Thursday, 22 July 2010

சத்துணவான காதலி முத்தம்


நிலையாமை
மது போதை
ஒரு பொழுதோடு போனது
உன் இதழ் போதை
என்றும் இனிக்கிறது

சத்துணவு

கலப்படமற்றது
இயற்கையானது
போலிகள் கலவாதது
கொழுப்பற்றது
ஆனாலும் சுவையானது
காதலி முத்தம்


நல்ல நண்பன்
சொல்லாமலேயா
என் பிரச்சனைகளைப்
புரிந்து கொள்பவன்


தனிமையில் இனிமை
உடலில் எங்கு அரித்தாலும்
இதமாக சொறியலாம்

Wednesday, 21 July 2010

சும்மா இருப்பதாயின் மிக உயர்ந்த இடம் வேண்டும்.


அது ஒரு சொகுசான மாளிகை. அங்கு ஒரு நாய் சும்மா மெத்தைக் கதிரையில் படுத்திருப்பதும் சாப்பிடுவதுமாக இருந்து வந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த கோழிக்குஞ்சுக்குத் தானும் சும்மா இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தால் என்ன என்ற எண்ணம் வந்து விட்டது. தான் போய் ஒரு மெத்தைக் கட்டிலில் ஏற முயற்சித்தது. முடியவில்லை. பல முறை முயற்ச்சித்தது முடியவில்லை. நிலத்தில் படுத்து நித்திரை செய்து கொண்டிருந்த ஒரு அடர்த்தியான ரோமங்களைக் கொண்ட பூனையை இதுவும் ஒரு உல்லாச இருக்கை என்று எண்ணி அதன் மேல் உட்கார்ந்து ஓய்வெடுத்தது. சிறிது நேரத்தில் பூனை விழித்து விட்டது. லபக்கென்று அந்த கோழிக் குஞ்சை விழுங்கி விட்டது.

  • இந்தக் கதையின் நீதி: நீ சும்மா இருந்து வாழ்க்கையை ஓட்டுவதாயின் மிக உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.

Tuesday, 20 July 2010

ஹைக்கூ கவிதைகள் - கண்ணில் விழுந்த காயம்


மாறவில்லை
அந்த மோசமான முதலாளிக்கு
இதய மாற்றுச் சிகிச்சை
பயனில்லை இன்றும் கொடியவனே.

கண்பட்டாள்
காயப்பட்டது நான்
விழுந்தது அவள்
கண்ணில்

நிலையாமை
உத்தரவாதமற்றது
நீடித்து நிற்காதது
வாழ்க்கையில் இன்பம்

துயரத் துணை
வெற்றிக் கரவொலிக்குப் பத்து
துயரக் கண்ணீர் துடைக்க ஒன்று
கையில் விரல்கள்

Monday, 19 July 2010

சிதம்பரம் ஐயா நீங்கள் சுத்தப் பேமானியாய் இருக்கிறீர்களே!


சிவகங்கை தொகுதியில் ஏதோ செய்து வெற்றி பெற்ற ப. சிதம்பரம் ஐயா அவர்கள் இலங்கைத் தமிழர்கள் பற்றி தனது திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.

  • சிதம்பரம் ஐயா சொன்னார்: நமக்கு பிரபாகரன் எதிரானவர் அல்ல. அவர் சென்ற பாதைதான் எதிரானது.
பிரபாகரன் சென்ற பாதை ஈழத்தமிழர்களின் விடுதலையை நோக்கியது. அந்தப் பாதை உங்களுக்கு எதிரானதா? அவர் பாதையில் உங்கள் எஜமானர்கள் எத்தனை தடை போட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? உங்கள் எஜமானர்களின் பேரினவாதக் கொள்கைக்கு அவர் சென்ற பாதை உகந்ததல்ல. ஈழத் தமிழர்கள் விடுதலை பெற்றால் உங்கள் எஜமானர்கள் ஒரு தேசிய மாயைக்குள் தமிழ்நாட்டுத் தமிழர்களைச் சிக்க வைத்து அவர்களை அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். ஈழத் தமிழன் பாதையில் தமிழ்நாட்டுத் தமிழனும் விழித்துக் கொள்வானா என்ற பயம் உங்கள் எஜமானர்களுக்கு.

  • சிதம்பரம் ஐயா சொன்னார்: ராஜீவ் காந்தி கூறியபடி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிரு ந்தால் இன்று இலங்கையில் இரு மாகாணங்களில் பிரபாகரன் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்.
ராஜிவ் காந்தி பிரபாகரனைக் கொல்ல என்னென்ன திட்டங்கள் தீட்டினார் என்று நீங்கள் அறிய மாட்டீர்களா? ராஜீவ் காந்தி கூறியதைக் கேட்ட வரதராஜப் பெருமாள் என்ன முடிசூடா மன்னராகவா இருக்கிறார்? அவரை முதலமைச்சராக்கினார் உங்கள் ராஜீவ் காந்தி. அவருக்கு இலங்கை அரசு ஒரு நயா பைசா கூடக் கொடுக்கவில்லை "அரசு" நடத்த. கடைசியில் அவர் என்ன ஆனார். உங்கள் ராஜீவ் காந்தியின் ஒப்பந்தத்தால் வந்த இலங்கை அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தின் படி முதலமைச்சராக வந்த பிள்ளையான் என்ன முடிசூடா மன்னராகவா இருக்கிறார்? சாக்கடையில் வாழும் பன்றி மாட்டைப் பார்த்துச் சொன்னதாம் சும்மா பசும் புல் பசும் புல் என்று அலையாதே. என்னைப் போல் சாக்கடையை ஏற்றுக் கொண்டாயானால் இராச போக வாழ்க்கை என்று.

உங்கள் ராஜீவ் காந்தி என்ற அரசியல் முட்டாள் தமிழர்களை ஆயுதங்களை ஒப்படையுங்கள் உங்கள் பாதுகாப்பிற்கு நான் உத்தரவாதம் என்றார். சகல இயக்கங்களும் ஆயுதங்களை ஒப்படைத்தன. விடுதலைப் புலிகள் ஒப்படைக்கவில்லை என்று பறித்தார். அதன் பின்னர் இரண்டு இலட்சம் தமிழர்கள் கொல்லப் பட்டனர். தமிழர்களுடன் தான் செய்த கனவான் ஒப்பந்தத்தை மீறிய அயோக்கியனல்லவா உங்கள் ராஜிவ் காந்தி.

  • சிதம்பரம் ஐயா அண்மையில் சொன்னார்: போரினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு இந்தியா வீடுகள் அமைப்பதற்கு நேரடியாக உதவி செய்யும். அவர்கள் வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் வைப்புச் செய்யும்.
மறுநாள் இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உங்கள் கூற்றை ஏற்க மறுத்தார். இந்தியா நேரடியாகக் கொடுக்க முடியாது இலங்கை அரசிடம்தான் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். பாவம் பழனியப்பன் சிதம்பரம் அவர்கள். வாயை மூடிக்கிட்டு கம்முன்னு இருக்கிறார். இப்போது தகவல் வருகிறது இந்தியா கொடுக்கும் பணம் தமிழர்கள் காணியை அபகரித்து அதில் சிங்களவர்களைக் குடியேற்றப் பாவிக்கப் படும் என்று. சிதம்பரத்தின் அரசு சிங்களவர்களை தமிழர் நிலங்களில் குடியேற்றப் பாவிக்கப் படுகிறது. தமிழர் நிலங்களை அபகரிக்க இந்தியா உதவுகிறதா?

  • சிதம்பரம் ஐயா சொல்கிறார்: இன்று இலங்கையில் அமைதி திரும்பியுள்ளது.

இலங்கையில் அவசரகாலச் சட்டம் பயங்கரவாதச் சட்டம் எல்லாம் இப்போதும் அமூலில் உள்ளது ஐயா சிதம்பரம் அவர்களே! அமைதி திரும்பிய நாட்டில் இது எல்லாம் ஏன் ஐயா?

சிதம்பரம் ஐயா நீங்கள் சுத்தப் பேமானியாய் இருக்கிறீர்களே!

உங்கள் இந்திய அரசிற்கு திராணி இருந்தால் ராஜீவ்-ஜே. ஆர் ஒப்பந்தப்படி இலங்கை அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தை முழுமையாக அமூல் செய்யுங்கள்.

நாணயமில்லா ஆட்சியின் நாணயக் குறியீடு



ஆயுதத்தை ஒப்படைத்துவிடு
பாதுகாப்போம் எனக்கூறி
எமை அழித்த அயோக்கியரின்
ஆட்சியின் நாணயக் குறியீடு

தமிழனை கொன்றொழிக்க
பணம் கொடுத்து பலம் கொடுத்து
இருபதாயிரம் படை கொடுத்த
இத்தாலிச் சனியனின் நாணயக் குறியீடு

சொந்த நாட்டு மீனவர்கள்
கடலில் சுட்டுக் கொல்லப்பட
வாய் மூடி மௌனிதிருக்கும்
கையாலாகாதோரின் நாணயக் குறியீடு

இனக் கொலை இலங்கைக்கு
எதிரி சீனாவோடிணைந்து
ஐநா மன்றில் பாராட்டுத் தெரிவித்த
பாதகக் கும்ப்பலின் நாணயக் குறியீடு

Sunday, 18 July 2010

துயரப்பட முடியாது துணை வேண்டும்


பரந்த மனது
எனக்குக் கிடைத்த
காதலி போல்
எல்லோருக்கும்
கிடைக்க வேண்டும்
நான் மட்டும் தனியாக
இந்த உலகில்
துயரப்பட முடியாது
துணை வேண்டும்

அதுவும் வந்தது
பெண் துணையின்றி
இருந்த எனக்கு
பெண் துணையாக வந்தாள்
பிரச்சனை இன்றி
இருந்த எனக்கு
பிரச்சனையாகவும் வந்தாள்

மாறாத உணர்வு
உன்னை முதல் முதலாக
பார்த்தில் இருந்து
நாம் காதல் வசப்பட்டதில் இருந்து
நாம் கைப்பிடித்ததில் இருந்து
உன் மீதான என் உணர்வு
என்றும் மாறவில்லை
அன்றும் தலையிடிதான்
இன்றும் தலையிடிதான்

குறுங்கவிதைகள்



















Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...