Thursday 7 July 2011

பின் லாடனின் குடும்பம் பாக்கிஸ்த்தானில் இருந்து வெளியேறுவதை தடுக்க உத்தரவு..

1979இல் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தான் மீது படையெடுத்தது. இதன் பின்னணியில் ஆப்கானிஸ்த்தானிற்கு தொலைத்தொடர்பு கோபுரம் அமைத்து கொடுத்த அமெரிக்கா அதில் சோவியத்தை உளவு பார்க்கும் கருவிகளையும் பொருத்தியமையே. சோவியத்தை விரட்ட இலகுவான வழி பொதுவுடமை என்பது இசுலாமிய மார்க்கத்திற்கு எதிரானது என்று ஆப்கானிஸ்தானில் இசுலாமியத் தீவிரவாதம் வளர்க்கப்பட்டது. சவுதி அரேபியாவில் பிறந்த ஒசாமா பின் லாடன் இசுலாமியச் சட்டமான ஷரியாப்படியே இசுலாமிய நாடுகள் ஆளப்படவேண்டும் என்ற நம்பிக்கையுடையவர். கம்யூனிசம், சோசலிசம், மக்களாட்சி போன்ற ஆட்சி முறைகள் இசுலாமிற்கு எதிரானவை என்ற கொள்கை கொண்டவர். ஆப்கானிஸ்த்தானில் சோவியத் படைகளின் அட்டூழியங்களைப் பொறுக்காத பின் லாடன் அங்கு சென்று ஆப்கானிஸ்தானிற்காக முஜாகிதீன் போராளிகளுடன் இணைந்து போரிட்டார்.

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் அமெரிக்காவில் முதலாம் எதிரியாகக் கருதப்பட்ட பின் லாடனை அமெரிக்கக் கடறபடையின் சீல் பிரிவினர் பல மில்லியன் டாலர்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக செலவு செய்து பக்கிஸ்த்தானில் வைத்து மே மாதம் 2-ம் திகதி  கொன்றனர்.

பின் லாடனுக்கு ஜெரேனிமோ என்னும் குறியீட்டுப் பெயர் வழங்கப்பட்டது. அமெரிக்கக் கடற்படையின் கடல், வான், நிலம் ஆகிய மூன்று முனைகளிலும் சண்டையிடக்கூடிய சீல்(SEAL) பிரிவினர் ஒசாமா பின் லாடனைக் கொல்லும் சண்டையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். கடல் Sea, வான் Air, தரை Land ஆகிய சொற்களின் முதல் எழுத்துக்களில் இருந்து SEAL என்ற சொல் உருவாக்கப் பட்டிருந்தது. SEAL படைப்பிரிவில் மிக நேர்த்தியாகத் தெரிந்து எடுக்கப்பட்டவர்கள் இந்தப் படை நடவைக்கையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். இவர்களை TEAM - 6 என அழைப்பர். ஆப்கானிஸ்த்தான் எல்லையில் உள்ள ஜலலாபாத்தில் இருந்து ஹெலிக்கொப்டர்கள் மாளிகையில் வீரர்களை இறக்கியது. அவர்கள் சுவர்களைக் குண்டுகளால் தாக்கினர். அங்கு பாதுகாப்பிற்கு இருந்த ஆணைக் காப்பாற்ற ஒரு பெண் குறுக்கே பாய்ந்தார். அவர் சுடப்பட்டார். அவர் மர்ம தகவல் பரிமாற்றக்காரரின் மனைவி. ஒரு ஹெலிக்கொப்டர் பின் லாடனின் பாதுகாவலரின் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் எவரும் கொல்லப்படவில்லையாம். பின் லாடன் இருந்த அறையின் சுவர்களைத் தகர்த்தே தாக்குதல் அணியினர் உள்புகுந்தனர். அங்கு இருந்த பின்லாடனின் மனைவியும் இரு மகன்களும் பயத்தில் ஓடிப்போய் தந்தையைக் கட்டிக் கொள்ளுதல் இயல்பு. அதை அமெரிக்கர் பின் லாடன் மனைவியைக் கேடயமாகப் பாவித்தார் என்கின்றனர்.

 பாக்கிஸ்த்தானில் அமெரிக்கப்படைகள் அத்து மீறி உட் புகுந்து பின் லாடனைக் கொன்றது அங்கு பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதனால் அங்கு இது தொடர்பாக விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை பாக் அரசு அமைத்தது. இந்த ஆணைக்குழு பாக்கிஸ்த்தானில் தங்கியுள்ள பின் லாடனின் மூன்று மனைவியரையும் பல பிள்ளைகளையும் பாக்கிஸ்த்தானை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று பாக் அரசிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...