Wednesday 9 September 2009

தமிழ் மீனவர்களைப் பாதுகாக்க ராகுல் என்ன நடவடிக்கைகள் எடுப்பார்?


சென்ற மாதம் நடுக்கடலில் பழுதடைந்த இந்திய மீனவர்களின் படகைக் கட்டி இழுத்துச் செல்வதற்கு இந்தியக் கரையோரக் காவற் படையினர் தயாராகிக் கொண்டிருந்த வேளை அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் இந்தியர்கள் மீது சரமாரியாகச் சுடத் தொடங்கினர். பயந்து நடுங்கிய இந்தியக் கரையோரக் காவற் படையினர் தமது கைகளை உயர்த்தி அவர்களிடாம் சரணடைந்தனர். அவர்கள் கப்பலுக்குள் ஏறி சோதனையிட்ட பின் இலங்கைக் கடற்படையினர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக இந்தியா இலங்கை அரசிடம் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.
தமிழ் மீனவர்களை சிங்களவர்கள் நடுக்கடலில் கொன்று குவிப்பதைப் பற்றி தமிழ்நாட்டில் உள்ள உத்தரப் பிரதேச பேரினவாதிகளின் கொத்தடிமைகளிடம் சொன்னால் அவர்கள் கூறும் பதில்: மீனவர்கள் எல்லையைத் தாண்டிச் சென்றனர். அதனால் இலங்கைக் கடற்படை சுடுகிறது. எல்லையைத் தாண்டிச் செல்பவர்களைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்பது இவர்களின் கருத்து. இப்படி எந்த நாட்டிலும் நடப்பதில்லை. எல்லையைத் தாண்டுபவர்கள் ஆகக் கூடிய தண்டனையாக கைது செய்யப் படலாம். ஆனாலும் இக் கொத்தடிமைகள் இப்பதிலைத் திருப்பி திருப்பி சொல்லி மகிழ்கின்றனர்.

இதுவரை கடலில் கொல்லப் பட்ட தமிழ் மீனவர்களுக்காக இலங்கை அரசிற்கு எதிராக இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் ராகுல் காந்தி தமிழ் மீனவர்கள் கொல்லப் பட்டால் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்துள்ளார். இவரது அப்பன் தமிழர்களுக்கு என்ன செய்தார்?:
தமிழர்களை ஆயுதங்களை சிங்களவர்களிடம் ஒப்படைக்கும் படியும் தமிழர்களைத் தான் பாதுகாப்பதாகவும் வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு நடந்தது என்ன? தமிழர்களை அமைதிப்படையை அனுப்பி கொன்று குவித்தார். இந்தியாவால் சிங்களவர்களுக்கு ஆயுதம் படைப் பயிற்ச்சி வழங்கப் பட்டது. தமிழினக் கொலைக்குத் தேவையான ஆயுதங்களைவாங்குவதற்கு இந்தியா சிங்களவர்களுக்கு நிதி வழங்கியது. இலங்கைப் படையினருடன் இந்தியப் படையினர் இணைந்து தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டனர்.

தமிழ் மீனவர்களைப் பாதுகாக்க ராகுல் காந்தி என்ன செய்வார்?
  • சிங்களைக் கடற்படைக்கு பயிற்ச்சி வழங்குவாரா?
  • சிங்களக் கடற்படைக்கு ஆயுதங்கள் வழங்குவாரா?
  • சிங்களக் கடற்படைக்கு தேவையான நிதிகளை வழங்குவாரா? அதைப் பாவித்து சீனாவிடமும் பாக்கிஸ்த்தானிடமும் இருந்து சிங்களவர்களை ஆயுதங்கள் வாங்கச் செய்வாரா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...