Friday 29 March 2013

நகைச்சுவை: பாவத்தின் கூலியாக ராகுல் காந்தி

பனிப்பாறையைப் பார்த்து டைட்டானிக் சொன்னது
நீ செய்த பாவத்தின் கூலி உலக வெப்ப மயமாதல்

இந்தியாவைப் பார்த்து பாக்கிஸ்த்தான் சொன்னது
நீ காஷ்மீரில் செய்யும் பாவத்தின் கூலி ராகுல் காந்தி

அமெரிக்க அரசைப் பார்த்து பூர்விக அமெரிக்கர் சொன்னது
நீ எனக்கு செய்த பாவத்தின் கூலி கள்ளக் குடியேற்றவாசிகளின் பிரச்சனை.


ராகுல் காந்தி ஒரு நாள் பதினைந்து இலட்சம் ரூபா காசோலை(cheque) உடன் வங்கிக்குச் சென்று அதைக் காசாக்கித் தரும்படி கேட்டார். அதற்கு வங்கிக்காசாளர் உங்கள் அடையாள அட்டையைக் காட்டுங்கள் என்றார். ராகுல் கோபத்துடன் நான் வருங்கால இந்தியப் பிரதமர் என்னிடமே அடையாள அட்டை கேட்கிறாயா என்றார் கடும் கோபத்துடன். அந்தக் கசாளர் தற்போது நாட்டில் நடக்கும் அடையாளத் திருட்டு, காசோலை மோசடி போன்றவற்றை விளக்கி தங்கள் வங்கி விதி முறைகள் அப்படி இறுக்கமானதாக்கப்பட்டுள்ளது என்றார். ராகுல் காந்தி அடம் பிடிக்க காசாளர் தன் மேலாளரை அழைத்தார். அந்த மேலாளர் வங்கி நடைமுறைகளை ராகுலுக்கு விளக்கியதுடன் ஒரு முறை அமிதாப் பச்சன் இப்படித்தான் அடையாள் அட்டையின்றி வந்தார் அவர் தனது நடிப்புத் திறமையை எமக்கு தனது ஷோலே படத்தில் ஒரு காட்சியை நடித்துக் காட்டினார். அதனால் அவர்தான் அமிதாப் என நாம் உறுதி செய்து கொண்டோம். ஒருமுறை சச்சின் தெண்டுல்கர் அடையாள அட்டையின்றி வந்தார் அவர் தனது துடுப்பாட்ட மட்டையை(cricket bat) எடுத்து இரண்டுதடவை விசுக்கிக் காட்டினதால் அவர்தான் சச்சின் என அறிந்து கொண்டோம். அப்படி நீங்கள் உங்களின் திறமை ஏதாவதைக்காட்டி நீங்கள்தான் ராகுல் காந்தி என நிரூபியுங்கள் என்றார். அதற்கு ராகுல் காந்தி திருதிருவென் விழி பிதுங்க முழித்து தலையைச் சொறி சொறி என் சொறிந்து அப்படி ஒன்றும் இல்லையே நான் எனது மம்மிக்கு தொலபேசி அழைப்பு விடுக்கிறேன் அவங்க சொல்லுவாங்க என்று சொல்லிக் கொண்டு தன் கைப்பேசியைத் தேடினார். அப்போது வங்கி மேலாளர் அவரை நிறுத்தி மன்னிக்கவும் சார் இப்போது நீங்கள்தான் ராகுல் காந்தி என உறுதி செய்யப்பட்டுவிட்டது. உங்கள் காசோலைக்கான பணத்தைத் தருகிறோம் என்றார்.

ராகுல் காந்தி ஏன் திருமணம் செய்யவில்லை?
தன் தந்தை விட்ட பிழையைத் தானும் செய்யக்கூடாது என்ற நல்லெண்ணத்தால்.

Thursday 28 March 2013

நகைச்சுவைக் கதை: சிங்களவர்களின் விருந்தோம்பலும் இந்தியாவும்.

டேவிட் ஒரு அமெரிக்க உல்லாசப் பிராயாணி. தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதில் தங்யிருந்தவர். தனது சாளரத்தின் வழியாக வெளியில் பார்த்தவருக்கு கடலினதும அதன் கரையினதும்  அழகைப்பார்த்து வியந்து போனார் வெயில் சாய்ந்தபின்னர் அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்தார்.

மாலையானதும் டேவிட் கொழும்பின் கடற்கரையின் அழகை இரசித்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு உல்லாசமாக இருந்த காதலர்களையும் இரசித்தபடி நடந்து கொண்டிருந்தவர் தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதிக்கு எப்படித் திரும்பிப் போவது என்று  மறந்துவிட்டார். அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தவருக்கு ஒண்ணுக் கடிக்க வேண்டும் போல் இருந்தது. அதற்குரிய இடத்தையும் காணவில்லை. அங்கும் இங்கும் அதற்குரிய இடத்தைத் தேடியவருக்கு அப்படி ஒரு இடம் கிடைக்கவில்லை. ஒரு சந்துக்குள் போய் ஒண்ணுக்கு அடிக்கத் தயாராகிக் கொண்டிருந்த வேளை அவர் பின்னால் காக்கிச் சட்டையுடன் ஒரு சிங்களக் காவற்துறைச் சேர்ந்த ஒருவன் வந்து இங்கு இதெல்லாம் செய்யக் கூடாது என்று சிங்களத்தில் கூறினான். அதற்கு டேவிட் சைகை மூலம் தனக்கு ரெம்ப அவசரம் என்று சொன்னார். அதற்கு அந்த சிங்களவன் தன் பின்னே வரும்படி ஆங்கிலத்தில் சொன்னான். டேவிட்டும் பின் தொடர்ந்தார். ஏன் நீ என்னுடன் ஆங்கிலத்தில் முதலில் கதைக்கவில்லை என்றார் டேவிட். அதற்கு சிங்களவன் இது எங்கள் நாடு. எங்கள் ஆட்சி. எங்கள் ஆட்சி மொழி சிங்களம் என்றான் ஆங்கிலத்தில். அப்படிச் சொன்னபடியே ஒரு வெள்ளை நிறக் கட்டிடத்திற்கு டேவிட்டைக் கொண்டு போய் விட்டு இங்கு நீ எங்கு வேண்டுமானாலும் ஒண்ணுக்கு அடிக்கலாம் என்றான். டேவிட்டும் ஒரு நீண்ட அடி அடித்து ஒரு நீண்ட பெரு மூச்சு விட்டுட்டு:
This is your hospitality - இது உங்கள் விருந்தோம்பல் என்றார். அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத அந்தச் சிங்களவன்
No, it is not hospital.... it is Indian embassy இது மருத்துவ மனை இல்லை இது இந்தியத் தூதுவரகம் என்றான்.

Wednesday 27 March 2013

ஐபிஎல் கிரிக்கெட்டும் இந்திய பேரினவாதத்தின் அசிங்க முகமும்

ஐபிஎல் துடுப்பாட்டம் தொடர்பாக கடுமையான விவாதங்கள் வட இந்தியாவில் எழுந்துள்ளன. ரைம்ஸ் ஒஃப் இந்தியா பத்திரிகையில் ஜெயலலிதாவின் முடிவு பற்றிய செய்தி வெளிவிடப்பட்டு அதற்கு காரசாரமான பின்னூட்டங்கள் இடப்பட்டன. ஒரு இசுலாமியர் "இப்போது 80 மில்லியன் தமிழர்களுக்குத் தெரிந்திருக்கும் ஏன் ஜின்னா எல்லாப் பார்ப்பனர்களையும் துரத்திவிட்டு பாக்கிஸ்த்தானை தனிநாடாக பிரித்தார் என்று" எனப் பின்னூட்டமிட்டிருந்தார்.

தனது நாற்பதிலும் வெற்றி பெறும் இலட்சியத்தைக் கருத்தில் கொண்டு ஜெயலலிதா மீண்டும் ஒரு துணிச்சலான முடிவை எடுத்து இலங்கையைச் சேர்ந்த வீரர்கள், நடுவர்கள், அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் உறுதி அளித்தால் மட்டுமே, ஐ.பி.எல். போட்டிகளை தமிழ் நாட்டில் நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று இந்தியப் பிரதம மந்திரிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

NDTV யில் ஜெயலலிதாவின் அதிரடி முடிவு தொடர்பாகக் காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதை NDTVயின் சிறிநிவாசன் ஜெயின் நெறிப்படுத்த காங்கிரசுக் கட்சியின் மாநிலங்களவை(ராஜ்ய சபை) உறுப்பினர் அபிஷேக் சிங்வி, துடுப்பாட்ட வீரர் முத்தையா முரளீதரன், இந்து ராம், அவுட்லுக் பத்திரிகை ஆசிரியர் கிருஷ்ணா பிரசாத், நடிகை குஷ்பு, புது டில்லிக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவாசம், முன்னாள் இந்தியக் துடுப்பாட்ட வீரர் அதுல் வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை, குஷ்பு மட்டும் ஜெயலலிதாவின் செயலை ஆதரிப்பவராகக் காணப்பட்டார். அவரைத் தவிர மற்ற எல்லோரும் ஜெயலலிதாவின் செயலை எதிர்ப்பவர்களாக இருந்த போதிலும் நிகழ்ச்சியை நெறிப்படுத்திய NDTV யின் சிறிநிவாசன ஜெயின் தொடக்கத்தில் இருந்து முடியும் வரையும் ஜெயலலிதாவின் செயலை கடுமையாக எதிர்ப்பவராகவே இருந்தார். அவரது எதிர்ப்பு மற்றவர்களின் எதிர்ப்பிலும் பார்க்க பல மடங்கு கடுமையாக இருந்தது. அவர் தமிழ் மாணவர்களின் கிளர்ச்சி தொடர்பாகக் கதைக்காமல் முடி மறைப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.  ஆனால் தமிழ்நாட்டில் சட்டமும் ஒழுங்கும் முழுமையாக சரிந்து விழுந்துவிட்டது (total collapse of law and order) என்பதை அவர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.

பொய்களை அவிழ்த்து விட்ட முரளி
சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இலங்கையில் போர் முடிந்த பின்னர் மக்கள் அமைதியாக வாழ்கின்றனர் என்றார். தனக்கு ஒரு தமிழனாக ஒரு போதும் பிரச்சனை இருந்திருக்கவில்லை என்றார். அவரது தகப்பனது பிஸ்கட் தொழிற்சாலை 1977ம் ஆண்டு சிங்களக் காடையர்களால் அடித்து நொறுக்கப்பட்டு எரியூட்டப்பட்டதை முரளி மறந்து விட்டாரா? ஆரம்பக் காலத்தில் அவர் இலங்கை அணியில் இடம் பிடிக்க பட்ட சிரமத்தையும் முரளி மறந்து விட்டார். அர்ஜுண ரணதுங்க முரளியைப் பிடிக்காத ஒருவராக இருந்ததையும் பின்னர் முரளியின் அபரிமித திறமையைக் கண்டு அவரை இலங்கை அணியில் இணைத்துக் கொண்டார்.

குஷ்புவை ரவுண்டு கட்டித் தாக்கினார்கள்
பாவம் குஷ்பு. அவர் மட்டும் தனிமையாக வாதாட வேண்டிய நிலைமை. அவரது துணிவும் சிறந்த உச்சரிப்புடன் கூடிய நல்ல ஆங்கிலப் பேச்சு பாராட்டப்படவேண்டியதே. ஹதராபாத் சன்ரைஸேர்ஸ் கலாநிதி மாறனுடையது என்றும் அந்தஅணியின் தலைவர் சிங்களவரான குமார் சங்ககார என்றும் அணியின் இன்னொரு வீரர் சிங்களவர் என்றும் நிகழ்ச்சியை நெறிப்படுத்திய சிறிநிவாசன் ஜெய்ன் கேட்ட போது குஷ்பு ஒருவாறு சமாளித்து விட்டார். குஷ்புவும் வேண்டுமென்றால் ஐபிஎல் ஆட்டத்தை சென்னையில் நடாத்துவதை நிறுத்துங்கள் என்றார். இதனால் கிரிக்கெட் ரசிகர்களின் கோபத்தை ஜெயலலிதாவிற்கு எதிராகத் திருப்புவது குஷ்புவின் தந்திரமாக இருக்கலாம்.

காங்கிரசுக்காரரும் சிங்களவரும் முரண்பட்டனர்.
புது டில்லிக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவாசம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பிழையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதென்றும் அவர்கள் பொய்யான படங்களை வைத்துக் கொண்டு போராடுகிறார்கள் என்றும் சொன்னார். விடுதலைப் புலிகளின் அட்டூழியங்களை தமிழ்நாட்டு மாணவர்கள் சிங்களப்படையினரின் அட்டூழியங்களாகக் காட்டுகிறார்கள் என்றார். அவரைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த காங்க்ரசு மாநிலங்களவை உறுப்பினர் அபிஷேக் சிங்கவி இலங்கை சும்மா படங்கள் போலியானவை என்று சொல்லிக் கொண்டு திரிவதில் பயனில்லை. படங்கள் போலியானவை என்பதை இலங்கை நிரூபிக்க வேண்டும் என்றார். அத்துடன் சுதந்திரமான விசாரணை வைத்தால் எல்லாம் வெளிவரும் என்றார். (போர்க்குற்றத்தில் காங்கிரசு ஆட்சியின் பங்கும் வெளிவரும் ஐயா.)

விளையாட்டில் அரசியல் எப்போதும் உண்டு
நிகழ்ச்சியை நெறிப்படுத்திய சிறிநிவாசன் ஜெய்ன் அரசியல்வாதிகள் கிரிக்கெட்டை கால்பந்தாடுகிறார்கள் என்பதையும் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அத்துல் வாசன் சோவியத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா பங்குபற்றாமையையும் இரு ஒலிம்பிக் போட்டிகளில் சோவியத் ஒன்றியம் பங்கு பெறாமல் விட்டதையும் சுட்டிக்காட்டினார். அத்துடன் தமிழர்களுக்கு என்று பிரச்சனையை இருந்தால் இந்தியா அதனைக் கவனத்தில் எடுத்து அதை ஐக்கிய நாடுகள் சபையில் எடுத்துரைக்க வேண்டும் என்றார். அவர் கதைதது நியாயமாக இருந்தாலும் தமிழர்களின் பிரச்சனைக்குக் காரணமே இந்தியாதான் என்பதை அவர் அறியாமல் இருப்பது கவலையளிக்கிறது. சோவியத் அமெரிக்க முரண்பாடுகளை அறிந்து வைத்திருப்பவர் இந்தியா இலங்கையில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அபபாவிகள் கொல்லப்பட்டதை அறியாமல் இருக்கிறார்.

இந்தியப் பேரினவாதத்தின் அசிங்க முகம்
கருணாநிதியின் திமுக ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறியதில் இருந்து வட இந்தியர்களின் பேரினவாதக் கொள்கையின் அசிங்க முகம் பத்திரிகைகளில் கட்டுரை எழுதுபவர்கள், தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபற்றுபவர்கள், பின்னூட்டம் கொடுப்பவர்கள் மூலமாகத் தெரிகிறது. மாணவர் போராட்டத்திற்கு அவர்கள் செவி கொடுப்பார்கள் மாதிரித் தெரியவில்லை.  எல்லோரும் இலங்கை நட்பு நாடு என்றும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மாநில மக்களின் உணார்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றும் வாதாடுகிறார்கள். இவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படவில்லை. இவர்கள் ஏதோ இலங்கை தென் இந்தியா போல் பேசுகிறார்கள். இலங்கை தென் இந்தியா என்றால் தமிழ்நாடு தமிழர் நாடு ஆகலாம்.

Tuesday 26 March 2013

தமிழ் மாணவர்களின் எழுச்சியும் இந்திய வெளியுறவுக் கொள்கையும்

பிரித்தானியா, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இலங்கை தொடர்பாக தமது வெளியுறவுக் கொள்கைகளில் அடிப்படை மாற்றங்களைச் செய்யாவிடினும் தமது அணுகு முறையை பெரிதும் மாற்றியுள்ளன. இந்த நாடுகளில் சரியான பரப்புரைகளை மேற்கொண்டு அவற்றின் இலங்கை தொடர்பான கொள்கையில் அடிப்படை மாற்றங்களை  செய்ய வாய்ப்புக்கள் நிறைய உண்டு. ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு மாற்றம் ஏற்படுவது சாத்தியமா?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழகத்தின் 19வது கூட்டத் தொடரிலும் 22வது கூட்டத் தொடரிலும் அமெரிக்கா இலங்கை தொடர்பாகக் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானங்களிற்கு இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது அதன் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் அல்ல. அது ஒரு தற்காலிக இராசதந்திர நழுவியக்கம் (diplomatic maneuver) மட்டுமே. 

தமிழ்நாட்டில் மாணவர்கள் ஈழ மக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்காக கொதித்து எழுந்ததைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் காங்கிரசுக் கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பின்னர் இந்திய தேசிய ஊடகங்களில் இந்தியாவின் தேசியக் கொள்கை பற்றிய விவாதங்கள் பல நடந்தன. இவற்றில் பல அரசியல்வாதிகள், முன்னாள் இராசதந்திரிகள், முன்னாள் அமைச்சர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலதரப்பட்டனரும் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாடு தவிர்ந்த இந்தியாவின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டை அறிந்து கொள்ள இந்த விவாதங்கள் உதவின. இந்த விவாதங்களில் எல்லோரும் திமுக இதுவரை காங்கிரசு அரசுடன் ஒட்டிக் கொண்டு இருந்துவிட்டு இப்போது விலகியதை கடுமையாக விமர்சித்தனர். இந்த விவாதங்களில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை நாம அலசிப்பார்க்கலாம்.

1. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது தேசியநலனைக் கருத்தில் கொள்ள வேண்டும் ஒரு மாநில மக்களின் உணர்விற்காக அதை மாற்ற முடியாது.

இந்தியா என்பது ஒரு அரசுகளின் ஒன்றியம். பல மாநிலங்களின் கூட்டமைப்பு என்ற வகையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எல்லா மாநிலங்களின் விருப்பு வெறுப்புக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாவிடின் இந்தியா என்பது ஒரு பேரினவாதிகளின் அரசு மட்டுமே எனப் பொருள் படும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் பாதிக்கப் பட்ட மாநிலம் தனக்கு என்று ஒரு வெளியுறவுக் கொள்கையை ஏற்படுத்துவதற்காக பிரிவினையை கையில் எடுக்கலாம்.

2. வெளியுறவுக் கொள்கை நிபுணர்களால் தீர்மானிக்கப்படவேண்டும்.
இந்தியாவைச் சூழவுள்ள நாடுகள் எதுவும் இந்தியாவிற்கு சார்பாக இல்லை. இந்தியாவின் ஒரே ஒரு செய்மதி நாடான பூட்டானும் இந்தியாவின் பிடியில் இருந்து விலகி விடுமா என்ற நிலை உருவாகிவிட்டது. ராஜீவ் காந்திக்குப் பின்னர் இலங்கை, பங்களாதேசம், மாலை தீவு, நேப்பாளம் ஆகிய நாடுகள் இந்தியாவின் பிடியில் இருந்து வெகுதூரம் விலகிவிட்டன. இவையாவும் இந்த நிபுணர்களின் தவறுகள். இலங்கையில் 1983-ம் ஆண்டு இனக்கலவரம் நடந்து இலங்கையில் படைத்துறை கட்டுக்கடங்காமல் போன போது அப்போதைய இலங்கை அதிபர் ஜே ஆர் ஜயவர்த்தன பிரித்தானியா, சீனா, பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளை தனக்கு உதவியாகப் படையினரை அனுப்பும் படி வேண்டினார். எல்லா நாடுகளும் இந்தியாவைக் கேள் எனச் சொல்லி விட்டன. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக இஸ்ரேல், பாக்கிஸ்த்தான் உட்படப் பல நாட்டுப் படைகள் இலங்கையில் நேரடியாக போரில் பங்கு பெற்றிருந்தன. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் நிபுணர்களின் தவறு இது. இவற்றை அரசியல்வாதிகள் திருத்தவில்லை. இப்போது மக்கள் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

3. இலங்கை சீனாவின் பக்கம் சாய்ந்துவிடும்.

இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை இந்திய வெளியுறவுத் துறை எடுத்தால் அது இலங்கையை சீனாவின் பக்கம் சாய்த்து விடும். இலங்கை ஏற்கனவே சீனாவின் பக்கம் சாய்ந்து விட்டது என்பதுதான் உண்மை. இதனால்தான் 2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக மனித உரிமைக்கழகத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது நடுநிலை வகித்த அமெரிக்கா பின்னர் தானே தீர்மானங்களைக் கொண்டுவந்து இலங்கையை சீனாவிடமிருந்து மீட்கப்பார்க்கிறது.

4. இந்தியா இலங்கைக்கு உதவாவிடில் சீனா உதவி செய்யும்.
இலங்கைக்கு இந்தியா உதவி செய்யாவிடில் சீனா உதவி செய்யும் என்ற பூச்சாண்டியைப் பலரும் முன்வைக்கின்றனர். ஆனால் இந்தப் போட்டிக்கு உதவும் நிலை எங்கு போய் முடியும் என்ற கேள்விக்கு என்ன பதில்? இந்தப் போட்டியில் வெல்லும் தகமை இந்தியாவிற்கு இருக்கிறதா? பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடப்பதற்கு இந்தியா எல்லா முயற்ச்சிகளையும் செய்கிறது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் சீனா இல்லை. அங்கு இந்தியா செய்யாவிட்டால் சீனாவால் செய்ய முடியாது. அங்கு யாருக்குப்  போட்டியாக இந்தியா இலங்கைக்கு வக்காலத்து வாங்குகிறது? இலங்கைக்கான இந்தியாவின் உதவி 2007இல் இருந்து 2011வரை $298.1மில்லியன் அதேவேளை சீனாவின் உதவி  $2.126பில்லியன். எந்த உதவியாளர் பக்கம் இலங்கை இருக்கும்? இலங்கையில் சீனாவின் நடவடிக்கைகள்:
Chinese engineers are building roads, railway lines, telecommunication links, dams, hospitals, expressways like the one between Colombo and Katunayake, stadiums, schools, hotels and power plants. Last year, Sri Lanka launched its first communications satellite with the help of China Great Wall Industry Corp, China's state-owned space technology firm. It has since signed a string of satellite deals with Sri Lanka. It's also helping build a space academy. Deals are being struck between the two countries to build telecommunication and information technology networks. The two have also pledged to improve their defence ties.

2012இல் இந்தியாவிற்கு விற்பனை செய்யவிருந்த நிலத்தை இலங்கை நிறுத்தி அதை சீனாவிற்கு விற்றுவிட்டது.

5. வெறும் உணர்வுகளை வெளிநாட்டுக் கொள்கை கணக்கில் எடுக்கக் கூடாது.
இந்திய வெளிநாட்டுக் கொள்கையில் தற்போது தமிழ்நாடும் மேற்கு வங்கமும் தாக்கத்தை ஏற்படுத்த முயல்கின்றன. மேற்கு வங்கம் பங்களாதேசத்துடனான நீர்ப்பங்கீட்டை எதிர்க்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரினாமூல் காங்கிரசுக் கட்சியின் சௌகத்தா ரோய் (Saugata Roy) என்பவர் தமிழாடு வெறும் உணர்ச்சிக்காக வெளிநாட்டுக் கொள்கையை மாற்ற முயல்கிறது. மேற்கு வங்கம் பொருளாதாரக் காரணங்களுக்காக இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை மாற்ற முயல்கிறது என்றார். அவர் அத்துடன் நிற்கவில்லை. ஒரு 13 வயதுச் சிறுவன் பதுங்கு குழியில் இருக்கும் ஒரு படத்தையும் சுடுபட்டு இறந்து கிடக்கும் ஒரு படத்தையும் வைத்துக் கொண்டு இந்திய வெளியுறவுக் கொள்கையை மாற்ற முடியாது என்றார். இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் கடந்த 25 ஆண்டுகளாக மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது வெறும் உணர்ச்சியோடு சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. இந்தியா தொடர்ந்து உதவிக் கொண்டிருந்தால் இன்னும் எத்தனை இலட்சம் பேர் கொல்லப்படுவார்கள்? வெளிநாட்டு கொள்கை என்பது இனக்கொலைக்கு உதவி செய்வதா?

6. இலங்கையில் நடந்தது ஒரு இனக்கொலை அல்ல.

சில இந்தியர்கள் ஒரு இனத்தை முழுமையாக அழித்தால்தான் அது இனக்கொலை என்றனர். பன்னாட்டுச் சட்டத்தின் படி இனக்கொலைக்கான வரைவிலக்கணம் என்ன எனபதை இவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இனக்கொலைக்கான வரைவிலக்கணம்: ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ , மனித இனம் சார்ந்த , இன ஒதுக்கல், மதவேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால் கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது இவைகள் இனக்கொலைகளாகக் கருதப்படும்.

7. ராஜபக்சவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க முடியாது.
ராஜபக்சவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க முடியாது என இந்தியாவில் பலரும் சொல்கின்றனர். ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழு இலங்கையில் போர்க்குற்றம் மட்டுமல்ல மாநிடத்திற்கு எதிரான குற்றமும் இழைக்கப்பட்டமைக்கான நம்பகரமான ஆதாரங்கள் இருப்பதாகச் அறிக்கை வெளியிட்டது. சனல் - 4 வெளியிட்ட காணொளிகளைப்பார்த்த பன்னாட்டுச் சட்ட அறிஞர்கள் சனல் - 4 இன் காணொளிகளும் காட்சிப்படங்களும் போர்க்குற்றத்திற்கான போதுமான ஆதாரங்கள் என்றனர்.

8. இலங்கை மனித உரிமைப் பிரச்சனையை இந்தியா தூக்கிப் பிடித்தால். காஷ்மீர் மனித உரிமைப்பிரச்சனை தூக்கிப் பிடிக்கப்படும்.

இந்த விவாதத்தை முன்வைப்பவர்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு இந்தியா காஷ்மீரில் செய்யும் கொடுமைகளை ஒப்பிடுகிறார்கள். இந்தியாவின் மனித உரிமை மீறல்கள் அத்துணை கொடியது என்றால் அதுவும் தண்டிக்கப்பட வேண்டியதே.

இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு என்ன காரணம்?

இந்தியா இலங்கைக்கு தொடர்ந்த் உதவி செய்வோம் என அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உதிரிக்கட்சி என்ற வேறுபாடு இல்லை. இவற்றிற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

1. தமிழர்கள் தலை நிமிரக்கூடாது.
இலங்கையில் தமிழர்கள் தலை நிமிர்ந்தால் அதைத் தொடர்ந்து இந்தியாவில் வாழும் தமிழர்களும் தலை நிமிர்ந்து நிற்பார்கள். இதை தமிழரல்லாத இந்தியர்கள் விரும்பவில்லை. இந்தியாவில் இருக்கும் அதிகாரப்பரவலாக்கத்திற்கு அதிகமான பரவலாக்கம் இலங்கையில் வரக்கூடாது எனப் பல இந்தியர்கள் கருதுகின்றனர். இது அப்பட்டமான பேரினவாதம். மாணவர்களின் எழுச்சி இதற்கான பதிலடியைக் கொடுக்க வேண்டும்.

2. இந்தியப் பண முதலைகள் இலங்கையில் முதலீட்டிற்கு ஆபத்து வரக்கூடாது.
இலங்கையில் பல இந்திய முதலாளிகள் பெரும் முதலீட்டைச் செய்துள்ளனர். இந்த முதலீட்டிற்கு இந்தியாவின் தமிழர்கள் சார்பான கொள்கை பெரும் அச்சுறுத்தலாக அமையும். இந்திய முதலாளிகள் ஆளும் காங்கிரசுக் கட்சி, இந்திய ஊடகங்கள் ஆகியவற்றிடை நெருங்கிய தொடர்பு உண்டு. திமுக காங்கிரசுடன் தனது உறவை முறித்தவுடன் சில ஊடகங்கள் இந்திய வெளியுறவுக் கொள்கையை ஒரு கட்சி தன் ஆட்சி கலையாமல் இருக்க மாற்றக் கூடாது எனக் கூவத் தொடங்கிவிட்டன. திமுக இலங்கையை மேலும் சீனாவின் பக்கம் தள்ளுகிறது என்றது ஒரு ஊடகம்.

3. இலங்கைப்போர்க்குற்றத்தில் இந்தியாவிற்கும் பங்குண்டு.
இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான ஒரு பன்னாட்டு விசாரணை வந்தால் அந்த விசாரணை புதுடில்லியில் போய் முடியும் எனச் சில அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாக எழுதத் தொடங்கிவிட்டனர்.

4. தட்சணை செய்யும் வேலை
இலங்கை அரசு பல இந்தியர்களைத் தனது கைக்குள் போட்டு வைத்திருக்கிறது. இது 1987இல் இருந்து நடந்து வருகிறது. சுஸ்மா சுவராஜ் இலங்கை சென்று ராஜ்பக்சவைச் சந்தித்த பின்னர் பாரதிய ஜனதாக் கட்சி ராஜபக்சேவைக் காப்பாற்ற முயல்கிறது. சுப்பிரமணிய சுவாமி போன்ற பூனூல் கும்பலகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு வட இந்தியர்கள் செவி சாய்க்க மாட்டார்கள். அதை அடக்கும் திட்டத்தை அவர்கள் ஏற்கனவே வகுத்தும் இருக்கலாம். வட இந்தியர்களின் வன்முறை இனி தமிழ்நாட்டு மாணவர்கள் மீது பாயும்.

Monday 25 March 2013

கொலையா தற்கொலையா? மர்ம முடிச்சை அவிழுங்கள்

அமெரிக்க நீதி மன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால் இந்த வழக்கு விசித்திரங்கள் எல்லாவற்றிலும் விசித்திரமான வழக்கு.

ரிச்சட்  என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்திருக்கிறார். அவரது உடல் அவர் வாழ்ந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தை ஒட்டி கட்டப்பட்டிருந்த ஒரு வலையில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டது. அவரது இறப்பை விசாரித்த உளவுத்துறையினர் அவரது அறையில் தான் ஏமாற்றத்தால் தனது பத்தாவது மாடியில் இருக்கும் தனது இருப்பிடத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்யப் போவதாக கடிதம் எழுதி வைத்திருந்தார் என்பதை அறிந்து கொண்டனர். அப்படியானால் ரிச்சட்டின் உடலில் எப்படி துப்பாக்கிச் சூடு விழுந்தது என்று விசாரித்த போது எதிர் மாடியடுக்கு வீடுகளில் குடியிருக்கும் சிலர் ரிச்சட் தனது வீட்டின் ஜன்னல் வழியாகக் குதித்த போது எட்டாவது மாடியில் இருந்து அவர் உடலில் துப்பாக்கிச் சூடு விழுந்ததாக சொன்னார்கள். விழுந்த ரிச்சட் உடல் ஆறாவது மாடியில் கட்டியிருந்த ஒரு வலையின் மீது விழுந்தது. அந்தத் துப்பாக்கிச் சூடு விழாவிடில் ரிச்சட் அந்த வலையில் உயிருடன் இருந்திருப்பார் என முடிவு செய்த உளவுத் துறையினர் ரிச்சட்டின் இறப்பு ஒரு கொலை என்று முடிவு செய்து அதைச் செய்தவர்கள் எட்டாவது மாடியில் இருப்பவர்கள் என நினைத்தனர். எட்டாவது மாடியில் உள்ளவர்களைக் கைது செய்து விசாரித்தனர். எட்டாவது மாடியில் குடியிருந்தவர்கள் ஒரு வயோதிப தம்பதியினர் அவர்கள் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள். மனைவியை கணவன் அடிக்கடி துப்பாக்கியால் சுடுவது போல் மிரட்டுவாராம் ஆனால் ஒருநாளும் சுடுவதில்லையாம். அதனால் அந்த வயோதிபக் கணவன் தான் கொலைகாரன் என முடிவு செய்து அவரைத் துருவித் துருவி விசாரித்தனர். அதன் போது அவர் தனது துப்பாக்கியில் ஒரு நாளும் குண்டு போட்டு வைத்திருப்பதில்லை. சும்மா வெற்றுத் துப்பாக்கியால் மனைவியை மிரட்டுவார் என அறிந்து கொண்டனர். யாரோ அந்த வயோதிப மனைவியைக் கொலை செய்யும் நோக்குடன் துப்பக்கிக்குள் குண்டை வைத்திருக்கின்றனர் என உளவுத்துறை முடிவு செய்தது. விசாரணை இன்னும் தீவிரப்படுத்தப்பட்டது. மனைவிக்கு எதிரி யார் என மனைவியிடமே கேட்டனர். சுட்டவரின் மனைவி தனது மகனுக்கு தனது ஓய்வூதியத்தில் இருந்து மாதா மாதம் பணம் கொடுத்து வருவாராம். அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக தாய் மகனுக்குப் பணம் கொடுப்பதை ஆறு மாதத்திற்கு முன்னர்  நிறுத்தி விட்டார். ஆத்திரமடைந்த அவரது மகன் உன்னைக் கொல்லுவேன் என்று அடிக்கடி மிரட்டுவாராம். அந்த மகனே தாயைக் கொல்லும் நோக்குடன் தந்தையின் துப்பாக்கியில் குண்டை வைத்திருக்கிறார் தந்தை வெற்றுத் துப்பாக்கி என நினைத்து தாயை மிரட்டும் போது தாய் சுடுபட்டு இறக்கட்டும் என்று. வீட்டில் அதற்கான தடயங்கள் கையடையாளங்களும் இருந்தன.  பாவம் தந்தை! மனைவியை மிரட்டும் போது கை நடுக்கத்தால் குறிதவறி அது ஜன்னலூடாகச் சென்று விழுந்து கொண்டிருந்த ரிச்சட் மீது பட்டு அவரைக் கொன்று விட்டது. அந்தத் துப்பாக்கி குண்டடி பட்டிருக்காவிடில் தற்கொலை செய்ய முயன்ற ரிச்சட் கீழிருந்த வலையில் விழுந்து தப்பியிருந்திருப்பான். இதனால் ரிச்சட்டின் கொலைக்கு குண்டைத் துப்பாக்கிக்குள் வைத்த தம்பதிகளின் மகன்தான் காரணம் என்பதால் உளவுத்துறையினர் மகனைப்பற்றி விசாரிக்கத் தொடங்கினர். அவர்களின் மகன்தான் தன் தாயைக் கொல்ல தான் வைத்த குண்டு நீண்ட நாட்களாக வேலை செய்யவில்லை என்ற விரக்தியாலும் தாயின் சொத்துக்களும் தனக்கு வரவில்லை என்ற விரக்தியாலும் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற ரிச்சட் எனத் தெரிய வந்தது. தாயைக் கொல்ல ரிச்சட் வைத்த குண்டால் அவனே கொல்லப்பட்டான். இப்போது சொல்லுங்கள் ரிச்சட்டின் இறப்பு கொலையா தற்கொலையா?

Sunday 24 March 2013

சோனியா காந்திக்கு நாய் விடு தூது

நாய் விடு தூது சோனியா காந்திக்கு

நாயே நாயே நாலுகால் நாயே
நெடுகம்பங் காணில் காலது
தூக்கி சிறுநீர்கழி நாயே
நீயும் நின் பெட்டையும்
கீழ்த்திசை சென்று
புது டில்லி நகரேகி
ஜன்பத் தெருவில்
பத்தாம் இலக்கம்
மோப்பம் பிடித்துச் சென்று
சோனியா காந்தி என்றொரு
தமிழின விரோதி கண்டு
விரைந்து வரும்
பொதுத் தேர்ந்தலில்
அவளது கட்சி
கடும் தோல்வியுற்று
ஊழ்வினையால்
ஊழல் வழக்கு பல கண்டு
பெற்ற பேமானி மகனுடன்
நாடுவிட்டோடுவீர் என்றுரைப்பீரே


நரிவிடு தூது - கருணாநிதி

நரியே நரியே
நெஞ்சகம் நிறை
வஞ்சக நரியே
நீயும் நின் காதலியும்
கோபாலபுரமோ
சிஐடி காலனியோ
நானறியேன்
உண்மையாய் நானறியேன்
விசாரித்தறிந்து
நின்னிலும் அதிக
வஞ்சனை நெஞ்டுடை
கருணாநிதியைப் பார்த்து
கறங்கு போல் கிளர்ந்தெழுந்த
மாணவர் எழுச்சியில்
அவர்தம் அரசியல் வாழ்வு
முடிகின்றதென்றுரைப்பீர்

பேய் விடுதூது - ராஜபக்சே

பேயே பேயே
நிலமதில் கால் படாப் பேயே
நீயும் நின் குழாமும்
கொழும்பு நகரேகி
அலரி மாளிகை தேடிப் பிடித்து
ஆங்கே வசிக்கும்
நின்னிலும் கேவலமாய் ஒருத்தன்
மஹிந்த ராஜபக்ச என்போனை
தேடிப் பிடித்து சேதி ஒன்று சொல்லாய்
அவனுக்கு ஆப்பு தயாரகின்றது
பன்னாட்டுச் சட்டத்தின் முன்
அவன் தண்டனை பெறும் நாள்
விரைவில் வருமென்றுரைப்பீர்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...