Saturday 9 April 2011

எகிப்தில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்


எகிப்தை ஆண்ட ஹஸ்னி முபாராக்கை 18 நாட்கள் தொடர்ந்து நடாத்திய உறுதியான போராட்டத்தால் பதவியில் இருந்து அகற்றியதுடன் எகிப்தியப் பிரச்சனைகள் தீரவில்லை. மக்களின் பிரச்சனைகள் புது வடிவம் பெற்றுள்ளது. முபராக்கிற்கு பின்னரான அரசி எப்படி அமைய வேண்டும் எப்படி அரசியலமைப்பை திருத்த வேண்டும் பாராளமன்றத் தேர்தலின் பின்னர் அதிபர் தேர்தலா அல்லது அதிபர் தேர்தலுக்குப் பின்னர் பாராளமன்றத் தேர்தலா புதிய எகிப்து மத சார்பற்றதா அல்லது ஒரு இசுலாமிய நாடா இப்படிப் பல முரண்பாடுகள் இப்போது எழுந்துள்ளன.

எகிப்தின் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஒவ்வொரு அரச பணிமனையிலும் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் தினந்தோறும் முரண்பாடுகளும் ஆர்ப்பாட்டங்களும் நடந்த வண்ணமே இருகின்றன. ஹஸ்னி முபராக் மட்டும்தான் பதவியில் இருந்து அகற்றப் பட்டுள்ளார். அவரது அரச இயந்திரம் அப்படியே இருகிறது. அவரது இராணுவ அதிகாரியின் கையில்தான் இப்போதும் அதிகாரம். அரச இயந்திரங்கள் யாவும் முபராக்கால் நியமிக்கப்பட்ட உளவாளிகள் இப்போதும் இருப்பதால்தால் இந்த முரண்பாடுகளும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன. மக்களின் உண்மையான தேவை ஆட்சியாளர் மாற்றம் மட்டுமல்ல ஆட்சி முறை மாற்றமுமே.

சமுதாயத்தின் சகல அம்சங்களிலும் ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடு புரட்சியின் வெற்றியைப் பாழடித்து விடுமா அல்லது பாழடித்து விட்டதா என்பதுதான் எகிப்தியரின் இன்றைய அச்சம்.

பெருமை மிகு வரலாற்றை கொண்ட எகிப்தியர் முதல் முதலாக அரச இயந்திரத்தின் அசைவில் தமது பங்கும் இருக்க வேண்டும் என்றும் தமது அபிலாசைகளை அது பிரதிபலிக்கவேண்டும் என்றும் விரும்புகின்றனர். மக்களாட்சியென்பது வாக்களிப்பது மட்டுமல்ல மக்களின் விருப்பு வெறுப்புக்களிற்கு ஏற்ப வாக்களிப்பால தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அரசை இயக்குவதுதான்.

மக்களாட்சிக்கு பரிச்சயமில்லாத எகிப்தியர் அங்கு உருவாகியுள்ள பல்வேறு அமைப்புக்களை சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கின்றனர். ஏப்ரல்-6 இயக்கம்தான் முபாரக்கிற்கு எதிரான புரட்சியை ஒழுங்கு படுத்தியதும் முன்னின்று நடாத்தியதும். அல் மஹால்லா அல் குப்ரா என்னும் எகிப்திய நகரில் 2008 ஏப்ரில் 6-ம் திகதி அங்குள்ள தொழிற்சாலை ஊழியர்களால் வேலை நிறுத்தத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது பேஸ்புக் குழு ஏப்ரல் 6 இயக்கம். இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு என்பது மிக நீண்டகாலமாக செய்ற்பட்டு வரும் ஒரு அரசியல்-மத இயக்கம். ஏப்ரல்-6 இயக்கம் ஆரம்பித்த ஹஸ்னி முபாரக்கிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பும் இணைந்து கொண்டது. இவை இரண்டும் இப்போது முரண்பட்டு நிற்கின்றன.

அதிக ஊழியம் அதிக உரிமை போன்றவை கேட்டு ஊழியர்கள் போராட்டம் நடாத்துவது பரவலாக நடந்து வருகிறது. ஷேக் அல் அஜார் என்னும் உயர் மதத் தலைவரின் வீட்டைச் சுற்றி எகிப்திய தற்காலிக அரசு தாங்கிகள் சகிதம் படைகளை நிறுத்தி வைத்துள்ளது. எகிப்திய அரசுக்குச் சொந்தமான காப்புறுதிச் சேவையை தனியார் மயமாக்கும் தற்காலிக அரசின் முயற்ச்சிக்கும் எதிராக தினம்தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. எகிப்தியப் பல்கலைக் கழகத்தில் அதன் தலைவரை பதவி நீக்கும்படி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

சிலர் இந்த ஆர்ப்பாட்டங்கள் புரட்சி எதிர்ப்பாளர்களால் செய்யப்படும் சதி என்று குறை கூறுகின்றனர். ஆனால் எகிப்திய மக்களுக்கு உள்ள பெரிய பிரச்சனை யார் புரட்சியாளர் யார் புரட்சி எதிர்ப்பாளர் என்று கண்டறிவதே.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...