Tuesday, 22 November 2011

புலிகளின் பேரில் இந்தியாவில் ஒரு நாசகார நாடகம் அரங்கேறுமா?

இலங்கையில் தமிழர்கள் நிரந்தர அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதில் கொழும்புப் பேரினவாதிகளிலும் பார்க்க டில்லிப் பேரினவாதிகள் அதிக அக்கறையுடனும் உறுதியுடனும் இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் தனி நாடு அமைத்தால் அது இந்தியாவிலும் பிரிவினை வாதத்தைத் தூண்டும் என்ற பொய்யையும் இலங்கையின் இன அழிப்புப் போருக்கு இந்தியா உதவவேண்டும் அல்லது சீனா அந்த உதவியைச் செய்து இலங்கை சீனா பக்கம் சாய்ந்துவிடும் என்ற பொய்யையும் சொல்லி டில்லிப் பேரினவாதிகள் தமிழர்கள் சுதந்திரப் போராட்டத்தை நசுக்க இலங்கைக்கு சகல உதவிகளையும் செய்து முடித்தது.

இந்தியா சிங்களவர்களுடன் இணைந்து தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுவது ஒன்றும் இன்று நேற்று ஆரம்பமானதல்ல. ஜவர்லால் நேரு என்னும் பேரினவாதி காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. இதன் விபரங்களைக் காண இங்கு சொடுக்கவும்:  தமிழத் தேசியக் கூட்டமைப்பு இந்திய நிகழ்ச்சி நிரலிலா?

இலங்கை இந்திய தமிழின அழிப்புக் கூட்டணியின் செயற்பாடுகளை நாம் அண்மையில் ஒஸ்ரேலியாவில் நடந்து முடிந்த பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் கண்டு கொண்டோம். இந்தியாவின் இலங்கைக்கான தமிழின அழிப்பு நடவடிக்கைக்கான உதவி இந்தியாவின் மானம் கெட்ட ஆளும் கட்சியான காங்கிரசுக் கட்சி  இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த சட்டசபைக்கான தேர்தலில் மண் கவ்வ வைத்தது. அடுத்து 2014இல் அல்லது அதற்கு முன்னர் வரவிருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தல் காங்கிரசுக் கட்சியைப் பொறுத்தவரை மிக முக்கியமானது. இந்தியாவின் (தலைக்குள் மூளை குறைந்த) முடிக்குரிய இளவரசர் ராகுல் காந்தியை ஆட்சியில் அமர்த்தவிருப்பது அடுத்த இந்தியப் பாராளமன்றத் தேர்தல். இப்போது வெளியில் சொல்ல முடியாத நோயினால் பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் இத்தாலி சோனியா காந்தி எனப்படும் மைனோ கான் தன் மகனுக்கு முடி சூட்டும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். வட இந்தியாவில் அன ஹசாரேயின் போராட்டம் காங்கிரசின் வெற்றி வாய்ப்பை பெரிதும் பாதிக்கலாம். வட இந்தியாவில் வரவிருக்கும் தோல்விகளை தென் இந்தியாவில் சரிக்கட்ட காங்கிரசுக் கட்சி எண்ணலாம். முக்கியமாக தமிழ்நாட்டில் தமிழின உணர்வாளர்களைச் சிறையிலிட்டுவிட்டால் காங்கிரசின் தோல்வியைத் தடுக்க வாய்ப்புண்டு. தமிழின உணர்வாளர்களைச் சிறையில் போடுவதற்கு காங்கிரசுக்கு ஒரு நல்ல சாட்டுத் தேவைப்படுகிறது. இந்திய உளவுத்துறை இப்போது ஒரு புதுக் கதையை அவிழ்த்து விட்டுள்ளது அது தினமணி பத்திரிகையில் இப்படிப் பிரசுரமானது:
  • இலங்கையில் தங்களுடைய படை பலத்தை முற்றிலுமாக இழந்து நிற்கும் புலிகள் தற்போது வெளிநாடுகளில் வசித்து வரும் இவர்களை இந்தியாவில் நுழைய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் பணித்துள்ளதாகவும், இதன் மூலம் மும்பையில் பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் மத்திய உளவுத்துறையினர் மும்பை அரசுக்கு தெரிவித்து முழு எச்சரிக்கையாக இருக்குமாறு அலர்ட் செய்துள்ளனர். இலங்கையில் பெரும் போரை நடத்தி தலைவர் முதல் அனைவரும் உயிரிழந்து விட்டாலும், இவர்களில் இருந்து தப்பிய சிலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தும், பணம் வசூலித்து மீண்டும் தங்கள் இயக்கத்தை உயிர்ப்பிக்க வைக்கவும் மறைமுக வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனை இலங்கை அதிபர் ராஜபக்சே சமீபத்தில் மாலத்தீவில் நடந்த சார்க் மாநாட்டில் பங்கேற்றபோது ஒரு நிருபரிடம் ஒத்துக்கொண்டார். இந்நிலையில் மத்திய உளவுத்துறையினருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலில் பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இந்தியாவில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த திட்டம் வகுத்து வருகின்றனர். இவர்கள் இந்தியாவிற்குள் நுழைவதில் சிரமம் இருப்பதால் மாற்று வழியை தேடினர். ஏற்கனவே இந்திய அரசு மீது அதிருப்தியில் இருக்கும் புலிகள் மற்றும் பஞ்சாபை மையமாக கொண்டுள்ள சீக்கிய பயங்கரவாத அமைப்பனா பப்பர் கல்சா போன்ற பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இவர்கள் மும்பையில் குறிப்பாக கடற்படை தளம் அமைந்திருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். இந்த 3 அமைப்பினரும் இது தொடர்பாக பேசி முடிவு எடுத்திருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. இதனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க மும்பை போலீசார் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து ஐ.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில் ; செயல் இழந்து நின்ற புலிகள் இயக்கத்தினர் கடந்த 2 மாதத்தில் சற்று வளர்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இரு அமைப்பினரின் மறைமுக செயல்பாடுகள் கூர்ந்து கவனித்து வருகிறோம். அம்பாலாவில் ஒரு காரில் வெடிபொருட்களுடன் நின்ற கார் கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டது, இந்த சம்பவத்திற்கும் இந்த அமைப்பினருக்கும் தொடர்பு இருக்குமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது என்றார்.

இந்தியாவில் எங்காவது ஒரு நாசகாரச் செயலை அரங்கேற்றி அதை விடுதலைப் புலிகளின் மீது சுமத்தி இதில் தமிழின உணர்வாளர்களையும் சம்பந்தப் படுத்தினால் காங்கிரசின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்குமா?

தற்போது இந்தியாவில் இருக்கும் சட்டப்படி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உரையாற்றியமைக்காக எவரையும் கைது செய்ய முடியாது. ஒரு நாசகார நாடகத்தை அரங்கேற்றிய பின் தமிழ்நாட்டில் உள்ள தமிழின உணர்வாளர்களை இலகுவில் கைது செய்ய வழி தேடலாம்.
 
  விடுதலைப் புலிகளைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு புலிகளுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் உள்ள பகைமையைப் பற்றி நன்கு அறிவர்.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...