Sunday 27 November 2011

கல்லறைக் காதலியே கண்வளராய்

கண்வளராய் கண்வளராய்
 கல்லறைக் காதலியே
கண்வளராய் கண்வளராய்
கண்ணில் நிறைந்தவளே
மண்ணிற்காக வாழ்ந்தவளே
மண்ணில் மறைந்தவளே
கண்வளராய் கண்வளராய்
என் கல்லறைக் காதலியே

இரட்டைப் பின்னல் காதலியே
ஒற்றை நோக்கம் ஒற்றைத் தலைமை
ஒற்றை நோக்கம் கொண்டவளே
ஒற்றர்க்கும் அஞ்சா நெஞ்சத்தவளே
கண்வளராய் கண்வளராய்
மண் மீட்க மாதரசியே
கண்வளராய் கண்வளராய்

கழுத்தில் நஞ்சு நீ சுமந்தாய்
தமிழ் மானம் காக்க
கருத்தில் நஞ்சு சுமந்து
புலத்தைப் பிரிக்கின்றனர் கயவர்
கண்வளராய் கண்வளராய்
என் கல்லறைக் காதலியே
கண்வளராய் கண்வளராய்

உன் செவ்வாயிற் தவழ்ந்ததனால்
தமிழ் மொழியும் செம்மொழியானது
உன்னிரு கைகள் பட்டதனால்
பிஸ்டலும் பீராங்கியானது
எதிரிக் கோட்டை துவம்சமானது
கண்வளராய் கண்வளராய்
கல்லறைக் காதலியே கண்வளராய்

போகும்  இடம்
எதுவென்று புரியவில்லை
போக வேண்டிய இடமும் 
எதுவென்று புரியவில்லை
மீண்டெழுந்து வந்து
எம் இழிநிலை பாராமல்
கண்வளராய் கண்வளராய்
என் கல்லறைக் காதலிய
கண்வளராய் கண்வளராய்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...