Sunday 25 July 2010

இக்கவிதை வடிவம் எதிர்ச் சொல் அலங்காரமா?


இந்தக் கவிதை வடிவத்தை பராரி என்ற அன்பர் எதிர்ச் சொல் அலங்காரம் என்று முன்னர் பின்னூட்டமிட்டார். இரு வேறு பட்ட கேள்விகளுக்கு ஒரு சொல்லில் பதில். பதில் சிலேடையாக அமைந்து இரு கேள்விகளுக்கும் விடையாகும்.

ஊடகங்கள் தேடித்தருவதெது
பாடகர்கள் பாடித்தருவதெது

சங்கதிகள்



கண்ணில் நீர் வரவைப்பதெது

கண்ணை மூட வைப்பதெது
அதிகாரம்
 

பெருமழையால் பெருக்கெடுப்ப தெது
கோடிகளைப் பெருக்க வருவதெது
வெள்ளம்

மாட்டின் திமிர் அடக்குவதெப்படி
நெல்லின் கதிர் பிரிப்பதெப்படி
சூடடித்து

நீதிமன்றில் வெல்வதெப்படி
சேகுவேராவை அழைப்பதெப்படி
வாதாடி

காதலி தவிப்பதெப்போ
அரசியல்வாதி மகிழ்வதெப்போ
மாலை வருகையில்

இல்லற சுகம் பெறுவதெங்கே
நாட்டின் வளம் பெருகுவதெங்கே
கூட்டுறவில்


முடி நரை மறைப்பதெது

முதலாள் செய்வதெது

தலைமையேற்றல்


பசித்தவன் பந்தியில் விடுவதென்ன

புசித்தவன் வாயில் போடுவதென்ன

வெற்றிலை


தளபாடம் செய்வதெப்படி

ஒற்றுமை வளர்வதெப்படி

பலகைகள் இணத்து


தமிழர் வேண்டுவதெது

துயர் கண்டு உருகுவதெது

தாயகம்


பாரி தேரில் படர்ந்ததெது

ராஜபக்ச மனமெது

கொடியது



இறைவனார் நிலையெது
மாவிரர்தம் புகழெது
காயமிலையென்பதே

(பொருள்: கடவுளுக்கு உடலில்லை வீரர்க்கு காயம் இல்லை)

பாட்டனார்க்கு விழுவதெது
மாமனாரிடம் கறப்பதெது
சொத்தை

விவசாயியின் வெற்றியெது
போராளியின் தொடக்கமெது
பொங்கல்

செம்முத்துக்கள் தரும் கனியெது
அவளில்லா இதயத்தில் வருவதெது
மாதுளை

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...