Wednesday 13 April 2011

ஐநா சொதப்பல்: அறிவிக்கப்படாத அறிக்கை பற்றி இலங்கை அறிக்கை.


இலங்கையில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை இந்திய வற்புறுத்தலின் பேரில் பலநாடுகள் பயங்கரவாத முத்திரை குத்தி, பன்னாட்டு ரவுடிக் கும்பல்கள் தமிழர்களை ரவுண்டுகட்டித் தாக்கி தமிழர் போராட்டத்தை ஒடுக்கினர். வெறி கொண்ட சிங்களப் பேரினவாதம் இந்தியப் பேரினவாதிகளின் உதவியுடன் தமிழர்களுக்கு எதிராக மோசமான போர்க் குற்றம் புரிந்தது.

தமிழர்கள் முன்வைக்கும் குற்றச் சாட்டுக்கள்:
  • மக்கள் ஒரு சிறிய பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டனர்.
  • பாதுகாப்பு வலயங்களில் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வீசப்பட்டன
  • தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன.
  • உணவு, உடை, நீர், மருத்துவ வசதிகள் அவர்களைச் சேருவது தடுக்கப்பட்டன.
  • மருத்துவ மனைகள், மக்கள் குடியிருப்புக்கள், வணக்கத்தலங்கள் மீது கண்மூடித்தனமான குண்டுகள் வீசப்பட்டன.
  • சரணடைய வந்தோர் கொல்லப்பட்டனர்.
  • மக்கள் உயிரோடு புதைக்கப் பட்டனர்.
  • சரணடைந்தவர்கள் ஜெனிவா உடன்படிக்கைக்கு ஏற்ப நடத்தப்படவில்லை.
  • இலட்சக் கணக்கான மக்கள் வசதிகள் ஏது மற்ற நிலையில் தடுத்து வைக்கப்பட்டனர்.( இலங்கா ரத்னா இந்து ராம் அவை இந்தியாவில் இருப்பவற்றிலும் பார்க்க வசதியான இடங்கள் என்று பிதற்றினார்.)
தமிழர்களும் பல மனித உரிமை அமைப்புக்களும் இது தொடர்பாக ஒரு பன்னாட்டுப் பக்கச் சார்பற்ற விசாரணை தேவை என்று வலியுறுத்தினர். இந்திய வில்லங்கம் பிடித்த வில்லன் விஜய் நம்பியாரை தனது பிரதம ஆலோசகராகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன்(இவரது மருமகன் சித்தார்த் சட்டர்ஜியும் ஒரு இந்தியர்) இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடித்து வந்தார். கடுமயான விமர்சனங்கள் பிரித்தானியத் தொலைக்காட்சி சனல்-4 தொடர்ந்து பல போர்க்குற்ற ஆதாரங்களை வெளிவிட்டதைத் தொடர்ந்து பான் கீ மூன் இலங்கையின் போரின் போது நடந்தவை பற்றி வகை சொல்வது தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஒரு அதிகாரமற்ற மூவர் கொண்ட ஆலோசனைக் குழுவை நீண்ட இழுத்தடிப்பிற்குப் பின்னர் அமைத்தார்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி டறுஸ்மன் (Marzuki Darusman), தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டவாளர், நீதியாளர் யஸ்மின் சூகா (Yasmin Sooka), அமெரிக்காவைச் சேர்ந்த சட்டத்துறைப் பேராசிரியர் ஸ்ரிவன் ரட்னர் (Steven Ratner) ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். அந்த ஆலோசனைக் குழு நீண்ட இழுத்தடிப்பிற்குப் பின்னர் தனது விசாரணைகளை ஆரம்பித்தது. நீண்ட இழுத்தடிப்பிற்குப் பின்னர் அந்த ஆலோசனைக் குழு தனது அறிக்கையை அறிக்கையை ஏப்ரல் 12-ம் திகதி பான் கீ மூனிடம் சமர்ப்பித்தது.

ஐநாவின் வழமைப்படி மதிப்புரவின்(courtesy) நிமித்தம் இலங்கையிடமும் அறிக்கையின் ஒரு பிரதி வழங்கப்பட்டது. அறிக்கை பகிரங்கப் படுத்தப்படுமா என்பது பற்றியோ அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் படும் என்பது பற்றியோ எதுவும் தெரியவில்லை. பகிரங்கப் படுத்தப் படாத அறிக்கை பற்றி இலங்கை மதிப்புரவை மீறி தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது அந்த அறிக்கை அடிப்படையில் பல தவறுகளைக் கொண்டுள்ளது; பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது; பாராபட்சமான பல தகவல்கள் எவ்வித உறுதிப்படுத்தலுமின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கை அரசு மதிப்புரவை மீறி பகிரங்கப் படுத்தப்படாத அறிக்கை பற்றி தனது கருத்தைத் தெரிவித்தது தவறாகும்.

இலங்கையின் குத்துக் கரணம்
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை இன்னும் இலங்கைக்கு கையளிக்கப்படவில்லை என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஐநா செயலதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப் படவேண்டும் என்று பன்னாட்டு மன்னிப்புச் சபையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஐநா செயலதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை வெளிவர முன்னரே இலங்கை அதற்கான தாயார் படுத்தலில் இறங்கிவிட்டது. தமிழ்நாட்டில் மாநில அரசுத் தேர்தல் நடந்த படியால் இந்தியாவால் பகிரங்கமாக உதவ முடியாது என்றபடியால் இலங்கைக்கு உதவ சீனா முன் வந்தது. அறிக்கை வெளிவர முன்னரே இலங்கையில் வெளி நாட்டுத் தலையீடுகள் இருக்கக் கூடாது என்று சீனாவும் பாலஸ்த்தீனமும் அறிக்கை விட்டன. ஐநா செயலதிபரின் ஆலோசனைக் குழுவின் அறிக்கை தனக்கு சாதகமாக இருக்காது என்று இலங்கைக்கு முன்கூட்டியே தெரியும் என்றபடியால் தான் இந்த சீன பாலஸ்த்தீன அறிக்கைகள் வெளிவந்தன. இது ஐநாவின் நேர்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்படியா சங்கதி...

அருள் said...

போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...