Tuesday 27 December 2011

நகைச்சுவைக் கதை: நரகத்தில் மொக்கை காந்தி, இத்தாலிச் சனியன், மோகன் மன் Shit

ஒரு பெரிய நிலநடுக்கம் வந்து இந்தியாவிலும் இலங்கையில் நிறையப் பொதுமக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அதனால் நிறையப் பேர் யம லோகத்தில் யமனின் தீர்ப்புக்காக மிக நீண்ட வரிசையில் காத்துக் கொண்டு நின்றனர். யமனும் சித்திரபுத்திரனும் மிகவும் சிரமப்பட்டு அவரவர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை கொடுப்பதற்காக சிலரை சொர்க்கத்திற்கு பலரை நரகத்தில் வேறு வேறு பகுதிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு பகுதிகளிலும் தண்டனைகள் வேறு வேறு விதமாக இருக்கும். சிலவற்றில் கொதி எண்ணைக்குள் போடுதல். சிலவற்றில் மாடுகளால் மிதிக்கவிடுதல். சிலவற்றில் புழுக்களாக் கடிக்க விடுதல். இப்படி அந்நியன் படத்தில் வந்தது போல் தண்டனைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன.

தண்டனை கொடுத்துக் கொண்டிருந்த யமன் ஓய்வெடுக்கப் போகமுன் தான் மொக்கை காந்திக்கும் இத்தாலிச் சனியனுக்கும் மோகன் மன் Shitஇற்கும் தண்டனை உடனடியாகக் கொடுக்க வேண்டும் வரிசையில் அவர்கள் எங்கு நின்றாலும் இழுத்துக் கொண்டு வா என ஒரு தூதுவனுக்கு உத்தரவிட்டான்.

தூதுவன் வருவதைக் கண்ட மொக்கை காந்தியும் இத்தாலிச் சனியனும் மோகன் மன் Shitஉம் தங்கள் ஆடைகளை கழற்றி எறிந்துவிட்டு அங்கு நின்ற வேறு ஆட்களின் ஆடைகளைப் பறித்து அணிந்து தங்களை கண்டறிந்து கொள்ள முடியாதபடி செய்து கொண்டனர். அவர்களைத் தேடிவந்த தூதுவன் அவர்களைக் காண்டு பிடிக்க முடியாததால் திரும்ப யமனும் சித்திர புத்திரன் இருக்கும் அறைக்குப் போய் அவர்களைக் காணவில்லை என்றான். உடனே சித்திர புத்திரத் அத்தூதுவன் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்துவிட்டு வா அவர்களை நான் உனக்குக் காட்டுகிறேன் என்றான்.

அறைக்கு வெளியே வந்த சித்திர புத்திரன் அதோ பார் காணும் தமிழர்களுக் கெல்லாம் அடித்தும் நகத்தால் பிராண்டிக் கொண்டும் மற்ற இந்தியர்களின் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்து சுவிஸ் வங்கிக்கு அனுப்பிக் கொண்டும் நிற்கிறாள் ஒருத்தி. அவள்தான் இத்தாலிச் சனியன். அவள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு வாயே திறக்காமல் நிற்கிறான் ஒருத்தன் அவன் தான் மோகன் மன் Shit.முதலில் இருவரையும் பிடி என்றான்

இப்போது மொக்கை காந்தியை எப்படிப் பிடிப்பீர்கள் என்றான் தூதுவன். அதற்கு சித்திரபுத்திரன் 1970-ம் ஆண்டு ஜூன் 19-ம் திகதி பிறந்தவர்கள் எல்லோரும் கையை உயர்த்துங்கள் என்றான். ஆறு பேர் கைகளை உயர்த்தினர். ஆறு பேரையும் தனித்தனியாக அழைத்த சித்திர புத்திரன் அவர்களிடம்  மகாத்மா காந்தி யார் என்று கேட்டான். ஐந்து பேர் சரியாகப் பதில் சொன்னார்கள்.  ஒருவன் மட்டும் அந்தப் பேமானி யார் என்று என்க்குத் தெரியாது பொறு மோகன் மன் Shitஇடம் கேட்டுச் சொல்கிறேன் என்றான்.  உடனே சித்திர புத்திரன் சொன்னான் இவன்தான் மொக்கை காந்தி பிடி இவனை என்றான்

1 comment:

கும்மாச்சி said...

நல்ல நகைச்சுவை.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...