Sunday 3 January 2010

சண்டே லீடர் மீண்டும் கிளறும் போர்குற்றம்.




சரணடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பிரிவினர்களைச் சுட்டுக் கொன்ற விடயத்தை மீண்டும் சண்டே லீடர் பத்திரிகை கையில் எடுத்துள்ளது.

He (Sarath Fonseka) claimed he had heard that Gotabaya Rajapaksa ordered any surrendering LTTE cadres to be shot, and related the story of Pulidevan and Nadesan’s surrender.

கோத்தபாய ராஜபக்சே சரணடையவரும் விடுதலைப் புலிகளைச் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டதாக தாம் கேள்விப்பட்டதாக தெரிவித்தார்.

ஒருவர் கேள்விப்பட்டதை மட்டும் வைத்துக்கொண்டு போர் குற்றம் சுமத்த முடியுமா என்ற கேள்வி நியாயமானதே.

ஆனால் சண்டே லீடர் பத்திரிகை அத்துடன் நிறுத்தவில்லை. சரத் பொன்சேக்கா சொன்னதை பிரிசுரிக்கமுன் அது பல படைத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டது.

As the accusation; the massacre of surrendering cadres and their families was extremely serious, I contacted all of those implicated in the General’s denunciation.

When I spoke with General Shavendra Silva he said he could not comment without permission to do so. I then spoke with Brigadier Udaya Nanayakkara who later got back to me saying he had discussed the matter with the current Army Commander Jagath Jayasuriya as well as General Shavendra Silva and collectively taken a decision that they would not issue any comment.

ஜெனரல் ஷவெந்திர சில்வா அவர்களை முதலில் சண்டே லீடர் தொடர்பு கொண்டபோது அவர் அனுமதியில்லாமல் அதுபற்றிக் கருத்துரைக்க மறுத்தார்.

படைத்துறைப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காராவைத் தொடர்பு கொண்டபோது அவர் படைத் துறைத் தளபதி ஜெகத் ஜயசூரியாவுடனும் ஜெனரல் ஷவெந்திர சில்வாவுடனும் கலந்துரையாடியபின் தாம் மூவரும் இணைந்து இது தொடர்பாக கருத்துத் தெரிவிப்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகக் கூறினார்.

When I spoke with Basil Rajapaksa he denied that Norway had got in touch with him regarding this issue. Rajapaksa however did not deny knowledge of the incident. I tried contacting Gotabaya Rajapaksa but was told he had not come into his office on that day, December 11, 2009. I left a message with his office but Gotabaya Rajapaksa holds a personal grudge against this newspaper and refuses to speak to the Leader.

பசில் ராஜபக்சேயுடன் தொடர்பு கொண்டபோது தன்னுடன் நோர்வே இவ்விடயம்(சரணடைதல்) சம்பந்தமாக தொடர்பு கொள்ளவில்லை என்று மறுத்தார். இருந்தும் பசில் சம்பவம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்று மறுக்கவில்லை.

கோத்தபாய ராஜபக்சாவிடம் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.

Realising the impact such striking allegations would have, at 9.45 a.m. before the paper went to print on Saturday I once gain contacted Sarath Fonseka.

During a twenty minute phone conversation the General reiterated that he stood by the allegation. At that point I asked him who the journalist was who had told him about the supposedly illegal order given by Gotabaya Rajapaksa to Shavendra Silva. Fonseka gave me the journalist’s name but asked that I not name him “for reasons for his own personal security.” A request I obliged.

சரத் பொன்சேக்காவின் குற்றச் சாட்டுக்களை (சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றமை) பிரசுரிக்கமுன் சண்டே லீடர் மீண்டும் ஒரு முறை அவரை தொடர்பு கொண்ட போது தனது குற்றச் சாட்டை அவர் மீண்டும் உறுதி செய்தார்.


  • சரணடைய வந்தவர்களைச் சுட்டுக் கொன்றதை சரத் பொன்சேக்கா அம்பலப் படுத்திய போது எந்த ஒரு படைத் துறை அதிகாரியும் அதை மறுக்கவில்லை.
  • கோத்தபாய ராஜபக்சே அதை முதலில் ஒரு காட்டிக் கொடுப்பாகவே வர்ணித்தார்.
  • நிலைமை உலகரீதியில் அடிபடத் தொடங்கிய பின்னரே இலங்கை அரசு தரப்பு சரத் பொன்சேகா கூறியது ஆதாரமற்றது என்றனர்.
சண்டே லீடர் இதை மீண்டும் பிரசுரித்த வேளை இனக்கொலைக்கு எதிரான தமிழர் நடவடிக்கைக் குழு இலங்கை இராணுவத்தினரின் போர்குற்றம் தொடர்பான செய்மதிப் படங்களை சர்வ தேச நீதி மன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சர்வ தேச நீதி மன்றம என்ன செய்யும்.
சர்வ தேச நீதிமன்றில் இலங்கை ஒரு அங்கத்தவர் அல்ல என்பதால் நேரடி வழக்கு சாத்தியமல்ல. ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக வழக்குத் தாக்குதல் செய்வதை சீனா அல்லது இரசியா இரத்து அதிகார்த்தைப் பாவித்து தடை செய்யும். சர்வ தேச நீதி மன்றின் வழக்குத் தொடுநர் தனது அதிகாரத்தைப் பாவித்து இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தவர்கள் மீது வழக்குத் தொடுத்து தண்டிக்கலாம்.

3 comments:

Anonymous said...

These people will definitely be punished

Anonymous said...

India also committed war crime against Tamils.

Anonymous said...

I like the pictures.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...