Thursday 7 October 2010

வீரசுவர்க்கத்தில் ஒர் இலங்கைப் பத்திரிகை ஆசிரியர்


சொர்க்கத்திற்கு இலங்கையில் இருந்து ஒரு பத்திரிகை ஆசிரியர் கொண்டு செல்லப்பட்டார். நல்லவர்களுக்கான சொர்க்கத்திற்கு அவர் முதலில் சென்றார் அது மூடப்பட்டுவிட்டதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அது ஏன் மூடப்பட்டுவிட்டது என்று கேட்டபோது அங்கு இப்போது யாரும் வருவதில்லை அதனால் யாரும் இல்லாததால் அது மூடப்பட்டுவிட்டது என்று பதில் கூறப்பட்டது. பத்திரிகை ஆசிரியர் திரு திரு என விழித்துக் கொண்டிருக்க வேண்டுமானால் வீரசுவர்க்கத்தில் இடம் கேட்டுப்பார் என்று அவரிடம் கூறப்பட்டது. அங்கு நீ நிறையப் போராளிகளையும் சந்திக்கலாம் என்றும் கூறப்பட்டது.

பத்திரிகை ஆசிரியரும் வீரசுவர்க்கத்திற்கு சென்று கதவைத் தட்டினார். இங்கு நீ அனுமதி பெற நீ வீரமாக எதையாவது செய்திருக்க வேண்டும் என்று பத்திரிகை ஆசிரியரிடம் சொன்னார்கள். ஆம் நான் வீரமாக ஒரு முறைச் செயற்பட்டிருக்கிறேன் என்றார் பத்திரிகை ஆசிரியர். என்ன எப்போ எங்கு எப்படி விபரமாகச் சொல் என்று பத்திரிகை ஆசிரியரை வீரசுவர்க்கத்தில் கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த பத்திரிகை ஆசிரியர் நாலு நாட்களுக்கு முன் பக்சராஜ குடும்பத்தைத் தாக்கி எனது பத்திரிகையில் எழுதினேன் அது மூன்று நாட்களுக்கு முன் பிரசுரமானது. நேற்று என்னை வெள்ளை வானில் கொண்டு போனார்கள் இன்று என் சடலம் கறுப்பு வானில் வந்தது என்று கூறினார். இதுதான் நான் எனது வாழ்க்கையில் வீரமாகச் செய்த செயல் என்றார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...