அன்று இப்படிச் சொன்ன சிவத்தம்பி இன்று சொல்வது:
- முதல்வர் கருணாநிதி தமிழ் மொழியில் பன்முக ஆற்றல் கொண்டவர். அவரது காலத்தில் நடக்கும் இம்மாநாடு சிறப்பானது. தமிழின் பெருமைகளை முற்றுக அறிந்து உணர்ந்தவர். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி வளமையான மொழி, மதச் சார்பற்ற, சமயச் சார்பற்ற ஒரே மொழி உலகில் தமிழ் மட்டும் தான். உலக மொழிகள் வேறு எதற்கும் இந்த பெருமை கிடையாது.
இலங்கையில் ஒருகாலத்தில் தங்களை மார்கசியவாதிகள் முற்போக்களர்கள் என்று சொல்லிக் கொண்டு சிங்களப் பேரினவாதிகள் பின்னால் அலைந்த பலருள் கலாநிதி சிவத்தம்பியும் ஒருவர். இலங்கையில் தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டின் இலக்கியங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கவேண்டும் என்று முழங்கியது இந்தக் கும்பல். இலங்கைத் தமிழர்களையும் இந்தியத் தமிழர்களையும் பிரித்து வைக்க வேண்டும் என்ற சிங்களப் பேரினவாதிகளின் பேராசையை நிறைவேற்றவே இவர்கள் இப்படிக் கூக்குரல் இட்டார்கள்.
சிவத்தம்பி உட்பட தங்களை முற்போக்கு வாதிகள் என்று கூறிக் கொண்ட இந்த கம்யூனிச முகமூடிய சிங்களப் பேரினவாதிகளின் அடிவருடிகள் பெரியாரின் திராவிட இயக்கத்தையும் அறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும் எப்படி விமர்சனம் செய்தார்கள் என்பதை தமிழர்கள் மறக்கவில்லை. இவர்கள் தந்தை செல்வாவின் இணைப்பாட்சி(சமஷ்டி) கொள்கையை எப்படி விமர்சித்தார்கள் என்பதை நாம் அறிவோம்.
தமிழ்நாட்டு பத்திரிகைகள் சஞ்சிகைகள் இலங்கைக்கு வருவதை எதிர்த்த கும்பலில் சிவத்தம்பியும் ஒருவர். அவர் அன்று எந்த சஞ்சிகைகளை குப்பை என்று எதிர்தாரோ அதே சஞ்சிகைகளுக்கு பேட்டிகள் கட்டுரைகள் இன்று வழங்கிப் பெருமை தேடுகிறார்.
1983-ம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் என்றபோர்வையில் நடந்த இனக்கொலையின் பின்பே இந்த சிவத்த தம்பி சிங்களவர்களின் மனோநிலையைப் புரிந்து கொண்டார்.
1 comment:
1983இல் சிங்களவன் வெளுத்த வெளுப்பிற்குப் பிறகு சிவப்புச் சாயம் கழன்றது...
Post a Comment