Monday 11 July 2011

Facebookஐப் பாவித்து ஆர்பாட்டக் குழுவினரைத் தடுத்தது இஸ்ரேல்.

எகிப்திய மக்கள் தங்கள் 18நாள் எழுச்சியால் ஹஸ்னி முபராக்கை பதவியில் இருந்து விரட்டுவதற்கு முகவெடு (Facebook) சமூக வலைத்தளத்தைப் பவித்தனர். இதனால் Facebookஇற்கு எகிப்தில் பெரும் புகழ் கிடைத்தது. சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு Facebook என்று பெயரும் வைத்தனர். எகிப்தியக் கிளர்ச்சிக்காரர்கள் முகவெடு (Facebook) சமூக வலைத்தளத்தைப் பவித்து மக்களுடன் தகவல் பரிமாற்றங்களை மேற்கொண்டன்ர்.

எகிப்தில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக முகவெடு (Facebook) சமூக வலைத்தளத்தைப் பாவிக்க இஸ்ரேல் அதையே கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் பாவித்தது. இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய உலகெங்கிலும் இருந்து  பாலஸ்த்தீனிய விடுதலை ஆதரவாளர்கள் இஸ்ரேல் செல்வதற்கான விமானப் பயணச் சீட்டுக்களைப் பெற்றிருந்தனர். முகவெடு (Facebook)மூலம் இவர்களின் பெயர்களை இஸ்ரேல் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யவிருந்தவர்கள் பயணம் செய்ய இருந்த விமானச் சேவையினருக்கு அவர்களின் பெயர்களைக் கொடுத்து இவர்கள் வந்தால் இஸ்ரேலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவுறுத்தியது. இதனால் விமான நிலையங்களுக்கு சென்ற் 340ஆர்ப்பாட்டக்காரர்கள் விமாங்களில் ஏற அனுமதி மறுக்கப்பட்டனர். இந்த தடையையும் தாண்டிச் சென்றவர்களை இஸ்ரேல் ரெல் அவீவ் விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்தது.

முகவெடு (Facebook) உரிமையாளர்கள் தாம் இஸ்ரேலுக்கு எந்த தகவல்களையும் வழங்கவில்லை என்கிறார்கள். பயணம் செய்ய விருந்தவர்கள் செய்த  status updateமூலம் இஸ்ரேலிய உளவுத்துறை இவர்களைக் கண்டு பிடித்திருக்கலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...