Sunday 6 December 2009

சரத் பொன்சேக்காவின் பின்னால் இந்தியா செல்லுமா?


சிங்களவர்கள் போரில் வெல்ல இந்தியா சகல உதவிகளும் செய்தது. ஆனால் சீனா இலங்கையில் பாரிய திட்டங்களை நிறைவேற்ற மஹிந்த ராஜபக்சே அரசு அனுமதி அளித்துள்ளது. ஆறு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களுக்கான செலவை சீன வங்கி இலங்கைக்குக் கடனாக வழங்கும். அதை வைத்து சீன நிறுவனங்கள் இலங்கையில் அத்திட்டங்களை நிறைவேற்றும். அத்திட்டங்கள்:
  • புத்தளத்தில் அனல் மின்நிலைய இரண்டாம் கட்டம்.
  • அம்பாந்தோட்டையில் துறைமுகத்தின் இரண்டாம் கட்டம்.
  • அம்பாந்தோட்டை விமான நிலையத் திட்டம்.
  • மாத்தறை கதிர்காமம் இடையிலான தொடரூந்துப் பாதை அமைப்பு.
  • பிந்துவர மாத்தறை இடையிலான் விரைவுப் பாதை அமைப்பு.
  • மதவாச்சி தலைமன்னார் இடையிலான தொடரூந்துப் பாதை அமைப்பு.
  • யாழ்ப்பாணத்தில் பல பெருந்தெருக்கள் அமைப்பு.
  • யாழ்-மன்னார்-புத்தள இணைப்பு தெருக்கள்
  • பலாலி காங்கேசன் துறை இடையிலான தொடரூந்துப் பாதை அமைப்பு.
இதில் பலாலி காங்கேசந்துறை இடையிலான தொடரூந்துப் பாதை அமைப்பு இந்தியாவைற்கு வைக்கப்படும் ஆப்பு. இத்திட்டம் இந்தியாவில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் இடம் பெறவிருக்கிறது.

சக்தியற்ற இந்தியா
இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு மும்முனைப் போட்டியை ஏற்படுத்த முனைந்தது. அது சரத் பொன்சேக்கா, ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்சே ஆகியோருக்கிடையிலானதாக இருக்க இந்தியா விரும்பியது. இலங்கையில் தனது விருப்பத்தை நிறைவேற்றும் சக்தி இந்தியாவிடம் இல்லை. சிங்களவர்களுக்கு சேவகம் செய்து தமிழர்களை அழிக்க உதவ மட்டுமே முடியும். ரணிலை இந்தியாவிற்கு அழைத்து தனித்துப் போட்டியிடும் படி வற்புறுத்தியது இந்தியா. ரணில் அதற்கு மறுத்து அமெரிக்காவின் சொல்கேட்டு சரத் பொன்சேக்காவின் பின்னால் அணிதிரண்டார். இந்தியாவின் மும்முனைப் போட்டியின் ஒரு அம்சமாகவே கலைஞர் கருணாநிதி ரணிலை ஆதரித்தும் அவருக்கு சென்ற குடியரசுத் தேர்தலில் வாக்களிகாததிற்கு விடுதலைப் புலிகளை தாக்கியும் ஒரு அறிக்கை விட்டார்.

இந்தியாவை ஓரம் கட்டிய ரணில்
ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு மறுத்துவிட்டு அமெரிக்க ஆதரவாளராக மாறியதுடன் இந்தியா வேறு வழியின்றி மஹிந்த ராஜபக்சேயின் பின்னால் போனது. அதற்குப் பலமாக தமிழ் பேசும் மக்களை ஒன்று திரட்டி தான் சொல்லும் வேட்பாளர்களுக்கு அவர்களை வாக்களிக்கச் செய்யும் முயற்ச்சியில் இந்தியா இறங்கியது அதுவும் தோல்வியில் முடிவடைந்தது. பிரணாப் முகர்ஜீ இலங்கை வந்து மஹிந்த ராஜபக்சேயை வடக்குக் கிழக்கு ஒருங்கிணைப்பை செய்யவிருப்பதாக அறிவிக்கும்படி வேண்டினார். மஹிந்த அது ஒரு அரசியல் தற்கொலை என்பதை உணர்ந்து அதை பகிரங்கமாக மறுத்து பிரணாப் முகத்தில் கரிபூசினார். ஆனாலும் தொடர்ந்து மஹிந்தவிற்கு இந்தியா ஆதரவு வழங்கியது. ஆனால் மஹிந்த மேலுள்ள ஆறு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களை சீனாவிற்கு வழங்கினார்.

அமெரிக்கத் திட்டம்.
அமெரிக்காவின் திட்டம் சீனாவை இலங்கையில் இருந்து ஓரம் கட்டுவது. இந்தியாவால் இதைச் செய்ய முடியாது. சரத் பொன்சேக்காவை வெற்றி பெறச் செய்ய அமெரிக்கா பல வகையில் செயற்படுகிறது. முதலில் திரை மறைவில் தமிழர்கள் மத்தியில் ஒரு செய்தி பரப்பப் பட்டது. அதாவது சரத் ஆட்சிக்கு வந்தால் ராஜபக்சேக்களுக்கு எதிராக போர்க் குற்றம் சுமத்தப் படும் என்பது. சரத் பொன்சேக்காவை வெற்றி பெறச் செய்ய மலையத் தமிழர்களின் வாக்கு பெரிதும் உதவும் என்று அமெரிக்கா எண்ணுகிறது. அதனால் சீனாவை ஓரம் கட்டும் தன் முயற்ச்சியில் இந்தியாவையும் இணைக்க அமெரிக்கா கடந்த சில தினங்களாகப் பெரு முயற்ச்சி செய்கிறது. அதன் ஒரு அம்சமாக சரத் பொன்சேக்கா இந்தியா சென்று இந்திய வெளியுறவுத் துறையினரைச் சந்தித்தார். இந்தியா இப்போது மனம் மாறி சரத்-ரணில் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் அல்லது அமெரிக்கா மலையகத் தமிழர்களின் அரசியல் கட்சிகளிடையே பிரிவை உண்டாக்கி அவர்கள் வாக்குக்களைப் பித்து பெரும் பகுதியை சரத் பொன்சேக்காவிற்கு அதரவாக விழச் செய்யும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...