Thursday, 17 December 2020

ரஃபேல் விமானத்தில் குழப்ப முடியாத GPS

  


2018-ம் ஆண்டு நேட்டோ படையினரும் பின்லாந்தும் இணைந்து செய்த Trident போர்ப்பயிற்ச்சியின் போது. நோர்வேயினதும் பின்லாந்தினதும் பூகோள நிலையறி முறைமையை (GPS) இரசியா குழப்பியதாக செய்திகள் வெளிவந்திருந்தன. சிரியப் போரிலும் இது நடந்தது எனக் கருதப்படுகின்றது. இரசிய அதிபர் விளடிமீர் பயணிக்கும் இடங்களில் பூகோள நிலையறி முறைமையை (GPS) குழப்பி அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இரசியா முதலில் குழப்பி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. பின்னர் அது போர்முனைகளில் பாவிக்கக் கூடிய அளவிற்கு மேம்படுத்தப்பட்டது. இதைச் சமாளிக்க ரஃபேல் விமானத்தில் புதிய தொழில்நுட்பம் இணைக்கப்படவுள்ளது. 

இலத்திரனியல் போரில் வல்ல இரசியா

பூகோள நிலையறி முறைமையை (GPS) குழப்புதல் என்பது இலத்திரனியப் போரியலின் ஒரு பகுதியாகும். 2014-ம் ஆண்டு அமெரிக்காவின் USS Donald Cook போர்க்கப்பலுக்கு அண்மையாக இரசியாவின் SU-24 போர் விமானம் பறைந்தவுடன் அந்தப் போர்க்கப்பலில் உள்ள எல்லா இலத்திரனியல் கருவிகளும் செயலிழந்து போயின. அந்த அளவிற்கு இரசியாவின் இலத்திரனியல் போர் முறைமை மேம்பட்டதாக இருக்கின்றது. இரசியாவின் SU-24 இருந்து வீசிய வானலை இலத்திரன் அலைகள் மூலமாக அமெரிக்கப் போர்க்கப்பலின் இலத்திரனியல் செயற்பாடுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. அமெரிக்காவின் மிகப்பாரிய பெறுமதி மிக்க கப்பல்களை மிகமலிவான இலத்திரனியல் கருவிகள் மூலம் செயலிழக்கச் செய்யும் இரசியாவின் தொடர்ச்சியான ஆராய்ச்சி வெற்றியளித்துள்ளது. 

துல்லிய தாக்குதலுக்கு GPS அவசியம்

தரையில் இருந்து 20,000கிமீ (12,000மைல்) உயரத்தில் மிதக்கும் முப்பதிற்கு மேற்பட்ட செய்மதிகளில் இருந்து வரும் தொடர்பாடல்கள் மூலம் பூகோள நிலையறி முறைமை (GPS) செயற்படுகின்றது. பூகோள நிலையறி முறைமை செய்மதிகளின் உதவிகளுடன் செயற்படுகின்றது. செய்மதிகளில் இருந்து ஒளியின் வேகத்தில் வரும் சமிக்ஞைகளை குழப்புவதன் மூலம் பூகோள நிலையறி முறைமையைக் குழப்பலாம். 1990/91 ஆண்டுகளில் நடந்த வளைகுடாப் போரின் போது அமெரிக்கப் படையினர் தரை, வான், கடல் ஆகிய மூன்று நிலைகளில் இருந்தும் ஈராக் மீது ஏவுகணைகளை வீசி இலக்குகளை துல்லியமாக தாக்கியமைக்கு பூகோள நிலையறி முறைமை (GPS) காரணமாக அமைந்தது. அதைப் பார்த்து வியந்த ஒரு இரசியப் படைத்துறை நிபுணர் இது போரியலில் அடுத்த தலைமுறை வகையைச் சேர்ந்தது. என்றார்.

What is a GPS jammer?

A GPS jammer is a typically small, self-contained, transmitter device used to conceal one’s location by sending radio signals with the same frequency as a GPS device. When this occurs, the GPS device is unable to determine its position due to interference.

பரவலாகப் பயன்படும் GPS

இலண்டன் பங்குச் சந்தை உலகின் பல் வேறு பாகங்களில் இருந்து தொடர்பு கொள்ளும் முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கு பாவிக்கும் பூகோள நிலையறி முறைமையும் பல தடவை குழப்பப்பட்டன. பெரு நகரங்களில் நடந்து செல்லும் சாதாரண பயணிகள், படையினர், விமானங்கள், கடற்கப்பல்கள் என எல்லாப் போக்கு வரத்துக்களுக்கும் பூகோள நிலையறி முறைமை (GPS) பெரிதும் ங்கள், ஆளில்லா கப்பல்கள், ஆளில்லா நீர்மூழ்கிகள், தானாக இயபயன்படுத்தப்படுகின்றன. ஆளில்லா விமானங்கும் மகிழூர்ந்துகள், ஊபர் போன்ற வாடகைப் போக்குவரத்து நிறுவனங்கள் தமது செயற்பாடுகளுக்கு பூகோள நிலையறி முறைமையில் (GPS) பெரிதும் தங்கியிருக்கின்றன. 

குவய தொழில்நுட்பம் (Quantum Technology)


2018-ம் ஆண்டு நேட்டோவின் போர் ஒத்திகையின் போது பூகோள நிலையறி முறைமையை (GPS) குழப்பியதைத் தொடர்ந்து இனி வரும் காலத்தில் இதை எப்படி எதிர் கொள்வது என பல நாடுகளும் ஆய்வில் இறங்கின. பிரான்ஸ் குவய தொழில்நுட்பத்தை (Quantum Technology) பாவித்து குழப்ப முடியாத பூகோள நிலையறி முறைமையை உருவாக்கியுள்ளது. அணுவின் உட்பிரிவுகளான இலத்திரன் புரோட்டன் போன்றவற்றையும் அவற்றின் அலை இயக்கத்தையும் பாவிப்பது குவய தொழில்நுட்பமாகும். Extremely High-Performance quantum accelerometers மூலம் Gyroscopes எனப்படும் தொலை நோக்கிகளை இயக்குவதால் குழப்ப முடியாத பூகோள நிலையறி முறைமையை பிரான்ஸ் உருவாக்கியுள்ளது.  Gyroscopes துரிதமாகச் சுழலும் சில்லுகளைக் கொண்டது. இதன் இலத்திரனியல் வடிவம் தானாக இயங்கும் விமானங்களிலும் ஏவுகணை வழிகாட்டி ஏவுகணைகளிலும் பயன்படுத்தப் படும். இவற்றை Quantum Technology மூலம் பிரான்ஸ் மேம்படுத்தியுள்ளது.



பிரான்ஸின் குழப்ப முடியாத பூகோள நிலையறி முறைமை ரஃபேல் விமானங்களில் இணைக்கப்படவுள்ளன. இந்தியா பிரான்ஸின் ரஃபேல் விமானங்களை வாங்கியதைத் தொடர்ந்து கிரேக்கமும் துருக்கியின் அச்சுறுத்தலை எதிர் கொள்ள ரஃபேல் விமானங்களை வாங்கியது. இப்போது இந்தோனேசியாவும் ரஃபேலைக் கொள்வனவு செய்ய முடிவு செய்துள்ளது. தனது போர்ப்படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்குவதை பிரான்ஸ் எப்போது தவிர்க்கின்றது. தனது படைக்கலன்களை தானே உற்பத்தி செய்வதால் தனது தனித்துவத்தைப் பேண முடியும் எனக் கருதும் பிரான்ஸ் தனது போர் விமானங்களை தொடர்ச்சியாக புதியதாக்கிக் கொண்டே இருக்கின்றது.

இணைய வெளிப் போர் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்(Click): அமெரிக்க இணையவெளிப் போர்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...