Wednesday 9 April 2014

இந்தியத் தேர்தல் ஒரு பார்வை

எண்பத்தி ஒரு கோடி மக்கள் வாக்களிக்கும் இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 7-ம் திகதியில் இருந்து மே 12-ம் திகதிவரை நடைபெறும். அதாவது தேர்தல் 36 நாட்கள் நடைபெறும். மே 16-ம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்தியாவின் தேர்தலைப் பல கோணங்களில் இருந்து பார்க்க முடியும்.

அதிக எண்ணிக்கையான் இளம் வாக்காளர்கள் 
81 கோடி மக்கள் வாக்களிக்கும் இந்தியப் பொதுத் தேர்தலில் முப்பத்து எட்டுக் கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் 18-இற்கும் 35இற்கும் இடைப்பட்ட வயதினரே. இவர்களில் பெரும் பான்மையானவர்களை எந்த அரசியல்வாதியும் கவரவில்லைசிறந்த கல்வி, சிறந்த பொருளாதாரம், ஊழலற்ற ஆட்சி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சிறந்த மருத்துவ வசதி என இவர்களது நீண்ட தேவைப் பட்டியலை எந்த ஒரு அரசியக் கட்சிகளாலும் நிறைவேற்ற் முடியாது.

முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் மோடி 
இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமை அமைச்சர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்ற முன்னர் தனது கட்சியைப் பிடிப்பதில் வெற்றி கண்டு கொண்டிருக்கின்றார். மோடியின் கட்சியைப் பிடிக்கும் முயற்ச்சி அவரது கட்சியில் பிளவுகளை உருவாக்கியுள்ளது என்ற செய்தி அண்மைக் காலங்களாக கடுமையாக அடிபட்டுக் கொண்டிருந்தது. இதை உறுதி செய்யும் வகையில் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜஸ்வந்த் சிங் தான் கேட்ட தொகுதியில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்காமையினால் கட்சி சார்பில் போட்டியிடாமல் தன்விருப்ப வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். இதற்காக ஜஸ்வந்த் சிங் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். தான் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டதாக ஜஸ்வந்த் சிங் ஊடகங்களிற்கு கண்ணீருடன் பேட்டியளித்தார். இன்னும் ஒரு மூத்த தலைவரான சுஸ்மா சுவராஜ் அவர்களும் பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் தீவிர பிரச்சாரம் செய்யாமல் ஒதுங்கி இருக்கின்றார். இந்தியாவில் வீசும் மோடி அலையில் சுஸ்மா சுவராஜ் ஒதுக்கப்பட்டார் எனச் சொல்லலாம்.

ஆனால் பாரதிய ஜனதாக் கட்சியின் மிகவும் மூத்த தலைவரான எல் கே அத்வானி தான் மோடியுடன் நன்கு ஒற்றுமையாக இருப்பதாகக் காட்சிப்படுத்தியுள்ளார். எல் கே அத்வானி தனது தேர்தல் வேட்பு மனுத் தாக்கலிற்கு மோடியை உடன் அழைத்துச் சென்றதுடன் நரேந்திர மோடியை சிறந்த நிர்வாகி எனப் புகழந்துள்ளார். மேடியின் நிர்வாகத் திறன் அவரை இந்தியாவின் சிறந்த தலைமை அமைச்சராகச் செயற்பட உதவும் என்றார் எல் கே அத்வானி.
 நரேந்திர மோடி தேசிய அளவில் பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னணித் தலைவர்களான யஸ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங், முரளி மனோகர் ஜோஸி, சுஸ்மா சுவராஜ், எல் கே அத்வானி ஆகியோரை ஓரம் கட்டி தலைமை அமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.

முன்னாள் கல்வி அமைச்சரான முரளி மனோகர் ஜோஸியின் தொகுதியை மோடி தனதாக்கி தான் போட்டியிடுகின்றார். வேண்டா வெறுப்புடன் ஜோஸி தனது தொகுதியை மோடிக்கு விட்டுக் கொடுத்துள்ளார்.  மோடி தனது வெற்றியை உறுதி செய்ய Vadodara and Varanasi, ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றார்.

ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் பல முன்னணித் தலைவர்களை ஓரம் கட்டி முதலமைச்சர் ஆனவர் மோடி. குஜராத்தில் மூன்று தடவை முதலமைச்சராகத் வெற்றி பெற்ற மோடி அங்கு ஒரு தனிமனித அமைச்சரவையையே நடத்துகின்றார் என்ற குற்றச் சாட்டு உண்டு. பல முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை மோடியே வைத்திருப்பார்.  மோடி எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்துபவர் என்ற குற்றச் சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது.

என்னதால் மோடி அலை வீசினாலும் பாரதிய ஜனதாக் கட்சி அறுதிப் பெரும் பான்மையுடன் வெற்றி பெறமாட்டாது எனப் பல கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன.  543 தொகுதிகளில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி 240 இற்கும் 260இற்கும் இடையிலான தொகுதிகளில் வெற்றி பெறலாம என எதிர்பார்க்கப்படுகின்றது.

2014 -ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடக்க விருக்கும் இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான பொதுத் தேர்தலில் மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி அறுதிப் பெரும் பான்மையுடன் வெற்றி பெற முடியாது என்ற நிலையில்  ஒரு அம்மாவும் இரண்டு அக்காக்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

ஒரு அம்மாவும் இரண்டு அக்காக்களும்.
தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி முதலாம் இடத்தையும் காங்கிரசுக் கட்சி இரண்டாம் இடத்தையும் பெறும் நிலையில் அம்மா ஜெயலலிதாவின் அண்ணா திரவிட முன்னேற்றக் கழகம், உத்தரப் பிரதேசத்து அக்கா மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, மேற்கு வங்கத்து அக்கா மம்தா பனர்ஜீயின் திரினாமூல் காங்கிரசு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன.  இவை மூன்றாம் நான்காம் ஐந்தாம் இடங்களைப் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் மூவரும் அடுத்த இந்தியத் தலைமை அமைச்சராகும் கனவுடன் இருக்கின்றார்கள். இவர்களிடை கடுமையான குணாதிசிய வேறு பாடுகள் காணப்படுகின்றன. ஆடமபரமான வாழ்கையையும் விலை உயர்ந்த அணிகலன்களையும் விரும்பும் திமிர் பிடித்தவர்  ஜெயலலிதா அம்மா. இவர் தான் அம்மா என அழைக்கப்படுவதை விரும்புபவர். திரினாமூல் காங்கிரசுக் கட்சியின் தலைவியான மம்தா பனர்ஜீ மிகவும் எளிமையாக ஆடைகளை அணிவார். இவர் அமெரிக்கா சென்ற போது இவரது மருமகள் தனக்கு முகப்பூச்சு வாங்கி வரும்படி வேண்டியிருக்கின்றார். முகப்பூச்சு அனுபவம் இல்லாத மம்தா ஆண்களின் முகப்பூச்சை வாங்கி வந்து மருமகளுக்குப் பரிசளித்திருக்கின்றார். பொதுவுடமைக் கட்சியின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றி தான் ஆட்சியைக் கைப்பற்றிச் சாதனை புரிந்தவர் மம்தா. பார்ப்பன எதிர்ப்பில் உருவான திராவிட இயக்கத்தின் கட்சிகளில் ஒன்றான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தன்வசமாக்கிச் சாதனை புரிந்தவர் பார்ப்பனத்தியான ஜெயலலிதா. ஜெயலலிதா கன்னடத்து உயர் சாதி அய்யங்கர் சமூகத்தை சேர்ந்தவர் என்றால் மயாவதி அக்கா தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் காங்கிரசின் கோட்டையாக இருந்த உத்தரப் பிரதேசத்தை கைப்பற்றி முதல்வராகிச் சாதானை புரிந்தவர் மயாவதி. இவருக்குப் பிடித்தமானது அதிக செலவு செய்து தனக்குத் தானே சிலை அமைப்பது. இதனால் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து தேர்தலில் தோல்வியுற்று முதல்வர் பதவியை இழந்தவர்.  எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத இடத்து இந்த இரண்டு அக்காக்களும் ஒரு அம்மாவும் முக்கியத்துவம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெயலலிதாவின் கட்சி 23இற்கும் 26இற்கும் இடைப்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறலாம். மயாவதியில் திரிணாமுல் காங்கிரசு மேற்கு வங்கத்தில் இதே எண்ணிக்கையான தொகுதிகளில் வெற்றி பெறலாம. மாயாவதி 7 இடங்களில் வெற்றி பெறலாம். ஜெயலலிதா தலைமை அமைச்சராக வருவதைத் தான் ஆதரிப்பதாக மம்தா ஏற்கனவே அறிவித்து விட்டார்.

இந்தியத் தேர்தல்களத்தில் முக்கியமான மாநிலங்கள்..

உத்தரப் பிரதேசம்: இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் முதல் தடவையாக பாரதிய ஜனதாக் கட்சி தனது செல்வாக்ககி கணிசமாக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் சமாஜ்வாடிக் கட்சி இரண்டு இடங்களைப் பெறுவதே கடினம். புதிதாக உருவான ஆம் ஆத்மி கட்சி உத்தரப் பிரதேசத்தில் ஓரிரு இடங்களில் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆந்திரா: தென் இந்தியாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தை காங்கிரசுக் கட்சி தெலுங்கான என்றும் சீமந்திரா என்றும் இரு மாநிலங்களாகப் பிரித்தது.  இரு மாநிலங்களிலும் மொத்தம் 42 தொகுதிகள் உண்டு. இதனால் சீமதிராவில் காங்கிரசு படு தோல்வியைச் சந்திக்கும். தெலுங்கானாவில் மாநிலத்தைப் பிரித்தமைக்காக சில தொகுதிகளில் வெற்றி பெறலாம்.

மேற்கு வங்கம்: 42 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஏற்கனவே சொன்னது போல் மம்தா பனர்ஜீ அமோக வெற்றி பெறுவார். அங்கு பாரதிய ஜனதாக் கட்சிக்கு இடமில்லை எனச் சொல்லலாம்.  நாற்பது தொகுதிகளைக் கொண்ட பிஹாரில் சென்ற தேர்தலில் 13 தொகுதிகளில் மட்டும் பாஜகா வெற்றி பெற்றது, இம்முறை அரைவாசி இடங்களைக் கைப்பற்றலாம்.

பிஹார்: நாற்பது தொகுதிகளைக் கொண்ட பிஹார் மாநிலத்தில் நிதிஸ் குமாரின் ஜனதளம் கட்சி, லாலுபிரசாத் யாதவ்வின் ராஸ்ரிய ஜனதா தளம் கட்சி ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. சில தொகுதிகளில் காங்கிரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு உரிய வேட்பாளர்களை நிறுத்துவதே சிரமமாக  இருக்கின்றது. இதனால் காங்கிரசுக் கட்சி தனது தோழமைக் கட்சியான ராஸ்ரிய ஜனதா தளம் கட்சியிடமிருந்து ஒரு வேட்பாளரைக் தானமாக வாங்கி தேர்தலில் போட்டியிட வைக்கின்றது.

தமிழ்நாடு: 39 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் ஓரிரு தொகுதிகளில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற வாய்ப்புண்டு. காங்கிரசு ஒரு இடத்தில் தன்னும் வெற்றி பெற மாட்டாது. அதிகப்படியான இடங்களில் ஜெயலலிதாவும் அடுத்தபடியாக கருணாநிதியின் திமுகவும் வெற்றி பெறும்.

காங்கிரசின் கோட்டைகளில் ஒன்றான கேரளாவில் இம்முறையும் காங்கிரசுக் கட்சி வெற்றி பெறும். அதேவேளை இன்னும் ஒரு காங்கிரசுக் கோட்டையான ஹரியானாவில் காங்கிரசு தனது செல்வாக்கை இழந்து விட்டது. பஞ்சாப்பில் காங்கிரசுக்கும் பாஜகாவிற்கும் இடையில் கடும் போட்டி நிலவுகின்றது.  2009 -ம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜஸ்த்தான் மாநிலத்தில் அமோக வெற்றி பெற்றது இம்முறை ஒரு சில தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும். 28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் பாஜகா தனது செல்வாக்கை சிறிது உயர்த்தியுள்ளது.காங்கிரசுக் கட்சியின் நிலைப்பாட்டைப் பார்ப்போமானால் காங்கிரசுக் கட்சி இம்முறைத் தேர்தலில் இரு நோக்கங்களை முதன்மையாகக் கொண்டு செயற்படுகின்றது. ஒன்று நூறுக்குக் கூடிய தொகுதிகளிலாவது வெற்றி பெற்று பாஜகாவிற்கு பாராளமன்றத்தில் சவாலாக வருவது. மற்றது ராகுல் காந்தியைத் தோல்வியடையாமல் செய்வது. 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருக்கும் இந்திராகாந்தியின் இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியின் மகனான வருண் காந்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் என்று தேர்தல் கூட்டத்தில் சூளுரைத்தார். இது பாஜகாவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. காங்கிரசில் வெறுப்படைந்திருந்த இஸ்லாமியர்கள் காங்கிரசு தோல்வியடைந்து பாஜகா ஆட்சிக்கு வந்தால் தமக்கு ஆபத்து என்பதை வருண்காந்தியின் பேச்சால் நினைத்தர்கள். காங்கிரசுக் கட்சிதான் வருண் காந்தியை இப்படி ஒரு பேச்சை பேசும்படி தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதே போல் இம்முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது பாரதிய ஜனதாக் கட்சி உறுப்பினரான வருண்கான் வருண் காந்தி காங்கிரசுக் கட்சியின் ராகுல் காந்தி தனது அமேதி தொகுதிக்குப் பல நன்மைகளைச் செய்துள்ளார் என உரையாற்றியுள்ளார். இதை உடன் உணர்ந்த பாஜகா உசாரானது. வருண் காந்தியின் தாயாரான மனேக்கா கந்தி எனப்படும் மேனஹா காந்தி தனது மகன் சொல்வது தவறு எனப்பகிரங்கமாக அறிவித்தார்.

பணவலு மிக்க காங்கிரசுக் கட்சி இறுதி நேரத்தில் இப்படிப் பல உத்திகளைக் கையாளலாம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...