Thursday, 4 August 2011

நவீன மனைவியைக் கவரச் செய்ய வேண்டியவை.

மனைவியைக் கவர்வதற்குச் செய்ய வேண்டியவையும் காலத்திற்கு ஏற்ப மாறும். மல்லிகைப் பூவும் அல்வாவும் இப்பவும் "வேர்க் அவுட்" ஆகக் கூடும். ஆனாலும் காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் தேவைப்படும். சில யோசனைகள்:

1. மின்னஞ்சல்: இ-மெயில் அவ்வப் போது அனுப்புங்கள். நல்ல எஸ்.எம்.எஸ் வசனங்களை இணையத்தில் தேடிப்பிடித்து வெறிம் காப்பி அண்ட் பேஸ்ட் செய்யாமல் உங்களுக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்து உங்கள் மனைவிக்கு அனுப்புங்கள். முதல் நாள் இரவு அனுபவத்தை நினைவு கூர்ந்து மறுநாள் குறுந்தகவல் அனுப்புதல் அவளுக்கு நல்ல கிளுகிளுப்பை ஊட்டும்.

2. எதையும் மறைக்காதீர்கள்: தற்கால மனைவிமார்கள் தங்கள் அறிவிலும் புத்திசாலித்தனத்திலும் அதிக நம்பிக்கை யுடையவர்கள். அவர்களிடம் எதையும் மறைக்காமல் அவர்களுடன் உங்கள் பிரச்சனைகள் தவறுகளைக் கலந்து ஆலோசியுங்கள்.

3. வாகனப் பராமரிப்பு: உங்கள் வாகனத்தை சுத்தமாக வைத்திருங்கள். பிரச்சனைக்குரிய நேரங்களில் உங்கள் வாகனத்தில் செல்வது அவர்களுக்குப் பிடிக்கும். மனைவியிடம் வாகனம் இருந்தால் அதை பராமரிக்கும் பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள். அழுக்குப் பிடித்த வாகனத் திருத்தகங்களுக்கு உங்கள் மனைவியை அனுப்பாதீர்கள்.

4. பாராட்டுங்கள்: இது எக்கால மனைவிக்கும் பிடிக்கும். சில வழமையான நிகழ்வுகளாகினும். நல்லவை நடந்தால் எதையும் மனமாரப் பாராட்டுங்கள்.

5. தவறு பிடிப்பதைத் தவிருங்கள்: அடிக்கடி அவள் விடும் தவறுகளை சுட்டிக் காட்டுவதை வழக்கமாகக் கொள்ளாதீர்கள்.

6. சமத்துவம் அவசியமில்லை: வீட்டு வேலைகளில் சரி பாதி அல்லது பெருமளவைச் செய்ததல் பாதகமான விளைவையே ஏறப்டுத்தும். வீட்டு வேலைகளில் உதவி செய்யுங்கள். ஆதிக்கம் செலுத்தாதிர்கள். தனனை விட்டால் சாப்பாட்டிற்கோ அல்லது இல்லப் பராமரிப்பிற்க்கோ வேறு கதியில்லை என்ற உணர்வை மழுங்கடிக்காதீர்கள்.

7. ஏழு செக்கண்ட் முத்தம்: நீங்கள் அவ்வப் போது அவளுக்குக் கொடுக்கும் முத்தம் சும்மா ஒர் உரசலுடன் முடியக் கூடாது. குறைந்தது ஏழு செக்கண்ட்கள் தன்னும் நீடிக்க வேண்டும்.

8. பணப்பரிசு: மனைவி செய்யும் நல்ல அல்லது திறமையான காரியங்களுக்கு அவ்வப் போது பணப் பரிசு கொடுங்கள்.

9. மீண்டும் முதல் நாள்: உங்கள் இருவரிடை ஆரம்ப கால நிகழ்விகளை மீண்டும் அடிக்கடி நினைவு கூர்ந்து அப்படியே மிண்டும் செய்யுங்கள்

10. தொடர்பாடல்: நீங்கள் உங்கள் நேரத்தை தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் விளையாட்டு  அரசியல் போன்ற நிகழ்ச்சிகளில் ஆழ்திருந்தாலும் அவ்வப் போது உங்கள் மனைவியுடன் கதையுங்கள். மனைவியுடன் கதைப்பதைக் குறைக்காதீர்கள்.

11. தடவல் தனி சுகம்: மனைவியின் தலைமுடியைத் தடவுதல், கன்னங்களை வருடுதல், தோளில் ஒரு இதமான மசாஜ்.........இப்படிப் பல அடிக்கடி செய்ய வேண்டும்.

12. மற்றவர்கள் முன்னிலையில் முக்கியத்துவம்: மற்றவர்கள் முன்னிலையில் உங்கள் மனைவி முக்கியமானவர் என்பதை அவளுக்கும் மற்றவர்களுக்கும் உணர்த்டும் படி நடவுங்கள்.

13. அடிக்கடி இன்ப அதிர்ச்சி: திடீரென்று அவளுக்கு பிடித்தமானவற்றை எதிர்பாராத விதமாகச் செய்து அசத்துங்கள்.

14. மன்னிப்புக் கேளுங்கள்: நீங்கள் தவறுவிட்டால் மன்னிப்புக் கேட்கத் தயங்காதிர்கள்.

15. வேலை வேறு வீடு வேறு: வீட்டுக்கு வரும்போது வேலையிடத்துப் பிரச்சனைக்களை வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். வேலை இடத்து மன அழுத்தத்தை மனைவி மேல் எரிந்து விழுவது பாதகமான விளைவையே தரும்.

16. வாழ்த்தும் முத்தமும்: நித்திரைக்கு முன் ஒரு குட் நைட் முத்தமும் காலையில் ஒரு குட் மோர்னிங் முத்தமும் தவறாமல் இடம்பெற வேண்டும்.

17. வீட்டுக் குறைபாடுகளைக் கவனியுங்கள்: வீட்டில் உள்ள சில குறைபாடுகளை திருத்துவதைத் தள்ளிப்போடாமல் செய்யுங்கள்.

18. விடுமுறை அவசியம்: உங்களிடமிருந்து உங்கள் மனைவிக்கு அவ்வப் போது விடுமுறை அவசியம். அவள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அவள் பழகுவதற்கு போதிய அளவு அனுமதியுங்கள்.

19. பணத் தட்டுப்பாடு: பணத்தட்டுப்பாடு வரும்போது குறையை உங்கள் மனைவிமீது போடாதிர்கள்.

20. தலைமை வேண்டும் சர்வாதிகாரம் அல்ல: வீட்டில் நீங்கள் சிறந்த தலமைத்துவப் பண்புகளுடன் நடந்து கொள்ளுங்கள். அதிகாரம் செய்யாதீர்கள்.

ஸ்ஸ்ஸ்ஸ்பாஆஆஆஆஆ இவ்வளவு செய்வதிலும் பார்க்க தினசரி சண்டை போட்டுக் கொண்டு காலத்தைக் கழிக்கலாம் என்றிருக்கிறதா????
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...