Wednesday 21 April 2010

நொக்கியா உட்பட iPadஇற்கு போட்டியாக களமிறங்கும் பலர்


பல ஆரம்ப பிரச்சனைக்களுக்கு(teething problem) மத்தியிலும் iPad என்னும் tablet கணனிக்குக் கிடைத்த பலத்த வரவேற்பை அடுத்து பல நிறுவனங்கள் iPadஇற்கு போட்டியாகக் களமிறங்குகின்றன. அவற்றை “iPad killers” என்று அழைக்கின்றன ஊடகங்கள்.


Neofonie, என்னும் ஜேர்மனிய நிறுவனம் WePad என்னும் tablet கணனியை அறிமுகம் செய்யவிருக்கின்றது.


நொக்கியா நிறுவனமும் ஒரு tablet கணனியை இ-நூலக வாசிப்பு வசதிகளை அடிப்படையாகக் கொண்டு அறிமுகம் செய்யவிருக்கிறது.


Microsoft சும்மா இருக்குமா? அதுவும் ஒரு tablet கணனியுடன் களத்தில் iPadஇற்கு போட்டியாக இறங்கவிருக்கிறது.


அடுத்து கூகிள் மட்டும் பார்த்துக் கொண்டு இருக்குமா? அதுவும் தனது ஒரு tablet கணனியுடன் களத்தில் iPadஇற்கு போட்டியாக இறங்கவிருக்கிறது.
Acer, Toshiba and HP ஆகிய நிறுவனங்களும் வரிந்து கட்டிக் கொண்டு வரிசையாக தங்களது tablet கணனியுடன் களத்தில் இறங்கத் தயாரகின்றன.


இவற்றில் Neofonie, என்னும் ஜேர்மனிய நிறுவனத்தின் WePadதான் iPadஇற்கு போட்டியாகக் களமிறங்கும் என எதிர் பார்க்கப் படுகிறது. அது தனது WePadஐ ஆகஸ்ட் மாதத்தில் 450யூரோவிற்கு விற்கவிருக்கிறது. அதன் முக்கிய் அம்சங்கள்:

  • 11.6" touchscreen display
  • With a massive 11.6” [1366x768] touchscreen
  • 1.66 Ghz Atom N450 Processor
  • GMA 3150 graphics
  • UMTS modem
  • Bluetooth
  • WLANn
  • 1.3mp web camera
  • 16 GB storage, 32 GB SD card support
  • SIM card slot, 2 USB ports
  • GPS optional
  • Flash card reader.
Unlike the iPad the We Pad supports Flash and multi tasking. And as mentioned above unlike the iPad the We Pad has a web camera - handy for Skype video calls.


iPadஇன் உற்பத்தியாளர்களான ஆப்பிள் பல உற்பத்தி சார் பிரச்சனைகளுக்குள் மாட்டிக் கொண்டுள்ளது. அதனது தூர கிழக்கு நாட்டு உதிரி உற்பத்தியாளர்களின் பிரச்சனையும் ஆப்பிளுக்கு பெரும் தலையிடி. இதை சரியாகப் பயன்படுத்த மற்ற நிறுவனங்கள் விரைந்து தயாராகின்றன.


ஆப்பிளின் போட்டி நிறுவனங்கள் iPadஇன் பலவீனங்களை சரியாகப் புரிந்து கொண்டு தமது கருவிகளை வடிவமைக்கின்றனர். தங்கள் கருவிகளில் காணொளிமூலமான அரட்டை சிறந்த ஒளிப் பதிவுக் கருவி ஆகியவற்றை உள்ளடக்கி iPadஐ திணறடிக்க இருக்கின்றன.



தற்போது ஆப்பிளும் அமேசனும் இ-புத்தகத் துறையில் அரசோச்சி வருகின்றன. அதில் தானும் களமிறங்கும் நோக்கத்தை நொக்கியா கொண்டுள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...