Monday, 4 January 2010

கூத்தாடும் கூட்டமைப்பு



இலங்கையில் நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்களும் ஒரு அம்சத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அதாவது தமிழர்களுக்கு எந்த வாக்குறுதிகளையும் தருவதில்லை. வாக்குறுதிகூடத் தர மறுக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதால் என்ன பயன்?
இந்தத் தேர்தலை தமிழ் மக்கள் வாக்களிப்பதால் எந்த பயனும் தமக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதை உலகிற்கு காட்ட வாக்களிக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் இந்த உண்மையை உணரவில்லை.

2001-ம் ஆண்டு பல தமிழ் அரசியல் கட்சிகளையும் முன்னாள் போராளிக் குழுக்களையும் கொண்டு உருவாக்கப் பட்டது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.
இதில் பழைய தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சி ஆகியவறுடன் ஈழ மக்கள் விடுதலை முன்னணி (சுரேஸ் அணி) தமிழீழ விடுதலைக் கழகம் ஆகியன உள்ளடங்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை முக்கிய மூன்று அம்சங்களைக் கொண்டது: தமிழர்களின் 1. தாயகம், 2. தேசியம், 3. தன்னாட்சி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் பிரபலமடையக் காரணம் இந்த மூன்று கொள்கைகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழர்களது ஒரே பிரதிநிதியாக ஏற்றுக் கொண்டமையாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2001-ம் ஆண்டு பாராளமனறத் தேர்தலில் 348,164 வாக்குக்களையும் 2004-ம் ஆண்டு பாராளமனறத் தேர்தலில் 633,654 வாக்குக்களையும் பெற்றது.

இன்னும் சில வாரங்களில் நடக்க விருக்கும் இலங்கை குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வாக்கு வங்கியை சரியாகப் பயன் படுத்தாமல் கூத்தாடுகிறது கூட்டமைப்பு.

தமிழ் காங்கிரஸ் கட்சி தேர்தலைப் புறக்கணிக்கும் தீர்மான எடுத்தது. சிவாஜிலிங்கம் தனித்துப் போட்டியிடுகிறார். அவரது சகாக்கள் அவர் மஹிந்த ராஜபக்சவை வெற்றியடையச் செய்வதற்காக பணம் வங்கிக்கொண்டு போட்டியிடுவதாக குற்றம் சுமத்துகின்றனர்.

கூட்டமைப்புக்குள் ஒரு கூட்டமைப்பு
இராசவரோதயன் சம்பந்தன், மாவை சேனதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய மூவரும் ஒரு கூட்டமைப்பை உருவாக்கிச் செயற்படுகின்றனர். மூவராவது ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று பெருமையடைவோமாக.

மீன்பிடித் தடை வேலை செய்யாது.
யாழ் மாநகர சபைத் தேர்தலில் தமக்கு வாககளிக்காவிட்டால் உங்களை மீன்பிடிக்க விடமாட்டோம் என்று மிரட்டி வாக்குக் கேட்டதாக தகவல். குடியரசுத் தலைவர் தேர்தலில் அந்த மாதிரி எல்லாம் செய்ய முடியாது. சிலரை பதவி ஆசை காட்டி தமது வழிக்குக் கொண்டு வருவதை பிரதான வேட்பாளர்கள் கையாள்கிறார்கள். அத்துடன் தமிழ் மக்களைக்கு என்று இருந்த தடைகளில் சிலவற்றை நீக்கப்பட்டுள்ளது மஹிந்த அரசினால். இவை வாக்களிக்கும் தீர்மானத்தைப் பாதிக்குமா?

வாக்குறுதி வழங்குவதில்லை என்ற உறுதி.
இரு பிரதான வேட்பாளர்களான சரத்தும் மஹிந்தவும் ஒரு விடயத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள்: தமிழ் மக்களுக்கு என்று எந்த வாக்குறுதியும் வழங்குவதில்லை. ஒரு தரப்பு ஏதாவது வாக்குதி வழங்கினால் மற்றத்தரப்பு அதையே தனதுஆயுதமாகப் பயன் படுத்தும்.

வாக்குறுதிகூடத் தர மறுக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதால் என்ன பயன்?
இந்தத் தேர்தலை தமிழ் மக்கள் வாக்களிப்பதால் எந்த பயனும் தமக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதை உலகிற்கு காட்ட வாக்களிக்க வேண்டும்.
=======================================

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...