Sunday 21 October 2012

நகைச்சுவைக் கதை: பின்புறம் தீப்பிடிக்க...

அது ஒரு 40வது பிறந்த நாள் விருந்துபசாரம். ஒரு பிரபல மருத்துவரும் பிரபல சட்டவியலாளரும் ஒன்றாக அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர். மருத்துவரிடம் அடிக்கடி பலர் வந்து தமது உடல் உபாதைகளைச் சொல்லி அதற்கு உரிய மருத்துவ ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். தொடர்ந்து பலர் வந்து ஆலோசனைகள் கேட்டபடியால் மருத்துவர் சலிப்படைந்து தனது சட்டவியலாளரான நண்பரிடம் இப்படி என்னிடம் அடிக்கடி பலரும் வந்து மருத்து ஆலோசனை கேட்டு என்னைச் சிரமப் படுத்துகின்றனர். இதைத் தடுக்க ஒரு ஆலோசனை சொல்லுங்கள் எனக் கேட்டார். அதற்கு அந்தச் சட்டவியலாளர் என்னிடம் இப்படி யாராவது ஆலோசனை கேட்டால் அதற்குரிய கட்டணத்திற்கான பில்லை அவர்களுக்கு மறுநாளே அனுப்பி விடுவேன் என்றார். மருத்துவருக்கு அது ஓர் நல்ல ஆலோசனையாகப் பட்டது. ஆனால் மருத்துவருக்கு சட்டவியலாளர் தனது ஆலோசனைக்கான பில்லை அனுப்பி இருந்தார்.

இரு கழுகுகள் வானில் அவசரமாகப் பறந்து கொண்டிருந்தன அப்போது அவர்களுக்கு மேலே ஒரு ஜெட் விமானம் அவர்களை அச்சுறுத்தும் வகையில் பறந்து போனது. இவன் பறந்து போகும் வேகத்தைப் பார் என்றது ஒரு கழுகு. அதற்கு மற்றக் கழுகு எனது பின்புறத்தில் தீப்பற்றி எரிந்து புகை கக்கினால் நானும் இப்படி வேகமாகத்தான் பறப்பேன் என்றது.

வங்கி முகாமையாளரைச் சந்தித்த ஒரு பட்டதாரி தனக்கு ஒரு சிறு தொழில் ஆரம்பிக்க கடன் வழங்கும்படி கேட்டார். அதற்கு வங்கி முகாமையாளர் எங்களிடம் கடன் வாங்கி ஒரு பெரிய தொழில் ஆரம்பித்தீர்களானால் அது விரைவில் சிறு தொழில் ஆகிவிடும் என்றார்.





4 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்று.

"வங்கி " என்று அடுத்த கதை ஆரம்பிக்கும்முன் சில குறியீடுகள் இட்டால் இது அடுத்த கதை என்று உடனே உணரலாம்.
(எ.கா.: +++ )

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

"அவர்களுக்கு மேலே" என்பதை "அவைகளுக்கு மேலே" என்று குறிப்பிடலாமே?

Vel Tharma said...

குறைகளைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...