Thursday, 21 May 2009

இந்தியா ஏன் பிரபாவையும் பொட்டுவையும் தப்பவிட்டது


பிரபாகரன் மரணம் சம்பந்தமாக இலங்கை அரசின் குட்டு இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உடை படுகிறது. பல இணையத் தளங்கள் ராஜபக்சே இறந்து கிடப்பது போலவும் அவர் பிரபாகரனின் காலில் விழுந்து கெஞ்சுவது போலவும் படங்களைப் போட்டுக் கேலி செய்கின்றன.

நக்கீரன் பத்திரிகை புலிகளின் தலமைப் பீடம் தப்பிவிட்டதாக ஒரு நீண்டகட்டுரை வெளியிட்டுள்ளது. அது பிரபாகரன் கையில் தான் கொல்லப்பட்டதான செய்தியைக் கொண்ட பத்திரிகையைக் கையில் வைத்துக் கொண்டு தனது "இறந்த உடலை" தொலைக்காட்சியில் பார்த்துச் சிரிப்பது போல முற்பக்க படத்தையும் பிரசுரித்துள்ளது. இது இலங்கை அரசிற்கு விடுக்கும் சவால்! உனது படம் உண்மையென்றால் இதுவும் உண்மைதானே!

ஆனால் இப்போது முக்கியமான பகுதி

இந்தியா ஏன் புலிகளின் தலமைப் பீடத்தைத் தப்பவிட்டது? தேர்தல் முடிந்துவிட்டது. தமிழர்களின் வாக்குகளுக்காக தப்ப விடவில்லை. மத்தியில் செல்வாக்கிழந்து நிற்கும் தமிழ்நாட்டுத் தலைவர்களின் வேண்டுதலுக்குப் பணிந்து செய்திருக்க வாய்ப்பில்லை. யாரோ(?) செய்த ராஜீவ் கொலைக்கு ஏன் பழி வாங்கவில்லை?

நக்கீரன் இப்படிச் சொல்கிறது:
சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு.

ஏன் இந்த உத்தரவு? தமிழ்த் தேசிய வாதம் என்று இலங்கையில் முற்றாக ஒழிக்கப் படுகிறதோ அன்றே இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கை நழுவிவிடும். சிங்கள-பெளத்தப் பேரினவாதிகள் அனைவருமே மிகக் கடுமையான இந்திய எதிர்ப்பாளர்கள். அது மட்டுமல்ல சீனாவுடன் நெருக்கமான் உறவைப் பேணுபவர்கள். தமிழ்த் தேசிய வாதம் உயிருடன் இருக்கும் வரையிலேயே இந்தியாவல் இலங்கையைத் தன் பிடியில் வைத்திருக்க முடியும்.

இந்தியாவிற்கு எதிராக சீனா முத்து மாலை என்ற திட்டத்தின் கீழ் இந்து சமுத்திரத்தில் தனது வல்லாதிக்கத்தை நிலைநாட்ட பல கடற்பபடைத் தளங்களை உருவாக்குகிறது. இது சம்பந்தமாக இந்தியாவிற்கு சீனா போடும் சுருக்குக் கயிறு எனும் கட்டுரையை கீழ் உள்ள இணைப்பில் காணலாம்:
http://veltharma.blogspot.com/2009/05/blog-post_17.html

எந்த ஒரு கட்டத்திலும் விடுதலைப் புலிகள் இந்தியாவிற்கு எதிரான நிலைப் பாட்டை எடுத்ததில்லை. எடுக்கவும் மாட்டார்கள் என்பதை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் உணர்ந்து விட்டனரா?
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...