Monday, 25 July 2016

எதிர் காலத்தில் இந்தியப் படைத்துறையின் வலிமை

அமெரிக்காவின் National Interest என்னும் ஊடகம் 2030-ம் ஆண்டு உலகின் தலை சிறந்த தரைப்படையை இந்தியா கொண்டிருக்கும் என எதிர்வு கூறியுள்ளது. இரண்டாம் இடத்தில் பிரான்ஸ், மூன்றாம் இடத்தில் இரசியா, நான்காம் இடத்தில் ஐக்கிய அமெரிக்கா, ஐந்தாம் இடத்தில் சீனா என்பவை இருக்கும் என்கின்றது National Interest. ஒரு பிரதேசத்தை கைப்பற்றுதல் அல்லது விடுவித்தல் தரைப்படையின் முக்கிய பணியாகும். ஆனால் தீவிரவாதிகளுக்கு எதிரான படை நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தரைப்படைகளின் பணிகளில் முன்னிலை வகிக்கப்போகின்றது. இந்தியா உலகப் பெரு வல்லரசாகும் என்பது சர்ச்சைக்குரியதாயினும் சாத்தியமற்ற ஒன்றல்ல. பாக்கிஸ்த்தானிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் வரும் அச்சுறுத்தல்கள் அதிகரித்துக் கொண்டு போகையில் இந்தியா தனது படை வலுவை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

கட்டுக்கோப்பான இந்தியப் படைத்துறை
இந்தியத் தரைப்படையின் வலிமைக்கு இந்தியக் கலாச்சாரமும் ஒத்துப் போகின்றது. உலகிலேயே மிகக் கட்டுக்கோப்பான படைத்துறை இந்தியப் படைத்துறை எனவும் கருதப்படுகின்றது. மேலதிகாரியின் கட்டளைகளை அடிபணிந்து ஏற்றுக் கொள்வது இந்தியாவின் சமூகக் கட்டமைப்பில் ஊறிப்போயுள்ளமை இந்தியப் படைத்துறைக்கு மிகவும் வாய்ப்பாக அமைகின்றது. அதிலும் உயர் சாதிக்காரர்களின் கட்டளைகளை கீழ்ச் சாதிக்காரர்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் எனப் பல்லாண்டுகாலமாக இருக்கும் நடை முறையும் இந்தியப் படைத்துறைக்கு ஏற்புடையதாகவே இருக்கின்றது. 

சாதகமான மக்கள் தொகைக் கட்டமைப்பு
உலகில் படைத்துறையின் முன்னணியில் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு மட்டுமே சாதகமான மக்கள் தொகைக் கட்டமைப்பு உண்டு. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் மற்ற நாடுகளில் வயோதிபர்களின் தொகை அதிகமாகவும் இளையோரின் தொகை குறைவாகவும் உள்ளது. இந்த நிலைமை சீனாவில் மிக மோசமாக உள்ளது. அத்துடன் சீனா தனது படைத்துறையில் ஆளணியினரைக் குறைக்கும் திட்டத்தைச் செயற்படுத்தத் தொடங்கி விட்டது. இந்தியா தனது படையினரை அதிகரிக்கும் திட்டத்துடனேயே இருக்கின்றது. இதனால் எதிர்காலத்தில் இந்தியா உலகிலேயே அதிக அளவு படையினரைக் கொண்ட நாடாக மாறும் வாய்ப்பு உள்ளது. 

புதியவை புகுத்தும் இந்தியப் படைத்துறை
1987-ம் ஆண்டு அமைதிப் படை என்னும் பெயரில் இலங்கை சென்ற இந்தியப் படையினரின் சிறு பிரிவுகள் தமது தொலை தொடர்புக் கருவிகளைத் தோளில் சுமந்து சென்றதாகவும் விடுதலைப் புலிகள் சட்டைப்பைகளில் வைத்திருக்கக் கூடிய புதிய தர தொலை தொடர்புச் சாதனங்களை வைத்திருந்ததனர்.  இந்தியப் படையினர் தொழில்நுட்பத்தில் பிந்தங்கி இருந்ததாக அப்போது படைத் துறை விமர்சகர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர். பாக்கிஸ்த்தானுடனான கார்கில் போரின் போது செய்மதியூடான சிறந்த தொடர்பாடல்களையோ நிலையறியும் தொழில்நுட்பமோ இந்தியப் படைகளிடம் இருக்கவில்லை என்றும் இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறையினர் நேரடியாக வந்து இந்தியப் படைகளுக்கு உதவி செய்தனர் என்றும் செய்திகள் அப்போது வெளிவந்திருந்தன. இவற்றின் பின்னர் இந்தியப் படை தனது தொழில்நுட்பத்தை கவனமாக முன்னேற்றிக் கொண்டிருக்கின்றது.

தொழில்நுட்ப மேம்பாடு
தற்போது இந்தியா இஸ்ரேல், இரசியா, பல மேற்கு ஐரோப்பிய நாடுகள் இந்தியாவிற்கு தமது படைத்துறைத் தொழில்நுட்பத்தை வழங்கத் தயார் நிலையில் உள்ளன. ஐக்கிய அமெரிக்காவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனது படைத்துறை ஏற்றுமதியை இந்தியாவிற்குச் செய்து கொண்டிருக்கின்றது. சவுதி அரேபியாவிற்கு அடுத்த படியாக அதிக அளவு அமெரிக்கப் படைக்கலன்களை வாங்கும் நாடாக இந்தியா தற்போது உள்ளது. உலகப் படைகலச் சந்தையில் அதிக அளவு கொள்முதல் செய்யும் நாடாக இந்தியா இருக்கின்றது. இது இந்தியாவின் படைத்துறையின் தொழில்நுட்பத்தை மேம்படுத்த பேருதவியாக இருக்கின்றது. இனிவரும் காலங்களில் இந்தியா பல புதிய படைத்துறைத் தொழில்நுட்பங்களை மற்ற நாடுகளிடமிருந்து வாங்குவதோடு மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் அதன் உற்பத்தியை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. 

புதிய இந்தியப் படை வீரர்
எதிர் காலத்தில் இந்தியப் படைவீரன் ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு திட்டத்தை இந்தியா வகுத்து அதை நிறைவேற்றி வருகின்றது. எதிர் காலத்தில் இந்தியத் தரைப்படையின் வீரனிடம் குண்டு துளைக்காத தலைக்கவசம்இரவில் பார்க்கக் கூடிய கண்ணாடிதீப்பிடிகாததும் குண்டு துளைக்காததுமான பாரம் குறைந்த சீருடைஇருக்கும் இடம் போகவேண்டிய இடம் பற்றிய தகவல்கள் வழங்கும் GPSகருவிகள்சிறு கணனிகள் பொருத்தப்பட்டட துப்பாக்கிஅதில் இலக்கை நோக்கித் துல்லியமாகச் சுடக்கூடியவகையில் லேசர் கருவிகள்சூழ்நிலை எதிரிகள் போன்ற தகவல் அறியும் வெப்ப  உணரிகள், GPS உணரிகள் மூலம் எதிரியின் இலக்குகளை நோக்கி துல்லியமாக வீசக் கூடிய கைக்குண்டுகள்எதிரியின் கணினிகளைக் குழப்பக்கூடியதும் சக படைவீரனால் இனம் காணக்கூடியதாகவும் மிகச்சிறு உள்ளங்கைக் கணினி (palmtops) செய்மதிக் கைப்பேசிகள், infrared sensors, thermal sensors, electro optical sensors, spectroscopic sensors, electromagnetic and radio frequency sensors எனப் பலவிதமான உணரிகள் எனப் பலதரப்பட்ட புதிய கருவிகள் இருக்கும்.

படைக்கலன்கள்
இந்தியாவின் தரைப்படை தனது படைக்கலன்களை புதியனவாக்கிக் கொண்டே இருக்கின்றது. உள்ளூர் உற்பத்தியும் சிறப்பாக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றது. இந்தியாவின் பினாக்கா பல்குழல் ஏவுகணைச் செலுத்தி  120 கிலோ மீட்டர் தூரத்திற்கு  ஏவுகணைகளை வீசக் கூடியவை. ஒரு பினாக்காவில் 288 ஏவுகணைகள் இருக்கும். இவை தரைப்படையின் செயற்பாட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தரைப்படைக்கு அடுத்து அத்தியாவசியமான படைக்கலன் தாங்கிகளாகும். இரசியாவின் T-90 தாங்கிளை இந்திய மயப்படுத்தி அவற்றிற்கும் பிஷ்மா என்ற மகாபாராதப் பாத்திரத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவை இரசியாவின் மூன்றாம் தலைமுறைத் தாங்கிகளாகும்.   இவற்றில் 1250 தாங்கிகள் இந்தியாவிடம் இருக்கின்றன.  முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுபவை அர்ஜுண் தாங்கிகள். இவை பீஷ்மாவிலும் பெரியவை. பல சிக்கல்களுக்குப் பின்னர் அவை மேம்படுத்தப்பட்டு தற்போது இந்தியத் தரைப்பட்டையின் அச்சாணியாக அவை விளங்குகின்றன. இவற்றின் தொழில்நுட்பம் இஸ்ரேலிடமிருந்து பெறப்பட்டவையாகும். இவற்றின் 120மில்லி மீட்டர் ரைபிள் துப்பாக்கிகள் பொருத்தப் பட்டுள்ளன. மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீட்டர் கதியில் நகரக் கூடியவை.
 
வேவுபார்க்கும் திறன்
இந்தியாவின் தரைப்படைக்கு அவசியமான வேவுபார்த்தல் திறன் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிடம் தற்போது உள்ள Airborne Early Warning and Control System (AWACS) என்னும் வான் சார் முன்னதான எச்சரிக்கை முறைமை கொண்டவிமானங்கள் அதன் தரைப்படைக்கு பேருதவியாக உள்ளது. இரசியாவிடமிருந்து வாங்கிய விமானங்களில் இஸ்ரேலிய ரடார்களையும் வேறு உணரிகளையும் பொருத்தி இந்தியா இந்த AWACSஐ உருவாக்கியுள்ளது. இந்த ரடாரால் 360 பாகியில் பெரும் நிலப்பரப்பை வருடி உணர முடியும். இந்தியா இஸ்ரேலிடமிருந்து பல புதிய தர ஆளில்லாப் போர் விமானங்களை வாங்கியதுடன் உள்நாட்டிலும் அவற்றை உற்பத்தி செய்து வருகின்றது. இந்தியா தனக்கென ஒரு GPSசெய்மதியையும் விண்வெளியில் மிதக்க விட்டுள்ளது. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியானதும் ஏழாவதுமான GPS செய்மதி விண்வெளிக்கு ஏவப்பட்டது. உலக நிலைப்புள்ளியறி முறைமை எனப்படும் GPS  மூலம் படையினர் தமது நிலைகளையும் எதிரியின் நிலைகளையும் அறிவதோடு   உளவாளிகளும் வேவு பார்ப்போரும் எதிரியின் நிலைகள் நகர்வுகள் பற்றிய தகவல்களை இலகுவாகவும் துல்லியமாகவும் பரிமாறிக் கொள்ளலாம். ஐக்கிய அமெரிக்கா, இரசியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் இந்தியாவும் நான்காவதாக தனக்கென ஒரு GPS செய்மதி முறைமையை உருவாக்கியுள்ளது. சீனா 2020-ம் ஆண்டுதான் இந்த வசதியைப் பெறும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

உளவுத் திறன்
விடுதலைப் புலிகள் நகர்சார் போரில் மட்டுமே திறனுடையவர்கள் அவர்கள் கண்ணி வெடிகளை வைத்து விட்டு கட்டிடங்களின் பின்னால் நின்று போர் புரிவதில் மட்டும் திறன் மட்டுமே உடையவர்கள் என்ற பிழையான உளவுத் தகவல் இந்தியப் படையினரின் செயற்பாட்டிற்கு குந்தகமாக அமைந்தது. 2015-ம் ஆண்டு இந்தியாவிற் செயற்பட்ட பக்கிஸ்த்தானிய உளவுத் துறையான ஐ.எஸ்.ஐஇன் உறுப்பினர்கள் பலரைக் கைது செய்து பக்கிஸ்தானிய உள்வுத் துறையை வேரோடு அறுத்ததன் மூலம் இந்திய உளவுத் துறை தனது திறமையை வெளிக்காட்டியது. அமெரிக்காவின் சிஐஏயும் இஸ்ரேலின் மொசாட்டும் தமது ஆசிய நாட்டு உளவு நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் உதவியைப் பெறுகின்றன. பாக்கிஸ்த்தான், பங்களாதேசம், மியன்மார், இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகளில் இந்திய உளவுத்துறை வலுமிக்கதாக இருப்பதால் அதன் உதவி அந்த இரு உளவுத் துறைக்கும் தேவைப் படுகின்றது. இதற்குப் பதிலாக இந்தியாவிற்கு தமது உளவுத் தகவல்களை அவை பரிமாறிக் கொள்கின்றன. இலங்கையிலும் மியன்மாரிலும் நடந்த ஆட்சி மாற்றங்களில் மூன்று உளவுத் துறைகளும் இணைந்து செயற்பட்டதாகவும் நம்பப்படுகின்றது. 


இணையவெளிப் போர் முறைமை
மென்பொருள் துறையில் சிறந்து விளங்கும் இந்தியா இணைய வெளிப் போர் முறையில் முன்னணியில் இருக்க வேண்டும். மற்றப் போர் முறைமைகளுடன் ஒப்பிடுகையில் இணையவெளிப் போர் முறைமைக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கீடே தேவைப்படும் ஆனால் அதிக ஆளணி தேவைப்படும்.  இதனால் இணையவெளிப் ோர் முறையில் சீனா முன்னணியில் இருக்கின்றது. சீன இணைய ஊடுருவிகள் பலதடவை இந்தியப் படைத்துறைக்குத் தெரியாமல் அவர்களின் கணனிகளை ஊடுருவி பல தகவல்களைப் பெற்றுள்ளார்கள் என நம்பப்ப்டுகிறது. இதில் எந்த அளவு தகவல்கள் பாக்கிஸ்தானுக்குப் பரிமாறப்பட்டது என்பது பெரும் கேள்வி. மும்பையைச் சேர்ந்த ஒரு இணையவெளி ஊடுருவி தான் அரச அதிகாரிகளுக்கு தனது வைரஸை இணைப்பாகக் கொண்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் அதில் 75% மானவர்கள் அதைத் திறந்து பார்ப்பார்கள் என்றும் அதன் மூலம் தன்னால் பல அரச செயற்பாடுகளை மறு நாள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றார். இந்தியா இந்த நிலைமையை மாற்றி வரும் காலங்களில் இணைய வெளிப் போர் முறைமையில் முன்னணியில் திகழும் வாய்ப்பு நிறைய உண்டு. 


களம் பல கண்ட இந்தியத் தரைப்படை
பாக்கிஸ்த்தானுடன் செய்த போர்கள் இந்தியப் படையினருக்கு நிறைய அனுபவங்களைக் கொடுத்துள்ளது. இலங்கைக்கு அமைதிப் படையை கடல் கடந்து நகர்த்தியமை இந்தியாவிற்கு ஒரு சிறந்த படை தைக் கொடுத்துள்ளது. உலகிலேயே அதிக அளவு விழிப்புடன் இருக்க வேண்டிய ஒரு படையாக இந்தியத் தரைப்படை இருக்கின்றது. எந்த நேரமும் எந்தத் திசையிலும் பாக்கிஸ்த்தானில் இருந்து படையினர் அல்லது தீவிரவாதிகள் ஊடுருவும் அச்சத்தை இந்தியா தொடர்ந்து எதிர் கொண்டு வருகின்றது. உள் நாட்டில் பல பிரிவினைவாத அமைப்புக்களுக்கும் தீவிரவாத அமைப்புக்களுக்கும் எதிராக இந்தியப் படையினர் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கின்றார்கள். 

வல்லரசாவதிலும் பார்க்க வலிமை மிக்க அரசாக வேண்டும்.
ஜப்பான் தனது அரசியிலமைப்பு யாப்பை மாற்றி ஒரு தாக்குதல் படைத்துறையாக மாற்றும் சாத்தியங்கள் தற்போது அதிகரித்துள்ளன. ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சோ அபே இந்தியாவுடன் படைத் துறை ஒத்துழைப்பைப் பெரிதும் விரும்புகின்றார். ஜப்பான், இந்தியா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து சீனாவிற்கு எதிரான ஒரு படைத் துறைக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பது அபேயின் பெரும் விருப்பம்.   அதற்க்கு இந்தியாவிற்கு இரு தடைகள் உண்டு. முதலாவது இரசியாவின் நட்பு இந்தியாவிற்கு அவசியம். இரசிய நட்பு மிகவும் நம்பகரமானது என்பதை பங்களாதேசப் போரின் போது நிரூபிக்கப் பட்டுள்ளது. இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் இரு நிரந்தர உறுப்புரிமை பெறும் வரை இந்தியாவிற்குத் தேவைப்படும் போதெல்லாம் அதற்கு சாதகமாக தனது வீட்டோ என்னும் இரத்து அதிகாரத்தை இரசியாவைத் தயார் நிலையின் வைத்திருத்தல் இந்தியாவிற்கு அவசியம். இரண்டாவது  பாதுகாப்புச்  சபையில் இந்தியா நிரந்தர உறுப்புரிமை பெறும்வரை சீனாவைப் பகைக்கக் கூடாது. ஆனால் இந்தியா வலிமை மிக்க அரசாவதற்கு சீனாவை மிஞ்சி சில காரியங்கள் பார்க்க வேண்டிய அவசியம் உண்டு. ஜப்பானுடன் இணைவதால் இந்தியாவால் உலகத் தரம் மிக்க படைக்கலன்களை உற்பத்தி செய்ய முடியும். அதன் மூலம் எல்லா நாடுகளையும் விஞ்சிய ஒரு வலிமை மிக்க அரசாக இந்தியாவால் மாற முடியும்.  பின்பு நிரந்தர உறுப்புரிமை இந்தியாவைத் தேடி வரும். சீனாவின் பொருளாதார வளர்ச்சி விழுக்காடு குன்றுகையில் இந்தியாவின் வளர்ச்சி உறுதியாக இருக்கின்றது என்பதையும் கவனிக்க வேண்டும். 


Saturday, 16 July 2016

துருக்கியில் படையினரின் புரட்சி முயற்ச்சியின் பின்னணி

துருக்கியில் ஒரு படைத்துறைப் புரட்சி முறியடிக்கப் பட்டுள்ளது. துருக்கியில் மக்களாட்சியை மலரச் செய்தவர்கள் படைத்துறையினரே. அங்கு மக்களாட்சி அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் உலகப் பொருளாதரம் சிக்கலடைந்தும் துருக்கியின் பிராந்தியம் பெரும் குழப்பமடைந்தும் இருக்கும் நிலையிலும் துருக்கியில் ஓர் உறுதியற்ற நிலை உருவாகுவது விரும்பத்தக்கதல்ல. 2016 ஜூலை 16-ம் திகதி வெள்ளிக் கிழமை பிற்பகல் துருக்கியப் படைத்துறையினரின் ஒரு பகுதியினர் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்ச்சியில் இறங்கினர். பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இஸ்தான்புல்லை துருக்கியின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் பொஸ்பரஸ் பாலத்தை அவர்கள் முதலில் மூடினர்.  காவற்துறையைச் சேர்தவர்கள் பலர் தலைநகர் அங்காராவிலும் இஸ்த்தான்புல்லிலும் கைது செய்யப் பட்டனர். 

விடுமுறையில் அதிபர் ரிசெப்  எர்டோகன் தங்கியிருந்து விட்டு வெளியேறிய உல்லாச விடுதியில் குண்டு வெடிப்பு நடந்தது. இது அவரைக் கொல்ல எடுத்த முயற்ச்சியாகும். புரட்சியாளர்கள் படைத்தள பதியாகிய Chief of Defense General Hulusi Akarஐ பணயக் கைதியாகப் பிடித்தனர்.  உலங்கு வானூர்தி ஒன்று தலைநகர் அங்கோராவின் மேலாகப் பறந்து ரவை மழை பொழிந்தது. 

படைத்துறைச் சட்டம் (Marshall Law) புரட்சிக்கு முயன்ற படையினர் பல தொலைக்காட்சி நிலையங்களையும் கைப்பற்றினர். தேச முகாமையை தாம் முற்றாகக் கைப்பற்றியதாகவும் நாட்டில் சுதந்திரம், மனித உரிமைகள், அரசியலமைப்பு யாப்பு ஆகியவற்றைப் பேணப்போவதாகவும் புரட்சி முயற்ச்சியாளர்கள் அறிவித்தனர். நாட்டில் படைத்துறைச் சட்டம் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்தனர். ஆரம்பத்தில் எந்த அளவு படையினர் புரட்சியில் ஈடுபட்டனர் என்று சொல்ல முடியாத நிலை இருந்தது. துருக்கியத் தலைமை அமைச்சர்  Binali Yildirim மட்டும் முதலில் புரட்சிக்கு எதிராகக் கருத்து வெளியிட்டிருந்தார். TRT என்னும் அரச தொலைக்காட்சியினூடாக அவர் தமது கருத்தை வெளியிட்டிருந்தார். அத் தொலைக்காட்சியை புரட்ச்சிக்கு முயன்றவர்கள் கைப்பற்றாதது அவர்களின் தோல்வியைத் துரிதப் படுத்தியது எனச் சொல்லலாம். இரவு பதினொரு மணிக்கு அதிபர் எர்டோகனுக்கு ஆதரவான படையினர் போர் விமானத்தில் வந்து புரட்சியாளர்களின் உலங்கு வானூர்தியைச் சுட்டு வீழ்த்தினர். அதைத் தொடர்ந்து நள்ளிரவு 12-20இற்கு அதிபர் எர்டோகன் அங்காராவிற்குப் போய்ச் சேர்ந்ததில் இருந்து நிலைமை மாறத் தொடங்கி அதிபருக்கு ஆதரவான படையினரின் கை ஓங்கியது. புரட்சியாளர்கள் சரணடையத் தொடங்கினர். புரட்சியாளர்களின் நடவடிக்கை தலைநகர் அங்காராவிலும் இஸ்தான்புல்லிலும் மட்டுமே நடந்திருந்தன. 

எர்டோகனுக்கு கை கொடுத்த கைப்பேசி
விடுமுறையில் இருந்த அதிபர் ரிசெப் எர்டோகன் சி.என்.என் தொலைக்காட்சியின் ஓர் பெண் ஊடகருக்கு கைப்பேசியில் ஸ்கைப் ஊடாக நாட்டு மக்களுக்கு தன் கருத்தை வெளியிட்டார். அவரால் வெறுக்கப் பட்ட சமூகவலைத்தளம்தான் அவரது ஆட்சியைக் காப்பாற்றியது. அதன் மூலம் அவர் நாட்டு மக்களை அமைதியாக தெருவில் இறங்கிப் போராடும் படி வேண்டுகோள் விடுத்தார்.  அதன் பின்னரே நிலைம் சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது. எர்டோகனுக்கு ஆதரவான படையினர் களத்தில் இறங்கினர். இஸ்த்தான்புல் பாலத்தை மூடி வைத்திருந்த படையினர் சரணடைந்தனர். வேறு இடங்களிலும் படையினர் சரணடைவதை சிஎன்.என் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. 

ஐ எஸ் அமைப்பிற்கு ஆதரவு வழங்கிய துருக்கி
ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களுக்கு மத்தியிலும் மத்திய தரைக்கடலையும் ஒட்டி இருக்கும் துருக்கி உலக சமாதானத்திற்கும் வர்த்தகப் போக்குவரத்துக்கும் முக்கியமான ஒரு நாடாகும். வரலாற்றுப் பெருமையும் கலாச்சார மேன்மையும் மிக்க துருக்கி சிறுபானமை குரிதிஷ் மக்களுக்கு எதிராக மிக மோசமான அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றது. இரண்டு தடவை எல்லை தாண்டி ஈராக்கிற்குள் துருக்கியப் படைகள் நுழைந்து குர்திஷ் மக்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்தின. சியா முஸ்லிம்களின் ஒரு பிரிவான அல்வைற் இனத்தவரான அதிபர் பஷார் அல் அசாத்தை சிரியாவின் ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையகக் கொண்ட துருக்கிய அதிபர் எர்டோகன் கடும்  முயற்ச்சி மேற்கொள்கின்றார். ஆரம்பத்தில் ஐ எஸ் போராளிகளுக்கு பயிற்ச்சியும் படைக்கலன்களும் துருக்கியால் வழங்கப்பட்டது. துருக்கியூடாக உலகெங்கிலும் இருந்து இளையோர் சென்று ஐ எஸ் அமைப்பில் இணைந்தனர். 

மக்களாட்சியைக் கொண்டுவந்த படையினர்
மன்னர்(சுல்த்தான்) ஆட்சியின் கீழ் இருந்த துருக்கி 1923-ம் ஆண்டில் இருந்து மக்களாட்சி முறைமையின் கீழ் ஆளப்பட்டு வருகின்றது. அப்போது படைத் தளபதியாக இருந்த Mustafa Kemal Atatürk துருக்கியில் மேற்கத்தைய பாணி ஆட்சிமுறைமையில் துருக்கி ஆளப்படுவதற்கு கெமாலிஸம் என்னும் கொள்கையை முன்வைத்தார். அந்தக் கொள்கை அவரது பெயரால் அடரேக்கிஸம் எனவும் அழைக்கப்படுகின்றது. மக்களாட்சி, சம உரிமை, பெண்களுக்கான அரசியல் உரிமை, மதசார்பின்மை, விஞ்ஞானத்திற்கு அரச ஆதரவு, இலவசக் கல்வி ஆகியவை அவரது கொள்கையின் முக்கிய அம்சங்களாகும்.  முதலாம் உலகப் போர்ல் துருக்கி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து துருக்கி உதுமானியப் பேரரசாக (Ottoman Empire) இருந்த நிலைக்கு மாறவேண்டும் என்ற கொள்கை உடையோர்களை எதிர்த்தே கெமாலிஸம் உருவாக்கப்பட்டது. துருக்கியப் படைத்துறையினர் தம்மை இந்த கெமாலிஸம் கொள்கையின் பாதுகாவலராகக் கருதுகின்றனர். 1960, 1971, 1980, 1997  ஆகிய ஆண்டுகளில் துருக்கியப் படையினர் மக்களாட்சியைப் பாதுகாப்பது எனச் சொல்லிக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றினர்.  1980-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய படையினர் புதிய அரசிலமைப்பு யாப்பை உருவாக்கினர். அதன் படி குறைந்த அளவு 10 விழுக்காடு வாக்குப் பெற்ற கட்சிகள் மட்டுமே பாராளமன்ற உறுப்புரிமை பெற முடியும்.  துருக்கியில் புரட்சி தொடங்கிய பின்னர் எர்டோகன் முதலில் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியினூடாக உரையாற்றும் போது Mustafa Kemal Ataturkஇன் உருவப் படத்தின் முன் நின்று உரையாற்றியதன் பின்னணியில் நிறையப் பொருள் உண்டு. 

தன்னை சுல்த்தானாக மாற்ற   முயலும் எர்டோகன்
தற்போதைய துருக்கிய அதிபரும் முன்னாள் தலைமை அமைச்சருமான ரிசெப் தையெப் எர்டோகன் தன்னை எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரு நிறவேற்று அதிபராக (executive president)  ஆக மாற்றுவதற்காக துருக்கியின அரசியலமைப்பை மாற்றும் தீவிர முயற்ச்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கின்றார். இதற்கு அவருக்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பிக்  கொண்டிருக்கின்றது.  2002-ம் ஆண்டில் இருந்து ஆட்சியில் இருக்கும் அதிபர் எர்டோகன் ஆட்சியை மதசார்பாக மாற்றுவதும், பாடசாலைகளையும் அதற்கு ஏற்ப மதவாதத்தை வளர்ப்பதாகவும் குற்றம் சாட்டப் படுகின்றது. எர்டோகன் துருக்கியில் ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கடுமையாகப் பிரயோகித்துக் கொண்டிருக்கின்றார். எர்டோகன் 2016 ஜூலை மாதம் இஸ்ரேலுடன் அரசுறவுகளை மீள உருவாக்கியதும் பல இஸ்லாமியவாதிகளை ஆத்திரப்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில் துருக்கியில் ஒரு படைத்துறைப் புரட்சி வரலாம் என்ற பேச்சு துருக்கியில் அண்மைக்காலங்களாகப் பரவலாக அடிபட்டது.  படைத்துறையின அமைதியாக இருந்தமையால் படைத்துறையை எர்டோகான் அடக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார் என்றும் பேசப்பட்டது. ஆனால் துருக்கியின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை எர்டோகன் வெற்றிகரமாகச் செயற்பட்டிருக்கின்றார். பல நாடுகளும் கடன்பளுவால் தவிக்கையில் துருக்கி அரசின் கடன் அதன் மொத்தப் பொருளாதார உற்பத்தியின் 33 விழுக்காடு மட்டுமே. சீனாவின் கடன் அதன் மொ. பொ. உ இன் 280 விழுக்காடாகும். எர்டோகன் பெண்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர். அவரது ஆட்சியில் பெண்கள் கொல்லப்படுவது 14 மடங்கு அதிகரித்துள்ளது. மக்கள் தொகை விகிதாசாரப்படையில் உலகிலேயே  அதிக ஊடகர்கள் சிறையில் இருப்பது துருக்கியிலாகும். எர்டோகன் இஸ்த்தான்புல் நகரபிதாவாக இருக்கும் போது மதக்குரோதத்தைத் தூண்டினார் எனக் குற்றம் சாட்டப்பட்டவராகும். தலைமை அமைச்சராக இருக்கும் போது சூழல்பாதுகாப்புத் தொடர்பான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டார். கையில் சல்லிக் காசு கூட இல்லாமல் வாழ்கையை ஆரம்பித்த எர்டோகன் தற்போது பில்லியன் டொலர்களுக்கு மேல் சொந்தக்காரர். இவரது மகனினதும் நண்பர்களினதும் சொத்துக் குவிப்புத் தொடர்பாக விசாரித்த 350இற்கு மேற்பட்ட காவற்துறையினர் பதவிகளில் இருந்து தூக்கப்பட்டனர். 

பாசக்கார நண்பேண்டா
படைத்தளபதியாகிய Chief of Defense General Hulusi Akar எர்டோகனின் நெருங்கிய நண்பராவார்.  எர்டோகன் துருக்கிய அதிபராகப் பதவியேற்புரை செய்யும் போது அவர் கண்ணீர் மல்கினார். சிரியாவில் படைத்துறை ரீதியில் துருக்கி தலையிட வேண்டும் என்ற எர்டோகனின் கொள்கைக்கும் படையினர் மத்தியில் வரவேற்பு இல்லை. அவருடைய பழமைவாதத்தையும் படையினர் வெறுக்கின்றனர். 2016 ஜூலை 15-ம் திகதிப் புரட்சிய் முயற்ச்சியின் ஒரு வாரத்திற்கு முன்னர் முன்னாள் படைத்துறை அதிகாரியும் தற்போது படைத்துறை ஆய்வு எழுத்தாளராகவும் பணிபுரியும் ஒருவர் படைத்துறையினரால் மட்டுமே எர்டோகனைத் தடுக்க முடியும் எனக் கருத்து வெளியிட்டிருந்தார். எகிப்த்தில் முஹம்மட் மேர்சி படைத்துறைப் புரட்சியின் மூலம் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டதில் இருந்து எர்டோகன் கடும் கவலையுடன் இருந்தார். இந்தப் புரட்சியில் விமானப்படை உயர் அதிகாரிகள் சம்பந்தப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. 

அமெரிக்காவிற்கு வேண்டப்பட்டவர்
எர்டோகன் தன்னை ஓர் அதிகாரம் மிக்க அதிபராக மாற்றுவதை மீண்டும் உதுமானியவாதத்திற்கு இட்டுச் செல்லும் என்ற கருத்து படையினரிடையே பரவலாக இருக்கின்றது. துருக்கியின் மக்களாட்சியின் பாதுகாவல் கொள்கையான கெமாலிஸத்தை பேண அவர்கள் விரும்புகின்றார்கள்.   துருக்கியில் அடிக்கடி நடக்கும் தற்கொடைத் தாக்குதல்கள் மக்களை பெரிதும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. துருக்கியில் படைத்தளம் அமைத்து சிரியாவில் ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடாத்தும் அமெரிக்காவிற்கு தற்போது எர்டோகன் மிகவும் வேண்டப்பட்டவராக இருக்கின்றார். துருக்கியில் எப்படி மக்களாட்சி சிதைக்கப்ப்ட்டாலும் எப்படி ஊடகர்கள் அடக்கப்பட்டாலும் அமெரிக்கா அதைப் பெரிது படுத்தவில்லை. தேர்தலின் போது தனது வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதற்காக குண்டுகளை வெடிக்க வைத்தவர் எனக் குற்றம் சாட்டப்படுபவரான எர்டோகனை மக்களாட்சி முறைப்படி  தேர்தெடுத்த எர்டோகன் என்கின்றது அமெரிக்கா. இஸ்லாமிய மார்க்கத்தை பழமைவாதத்தில் இருந்து மீட்க முயலும் முகம்மட் பெத்துல்ல குலெனை பயங்கரவாதியாக்கிய எர்டோகனை தலையில் தூக்கி வைத்திருக்கின்றது அமெரிக்கா.

மத போதகர் பெத்துல்லா குலென்
துருக்கியில் ஒரு தாராண்மைவாத இஸ்லாம் இருக்க வேண்டும் என்ற கருத்துடைய மத போதகர் பெத்துல்லா குலென் எர்டோகனின் முன்னாள் நண்பராவார்.  அமெரிக்காவில் வசிக்கும் இவரும் இந்தப் படைத்துறை முயற்ச்சியில் சம்பந்தப்பட்டிருப்பதாக கருத்து நிலவுகின்றது. இவரது மத போதனைக்கு காவற்துறையினர் மத்தியிலும் உளவுத்துறையினர் மத்தியிலும் நல்ல ஆதரவு உண்டு. 

இடதுசாரிகள்
161 பேர்வரை கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் புரட்சி முயற்சிக்கு இடதுசாரிகள் ஆதரவு வழங்கியுள்ளனர். குடியாட்சி மக்கள் கட்சி என்ற இடது சாரிக் கட்சியும் புரட்சி முயற்ச்சியில் சம்பந்தப் பட்டிருந்தது.
அமெரிக்காவின் நெருங்கிய நண்பரான எர்டோகனை துருக்கிய இடதுசாரிகள் வெறுக்கின்றார்கள்.

சிஐஏ உளவுத் துறைக்கு இன்னும் ஒரு தோல்வியா?
அமெரிக்காவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துருக்கியில் ஓரு புரட்சி அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ அமைப்பிற்குத் தெரியாமல் நடந்தது எல்லோரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது. ஏற்கனவே எகிப்த்தில் அரபு வசந்தப் புரட்சி, கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்தமை போன்றவற்றை சிஐஏ முன்கூட்டியே அறியாமல் இருந்தது அதன் திறமையின் மேல் ஐயத்தை உண்டாக்கி இருந்தது.

அமெரிக்கா சம்பந்தப் பட்டிருந்ததா?
துருக்கியில் நடந்த புரட்சிச் சதி முயற்சியில் அமெரிக்கா சம்பந்தப் பட்டிருந்தால் அது இந்த அளவு மோசமான முறையில் முறியடிக்கப் பட்டிருக்காது. துருக்கியப் படைத்துறையிம் முழு உயர் மட்டத்தையும் தன் பக்கம் இழுத்தித்திருக்கும் அல்லது புரட்சியின் முதற்கட்டமாக அவர்களை அழித்திருக்கும். புரட்சி முறியடிப்பின் முதற்கட்டத்தை ஆரம்பித்து வைத்தது சி.என்.என் தொலைக்காடியின் பெண் ஊடகரின் கைப்பேசியூடாக எர்டோகனை நாட்டு மக்களுடன் தொடர்பு கொள்ள வைத்தமையே. புரட்சிக்கு முன்னர் துருக்கிய அதிபர் ரிசெப் எர்டோகனைப் பற்றி மோசமான தகவல்களை அமெரிக்க ஊடகம் வெளியிட்டு ஒரு நற்குணக் கொலையைச் ( character assasination) செய்திருந்திருக்கும். எர்டோகானின் ஆட்சியை மாற்ற வேண்டிய அவசியம் தற்போது அமெரிக்காவிற்கு இல்லை. அவர் இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். துருக்கியத் தளங்களை ஐ எஸ்  அமைப்பிற்கு எதிரான தாக்குதல்களுக்கு அனுமதித்துள்ளார். தற்போது மத்திய தரைக் கடலைச் சூழவுள்ள நாடுகளில் நிலவும் ஒரு மோசமான நிலையில் துருக்கியின் உறுதிப்பாடு அமெரிக்காவிற்கு மிக அவசியம். ஐரோப்பிய நாடுகளுடனும் துருக்கி தனது உறவைச் சீர் படுத்தியுள்ளது. அமெரிக்க துருக்கி உறவு அண்மைக் காலங்களாக சீரடைந்து வருகின்றது. துருக்கியின் தொழில் அமைச்சர் சுலைமான் சொய்லு புரட்சியில் அமெரிக்கா சம்பந்தப் பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார். புரட்சியை சாதமாக்கி துருக்கியில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளை தம்பக்கம் இழுக்கும் ஒரு முயற்ச்சியாக இது இருக்கலாம். ஆனால் துருக்கியின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்காவிற்கு எதிராகக் குற்றம் சுமத்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். புரட்சி தொடங்கிய மறுநாள் சனிக்கிழமை துருக்கியின் Incirlikவிமான நிலையத்தில் உள்ள எல்லா நேட்டோப் படையினரின் நடவடிக்கைகளையும் துருக்கி நிறுத்தியிருந்தது. அமெரிக்கவின் தளத்திற்கான மின் விநியோகமும் துண்டிக்கப் பட்டிருந்தது. ஆனால் இவற்றிற்கான காரணம் அமெரிக்கா புரட்சியாளர்களுக்கு உதவியதால் அல்ல.  Incirlikவிமான நிலையத்திற்குப் பொறுப்பான துருக்கியத் தளபதி Gen. Bekir Ercan Van புரட்சியில் சம்பந்தப் பட்டிருந்தமையே. புரட்சிக்கு ஆதரவு வழங்கிய துருக்கிய விமானப் படையினரின் F-16 fighter jetsஇற்கான எரிபொருள் மீள் நிரப்புதல் Incirlikவிமான நிலையத்திலேயே செய்யப்பட்டது.

குறைந்த அளவு படையினர் மட்டுமே
துருக்கியில் நடந்த புரட்சி முயற்ச்சியின் சூத்திரதாரிகள் உலங்கு வானூர்தியில் தப்பி கிரேக்கத்தில் தரைஇறங்கிய போது கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கியில் 1950இற்கு மேற்பட்ட படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கிய மக்கள் படையினரைத் தாக்கும் படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.  குறைந்த அளவு படையினரே புரட்சியில் ஈடுபட்ட படியால்தான் 14 மணித்தியாலங்களுக்குள் பெரும் உயிரிழப்புக்கள் இன்றி புரட்சி அடக்கப்பட்டது.  நீதித் துறையைச் சார்ந்தவர்களும் புரட்சிக்குத் துணை போயிருந்தார்கள். நீதித்துறையில் உள்ள 2700பேரின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. படைத்துறையில் 29 ஜெனரல்களும் இருபதிற்கு மேற்பட்ட கேர்ணல்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எர்டோகனின் திட்டமிட்ட நாடகமா?
தேர்தலில் தனது வெற்றி வாய்ப்பை அதிகரிக்க தனது நாட்டிலேயே குண்டு வெடிப்புக்களைச் செய்தார் எனக் குற்றம் சாட்டப்படும் எர்டோகன் இந்தப் படைத்துறைச் சதிப்புரட்சியையும் தனது செல்வாக்கை அதிகரிக்கச் செய்ய அரங்கேற்றி இருக்கலாம் என்ற ஐயமும் எழுந்துள்ளது. நான்கு இலட்சம் படையினரைக் கொண்ட அரசுக்கு எதிராக 4000 படையினர் உச்ச அதிகாரிகளின் ஆதரவின்றி புரட்சி செய்வது தற்கொலைக்கு ஒப்பானது. புரட்சி செய்தவர்கள் எப்படிக் கையாளப் படப்போகின்றார்கள் என்பதில் இருந்தும் தப்பிக் கிரேக்கத்திற்கு ஓடியவர்களுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை வைத்துக் கொண்டுதான் இந்த புரட்சி ஒரு நாடகமா இல்லையா என அறிய முடியும். தனது படையினரில் சிலருக்கு எர்டோகன் ஒரு புரட்சிக்குத் தூபமிட்டுவிட்டு கிரேக்கத்திற்குத் தப்பி ஓடச் செய்தாரா? உலக வரலாற்றில் பாலத்தை மூடி புரட்சி செய்தது முதலில் துருக்கியில்தான் நடைபெற்றது. பொஸ்பரஸ் பாலத்தை முடியவர்கள் எப்படி எந்த வித எதிர்ப்பும் இன்றிச் சரண்டைந்தனர்?

துருக்கியில் எர்டோகன் தனது அதிகாரத்தை அதிகரிக்கும் முயற்ச்சியைக் கைவிடாவிடில் அவரது ஆட்சிக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை புரட்சி முயற்சி எடுத்துக் காட்டுகின்றது. ஆனால் வெற்றிகரமாகப் புரட்சியை முறியடித்தமை பாராளமன்றத்தில் அவருக்கான ஆதரவை அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உண்டு. அதன் மூலம் அவர் தனது அதிகாரத்தை அதிகரிக்க முயல்வாரா?

Monday, 11 July 2016

போர் அபாயத்தில் கிழக்கு ஐரோப்பா

சிமுன்னாள் அதிபர் Mikhail Gorbachev நேட்டோப் டையினர் னிப்போரை கொதிநிலைக்கு இட்டுச் செல்கின்னர் என்கின்றார். இரசியப் போர் விமானங்களும் நேட்டோப் போர் விமானங்களும் ஒன்றை ஒன்று எல்லை தண்டுதைத் டுக் இடை மறிப்பது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கூட ஒரு நாளாந்த நிகழ்வாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நடவடிக்கைகள் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக முடிவெடுத்த பின்னர் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இரசியாவும் நேட்டோவும் தமது போர் ஒத்திகைகளை அடிக்கடியும் அதிக படையினரைக் கொண்டும் செய்து கொண்டிருக்கின்றன. பிரச்சனைக்குரிய போல்ரிக் கடலின் கிழக்குப் புறத்தில் லித்துவேனியாவிற்கும் போலாந்திற்கும் இடையில் உள்ள கலினிங்கிராட் (Kaliningrad) என்னும் துறை முகப் பிராந்தியம் இரசியாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அங்கு இரசியா தனது படவலுவை பெருமளவில் வகையில் அதிகரித்துள்ளது. அங்கு இரசியா குறுந்தூர அணுப்படைக்கலன்களை நிறுத்தியிருக்கலாம் என்ற அச்சம் இப்போது தோன்றியுள்ளது.

சோவித் ஒன்றித்தின் வீழ்ச்சியின் போது கிழக்கு ஜேர்னி மட்டுமே நேட்டோவில் இணைக்கப் டும் என்ற உறுதி மொழி இசியாவிற்கு ங்கப்பட்து னால் மூன்னாள் சோவித் ஒன்றிநாடுளும் வார்சோ ஒப்ந்த்நாடுளும் நேட்டோவில் இணைக்கப்பட்ன. இசிய எல்லையில் உள்நாடுளை நேட்டோவில் இணைக்கும் போது அங்கு நேட்டோப் டைகள் நிறுத்தப் மாட்டாது என்ற உறுதி மொழியும் இசியாவிற்கு ங்கப்பட்து. கிறிமியாவை இசியா தன்னுடன் இணைத்மையை சாட்டாவைத்துக் கொண்டு இசியாவின் எல்லையில் உள்நாடுளுக்குசிய அச்சுறுத்தல் உண்டு என்காணம் காட்டி அங்கு இப்போது நேட்டோ என்னும் பெரில் அமெரிக்கா படைகளைக் நிறுத்துகின்றது.
காகா 

கிழக்கு ஐரோப்பா
பெலரஸ்பல்கேரியாசெக்குடியரசுமொல்டோவாபோலாந்துருமேனியாசிலோவாக்கியாஉக்ரேன்ஜோர்ஜியாலத்வியாலித்துவெனியாஎஸ்தோனியா ஆகிய நாடுகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளாகும். உலகிலேயே பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவின் கிழக்குப் பகுதி ஐரோப்பாவில் உள்ளது. இதில் ஜோர்ஜியா ஆசிய நாடு எனவும் கருதப்படுகின்றது. ஒஸ் ரியாகுரோசியாசெக் குடியரசுஜேர்மனிஹங்கேரிபோலாந்து சிலோவாக்கியாசிலோவேனியாசுவிஸ்ஆகிய நாடுகளை நடுவண் ஐரோப்பா எனவும் சொல்வர்ஜேர்மனி மேற்கு நாடுகளில் ஒன்றாகவே கருதப்படுகின்றது. கிழக்கு ஐரோப்பாவிற்கு என ஒரு தெளிவான வரையறை இல்லை. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல சோவியத் ஒன்றியத்தினுள் உள்ளடக்கப்பட்டு இருந்தன. ஹங்கேரிகிழக்கு ஜேர்மனிபோலாந்துசெக்லோவாஸ்கியா ஆகிய நாடுகள் சோவியத்தின் பிடியில் இருந்தன. எல்லாம் ஒன்று கூடி வார்சோ ஒப்பந்த நாடுகள் என்ற படைத்துறைக் கூட்டமைப்பில் பொதுவுடமைவாத நாடுகள் எனத் தம்மைத் தாமே அழைத்துக் கொண்டிருந்தன. சோவியத் ஒன்றியம் 1991-ம் ஆண்டு வீழ்ச்சியடைந்த பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் பல புதிய நாடுகள் உருவாகின. மேற்கு ஐரோப்பிய நாடுகள்  ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பெயரில் தமது நிலப்பரப்பையும் பொருளாதார வலயத்தையும்   விரிவாக்கிக் கொண்டு சோவியத் நாடுகளையும்  இரசிய ஆதிக்க வலய நாடுகளையும் தம்முடன் இணைத்துக் கொண்டன. அத்துடன் முன்பு இரசியாவுடன் வார்சோ ஒப்பந்த நாடுகள் கூட்டமைப்பில்    இணைந்திருந்த நாடுகளான போலாந்துஹங்கேரிருமேனியாசெக் குடியரசுகுரேசியா ஆகிய நாடுகளும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான எஸ்தோனியலத்வியாலித்துவேனியா ஆகியவையும் ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைந்ததும்    இரசியாவை ஆத்திரப்படுத்தியது. அதில் முக்கியமாக முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை மீளவும் இரசியாவுடன் இணைக்க வேண்டும் என்ற முனைப்புடன் விளடிமீர் புட்டீன் செயற்படத் தொடங்கினார். இது கிழக்கு ஐரோப்பாவைப் போர்க்களமாக்கியுள்ளது.

பிரித்தானிய வெளியேற்றமும் போல்ரிக்கடலும்
பிரித்தானியாவின் முன்னாள் தலமை அமைச்சர் டேவிட் கமரூன் இரசியாவை எதிர்ப்பதிலும் கிழக்கு ஐரோப்பாவின் நேட்டோவின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதிலும் அதிக உறுதியுடன் இருந்தார். அவரைத் தொடர்ந்து 2016 ஒக்டோபர் மாதம் தலைமை அமச்சராக வரவிருப்பவரின் கொள்கை பெரிதளவில் மாறாது என எடுத்துக் கொள்ள முடியாமல் ஈராக் போர் தொடர்பாக சில்கொட் அறிக்கை அமைந்துள்ளது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய பின்னர் பிரித்தானியாவின் வரவு செலவில் ஏற்படவிருக்கும் தாக்கம் போல்ரிக் கடலின் படைத்துறைச் சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துமாஜேர்மனி இரசியா விவகாரத்தில் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதில்லை. அனக்கொண்டா போர் ஒத்திகையில் உக்ரேனையும் இணைக்க வேண்டும் என போலாந்து வலியுறுத்திய போதும் அது இரசியாவை ஆத்திரப்படுத்தும் என ஜேர்மனி தடுத்துவிட்டது. அடுத்த ஆண்டு அமெரிக்காவில் டொனாண்ட் ரம்ப் பதவிக்கு வந்தால் உலக ஒழுங்கே தலைகீழாக மாறும் சாத்தியம் உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவின் வெளியேற்றம் மேற்கு ஐரோப்பாவை வலுவிழக்கச் செய்து விட்டது என இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் துள்ளிக் குதிக்க முடியாது. பிரித்தானிய வெளியேற்றம் உலகச் சந்தையில் எரிபொருளின் விலையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியமை இரசியாவிற்கு ஒரு அடியாகும். அதே வேளை பிரித்தானியா ஜேர்மனி போன்ற நாடுகளின் கடன் முறிகளின் வருமானத் திறன் மிகவும் குறைவான நிலைக்குச் சென்றமை உலகச் சந்தையில் இரசியாவின் கடன் முறிகளுக்கான வேண்டுதல் அதிகரித்துள்ளது. 2016-ம் ஆண்டு மே மாதம் இரசியா கடன்முறி விற்பனை மூலம் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டத் திட்டமிட்டிருந்தது ஆனால் பொருளாதாரத் தடைகள் காரணமாக 1.75பில்லியன்களை மட்டுமே திரட்டக் கூடியதாக இருந்தது.

அனக்கொண்டா அதிரடி
பனிப்போர் முடிவிற்கு வந்த பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் என்றும் இல்லாத அளவு பெரிய போர் ஒத்திகை 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம் திகதி நடந்தது. Anakonda அதாவது மலைப்பாம்பு என்னும் பெயர் கொண்ட பத்து நாட்கள் நீடித்த போர் ஒத்திகை நடவடிக்கை அது. அதில் உண்மையான சுடுகலன்கள் பாவிக்கப் பட்டன. பின்லான்த, கொசோவா ஆகிய நேட்டோவில் இல்லாத நாடுகள் உட்பட 24 நாடுகளின் முப்பதினாயிரம் படையினர் இந்த அனக்கொண்டா ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டனர். வான் பாதுகாப்புவிபரம் வெளிவிடப்படாத இணையவெளித் தாக்குதல்இலத்திரனியல் போர் முறைமைவானில் இருந்து படையினரைத் பரசூட் மூலம் தரையிறக்கல் போன்றவையும் அனக்கொண்டாவில் உள்ளடக்கப்பட்டிருந்தன. 1,047கிலோ மீட்டர் (651மைல்கள்) நீளமான போலாந்தின் விஸ்டுல்லா நதியின் குறுக்கே திடீர்ப் பாலங்கள் அமைக்கும் நடவடிக்கையும் ஒத்திகையின் முக்கிய அம்சமாக அமைந்தது. அனக்கொண்டா போர் ஒத்திகையின் போது வாள் வீச்சு-16 (Saber Strike 16) என்னும் பெயரிலும் துரித பதிலடி-16 (Swift Response 16) என்னும் பெயரிலும் இரு படை நடவடிக்கை ஒத்திகைகள் நடைபெற்றன. அது மட்டுமல்ல அனக்கொண்டா படை ஒத்திகைக்கு நான்கு தினங்களுக்கு முன்னர் பநடைபெற்றது. இதில் நேட்டோவைச் சேர்ந்த17 நாடுகளைச் சேர்ந்த ஆறாயிரம் படைவீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

போலாந்தில் Tripwire படையணி
விரைவில் போலாந்தில் நேட்டோவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படையினர் நான்காயிரம் பேரைக் கொண்ட நான்கு படைப்பிரிவுகளைப் போலாந்தில் நிறுவும் முடிவை நேட்டோக் கூட்டமைப்பு ஜூலை மாதம் போலாந்து தலைநகர் வார்சோவில் கூடிய உச்சி மாநாட்டின் போது எடுத்தது. இரசியாவைப் பொறுத்தவரை இது ஒரு சிறுபடையணியே. ஆனால் நேட்டோ இந்தப் படையணியை ஒரு Tripwire படையணியாகவே நிறுத்தவுள்ளது. Tripwire படையணி என்பது ஒரு உணரிப் படையணியாகும். அதன் மீது தாக்குதல் நடாத்தப் பட்டால் பெரிய படையணி ஒன்று அங்கு சென்று பதில் தாக்குதல் நடாத்தும். இந்த Tripwire படையணி பல மிகப் புதிய உணரிகளைக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அவை எதிரியின் படைநகர்வுகளை மிகதுல்லியமாகவும் துரிதமாகவும் இனம் காணக்கூடியவையாக இருக்கும். Tripwire படையணி ஒரு புறமிருக்க 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நேட்டோப் படைத் துறைக் கூட்டமைப்பு கிழக்கு ஐரோப்பாவில் சிறப்பாக்கப் பட்ட சுழற்ச்சிப் படைகளை (Enhanced Rotational Force ) கிழக்கு ஐரோப்பாவில் நிறுத்துவதாகவும் அவை தொடர் பயிற்ச்சிகளில் ஈடுபடுவதாகவும் முடிவு செய்திருந்தது. இரசிய எல்லையில் ஒரேயடியாகப் பெருமளவில் படையினரைக் குவித்து போர் அபாயத்தை அதிகரிக்காமல் இப்படி சிறிய அளவில் சுழற்ச்சி முறையில் பல இலட்சக் கணக்கான படையினரை இரசிய எல்லையில் பயிற்ச்சி பெறச் செய்து தயார் நிலையில் தொலைவில் வைத்திருந்து விட்டு இரசியா படையெடுக்கும் ஆபத்து வருகின்றது Tripwire படையணி தெரிவிக்கும் போது அந்த பல இலட்சம் படையினர் இரசியாவிற்கு எதிராகப் போரில் குதிக்கச் செய்வதே நேட்டோவின் உபாயமாகும்.

இரசியா சும்மா இருக்காது
அனக்கொண்டாவின் சீற்றம் இரசியாவில் ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது இரசிய வெளியுறவுத் துறை அமைச்சர் தன்னைச் சந்தித்த பின்லாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சருக்குத் தெரிவித்த கருத்துக்களில் இருந்து தெரிய வந்துள்ளது. இரசியா தனது இறைமையையும் பாதுகாப்பையும் தற்போது உருவாகியுள்ள நிலைமைக்கு ஏற்ப உறுதி செய்யும் என இரசியா சூளுரைத்துள்ளது. 2014-ம் ஆண்டு இரசியா கிறிமியாவைத் தன்னுடன் இணைத்து உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் பிரிவினைவாதத்தைத் தூண்டியதன் பின்னர் நேட்டோப் படையினர் கிழக்கு ஐரோப்பாவில் தமது ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்தனர். அவர்களுக்கு இடையூறுகள் செய்யும்வகையில் பல நகர்வுகள் செய்து வருகின்றது. 2016 ஏப்ரல் மாதும் இரசியாவின் இரு எஸ்யூ-24 தாக்குதல் விமானங்கள் போல்ரிக் கடலில் ஐக்கிய அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல் USS Donald Cookஇற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பறந்தமையும் அமெரிக்காவின் வேவுபார்க்கும் விமானங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் இரசிய விமானங்கள் பறந்தமையும் இரசியாவின் நிலைப்பாட்டை எடுத்துக் காட்டின.

இரசியா சும்மா இருக்க மாட்டாது
இரசியாவிற்கு எதிராக தேவை ஏற்படின் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்து அதன் மீது ஒரு பேரழிவுவிளைவிக்கக் கூடிய போருக்கு தயாராக இருக்கின்றோம் என்பதை இரசியாவிற்கு உணர்த்தும் வரை இரசியா தனது எல்லை நாடுகள்மீது  மட்டுமல்ல மேற்கு ஐரோப்பிய நாடுகள் மீது கூட ஆபத்து விளைவிக்கக் கூடிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...