா ஈரானின் உதவியுடன் தனது படைக்கலன்களைப் பெருக்கி வருகிறது. இஸ்ரேலின் எந்தப் பகுதியையும் தாக்கக் கூடிய ஏவுகணைகள் ஹிஸ்புல்லாவிடம் இருப்பதாக இஸ்ரேல் சொல்கிறது.  இஸ்ரேல் தனது விமானத் தாக்குதல் மூலம் கடுமையான பதிலடி கொடுக்கும் என்ற படியால் ஹிஸ்புல்லா பொறுத்திருக்கிறது எனப்படுகிறது.

இஸ்ரேலியப் படைகள் தொடந்து தாக்குதல் நடாத்துமா?
பரம வைரிகளான சிரியாவும் இஸ்ரேலும் 1973-ம் ஆண்டு நடந்த அரபு - இஸ்ரேல் போருக்குப் பின்னர் மோதிக் கொண்டதில்லை. 2007-ம் ஆண்டு இஸ்ரேல் சிரியாவின் அணு ஆராய்ச்சி நிலையத்தில் தாக்குதல் நடாத்தி அழித்தது. மற்றும் படி இரு நாடுகளும் மோதிக் கொண்டதில்லை. 2007-ம் ஆண்டுத் தாக்குதலுக்கு சிரியா பதிலடி கொடுக்கப் போவதாகச் சூழுரைத்திருந்தது. ஆனால் இன்றுவரை எதுவும் செய்ததாக இல்லை. இஸ்ரேல் தனது விமான ஆதிக்கத்தை மத்திய கிழக்கில் தக்க வைத்துக் கொள்ள சிரியாவிடம் இருக்கும் வேதியியல் படைக்கலங்களையும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் நீண்ட தூரம் தாக்கக் கூடிய ஏவுகணைகளையும் அழித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றது.  இஸ்ரேல் 29-01-2013இலன்று நடாத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் முகமாக சிரிய அதிபர் பஷார் அல் அசாத் என்ன நடவடிக்கைகளை எடுப்பார் என்ற கேள்வியும் இருக்கிறது. இஸ்ரேலின் தன்னைச் சூழ இருக்கும் இசுலாமியர் கைகளில் காத்திரமான படைக்கலன்கள் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாடு சிரிய உள்நாட்டுப் போரில் பெரும் திருப்பு முனையாக இருக்கப்போகிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...