Thursday 21 January 2010

நாலு சிங்களவர் செத்ததிற்கு ஒப்பாரி வைக்கும் பான் கீ மூன்


ஒரு நாளில் 25,000 பேரை கொன்ற இலங்கையில் நாலு சிங்களவர்கள் தேர்தல் வன்முறையால் இறந்துள்ளனர். இதற்காக ஒப்பாரி வைக்கும் கூட்டத்தில் ஐக்கிய நாடுகளின் செயலரும் உலகின் மிக ஆபத்தான கொரிய நாட்டவர் என்று வர்ணிக்கப் பட்டவருமான பான் கீ மூன் அவர்களும் இணைந்துள்ளார்.

இலங்கைத் தேர்தலில் நடக்கும் வன்முறை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் செயலர் பான் கீ மூன் அவர் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.

“The peaceful conduct of the first post-conflict national election is of the highest importance for long term peace and reconciliation in Sri Lanka,” the Secretary-General Ban ki Moon stressed. முரண்பாடுகளுக்கு பின்னரான முதல் தேர்தல் அமைதியாக நடைபெறுவது நீண்டகால அமைதிக்கும் இணக்கப் பாட்டிற்கும் மிக முக்கியமாகும் என்கிறார் அந்த மோசமான சொறியர் மன்னிக்கவும் கொரியர்.

ஐயா பான் கீ மூன் அவர்களே அது என்ன "முரண்பாட்டிற்கு பின்னரான" முதற் தேர்தல்? முரண்பாடு முடிந்துவிட்டது என்று யார் சொன்னது? முதலில் இலங்கையில் முரண்பாடு என்பது என்ன அது எப்படித் தொடங்கியது என்று உமக்குத் தெரியுமா பான் கீ மூன் அவர்களே. ஆயுத மோதல்கூட முடிவிற்கு வந்ததாக் நாம் நம்பவில்லை. இருவர்களிற்கிடையில் முரண்பாடு அதனால் அவர்கள் மோதிக் கொண்டனர்.

நீரும் உமது சர்வ தேச சமூகமும் ஒரு பக்கச் சார்பாகச் செயற்பட்டு ஒருவரை விழுத்தி விட்டீர்கள்.

ஒருவன் விழுந்தவுடன் முரண்பாடு முடிந்து விடுமா பான் கீ மூன் ஐயா?

அவன் விழுந்தது இது முதற் தடவை அல்ல. விழுந்தவன் சாதாரணமானவன் அல்ல. அவன் விழ விழ எழுபவன்.

நீங்கள் சொல்வது போல் "post-conflict national election" இலங்கை பிளவு பட்டபின்தான் ஏற்படும்.

1 comment:

Yoga said...

அவர் தனது இருப்பை,இப்படி அறிக்கைகள் விட்டு உறுதி செய்து கொள்கிறார்,தப்பா?உங்கள் சரிதங்களையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு,ஓய்வு காலத்தில் சரித்திர நாவலா எழுத முடியும்?பதவியைத் தக்க வைக்க ஏதாவது யோசனையிருந்தால் சொல்லுங்கள்.அதை விட்டு,விட்டு?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...