Saturday 8 June 2013

பாஜக குழு தட்சணை பெற இலங்கை போனார்களா?

பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் தன்னுடன் ஐந்து பேர்களை இணைத்துக் கொண்டு  ஜூன் 4முதல்ஐந்து நாள் பயணமாக இலங்கைக்குச் சென்றுளார். 1. சிவசேனைத் தலைவர் சுரேஷ் பிரபு, 2. மூத்த ஊடகவியலாளரான ஸ்வபன் தாஸ் குப்தா, 3. ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி விவேக் கட்ஜு, 4. ஆர்.எஸ்.எஸ்.ஸின் ராம் மாதவ், மனித உரிமை ஆர்வலர் மோனிக் அரோரோ.

சிங்களவர்கள் சீதையை இராவணனிடமிருந்து மீட்கத் தங்களுக்கு உதவியவர்கள் எனக் கருதும் பஜக கும்பல் வானரப்படை என வால்மிகி கூறியது திராவிடர்களே என எழுதிய விவேகானந்தரின் 150பிறந்த நாளை ஒட்டி இலங்கையில்  தபாற்தலை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றதாகச் சொல்லப்படுகிறது. இலங்கையில் இந்துக் கோவில்களில் அடாவடித்தனம் புரியும் அமைச்சர் மேர்வின் சில்வாவையும் பஜகவினர் சந்தித்தனர். இலங்கையில் ஆயிரக் கணக்கான இந்துக் கோவில்கள் அழிக்கபப்ட்டதைப் பற்றி பஜகவினர் கண்டுகொள்வதில்லை.

காவிக்கும்பல் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் வராது என்பதை புது டில்லித் தென்மண்டலப் பார்ப்பனக் கும்பல் சுஸ்மா சுவராஜ்ஜை அனுப்பி ராஜபக்சேக்களுக்கு உறுதி மொழி வழங்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்திய ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு தமது பயண ஏற்பாடுகளைச் செய்ததாகச் செய்திகள் வெளிவந்தன. இப்படி ஒரு குழு வருகின்றது என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரகத்திற்கும் தெரியாமல் இருந்தது. ரவிசங்கர் பிரசாத் தமது பயணம் பாஜகவின் அதிகார பூர்வ பயணம் அல்ல தனிப்பட்ட ஒரு பயணம் என்றார். அத்துடன் தனது பயணம் இலங்கையில் தமிழர்கள் தொடர்பாக பஜகவின் நிலையைத் தெளிவாக்க உதவும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இலங்கை சென்ற பஜக குழு இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்க இந்தியாவிடம் மந்திரக் கோல் இல்லை என்று சொன்னார்கள். "பயங்கரவாதத்தை" ஒழித்தமைக்காக அவர்கள் ராஜபக்சேவிற்கு பாராட்டும் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கருத்து வேறு விதமாக இருந்தது. இலங்கையில் தமிழர்கள் காணிகள் அபகரிக்கப்படுவதை குழுவினர் உறுதி செய்ததாக அவர்கள் தன்னிடம் கூறியதாக சம்பந்தர் தெரிவித்தார். பஜகவினர் தமிழ் மக்களைச் சந்திக்கும் போது இலங்கைப்படையினரும் இந்திய உளவாளிகளும் மக்களோடு மக்களாகக் கலந்து கொண்டனர். இது சில தமிழர்களை ஆத்திரப்படுத்தியது. இலங்கை அரசிடம் விருந்துண்ண வருபவர்களை எங்களைச் சந்திக்க அழைத்து வராதீர்கள் என யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரிடம் அவர்கள் கடிந்து கொண்டனர் என்கின்றன செய்திகள்.

"இந்தியத் தூதுவர் ஒழுங்கு செய்த சந்திப்பு" எனச் சொல்லி தமிழ் மக்களை அழைத்த போதிலும் உண்மையில் இலங்கைப் படைத்துறையினரே இந்த இந்திய பஜக குழுவினரினர் உடனான ஏற்பாடு செய்திருந்தனர்.

பஜகவினரைப் பொறுத்தவரை மூன்று முனையில் இலங்கைப் பிரச்சனையை எதிர் கொள்கின்றனர். முதலாவது புது டில்லி தென்மண்டல பூனூல் கும்பல்களின் சொல்லைக் கேட்டு தமது வெளிநாட்டுக் கொள்கையை வகுக்க வேண்டும், இரண்டாவது தமிழ்நாட்டில் வாக்கு வேட்டை அரசியல் நடத்த வேண்டும், மூன்றாவது இலங்கை ஆட்சியாளர்களிடமிருந்து தட்சணை பெற வேண்டும். பஜக அறுவர் குழுவின் இலங்கைப் பயணம் மூன்றாவது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதா?

Thursday 6 June 2013

படைப்பாளிகளும் படைப்பாற்றல் மேம்படுத்தலும்.

ஒரு விளையாட்டுவீரனுக்கு பயிற்ச்சி எவ்வளவு முக்கியமோ படைப்பாளிக்கும் படைப்புப் பயிற்ச்சி அதே அளவு முக்கியமாகும் . தினசரி தனது படைப்புக்களை அவன் செய்து கொண்டே இருக்க வேண்டும். தன் படைப்பை தானே இரசிக்கும் மனப்பாங்கும் அவனுக்கு வேண்டும். ஜஸ்ரின் மஸ்க் என்னும் நாவலாசிரியர் எந்த சந்தர்ப்பத்திலும் காலையில் மூன்று பக்கங்கள் எழுதாமல் அவர் இருப்பதில்லை. இந்தப் பயிற்ச்சி தனது மனதிற்கு ஒரு திறவு கோலாக அமைகிறது என்கிறார் அவர். படைப்பாளி தன் படைப்பாற்றலை மேம்படுத்தச் செய்ய வேண்டியவை:

1. அமிழ்ந்து போதல்: தனது படைப்பில் படைப்பாளி முற்றாக அமிழ்ந்து போக வேண்டும்.  Michelle Ward என்ற படப்பாற்றல் பயிற்ச்சியாளர் முற்றாக படைப்பில் அமிழ்ந்து போவதைப் போல் சிறந்தது எதுவுமில்லை என்கிறார்.

2.  இசை கேட்டல்: இசை கேட்டல் படைப்பாற்றலை வளர்க்கிறது என்கின்றனர் பல படைப்பாளிகள். இசை கேட்கும் போது படைப்பாற்றல் தூண்டப்படுகிறது என்கின்றனர் அவர்கள்.

3. உகந்த இடத்தைத் தேர்ந்தெடுங்கள்: உங்கள் படைப்பாற்றலை தூண்டி விடக் கூடிய இடத்தைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். இது அவரவரைப் பொறுத்து வேறுபடலாம். சிலருக்கு பூங்காவாகவும், சிலருக்கு நல்ல சூழலுடன் கூடிய அறையாகவும், சிலருக்கு தனிமையான வெளியாகவும் இருக்கலாம்.  பயிற்ச்சியினாலும் அனுபவத்தாலும் இந்த இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

4. காரியத்தில் இறங்குதல்: என்ன எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருப்பதிலும் பார்க்க ஒரு பேனாவையும் தாளையும் எடுத்துக் கொண்டு காரியதில் இறங்கினால் கற்பனை தானாகவே வருகிறது என்கின்றனர் பல எழுத்தாளர்கள்.  தொடங்கினால் தடையின்றித் தொடர்வதே படைப்பாளிகளின் தன்மையாகும்.

5. காத்திருக்கும் வேளைகளைப் பயன்படுத்துதல்
: பேருந்து நிலையத்திலோ தொடரூந்து நிலயத்திலோ காத்திருக்கும் போது படைப்பாற்றலைத் தூண்டி விடுங்கள்.

6. குறிப்பெடுத்தல் முக்கியம்
: படைப்புத் திறன் சில சமயங்களில் எதிர்பாராமல் பொங்கி எழும். அப்போது குறிப்பெடுத்துக் கொள்ளுதல் முக்கியம்.

7. உகந்த நேரத்தைக் கண்டுபிடியுங்கள்
: உங்கள் படைப்பாற்றல் பொங்கி எழும் நேரங்களை அனுபவத்தின் மூலமும் தன்-அவதானிப்பு மூலமும் அறிந்து கொள்ளலாம். அந்த நேரத்தை உங்கள் படைப்பிற்காக ஒதுக்குங்கள்.

8 . ஊக்கமளிக்கக் கூடியவர்களுடன் பழகுங்கள்: உங்கள் படைப்புத்திறனை ஊக்கமளிக்கவர்களைக் கண்டறிந்து அவர்களுடன் பழகுங்கள். சிலர் உங்கள் படைப்புத்திறனை மழுங்கடிக்கக் கூடியவர்களாகவும் இருப்பர். அவர்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

9. உங்கள் உள்ளுணர்வுகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள். உள்ளுணர்வில் இருந்து எழுவதே சிறந்த படைப்பு. உங்கள் உள்ளுணர்வை தூண்டிவிடவும் அதைப் புரிந்து கொள்ளவும் பழகுங்கள்.

நகைச்சுவை: 4Gஇல் எவ்வளவு சுடுவார்கள்

கணிதத்தில் கேள்விகள் கேட்பது நாட்டுக்கு நாடு வேறுபடும்.

அமெரிக்கா: ஒரு குண்டில் 5 தலிபான்களும் 57 அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டால் ஐந்து குண்டில் எத்தனைபேர் கொல்லப்படுவர்?

பிரான்ஸ்: ஒரு வாரத்தில் நான்கு தடவை உறவு கொண்டால் ஒரு ஆண்டில் எத்தனை உறவுகள்?

இத்தாலி: ஒரு வாரத்தில் வரவிலும் பார்க்க 125 யூரோக்கள் அதிகம் செலவழித்தால் ஒரு ஆண்டில் எவ்வளவு துண்டுவிழும்?

இலங்கை: ஒரு மாதத்தில் 67 ஏக்கர் காணி அபகரித்தால் ஒரு ஆண்டில் எத்தனி ஏக்கர் காணி அபகரிக்கலாம்?

இந்தியா: அரசியல்வாதிகள் 2G இல் ஒரு இலட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி சுட்டால் 4G இல் எவ்வளவு சுடுவார்கள்?

xxxxxxx
இத்தாலில் சனியன் பிறந்ததும் சாத்தான் சொன்னது "எனக்குப் போட்டியாக ஒருத்தி வந்துட்டாளய்யா..... வந்துட்டாள்....."

xxxxxxx

எமது முன்னோர்கள் எம்மிலும் பார்க்க அறிவாளிகள். அவர்கள் கூகிள் இல்லாமல் தேர்வுகளில் சித்தியடைந்தனர்.

xxxxxx

Software Engineering Glossary of Product Terminology

NEW: Different colors from previous version.

ALL NEW: Software is not compatible with previous version.

UNMATCHED: Almost as good as the competition.

ADVANCED DESIGN: Upper management doesn't understand it.

NO MAINTENANCE: Impossible to fix.

BREAKTHROUGH: It finally booted on the first try.

DESIGN SIMPLICITY: Developed on a shoe-string budget.

UPGRADED: Did not work the first time.

UPGRADED AND IMPROVED: Did not work the second time.
The Dumpty Dictionary, Version 2.0

Wednesday 5 June 2013

சிரியா: மிஞ்சும் அசாத்தும் கெஞ்சும் கிளர்ச்சிக்காரர்களும்

பத்து நாட்கள் நடந்த தொடர் மோதலின் பின்னர் 04/06/2013 புதன்கிழமை சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவான படையினர் அவருக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிடமிருந்து குவாசியருக்கு அண்மையில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தபா விமான நிலையத்தை மீளக் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் டமஸ்கஸ் நகரின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பிரதேசங்களையும் அவர்கள் மீளக் கைப்பற்றியுள்ளனர்.

குவாசியர் நகரைக் கட்டுப்படுத்துவர்களால் சிரியாவின் மத்திய பகுதியைக் கட்டுப்படுத்த முடியும். சிரியாவின் மத்திய பகுதியைக் கைப்பற்றுபவர்களால் முழு நாட்டையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றார் பிரிகேடியர் ஜெனரல் யஹியா சுலைமான். 

தபா விமான நிலையம் கிளர்ச்சிக்காரர்களுக்கும் அசாத்தின் படைகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது அவர்களின் விநியோகப் பாதையில் முக்கியத்துவமானதாகும். சிரியாவின் வடக்குப் பிராந்தியத்தில் உள்ள  கிளர்ச்சிக்காரர்களிற்கும் தெற்குப் பிராந்தியத்தில் உள்ள கிளர்ச்சிக்காரர்களிற்கும் இடையிலான தொடர்புகளைத் துண்டிக்க தபா விமான நிலையத்தையும் அதை ஒட்டிய பிராந்தியங்களையும் கைப்பற்றியது அசாத்திற்கு உதவும். வேறு பல முனைகளிலும் அசாத் ஆதரவுப் படையினர் கிளர்ச்சிக்காரர்களைப் பின்வாங்க வைத்துள்ளனர். டமாஸ்கஸ் நகரைச் சூழவுள்ள பிராந்தியத்தில் 80 விழுக்காட்டைத் தாம் மீளக் கைப்பற்றியதாக சிரிய அரசு சொல்கிறது.

அரபு வசந்தத்தில் 2011 மார்ச் மாதம் தொடங்கி தொண்ணூறாயிரத்திற்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்டும் பல இலட்சக் கணக்கானவர்களை இடப்பெயர்விற்கு உள்ளாக்கியும் தொடரும் சிரிய உள்நாட்டுப் போரில் 2013 ஏப்ரலில் இருந்து  பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் பல பின்னடைவுகளைச் சந்திக்கின்றனர். கிளர்ச்சிக்காரர்களிடை பெரும் படைக்கலன் தட்டுப்பாடு நிலவுகின்றமை இதற்குக் காரணமாகும். தமக்கு படைக்கலன்கள் கொடுக்கும் படி அவர்கள் அமெரிக்காவைக் கெஞ்சினர்.


சியா-சுனி மோதல்

சியா முசுலிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனக் குழுமத்தைச் சேர்ந்த பிரித்தானியாவில் மருத்துவம் படித்த பஷார் அல் அசாத்தும் அவரது தந்தையும் 1970-ம் ஆண்டிலிருந்து சுனி முசுலிம்களைப் பெரும்பானமையாகக் கொண்ட சிரியாவை ஆண்டு வருகின்றனர். அசாத்தின் ஆட்சி கவிழ்ந்து விடாமல் இருக்க சியா இசுலாமிய நாடான ஈரானும் சியா இசுலாமியப் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவும் பெரிதும் உதவுகின்றன. ஹிஸ்புல்லாப் போராளிகள் சிரிய உள்நாட்டுப் போரில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு விசுவாசமான ஐம்பதினாயிரம் படையினர் இருக்கின்றனர். இவர்களிடம் சிறந்த படைக்கலன்கள் இருக்கின்றன. இரசியா அமைத்துக் கொடுத்த புதிய விமான எதிர்ப்பு முறைமை அசாத்தின் கைவசம் இருக்கிறது. பாரிய வேதியியல் குண்டுகள் அசாத்திடம் இருக்கின்றன. அசாத்திற்கும் ஈரானிற்கும் நெருங்கிய நட்புண்டு. அசாத் பதவியில் இருந்து விலக்கப்பட்டு சிரியாவில் சுனி முஸ்லிம்கள் ஆட்சியைக் கைப்பற்றினால் அது மேற்காசிய மற்றும் வட ஆபிரிக்கப் பிராந்தியத்தில் தந்திரோபாய சமநிலை ஈரானுக்குப் பெரும் பாதகமாக அமையும் என ஈரான் உறுதியாக நம்புகிறது. ஈரானுடன் நட்புறவைப் பேணும் சீனாவும் ஈரானின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறது. இரசிய கடற்படைத் தளம் ஒன்று சிரியாவில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின்  பாதுகாப்புச் சபையில் அசாத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட இரண்டு தீர்மானங்களை சீனாவும் இரசியாவும் இணைந்து இரத்துச் செய்தன. மூன்றாவது தீர்மானம் இரசியாவால் இரத்துச் செய்யப்பட்டது. சிரியாவானது ஈராக், துருக்கி, லெபனான். இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய சாதகமற்ற நாடுகளிடை இருக்கும் ஒரு நாடு. அசாத் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவதை சவுதி அரேபியாவும் காட்டாரும் பெரிதும் விரும்புகின்றன.

ஹிஸ்புல்லாவை களத்தில் இறக்கிய ஈரான்
சிரியக் கிளர்ச்சியின் ஆரம்பத்தில் ஹிஸ்புல்லாப் போராளிகள் நடுநிலை வகித்தனர். ஆனால் அசாத்தின் ஆட்சி கவிழ்ந்தால் தான் மத்திய கிழக்கில் தனிமைப்படுத்தப்பட்டு விடுவேன் என உணர்ந்த ஈரான் ஹிஸ்புல்லாவை அசாத்திற்கு ஆதரவாகக் களமிறக்கியது. ஹிஸ்புல்லா இயக்கத்தினர் நன்கு பயிற்றப்பட்ட போராளிகள். லெபனானில் செயற்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் சிலர் தமது இயக்கத்தின் எதிர்காலம் சிரியாவில் பணயம் வைக்கப்பட்டுள்ளது எனக் கருதுகின்றனர். சில ஹிஸ்புல்லா இயக்கத்தினர் சுனி இசுலாமியர் யூதர்களிலும் மோசமான எதிரிகள் அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் எனச் சொல்கின்றனர். வேறுபல நாடுகளில் இருந்தும் சியா முசுலிம் போராளிகள் பலர் அசாத்தின் படைகளுடன் இணைந்துள்ளனர். சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சில தாக்குதல்களை நடாத்தியுள்ளனர். ஹிஸ்புல்லா இயக்கத்தினர் சிரியப் போரில் இருந்து வெளியேறாவிடில் மேலும் தாக்குதல்கள் நடக்கும் எனவு எச்சரித்துள்ளனர். அண்மைக்காலங்களாக ஹிஸ்புல்லா அதிக அளவிலான தனது போராளிகளை சிரியாவின் பல முனைகளில் களமிறக்கியுள்ளது. சுதந்திர சிரியப்படையின் தளபதி சலீம் இத்திரிஸ் லெபனானில் ஹிஸ்புல்லாமீது போர் தொடுக்கத் தயார் என்கிறார். மேலும் அவர் தமது படைகள் பின்னடைவைச் சந்திக்கவில்லை என்கிறார்.

பல குழுக்களாகப் பிரிந்து நிற்கும் கிளர்ச்சிக்காரர்கள்
சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் மத்தியில் பல வேறுபட்ட இயக்கங்கள் இருக்கின்றன. அதில் சுதந்திர சிரியா படையினர் ஐக்கிய அமெரிக்க ஆதரவு இயக்கமாகக் கருதப் படுகிறது. அமெரிக்காவும் வேறும் பல மேற்கு நாடுகளும் ஜபத் அல் நஸ்ரா உட்பட சில சிரிய இயக்கங்களை பயங்கரவாத அமைப்புக்களாக அறிவித்துள்ளன. சிரிய விடுதலைப் படை, சுதந்திர சிரியப்படை, சிரியத் தேசிய சபை, தேசிய ஒருங்கிணைப்புக் குழு, சிரியத் தேசப் பற்றாளர் குழு எனப் பல குழுக்களாக சிரியக் கிளர்ச்சியாளர்கள் பிரிந்து நிற்கின்றனர். இவற்றுடன் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு போன்ற மதவாத அரசியல் கட்சிகளும் சிரியாவில் செயற்படுகின்றன. அசாத்தின் படைகளை பல முனைகளில் பின்வாங்கச் செய்த கிளர்ச்சிக்காரர்கள் தலைநகர் டமஸ்கஸை நெருங்கும் வேளையில் தமக்குள் மோதத் தொடங்கினர்.  இது அவர்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இரசியாவும் பல புதிய தரப்  படைக்கலன்களை சிரியாவிற்கு வழங்கிவருகிறது. S-300 எனப்படும் விமான மற்றும் சீர்வேக ஏவுகணைகளை எதிர்த்தழிக்கும் முறைமையை சிரியாவிற்கு வழங்க இரசியா ஒத்துக் கொண்டது இஸ்ரேலை கடும் விசனத்திற்கு உள்ளாக்கியது. S-300  பாதுகாப்பு முறைமை சிரியா வந்தால் அது செயற்பட முன்னர் அதை இஸ்ரேல் தனது விமானத்தாக்குதல்கள் மூலம் தாக்கி அழிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டு தடவை சிரியாமீது இஸ்ரேல் விமானத் தாக்குதலை நடாத்தியுள்ளது. சிரியாவ்

ஒபாமாவின் செங்கோடும் சரின் வாயுக் குண்டும்
சிரியாவில் சரின் குண்டுகள் பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை அங்கிருந்து கடத்தி வந்ததாக பிரான்ஸும் பிரித்தானியாவும் தெரிவிக்கின்றன. அசாத்தின் படைகள் வேதியியல் படைக்கலன்களைப் பாவித்ததாக 2013 ஏப்ரல் மாதத்தில் இருந்து செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அசாத் வேதியியல் படைக்கலன்கள் பாவித்தால் அது செங்கோட்டைத் தாண்டியதாக அமையும் என்று பலதடவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரித்திருந்தார். ஒரு துளி சரின் ஒரு ஆளைக் கொல்லக் கூடியது. ஆனால் அமெரிக்கா இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. சிரியக் கிளர்ச்சிக்காரர்களிடை அல் கெய்தா ஆதரவு ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினரின் இருப்பது அமெரிக்காவின் தயக்கத்திற்குக் காரணம் எனச் சொல்லபடுகிறது. தனது தலையீடு இசுலாமியத் தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் என அமெரிக்கா கருதுகிறது. அமெரிக்கா சிரியாவில் தலையிடாமல் இருப்பது பல தரப்பில் இருந்தும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.  கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உறுப்பு நாடுகளுக்கு விதித்த தடையை நீக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரித்தானியாவையும் பிரான்ஸ்சையும் தமக்கு படைக்கலன்களை வழங்கும் படி சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் கெஞ்சத் தொடங்கியுள்ளனர். சிரியப் பிரச்சனையைப் பேச்சு வார்தை மூலம் தீர்க்க ஜெனிவாவில் ஒரு கூட்டம் கூட்டப்படவுள்ளது. அந்தப் பேச்சுவார்த்தை முடியும் வரை பிரித்தானியாவும் பிரான்ஸும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்களை கொடுப்பதை ஒத்தி வைத்துள்ளன. அதற்குள் அசாத்தின் படைகள் கிளர்ச்சிக்காரர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திவிடும்.

Tuesday 4 June 2013

குழம்பிய ஈராக் குட்டையில் மீன் பிடிக்கும் சீனா

அமெரிக்கா தலைமையில் நேட்டோப் படைகள் ஈராக்கில் பேரழிவு விளைவிக்கும் படைக்கலன்களை சதாம் ஹுசேய்ன் வைத்திருக்கிறார் அதை அழிக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டு  அந்த நாட்டை ஆக்கிரமித்தன. ஆனால் அவர்கள் பேழிவு விளைவிக்கும் படைக்கலன்கள் எதையும் கண்டு பிடிக்கவில்லை.

சியா முசுலீம்களைக் கொண்ட ஈரானை எதிர்க்கும் ஆட்சியாளராக சதாம் ஹுசேய்ன் இருந்தார். இப்போதைய ஈராக்கிய ஆட்சியாளர்கள் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியை கிளர்ச்சிக்காரர்களிடமிருந்து காப்பாற்ற ஈரான் ஈராக்கினூடாக படைக்கலன்களை அனுப்புகிறது. சதாமின் ஆட்சியின் போது ஈராக்கில் சீரான மின் விநியோகம் இருந்தது, தூய்மையான நீர் மக்களுக்குக் கிடைத்தது, அமெரிக்க வர்த்தகர்கள் உள்ளூர் வர்த்தகர்களை பாதிக்கவில்லை, நகரத் தெருக்களில் அடிக்கடி குண்டுகள் வெடிக்கவில்லை.

சதாமின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஈராக்கின் எண்ணெய் உற்பத்தி அதிகரித்தது. ஒபெக் நாடுகளில் சவுதி அரேபியாவிற்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக ஈராக் மாறியுள்ளது. தற்போது ஈராக்கின் எண்ணெய் உற்பத்தியில் அரைப்பங்கு சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஈராக்கிய எண்ணெய் வயல் ஒன்றை அமெரிக்க நிறுவனமான Exxon Mobil Corporation இடமிருந்து சீனா வாங்கவிருக்கிறது. சதாம் ஆட்சியில் இருக்கும் போது ஈராக்கிய எண்ணெய் உற்பத்தியும் ஏற்றுமதியும் பொருளாதாரர்த் தடைகளால் பாதிப்படைந்திருந்தன. தற்போது சீனா ஈராக்கை சுரண்டும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. தனது உள்ளூர் மக்களுக்கு வேலை கொடுத்துக் கொண்டு இருக்காவிடில் அது  ஆட்சியாளர்களுக்கு எதிரான பெரும் கிளர்ச்சியில் முடியும் எனக் கருதும் சீனா அபிவிருத்திக்கான உதவி என்ற போர்வையிலும் முதலீடு என்ற போர்வையிலும் தனது மக்களை பல நாடுகளுக்கு அனுப்பி அங்கு பணிபுரிய வைக்கிறது.  ஈராக்கில் ஆண்டுதோறும் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் முதலிட்டு அங்கு நூற்றுக்கணக்கான சீனர்களை வேலைக்கு அமர்த்திவருகிறது.

சில அமெரிக்க பாதுகாப்புத் துறை  நிபுணர்கள் ஈராக்கில் தாம் சீனாவிடம் தோல்வியடைந்து விட்டதாகக் க்ருதுகின்றனர். ஈராக்கை ஒட்டிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு நிலை கொண்டு "அமைதியைப் பேண" சீனாவிற்கு பாதுகாப்பாக எண்ணெய் வழங்கல்கள் நடக்கின்றன என்கின்றர் அவர்கள். ஈராக்கில் சீனா தனது தொழிலாளர்கள் வசதியாகப் போய்வர சொந்த விமான நிலையத்தையும் உல்லாச விடுதிகளையும் அமைத்துள்ளது. ஆனால் அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள் சீனா ஈராக்கில் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பதால் சில நன்மைகளும் உண்டு என்கின்றனர். ஈராக்கிய எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பும் சீனக் கொள்வனவும் உலகச் சந்தையில் எரிபொருள் விலை ஏறாமல் இருக்க உதவும் என அவர்கள் கருதுகின்றனர். ஈராக்கிய அரசுக்கு அதிக பணம் கிடைப்பதும் பொருளாதாரம் மேம்படுவதும் ஈராக்கின் பிரதேசவாதம் பிரிவினைவாதம் போன்றவற்றால் உள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வலுவைக் கொடுக்கின்றன.  மேலும் சீன அரச வர்த்தக நிறுவனங்கள் உள்ளூர் அரசியலில்தலையிடாமலும் இருக்கின்ற்ன.

ஈராக்கிய ஆட்சியாளர்களுக்கு சீனர்களின் எளிமையும் அவர்கள் பழகும் விதமும் பிடித்திருக்கிறது. மேற்கு நாடுகளின் முதலீட்டாளர்களுடன் ஒப்பிடுகையில் சீன முதலீடுகள் துரிதமாகவும் ஆபத்துக்களைப் பற்றிப் பெரிதும் அலட்டிக் கொள்ளாமலும் செய்யப்படுவதாக ஈராக்கிய ஆட்சியாளர்கள் சொல்கின்றனர். சீனாவிற்கும் மேற்கு நாடுகளிற்கும் இடையான போட்டி மோசமடையாம ஈராகிய ஆட்சியாளர்கள் பார்த்துக் கொள்ளாவிடில் மீண்டும் ஈராக் எரியலாம்.


Monday 3 June 2013

நகைச்சுவை: இலக்குத் தப்பிய இலங்கைப்படை வீரன்


 இலங்கைப் படை வீரனின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை முயற்ச்சி தோல்வியில் முடிவடைந்தது.
இலக்குத் தவறியதால்.



என் இதயத்தைத் தேடினேன்
அலைபாயும் என் நினைவுகள்
முடியும் இடத்தில் அது இருந்தது.



எந்தப் பாவத்தையும்
மன்னிக்கும் தேவாலயம்
அன்னையின் இதயம்

தண்ணியடித்த வானவில்

வென்றவன் மகிழ்ச்சியடைகிறான்
தோற்றவன் கற்றுக் கொள்கிறான்
விழுந்து சிதறியவர்களே விழுந்தவர்களாவர்
ஒன்றாக விழுந்தவர் மீண்டும் நன்றாக எழுவர்.
விழாமல் விதைகள் முளைப்பதில்லை
பொறுத்திருக்காமல் மரங்கள் வளர்வதில்லை
உனது துணிவு எதிரிக்கு என்றும் தலையிடி
நீ ஒன்றாகத் துணிந்தெழுந்தால்
எதிரியின் வீழ்ச்சி நிச்சயம்














கணவனுக்கான தண்டனைக் கோவை





Sunday 2 June 2013

பெண்களின் ஆசை மிருகத்தனமானது என்கிறார் ஆய்வாளர்

பெண்களின் ஆசைகள் பற்றிய தகவல்கள் பொய்யானவை, அடக்கப்பட்டவை என்கிறார் அது பற்றி ஆய்வு செய்த Daniel Bergner என்பவர் தனது  “What Do Women Want?: Adventures in the Science of Female Desire” என்னும் தலைப்பிட்ட தனது நூலில். பாலியல் தொடர்பான ஆராய்ச்சியாளர்கள் பலருடன் நேர்முக உரையாடல் செய்து Daniel Bergner தனது நூலை எழுதியுள்ளார்.

பெண்களின் பாலியல் ஆசைகள் அறிவார்ந்தது என்றும் நாகரீகமானது என்றும், சமநிலைப்படுத்தப் பட்டது என்றும் நாம் உண்மைக்கு மாறாக நம்ப வைக்கப்பட்டுள்ளோம். ஆனால் உண்மையில் பெண்களின் ஆசைகள் தத்துவமற்றதும் மிருகத்தனமானதுமாகும். பெண்களின் ஆசைகளை வெளிப்படுத்துவதற்கான கலாச்சாரத் தடைகள் பலமாக இருப்பதால் அவை அடக்கப்பட்டுள்ளன.

 A quick example, if we can get a little graphic for a sec, about understanding the size and reach of the clitoris. We’ve been doing dissections of bodies for centuries, pretty effectively, but it wasn’t until very recently that there was any acknowledgment of extensions right underneath the surface of the skin — very rich in nerves, very primed for pleasure, reachable there through the vaginal walls — that rival the size of the penis; probably are greater than the size of the penis. One of the scientists, who was really influential in calling attention to the size, put it this way: the reason we’ve ignored this is because we’ve managed to convince ourselves that one gender is all about reproduction and the other is all about sex. That is, women are all about reproduction and men are all about sex. Again, a complete distortion.

பெண்களின் உறுப்புக்களுக்க்கு பாயும் இரத்தத்தின் அளவுகளை வைத்துப் பார்க்கும் போது அவர்களின் ஆசைகள் தொடர்பாக நாம் அறிந்த தகவல்கள் பிழையானவை எனத் தெரிகிறது என்கிறார் ஆய்வாளர்கள்.

ஒருதாரம் ஒரு கலாச்சாரச் சிறை
ஒருதாரம் என்பது ஆண்களையோ அல்லது பெண்களையோ பொறுத்தவரை ஒரு கலாச்சாரச் சிறை என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்தச் சிறைக்கு பெண்கள் கட்டுப்படுகிறார்கள் என்பது பொய் என்றும் கூறுகிறார்கள் அவர்கள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...