Tuesday 8 November 2011

கவிதை: நெஞ்சில் சிறகடிக்கும் ஆயிரம் பட்டாம் பூச்சிகள்


பேச்சொன்று கேட்டால்
மூச்சிங்கு நெருப்பெடுக்கும்
இசையோடு தேன்கலந்த
வார்த்தைகள் வதைத்தெடுக்கும்
அவள் உதடசைந்தால்
நெஞ்சில் படபடக்குது
ஆயிரம் பட்டாம் பூச்சிகள்



 மன்மதன் வீசுவது மலரம்பு
அவள் கண்கள் வீசுவது எறிகணைகள்

காப்பரணுமில்லை பதுங்கு குழியுமில்லை
கன்னியவள் கண்பட்டால்
நெஞ்சில் சுற்றுகின்றன
ஆயிரம் பட்டாம் பூச்சிகள்



இமை மடல் எழுதும்
பற்பல மடல்கள்
பார்க்கத்துடிக்கும் கண்கள்
தொடத்துடிக்கும் கைகள்
அவளை நினைத்தால்

நெஞ்சில் பறந்தோடும்
ஆயிரம் பட்டாம் பூச்சிகள்

அவள் பட்டுடலெங்கும்
என் விரல்கள் ஓடத்துடிக்கும்
நீள் மரதனோட்டம்
பக்கத்தில் அவள் வந்தால்

நெஞ்சில் சிறகடிக்கும்
ஆயிரம் பட்டாம் பூச்சிகள்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...