Tuesday 29 September 2009

இந்தியாவை இலங்கை மீண்டும் மிரட்டியதா?


இலங்கையில் போர் மும்முரமாக நடை பெற்றுக் கொண்டிருந்த வேளை போர்முனையில் எழுபதாயிரம் மக்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர்களை ஐநூறு புலிகள் தடுத்து வைத்திருப்பதாகாவும் இலங்கை அரசு பொய் கூறியது. ஆனால் செய்மதிப் படங்களை ஆதாரம் காட்டி ஐக்கிய நாடுகள சபை அதற்குள் இரண்டரை இலட்சம் பொதுமக்கள் இருப்பதாக கணக்கிட்ட தகவல் வெளிவந்தது. போர்முனையில் சகல நடவைக்கைகளையும் தனது செய்மதிகளூடாக அவதனித்துக் கொண்டிருந்த இந்தியா பதின் மூன்றாம் நாள் பாரதப் போரில் அஸ்வத்தாமனா இறந்தான் என்று துரோணாச்சாரியார் கேட்டபோது மௌனமாக இருந்து உண்மையை மறைத்த தருமரைப் போல் உண்மை தெரிந்தும் தெரியாதது போல் இருந்து அறுபதினாயிரம் அப்பாவித் தமிழர்களை கொன்று குவிக்க உதவியது.

போர் நடக்கும் போது போர் நிறுத்தம் போர் நிறுத்தம் என்று தமிழ்நாட்டில் இருந்து குரல் கொடுக்கப் பட்டபோது அதை ஏற்றுக் கொள்வது போல் இந்தியா பாசாங்கு செய்து இரு தமிழின விரோதிகளை இலங்கைக்கு போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த அனுப்பவது போல் நாடகமாடி தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கான நடவடிக்கைகளைத்தான் இந்தியா மேற் கொள்ளப் பட்டது.

இலங்கையில் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு தேவை என்பது போல் இந்தியா போலியாகக் கூறிவந்தது. அதற்கு இலங்கையின் பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தீர்வு காணப் படவேண்டும் என்று இந்தியா புலம்பிவந்தது. அண்மையில் எகிப்தில் நடந்த அணிசேரா மாநாட்டின் போது இந்தியப் பிரதமரை சந்தித்த மஹிந்த ராஜபக்சே இனி இனப்பிரச்சனைத் தீர்வைப் பற்றிக் கதைக்கக் கூடாது என்று மிரட்டினாராம். அதைத் தொடர்ந்து இந்தியா இனப் பிரச்சனைத் தீர்வைப் பற்றிக் கதைப் பதை விட்டுவிட்டது.

இந்த மாதம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் டெல்லி சென்று முகாம்களில் அடைபட்டிருக்கும் அப்பாவித் தமிழர்கள் தொடர்பாகக் கதைத்ததின் பின் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் இலங்கை அரசினரைச் சந்தித்து முகாமில் இருக்கும் மக்கள் தொடர்பாகக் கதைத்தாராம். டெல்லியில் இருந்து இலங்கைக்கு இது தொடர்பாக கடிதமும் சென்றது. ஆனால் நியூயோர்க்கில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்ததை தொடர்ந்து இந்தியா இலங்கையின் வன்னி முகாமில் சட்டவிரோதமாக அடைக்கப் பட்டிருக்கும் மக்கள் தொடர்பாகக் கதைப்பதை நிறுத்திக் கொண்டது. இலங்கை வெளிவிகார அமைச்சர் இந்திய வெளிவிவகார அமைச்சரை மிரட்டினாரா?

5 comments:

ttpian said...

indhia's foreign minister got "BOX" of gifts from srilankan maamaa

thamilini said...

எவ்வளவு மிரட்டினாலும் தாங்கிறானுங்க..
இவங்க ரெம்ப ரெப்ம நல்லவனுங்கோ...

Anonymous said...

டேய் காமேடி பீஸ் பரதேசி உன் சிரிப்பு தொல்லை தாங்க முடியலைடா
தினமும் இதை போல நகைசுவை பதிவு போடவும்

siruthaai said...

கவிஞர் வேல்தர்மா! நான் தங்களின் நீண்ட நாள் ரசிகன் ..இந்த புல்லுருவிகளுக்காக தங்களின் படைப்புகளை நிறுத்திவிட வேண்டாம்.. தொடர்ந்து எழுதுங்கள்

Anonymous said...

Shameless India's fishermen were killed and chased naked by Srilnkan Navy.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...