Monday, 23 August 2010

கே பத்மநாதனின் உலங்கு வானூர்தி (ஹெலிகொப்டர்) நாடகம்


விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் பத்மநாதன் அவர்கள் தொடர்ந்து மூன்று வாரங்களாக கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகைக்கு பேட்டி அளித்து வருகிறார். அவரது பேட்டியில் எழும் சந்தேகங்கள்:

  • கே. பத்மநாதன்: பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி அவரது குடும்ப அங்கத்தவர்களை காப்பாற்றும்படி என்னைக் கேட்டபின் நான் ஒரு திட்டம் வகுத்து வான்வழி மூலம் ஆரம்ப ஏற்பாடுகளை செய்தேன். இலங்கை கடற்படை அணுகமுடியாத தொலைவிலுள்ள துறைமுகம் ஒன்றில் காத்திருக்கும் கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்தேன். உக்ரேய்ன் நாட்டிலிருந்து எனக்குத் தெரிந்தவர் மூலமாக ஒரு பாவித்த ஹெலிகொப்டரை வாங்கவும் நான் ஒழுங்கு செய்தேன். எல்.ரீ.ரீ.ஈ. இன் விமானப்படையின் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு பயிற்றப்பட்ட விமானிகள் வன்னிக்கு ஹெலிக்கொப்டரை கொண்டு செல்வர் என்பதே திட்டம்.
சந்தேகம்: எத்தக் கால கட்டத்தில் இந்தத் திட்டம் உங்களால் முன்வைக்கப் பட்டது? 2008-ம் ஆண்டிலிருந்தே இந்தியக் கடற்படையினர் பருத்தித் துறையிலிருந்து திருமலை வரையிலான கடற்பிரதேசத்தில் நிலை கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வராத படியும் யாரும் வெளியேறாத படியும் கண்காணித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் எப்படி இரு விடுதலைப் புலி விமானிகள் வெளியேறுவது, உலங்கு வானூர்தி(ஹெலிகொப்டர்) உள்வருவது, பிரபாகரன் குடும்பத்தை வெளியேற்றுவது?

  • கே. பத்மநாதன்: vஅவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர். முழுக் குடும்பமுமே போய்விட்டது. பாலச்சந்திரனின் மரணம் என்னை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவனுக்கு 12 வயது மட்டுமே. நான் அவனை நேரில் கண்டதில்லை. ஆனால் அவன் சிறுபையனாக இருந்தபோது நான் பிரபாகரனுடன் அடிக்கடி பேசுவேன். பிரபாகரன் தொலைபேசியை அவனிடம் கொடுத்து இந்தா கேபி மாமாவுடன் கதை என்பார்.அவர்கள் எல்லோரும் இறந்து விட்டனர். முழுக் குடும்பமுமே போய்விட்டது. பாலச்சந்திரனின் மரணம் என்னை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவனுக்கு 12 வயது மட்டுமே. நான் அவனை நேரில் கண்டதில்லை. ஆனால் அவன் சிறுபையனாக இருந்தபோது நான் பிரபாகரனுடன் அடிக்கடி பேசுவேன். பிரபாகரன் தொலைபேசியை அவனிடம் கொடுத்து இந்தா கேபி மாமாவுடன் கதை என்பார்.
சந்தேகம்: 12 வயதுச் சிறுவனை சித்திரவதை செய்து கொன்றவர்களை நீங்கள் உங்கள் முதல் வாரப் பேட்டியில் எப்படி நீங்கள் கண்ணியவான் என்றீர்கள்? அவர்களுடன் சேர்ந்திருந்து எதையோ எல்லாம் சாதிக்கப் போகின்றேன் என்கிறீர்கள்?

  • கே. பத்மநாதன்:ரிவியில் பார்த்தவுடனேயே நான் உடனேயே இது பிரபாகரன் உடல்தான் என்பதை அறிந்துகொண்டேன். நான் மிக மனமுடைந்து போனேன். பல மணித்தியாலங்களாக நான் யாருடனும் தொடர்பின்றி இருந்து தியானம் செய்தேன் பழையதை நினைத்து அழுதேன்.
சந்தேகம்: நீங்கள் நீண்ட நாட்களாக பிரபாகரனைக் காணவில்லை என்று நினைக்கிறோம். மேலுள்ள இரு படங்களையும் பாருங்கள். எப்படி இடது பக்கத்தில் இருக்கும் படத்தை பிரபாகரனது என்று கூறுவீர்கள். 2004-ம் ஆண்டில் அப்படி இருந்த பிரபா எப்படி 2009இல் இளமையானார்? இரு படங்களிலும் அவரது நாடியை உற்று பாருங்கள். இதையெல்லாம் பார்க்காமல் வீணாக அழுது விட்டீர்களே!!! உங்கள் தியானம் வீண்போகவில்லையோ? வெளிநாடுகளில் உள்ள உங்கள் ஆதரவாளர்கள் நீங்கள் பிரபாகரனின் உத்தரவின் பேரில் இலங்கை அரசிடம் சரணடைந்து அவர்களிடம் அகப்பட்டிருக்கும் போராளிகளை பாதுகாக்க முயல்வதாகக் கூறித்திரிகிறார்களாம்!!! பிரபாகரன் இப்போதும் உங்களுடன் "தொடரிபில்" இருப்பதாக வேறு சொல்கிறார்களாம். சற்றுக் கவனியுங்கள்.

  • கே. பத்மநாதன்:ஒன்றை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். நான் அங்கு இருக்கவில்லை. எனக்கு சொல்லப்பட்டதையும் நான் கேள்விப்பட்டதையும் வைத்துத்தான் கூறவேண்டும். பிரபாகரனின் மரணத்தை பொறுத்தவரை எனக்குக் கிடைத்த தகவல் இது. பிரபாகரனும் 60 பேர் கொண்ட புலிகளின் குழுவும் நந்திக்கடல் அருகே ஒரு ஒடுங்கிய நிலப்பரப்பில் அகப்பட்டுக் கொண்டனர். அவர்கள் யாவருமே கடைசிவரை போராடினார். மரணத்தை தழுவிக்கொண்டனர்.
சந்தேகம்: முதலில் பிரபாகரனின் படத்தை தொலைக்காட்சியில் பார்த்து நிச்சயமாக அவர் இறந்து விட்டதாகக் கூறிய நீங்கள் பின்னர் ஏன் இப்படி பல்டி அடிக்கிறீர்கள்?

  • கே. பத்மநாதன்: விவாதத்திற்கு வேண்டுமானால் ஆம் என்று கூறலாம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை. பிரபாகரனும் பொட்டுவும் உயிருடன் உள்ளனர். அவர்கள் சில வருடங்களின் பின்னர் தோன்றுவர் என்பது அவர்களின் நினைவை அவமதிப்பதும் கேவலப்படுத்துவதும் ஆகும். இந்த நகைப்புக்குரிய விடயத்தை தொடர்ந்து அழுத்தி கூறுபவர்கள் மடத்தனமான கதையை விட்டுவிட்டு பிரபாகரனையும் பொட்டுவையும் வெளிக்கொணரவேண்டும்.
சந்தேகம்: முதலில் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று கூறி அவரை அவமதித்ததும் கேவலப் படுத்தியதும் நீங்கள் தானே!!! மடத்தனமான கதையைச் சொன்னதும் நீங்கள்தானே!!!!! இலங்கை மே 18-ம் திகதி இறந்ததாகச் சொன்னது. நீங்கள் முதல் சொன்னதில் இருந்து பல்டி அடித்து அவர் 17-ம் திகதி இறந்ததாகச் சொன்னீர்கள். மதிவதனியும் துவரகாவும் பாது காப்பாக இருப்பதாகவும் கூறினீர்கள். இன்று சகலரும் இறந்து விட்டனர் என்கிறீர்கள்.

  • கே. பத்மநாதன்:வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புதான் இந்தப்(பிரபாகரனை உழங்கு வானூர்தி மூலம் பாதுகாக்கும்) பணத்தை தந்திருக்க வேண்டும். நோர்வேயில் இருந்த நெடியவன் எனக்கு பணத்தை அனுப்புவார் என காஸ்ட்ரோ, சாள்ஸ் அன்ரனியிடம் உறுதியாக கூறியிருந்தார். ஆனால் அவர் அதை செய்யவே இல்லை. நேரம் போய்க்கொண்டிருந்தது. பணம் அவசரம் தேவை என நான் பல முறை கேட்டேன். பணம் வந்து கொண்டிருக்கிறது, பணம் வந்துக்கொண்டிருக்கிறது என கூறப்பட்டபோதும் அது ஒருபோதும் வரவில்லை. வெளிநாடு ஒன்றிலிருந்து விமானப்பிரிவு தலைவர் அச்சுதனுடன் நெடியவன் தொடர்பு கொண்டிருந்தார். அச்சுதன் முதலில் அந்த நடவடிக்கைக்கு தேவையான எல்.ரீ.ரீ.ஈ விமானிகளை தருவதற்கு சம்மதித்திருந்தார். ஆனால், பின்னர் திடீரென என்னோடு தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார். சிலவேளை இது நெடியவனின் கட்டளையாகவும் இருக்கலாம். நான் அந்தரப்பட்டேன். ஊதியத்திற்கு பணியாற்றும் விமானிகளை நாடினேன். ஆனால் நிதி இன்மையால் மேற்கொண்டு எதுவும் செய்யமுடியவில்லை.
சந்தேகம்: உங்கள் பேட்டியில் தொடர்ந்து நெடியவனையும் காஸ்ரோவையும் குற்றம் சாட்டி வருகிறீர்கள். பிரபாகரன் இறந்த நாளில் இருந்து நீங்கள் "கைது செய்யப்படும்" வரை நீங்கள் ஏன் அவர்களின் துரோகத்தைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை?Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...