Sunday 6 March 2011

இலங்கையில் போர்க்குற்றமும் அதிகாரப்பரவலாக்கமும்.


சர்வதேச மன்னிப்புச் சபை, பன்னாட்டு நெருக்கடிக் குழு, ஐநா மனித உரிமைக் கழகம் ஆகியன இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததாக குற்றம் சாட்டுகின்றன. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலர் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றம் நடந்ததாக கூறுகின்றனர். இதற்கென வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் அமைக்கப்பட்ட இனக்கொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பான பல ஆதாரங்கள் பல இருப்பதாகக் கூறுகிறது. பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்றம் தொடர்பான காட்சிப்பதிவுகள் போர்க்குற்றச் சாட்டி இலங்கையை சட்டத்தின் முன் நிறுத்த போதுமான ஆதாரங்கள் என்று பிரபல போர்க்குற்ற சட்டவாளரான பிரபல சட்டத்துறை நிறுவனமான Matrix Chambers ஐச் சேர்ந்த Julian Knowles என்பவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொல்லப்பட்டவர்கள் 300,000இற்கும் அதிகம்

இலங்கையின் ஆறு முக்கிய ஊடக அமைப்புகள் மேற்கொண்ட சுயாதீன ஆய்வின் போது இறுதிக்கட்ட யுத்தத்தில் எண்பதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக ஆதாரபூர்வமான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக யுத்தத்தின் காரணமாக இருபத்தி ஏழாயிரம் பிள்ளைகள் தமது பெற்றோர் இருவரையும் இழந்து வாழ்வதாகவும் புள்ளி விபரங்கள் வெளிவந்துள்ளன. இலங்கையில் மொத்தமாகக் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் மூன்று இலட்சத்திற்கும் அதிகம்.


பலதரப்பிலும் இலங்கைப் போர்க்குற்றத்தில் ஆர்வம்
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக பல மனித உரிமை அமைப்புக்களும் தொண்டர் அமைப்புக்களும் கருத்துத் தெரிவித்துள்ளன. இதில் சர்வதேச மன்னிப்புச் சபை, பன்னாட்டு நெருக்கடிக் குழு, ஐநா மனித உரிமைக் கழகம் ஆகியன இவற்றில் முக்கியமானவ. சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்றுக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டிய ஆபத்திருக்கின்றது என்று தெரிவித்தார் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கச் செயலர் ரெபேர்ட் ஓ பிளேக். இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பான விசாரணை தேவை எனஅமெரிக்க செனட் சபையில் தீமானம் நிறைவேற்றப்பட்டது. பிரித்தானியப் பிரதமர் இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக சுயாதீன விசாரணை தேவை என்று கருத்துத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக ஒரு விசாரணை தேவை என்னும் தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படலாம்.

தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் போர்க்குற்றம் தொடர்பாக மௌனமாய் இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றம் தொடர்பாக பன்னாட்டு மட்டத்தில் கதைபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இலங்கையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் எவரும் இது தொடர்பாக மௌனமாகவே இருக்கிறார்கள். இலங்கையில் தமிழ் அரசியல்வாதிகள் சுதந்திரமாகக் கருத்துக்கள் வெளியிடவோ அல்லது செயற்படவோ முடியாது. அப்படிச் செய்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கு படுகொலை செய்யப்பட்ட குமார் பொன்னம்பலம், ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் போன்ற நாடாளமன்ற உறுப்பினர்களுக்கு நடந்தவை நல்ல உதாரணம். இப்போது இலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளில் பெரும்பாலோனோர் இலங்கை அரசு அல்லது இந்திய அரசுகளின் தயவில்தான் இருக்கின்றனர். இந்த இரு நாடுகளின் விருப்பத்திற்கு மாறாக செயற்பட்டால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும். இந்த இரு நாடுகளின் கட்டளைகளுக்குப் பணிந்தே இவர்கள் போர்க்குற்றம் தொடர்பாக மௌனமாக இருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை அமைத்த போர்க்குற்றம் தொடர்பான ஆலோசனைக் குழுவை தமிழத் தேசியக் கூட்டமைப்பு தொடர்பு கொண்டாதாகத் தகவல் இல்லை.போர்க்குற்றம் தொடர்பாக இந்த இரு நாடுகளும் என்ன நிலையில் இருக்கின்றன எனபதை இங்கு சொடுக்கி அறியலாம்: இலங்கைப் போர்க்குற்றத்தில் இந்தியாவின் பங்கு.

விக்கிலீக் வெளியிட்ட தகவல்களின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போர்க்குற்றம் தொடர்பாக அக்கறை இன்றி இருப்பதாகவே தெரிகிறது. இலங்கையில் இருந்து வரும் செய்திகளின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு அதிகாரப் பரவலாக்கம் இலங்கையில் ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசிற்கு எதிரான் போர்க்குற்றத் கைவிட்டு விட்டதாகத் தெரிகிறது.

போர்க்குற்றம் மீண்டும் நடக்காமல் இருப்பதை தமிழர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தவேளை பிரபாகரனை தந்திரமாக பேச்சு வார்த்தைக்கு அழைத்து அவரை கொன்றுவிடும்படி ராஜிவ் காந்தி 1987இல் உத்தரவிட்டார். அதை இந்திய அமைதிப்படைத் தளபதி ஒரு போர்க்குற்றம் என்று மறுத்துவிட்டார். அவர் ஏற்கனவே வேறு போர்களில் நடந்தவற்றை உதாரணமாக வைத்தே இதற்கு மறுத்தார். இலங்கையில் மீண்டும் போர்க்குற்றம் நடக்காமல் இருக்க இப்போது உள்ள போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும். எமது எதிர்காலச் சந்ததியினரை பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய கடமை இது. இப்போது பன்னாட்டு மட்டத்தில் போர்க்குற்றம் தொடர்பாக எழும் சாதகமான சூழ்நிலையை நாம் பயன்படுத்தி பாக்குநீரிணையின் இருபுறமும் உள்ள போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.

அதிகாரப்பரவலாக்கம்.
இலங்கையில் தமிழர்கள் பல வாக்குறுதிகளை சிங்களத் தலைவர்களிடம் இருந்து பல சந்தர்ப்பங்களில் பெற்று அதற்காக பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்தனர். ஆனால் சிங்களத் தலைவர்கள் எந்த ஒரு கட்டத்திலும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதிகாரப்பரவலாக்கத்திற்காக போர்க்குற்றத்தை விட்டுக் கொடுப்பதும் ஒரு முட்டாள்த்தனமான நடவடிக்கையே. முதலில் இலங்கைப் பாராளமன்றில் அதிகாரப் பரவலாக்கம் நிறைவேற்றப்படவேண்டும், பின்னர் அது நிறைவேற்றப்படவேண்டும். இப்போது போர்க்குற்ற குற்றச் சாட்டைக் கைவிட்டுவிட்டு ஒரு அதிகாரப் பரவலாக சட்ட மூலத்தை இலங்கைப் பாராளமன்றத்தில் நிறைவேற்றலாம். பின்னர் அது நிறைவேற்றப்ப்டாமல் போகலாம். அல்லது பின்னர் வேறு ஒரு அரசு பதவிக்கு வந்து அந்த அதிகாரப் பரவலாக்கத்தையே இல்லாமல் செய்யலாம். அரசியல் முட்டாள் ராஜிவ் காந்தி எமக்குக் கொடுத்த இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்திற்கு என்ன நடந்தது என்பதை நாம் நன்கு அறிவோம்.

4 comments:

Yoga.s.FR said...

தமிழ் நாட்டில் தொகுதி உடன்பாடு காங்கிரசுடன் முறிவடைந்து விட்டதாக சொல்கிறார்கள்!ஒரு வேளை கோபாலபுரத்திலும் சி.பி.ஐ சோதனை போடக் கூடுமென்றும் சொல்கிறார்கள்!அவ்வாறு ஒன்று நடந்தால் "போர்க்குற்றம்" குறித்து கலைஞர் பேசுவாரா?அவரிடம் "ஏகப்பட்ட" ரகசியங்கள் புதைந்துள்ளனவே?????

Shanmugam Rajamanickam said...

ஐயோ பாவம்.....

கி௫ஷ்ண குமார் said...

௧௫ணாநிதி எப்படி இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றிய இர௧சியங்௧ளை வெளியிடுவார்?... இராஜபக்சே,சோனியா,மன்மோ௧ன்சிங் மட்டுமல்ல க௫ணாநிதியும் அந்த வன்முறை வெறியாட்டத்திற்கு உடந்தையாயி௫ந்த ஒ௫ குற்றவாளியே...

YOGA.S.Fr said...

ஏன் ?இப்போ பொன்சேகா கூடத் தான் முக்கியமான "ஏதோ" ஒன்றை நீதிமன்றில் வெளிப்படுத்தப் போவதாக சொல்லியிருக்கிறார்!அது இன்னும் இரண்டு தினங்களில்!ஸ்பெக்ட்ரம் ஊழலில் புதல்வியும்,மனைவியும்,அவர் சார்ந்த தொலைக் காட்சி நிறுவன அலுவலகமும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது மெளனம் காத்த "தலை" ஈழத் தமிழர் விவகாரத்தில் நடந்தது என்ன? என்று கூட "சொந்த" தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்சியை ஒளி பரப்ப முடியுமே?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...