Friday 2 October 2009

மன்னிக்க வேண்டுகிறது மானங்கெட்ட டில்லி அரசு


பாக்கு நீரிணையில் தமிழ் மீனவர்கள் தாக்கப் பட்ட போது கொல்லப் பட்ட போது ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாக்கி மானபங்கப் படுத்திய போது மௌனமாயிருந்த மானங்கெட்ட டில்லி அரசு டில்லியில் உள்ள இலங்கைத் தூதுவரகம் தாக்கப் பட்டவுடன் இலங்கைக்கு வருத்தம் தெரிவித்து மன்றாடுகிறது.

இன்றுபிற்பகல் மூன்று மணியளவில் பத்துப் பேர் கொண்ட குழுவொன்று டில்லி சாணக்கியபுரியில் உள்ள (தமிழ் விரோத) சிங்கள அரசின் தூதுவராலயத்திற்குள் நுழந்து அங்குள்ள பூச்சட்டிகளை உடைத்தெறிந்து விட்டு அங்கு காவற் துறையினர் வருமுன் ஓடி மறைந்து விட்டது. இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்த கருத்து:

“We deeply regret this unfortunate incident which has involved an act of violence against a diplomatic mission, the external affairs ministry said here.

“The law enforcement agencies have swung into action. Security around the high commission premises has been strengthened, the ministry said.

“Action as prescribed by the law will be taken against the perpetrators of this incident, the ministry said.

இதே வேளை உத்தரப் பிரதேசப் பேரின வாதிகளின் அடிவருடியான ப. சிதம்பரம் இலங்கை கடற்படையினர் தமிழ் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்பது தவறானது என்று தெரிவித்துள்ளார். எல்லையைத் தாண்டும் மீனவர்கள்மீது மட்டும் தான் இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடாத்துவார்கள் என்று அவர் புலம்பியுள்ளார்.

2 comments:

முகமூடியணிந்த பேனா!! said...

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மனிதரை நினைந்து விட்டால்...

yalini said...

சம்பவத்தை விசாரிக்க முன்னமே வருத்தம் தெரிவித்து விட்டனர். தமது உடமைகளை தமது ஆட்களைவைத்தே சேதப் படுத்தியிருக்கலாம்...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...