Monday 9 July 2012

தமிழ்நாடும் கர்நாடகாவும் வேறுநாடுகளா?

கரம் கொடுப்போம் தமிழினம் அழிப்போம்
இலங்கைப் படையினருக்கு சகல உதவிகளையும் இந்தியா வழங்கி தமிழர்களைக் கொன்று குவிக்க உதவியது.தமிழர்களுக்கு எதிரான இறுதிப் போரின் போது இலங்கைக்கு இந்தியாவில் இருந்து இருபதினாயிரம் படையினர் அனுப்பப்பட்டனர் என்று கருதப்படுகிறது. இந்தியா இலங்கைக்கு தமிழர்களுக்கு எதிரான போரில் உதவியதற்கு காரணங்களாக இரு பெரும் பொய்கள் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியின் அதிகார மையமான  தென் மண்டலத்தில் இருக்கும் தமிழின விரோதிகளால் சொல்லப்பட்டன. ஒன்று இலங்கை இந்தியாவிற்கு உதவாவிட்டால் சீனா உதவிசெய்யும் என்பது. மற்றது இலங்கையில் தமிழர்கள் தமக்கு என்று ஒரு நாட்டை அமைத்தால் அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்.

இந்தியாவின் தமிழின விரோதச் செயல்கள் தமிழர்களுக்கு எதிரான போர் முடிவடைந்ததுடன் முடிவடையவில்லை. 2009-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தில் இலங்கையின் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதை இந்தியா இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியது. 2012 மார்ச் மாதம் நடந்த மனித உரிமைக்கழகத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் கடுமையை இந்தியா அமெரிக்காமீது தனது கடும் அழுத்ததைப் பிரயோகித்து குறைத்தது

தொடரும் இந்தியச் சதி

போர் முடிந்து மூன்று இலடசத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபின்னரும் இந்தியாவின் கொலைவெறி அடங்கவில்லை. இலங்கை அரசுக்கும் அதன் படையினருக்கும் தொடர்ந்து உதவி செய்தே வருகிறது. இலங்கை விமானப் படையினருக்கு தாம் உதவி செய்வோம் என இலங்கை விமானப் படையினருக்கு தமிழ்நாட்டில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்திற்கு அழைத்து பயிற்ச்சிகள் கொடுத்தது. இதை தமிழ் அரசியல்வாதிகள் எதிர்க்க அந்த சிங்கள விமானப் படையினரை இந்தியா கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு சென்று அங்கு பயிற்ச்சி வழங்குகிறது. இலங்கை விமானப் படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சியளிப்பது தவறு என்றால் கர்நாடகாவில் அளிப்பது சரியா? இரண்டும் வேறு வேறு நாடுகளா? 

இந்தியா தொடர்பான முந்தைய பதிவுகள்:

http://veltharma.blogspot.co.uk/2010/08/blog-post_5580.html 

http://veltharma.blogspot.co.uk/2010/06/blog-post_4962.html

http://veltharma.blogspot.co.uk/2010/03/blog-post_31.html

 இந்தியாவின் இனக் கொலைத்திட்டமா?                                                           இப்போது இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளில் இந்தியா சீனாவை முந்திவிட்டது. இந்த ஆண்டில் இந்தியா 740.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதில் 275.1 மில்லியன் டொலர்கள் நன்கொடையாகும். ஜப்பான் 12.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை உள்ளிட்ட 175.3 மில்லியன் டொலர்கள் நிதியுதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து 102.5 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக அளித்துள்ளது.கடந்த ஆண்டில் முதலிடத்தில் இருந்த சீனா இம்முறை நான்காவது இடத்துக்கு இறங்கியுள்ளது. சீனா இந்த ஆண்டில் 32.5 மில்லியன் டொலர்களை மட்டுமே இலங்கைக்கு வழங்கியுள்ளது. ஆனால் இந்தியாவை ஏமாற்றும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாமிடம் வகிக்கிறது. இதைப் பல சிங்கள அரசியல்வாதிகளும் ஆய்வாளர்களும் தெளிவுபடக் கூறியுள்ளார்கள். தன்னை ஏமாற்றும் இலங்கைக்கு பண உதவி, படைக்கல உதவி, பயிற்ச்சி உதவி எனப்பல உதவிகளை இந்தியா செய்வதன் நோக்கம் இந்தியாவின் தமினக்கொலைத்திட்டத்தை இலங்கை நிறைவேற்றுகிறது என்பதாலா?

மாநிலத்தில் ஜெயா செய்ததை மத்தியில் கருணா செய்வாரா? தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் செல்வி ஜெயலலிதா தமிழ்நாட்டில் இலங்கை விமானப் படையினருகுப் பயிற்ச்சியளிப்பதை தடுத்துவிட்டார். (தனது அரசியல் இலாபம் கருதிச் செய்திருக்கலாம்). இந்திய மத்திய அரசின் பங்காளியான டெசோ கருணாநிதியால் பெங்களூரில் பயிற்ச்சி அளிப்பதைத் தடுக்க முடியுமா. தமிழ்நாட்டில் உள்ள மானம் கெட்ட கதர் வேட்டிக் கும்பல்களால் இதைத் தடுக்க முடியுமா?

 

மீண்டும் அதே பொய் 

"சிறிலங்கா படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கவில்லை என்றால், அவர்கள் சீனா போன்ற பிற நாடுகளில் பயிற்சி பெறுவர்; இது இந்தியாவுக்கு, பாதகமானதாக மாறிவிடும்"  என்று கர்நாடகா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அசோகா சொல்கிறார். இது இந்தியாவில் தமிழர்களை அழிக்க சொல்லப்படும் பொய். அசோகா அத்துடன் நிற்கவில்லை இலங்கைப் படையினருக்குப் பயிற்சியளிப்பது தேசியப் பிரச்சனை என்கிறார். தமிழர் பிரச்சனை வேறு இந்தியாவின் தேசியப் பிரச்சனை வேறு என்றால் தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா? எந்த ஒரு மானமுள்ள தமிழனும் தன்னை இந்தியன் என்று சொல்ல மாட்டான்.

1 comment:

Anonymous said...

You are great

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...