Saturday 23 February 2013

தமிழர் பிணங்களில் பணம் தேடும் இந்தியாவும் அமெரிக்காவும்.

சனல் - 4 இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களில் சிலவற்றை அம்பலப்படுத்தியது. போர் கமெரா முனையில் நடப்பதில்லை. தமிழர்களுக்கு எதிராக நடந்த கொடூரங்களை முழுமையாக எவராலும் அம்பலப்படுத்த முடியாது. தமிழர்களுக்கு எதிரான கொடூரங்களுக்கான ஆதாரப் படங்களையும் காணொளிப் பதிவுகளையும் சனல் - 4 ஏன் ஆண்டு தோறும் வெளிவிடுகிறது?

இலங்கையின் போரின் போது போர் முனைக்கு எந்த ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவைக் சங்கம் உடபடப் எல்லா தொண்டு நிறுவனங்களும் போர் முனையில் இருந்து மிரட்டி அகற்றப்பட்டனர். இலங்கையின் இறுதிப் போரின் போது நடக்கும் கொடூரங்களை அவ்வப் போது சில சிங்களப் படை வீரர்கள் தமது கைப்பேசி மூலமும் மற்றும் படப்பதிவு கருவிகள் மூலமும் பதிவு செய்ததுண்டு. அவர்கள் அவற்றைத் தமது நண்பர்களுக்கு அனுப்பியதுண்டு. அவற்றில் சில இலங்கைப் பத்திரிகையாளர்கைகளின் கையில் சிக்கியது. அதை அவர்கள் சனல் - 4 இற்கு கொடுத்துள்ளனர். அரசில் அதிருப்தியடைந்த படை வீரர்களும் தமது படப்பதிவுகளை பத்திரிகையாளர்களுக்கு வழங்கியதுண்டு. அதை அவர்கள் சனல் - 4 இற்கு கொடுத்துள்ளனர்.

சனல் - 4 தனது கையில் கிடைத்த படங்களையும் ஒளிப்பதிவுகளையும் ஏன் ஒவ்வொரு ஆண்டுகளும் வெளிவிடுகிறது. சனல் - 4 இற்கு தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கிறதா? அல்லது இது திட்டமிட்டு இலங்கை அரசை படிப்படியாக மிரட்டும் செயலா? ஒரேயடியாக எல்லாப் போர்க்குற்ற ஆதாரங்களையும் வெளிவிட்டு இலங்கையை முழுமையாக மிரட்டினால் அது சீனாவின் பக்கம் முழுமையாகச் சாய்ந்துவிடும் என்று அமெரிக்கா கருதுகிறதா?  போரின் போது நடந்த சிங்களப்படையினரின் குற்றச் செயல்களுக்கான ஆதாரங்கள் பல இந்தியாவினதும் அமெரிக்காவினதும் செய்மதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மன்னாரில் இருந்து கிளிநொச்சி நோக்கி முன்னேற முடியாமல் சிங்களப்படையினர் திணறிக் கொண்டிருக்கும் போது இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் போரை முடிக்க வேண்டும் என்பதால் அப்போது தடைசெய்யப்பட்ட குண்டுகள் தமிழர்கள் மீது வீசப்பட்டமைக்கும். போரின் இறுதி வாரத்தில் தடைசெய்யபட்ட குண்டுகள் போடப்பட்டமைக்குமான ஆதாரங்கள் இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் இருக்கின்றன. இந்தியா தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை வெளியிட்டால் இலங்கை தன்னிடம் இருக்கும் போரில் இந்தியாவின் பங்களிப்பிற்கான ஆதாரங்களை வெளிவிடும் என மிரட்டிய படியால் இந்தியா ஒருபோதும் அவற்றை வெளிவிடாது.

2009-ம் ஆண்டு போர் முடிந்தவுடன் இதே மனித உரிமைக் கழக்த்தில் போரின்போது மனித உரிமை மீறல்கள் நடந்ததால் இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த போது அமெரிக்கா நடுநிலை வகுத்தது. இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் சீனாவுடன் இணைந்து அதை இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியது. அப்போது போருக்குப் பின்னரான அபிவிருத்தி என்ற போர்வையில் இலங்கையைப் பொருளாதார ரீதியில் சுரண்ட அமெரிக்கா தனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் எனக் காத்திருந்தது. ஆனால் போருக்குப் பின்னர் இலங்கையில் சீனாவே அதிக முதலீடுகளைச் செய்தது. அரச பணிகள் பல ஒப்பந்தக் கோரிக்கைக்ள்(tender) இல்லாமல் சீனாவிற்கு வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அமெரிக்கா இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. அதன் பின்னர் 2010இல் இருந்து ஐக்கிய நாடுகள் சபையிலும் மனித உரிமைக்கழகத்திலும் இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருகிறது.

அமெரிக்கா தன்னிடமுள்ள போர்க்குற்ற ஆதாரங்களை வெளிவிட இன்னும் சில காலம் எடுக்கலாம் அல்லது இலங்கை அமெரிக்காவிடம் சரணடைந்து அமெரிக்காவை இலங்கையில் பொருளாதார ரீதியாகச் சுரண்ட அனுமதி வழங்கினால் அந்த ஆதாரங்கள் ஒரு போதும் வெளிவிடப்படாமல் போகலாம்.

இந்தியா ஒவ்வொரு ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழக கூட்டத் தொடரின் போதும் இலங்கைகு ஆதரவாக செயற்பட்டும் அமெரிக்காவின் நிலைப்பாட்டின் கடுமையைக் குறைத்தும் இலங்கை  திருப்திப்படுத்தி இலங்கையில் முதலீடு செய்ய ஒப்பந்தங்களைச் செய்கிறது.

அமெரிக்கா இலங்கையின் மனித உரிமை மீறல்களை வைத்து மிரட்டி தனது கையாள் சரத் பொன்சேக்காவை சிறையில் இருந்து மீட்டது. தனது பொருளாதாரச் சுரண்டல்களை இலங்கையில் விரிவு படுத்தும்வரை அமெரிக்கா இலங்கையைத் தொடர்ந்து மனித உரிமைகள் தொடர்பாக மிரட்டிக் கொண்டே இருக்கும். அதுவரை சனல் - 4 கும் தனது ஆவணப்படங்களை ஆண்டு தோறும் வெளியிட்டுக் கொண்டே இருக்கும். மனித உரிமைக் கழகத்தில் மட்டுமல்ல ஐநா பாதுகாப்புச் சபையிலேயே கொண்டுவரப்படும் தீர்மானங்கள் கூட தமிழர்களுக்கு எந்த பயனும் தராது என்பதற்கு பாலஸ்த்தீனம் தொடர்பாக இஸ்ரேலுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களே சான்றாகும்.

1983-ம் ஆண்டு பத்தாயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்ட இனக்கலவரத்தை அப்போதைய பாரதப் பிரதமரும் இந்திய சட்டவாளர் சபையும் இனக்கொலை என்றனர். ஆனால் 2008-2009 இல் இலங்கையில் மூன்று இலட்சம் அப்பாவிகள் கொல்லப்பட்டத ஒரு இனக் கொலை என இந்தியப் பாராளமன்ற உறுப்பினர் ராஜா பாராளமன்றத்தில் தெரிவ்ததை அவைத் தலைவர் அவைக் குறிப்பில் இருந்து விலக்கியது ஏன்? இந்தியாவும் இந்த இனக்கொலையில் ஒரு பங்காளி என்பதாலா? 

இலங்கையில் நடந்த போர்க்குற்றத்தை ஐநா சபை நேரடியாகவே பன்னாட்டு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல  பன்னாட்டுச் சட்டத்தில் இடமுண்டு என சட்ட அறிஞர்கள் எடுத்துரைத்துள்ளனர். மனித உரிமை ஆர்வலர்கள் அமைத்த  டப்ளின் தீர்ப்பாயமும் ஐநா சபை நியமித்த நிபுணர்கள் குழுவும் இலங்கையில் போர்க்குற்றம் நடந்தமைக்கான காத்திரமான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவித்தன. இவற்றைப் புறந்தள்ளி விட்டு இந்தியாவும் அமெரிக்காவும் இதில் இருந்து இலங்கையைப் பாதுகாக்க நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முன்னிலைப்படுத்துகின்றன.

Friday 22 February 2013

சிரியா சின்னாபின்னமாகப் போகிறது

சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு விசுவாசமான ஐம்பதினாயிரம் படையினர் இருக்கின்றனர். இவர்களிடம் சிறந்த படைக்கலன்கள் இருக்கின்றன. இரசியா அமைத்துக் கொடுத்த புதிய விமான எதிர்ப்பு முறைமை அசாத்தின் கைவசம் இருக்கிறது. பாரிய வேதியியல் குண்டுகள் அசாத்திடம் இருக்கின்றன. இரசியா, ஈரான் ஆகிய நாடுகளின் ஆதரவு இருக்கின்றன.

ஆற்றைக் கடக்க முன் அண்ணன் தம்பிச் சண்டை.
பிளவு பட்ட சிரியக் கிளர்ச்சிக்காரர்களால் சிரிய அதிபர் அல் அசாத்தை பதவியில் இருந்து விலக்குவது இலகுவான காரியம்ல்ல என பலரும் உணர்ந்துள்ளனர். சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு இடையில் உள்ள பிரதான பிளவு புனிதப் போராளிகளுக்கும் இசுலாமியவாதிகளுக்கும் இடையினாலனதாகும். 19-02-2013இலன்று இசுலாமியவாதிகளின் முக்கிய வட முனைத் தளபதி தயர் அல் வாக்காஸ் கொடூரமாகக் கொல்லப்பட்டது இரு பிரிவினருக்கும் இடையில் மோதல் தீவிரமடைவதை உணர்த்துகிறது.வட சிரியாவையும் மற்றும் பல பிரதேசங்களையும் பல தியாகங்களைப் புரிந்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் இப்போது அங்கு எப்படியான ஆட்சி முறைமை நிலவ வேண்டும் என்பதில் கடுமையாக முரண்படுகிறார்கள்.

ஈரானிய ஆதரவு
ஈரான், சிரியா, ஹமாஸ் இயக்கம், ஹிஸ்புல்லா இயக்கம் ஆகியவை ஒன்று கூடி மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் மேற்குலக ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டும் என ஈரான் நம்புகிறது. ஈரான் சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு. சிரியா சியா முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு. அங்கு சிறுபான்மையினரான அலவைற் இனக்குழுமத்தினர் பஷார் அல் அசாத் தலைமையில் அதிகாரத்தைத் தம் வசம் வைத்திருக்கின்றனர். அலவைற் இனக்குழுமம் சுனி முஸ்லிம்களின் ஒரு பிரிவு. இதனால் அசாத்திற்கும் ஈரானிற்கும் நெருங்கிய நட்புண்டு. அசாத் பதவியில் இருந்து விலக்கப்பட்டு சிரியாவில் சுனி முஸ்லிம்கள் ஆட்சியைக் கைப்பற்றினால் அது மேற்காசிய வட ஆபிரிக்கப் பிராந்தியத்தில் தந்திரோபாய சமநிலை ஈரானுக்குப் பெரும் பாதகமாக அமையும் என ஈரான் உறுதியாக நம்புகிறது. ஈரானுடன் நட்புறவைப் பேணும் சீனாவும் ஈரானின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறது. இரசிய கடற்படைத் தளம் ஒன்று சிரியாவில் இருக்கிறது. சிரியாவானது ஈராக், துருக்கி, லெபனான். இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய சாதகமற்ற நாடுகளிடை இருக்கும் ஒரு நாடு. அசாத் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவதை சவுதி அரேபியாவும் காட்டாரும் பெரிதும் விரும்புகிறது. சிரியாவில் லிபியாவில் செய்தது போல ஒரு படை நடவடிக்கையை நேட்டோ செய்ய வேண்டும் என நேட்டோவின் உறுப்பு நாடான துருக்கி நீண்டகாலமாகக் கோரிக்கை விட்டு வருகிறது. சிரியாவின் ஆபத்தான படைக்கலன்கள் தனக்கு எதிரான போராளிகள் கையில் போகாமல் இருக்க இஸ்ரேல் எதையும் செய்யத் தயங்காது. இத்தகைய சூழலில் சிரிய ஆட்சியாளர் அல் அசாத்தும் அவருக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களும் மோதிக் கொள்கின்றனர்.

பேரவலத்தைத் தடுக்க முடியாத ஐக்கிய நாடுகள் சபை
ஏற்கனவே எழுபதினாயிரத்திற்கு மேற்பட்டோர் சிரியாவில் கொல்லப்பட்டுவிட்டனர். காணாமல் போனோர் தொகையும் பல்லாயிரக் கணக்கு. சொந்த வீடுகளை இழந்தவர்கள் தொகை இருபது இலட்சத்திற்கு மேல். வல்லரசு நாடுகளுக்கிடையில் ஒற்றுமையின்மையால் ஐக்கிய நாடுகள் சபை ஏதும் செய்ய முடியாமல் இருக்கிறது. இரண்டு ஆண்டுகள் கழித்து அவர்கள் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து தாம் சிரியாவில் தவறு விட்டதாகச் சொல்லுவார்கள்.

 விலகி நிற்கும் மேற்குலகம்
நேட்டோப் படைகள் ஒருதலைப் பட்சமான விமானத் தாக்குதலில் ஈடுபடாமல் இருக்க இரசியா தனது புதிய ரக விமான எதிர்ப்பு முறைமையை சிரியத் தலைநகர் டமஸ்கசில் நிறுவியுள்ளது. தாம் அசாத் ஆட்சியை அகற்றி அங்கு ஒரு இசுலாமியவாதிகளின் ஆட்சியை நிறுவ உதவி செய்வதா என்பது அவர்கள் முன் இருக்கும் கேள்வி. எகிப்தில் இசுலாமிய மதவாதிகளின் கை ஓங்குவதை அவர்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது இருக்கும் பொருளாதாரப் பிரச்சனையில் இன்னொரு போர் முனையத் திறக்க முடியாது.

மேலும் பேரவலம் தொடரும்
பலமிக்க அசாத்தின் படை, பிளவு பட்டு நின்றாலும் அசாத்திற்கு எதிரான போரில் உறுதியாக நிற்கும் கிளர்ச்சிக்காரர்கள், கையாலாகாத ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை சிரியாவில் இனி வரும் மாதங்களில் போர் மேலும் தீவிர மடைவதைச் சொல்லி நிற்கின்றன. சில படைத் துறை வல்லுனர்கள் போர் ஆண்டுக்கணக்காக நீடிக்கலாம் என்கின்றனர். அப்படி நட்க்கும் போது சிரியா பல கூறுகளாகப் பிரிக்கப்படும். சில பிராந்தியங்கள் மேற்குலகிற்கு எதிரான போராளிகள் கைகளில் போய்ச் சேரும். அப்போது அப்பிராந்தியங்களைக் கைப்பற்ற மேற்குலகம் மற்ற போராளிக் குழுக்களுக்கு உதவி செய்யும். அது சிரியாவைச் சின்னாபின்னப்படுத்து.

Thursday 21 February 2013

ஈழத் தமிழர்களைப் பற்றிப் பேச கனிமொழிக்கு அருகதை இருக்கிறாதா?

"ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் அல்லது இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்." இப்படி இந்திய ராஜ்ய சபா உறுப்பினரான கனிமொழி கூறியுள்ளார்.

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானங்களை இந்தியா கெடுத்துக் கொண்டிருக்கிறது. அம்மா தாயே முடியுமானால் இலங்கைகு எதிராக இந்தியாவால் ஒரு பொருளாதாரத் தடையைக் கொண்டுவரப்பண்ண உங்களாலும் முடியாது. உங்க அப்பனாலும் முடியாது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவருவதாக முடிவெடுத்து விட்டது. அதை ஆதரிப்பதாக இந்தியாவும் முடிவெடுத்து விட்டது. இப்போது கனிமொழி என்ன சொல்கிறார். தான் சொல்லித்தான் இந்தியா தீர்மானம் கொண்டு வந்தது எனத் தனது கழகத் தொண்டர்களை கனிமொழி ஏமாற்றலாம். ஆனால் ஒட்டு மொத்த தமிழர்களையும் ஏமாற்ற முடியாது. இந்தியாவின் ஆதரவில்லாமலேயே அமெரிக்காவால் ஐநா மனித உரிமைக் கழகக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்ற முடியும். ஆனால் இந்து மாகடல் பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிரான படைத்துறைத் தந்திரோபாய நிலைப்பாட்டிற்கு இந்தியாவை அமெரிக்கா பங்காளியாக்க முயல்கிறது. இதைச் சாதகமாக வைத்து இலங்கையின் ராசதந்திரக் கைக்கூலியாகச் செயற்படும் அயோக்கிய இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் கடுமையைக் குறைக்கிறது.

2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் இதே மனித உரிமைக்கழகத்தில் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வந்த போது அதை அயோக்கிய இந்தியா பாராட்டும் தீர்மானமாக மாற்றியது. அந்த இந்திய அரசில் கனிமொழியும் ஒரு முக்கிய பங்காளி. அப்போது தனது பதவியைத் துறக்காத கனிமொழிக்கு இப்போது இலங்கைப் பிரச்சனை பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?

ஒரு வயது முதிர்ந்த பெண்ணை மருத்துவச் சிகிச்சைக்கு இந்தியா செல்ல விசா அனுமதியைக் கொடுத்துவிட்டு பின்னர் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பின்னர் பழிவாங்கும் நோக்குடன் நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டுப் பின்னர் திருப்பி அனுப்பிய அயோக்கிய இந்திய அரசின் கூட்டணிக்கட்சியைச் சேர்ந்த கனிமொழிக்கு என்ன அருகதை ஈருக்கிறது இலங்கைத் தமிழர்களைப் பற்றிப் பேச?

இறுதிப் போரின் போது சரணடைய சென்ற விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவினரின் சரணடைவுப் பேச்சு வார்த்தையில் கனிமொழியும் சம்பந்தப்பட்டவர். அப்போது நடந்தவற்றைப் பற்றி கனிமொழி மனித உரிமைக்கழக உறுப்புரிமை நாடுகளுக்கு ஜெனிவா சென்று எடுத்துச் சொல்வாரா?

2009 இறுதிப் போரின் போது போர் முனையில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் அகப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் கொடுக்கும் உணவு மற்றும் மருந்துகளைத் தடுப்பதற்காக இலங்கை அரசு அங்கு 70,0000 மக்கள் மட்டுமே இருக்கிறார்கள் எனப் பொய் சொன்னது. இது பற்றி உங்கள் குடும்ப நண்பரும் ராஜபக்ச குடும்பத்துக் மிகவும் வேண்டியவரும் இப்போது இந்தியக் குடியரசுத் தலைவரும், அப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருமாக இருந்த பிரணாப் முஹர்ஜீயிடம் வினவிய போது இலங்கை அரசு சொல்வது சரி அங்கு 70,000 பொது மக்கள் மட்டுமே இருக்கின்றனர் என்றார். போர் முனையில் நடப்பவை அனைத்தையும் இந்திய செய்மதிகள் கவனித்த படியே இருந்தன. இந்தியாவிற்கு நன்கு தெரியும் இலங்கை அரசு பொய் சொல்கின்றது என்று. அப்படிப் பொய் சொன்ன பிரணாப் முஹர்ஜீக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த கனிமொழிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது இலங்கைத் தமிழர்கள் பற்றிப் பேச.

பாலச்சந்திரன் பிரபாகரனின் கொலை பற்றிய சனல் - 4இன் படங்களை தன்னால் நம்ப முடியாது என்று இந்திய வெளிநாட்டமைச்சர் சொல்லி விட்டார்.  உண்மையில் பாலச்சந்திரன் எப்படிக் கொல்லப்பட்டார் என்பது பற்றி தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் போரில் பங்காளியான இந்தியாவிற்கு நன்கு தெரியும். இறுதிப் போரின் போது பல இந்திய உளவாளிகள் போர் முனையில் இருந்து  செயற்பட்டனர். பாலச்சந்திரனை உயிருடன் வைத்திருப்பதா அல்லது கொவதா என்ற முடிவை எடுப்பதில் அப்போது இலங்கைக்கு படைத்துறை ஆலொசகர்ரக இருந்த சதீஷ் நம்பியாரும் சம்பந்தப் பட்டிருக்க வாய்புண்டு. இப்படி இருக்கையில் உங்கள் கூட்டாளிக் கட்சியான் காங்கிரசுக் கட்சியின் அமைச்சர் படத்தை நம்ப முடியாது என்கிறார். தடயவியலில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் படங்கள் நம்பகரமானவை என்கிறார். இலங்கை அரசைத் திருப்திப்படுத்த  பொய் சொல்லும் கட்சியுடன் உறவு வைத்துள்ள கனிமொழிக்கு என்ன அருகதை இருக்கிறது தமிழர்கள் பற்றிப் பேச.

இறுதிப் போரின் போது ஒரு சிறு நிலப்பரப்பில் மூன்று இலட்சம் மக்கள் அகப்பட்டுக் கொண்டு விட்டனர். நாற்புறமும் சிங்களப் படையினர் சூழ்து கொண்டனர். அவகளின் பின்னால் தமிழர்களின் எதிரி நாட்டில் இருந்து பின்கதவால் ஈழத்துக்குள் புகுந்த இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட அயோக்கியப் படைகள். சிறு நிலப்பரப்பைச் சுற்றி வளைத்த சிங்களப்படை கனரகப் படைகலன்களை ஏவினால் அது அந்தச் சிறு நிலப்பரப்பினுள் விழாது மறுபுறம் இருக்கும் சிங்களப் படைகள் மீதுதான் விழும். கனரகப் படைக்கலன்களை ஏவும் போது அது நீண்ட தூரம் சென்றுதான் தாக்கும். இதனால் சிங்களப்படையினருக்கு நிண்ட தூரம் பாயும் கனரகப் படைக்கலன்களை ஏவ முடியாத சூழல். இந்தச் சூழலில் கொழும்பிலும், புது டில்லியிலும் கோபால புரத்தில் இருந்தும் ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதன் படி கனிமொழியின் தந்தை கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். இலங்கை அரசு தான் இனி கனரக படைக்கலன்கள் பாவிக்கப் போவதில்லை என அறிவித்தது. அதை பிரணாப் முஹர்ஜி இனி இலங்க படைக்கலன்களை ஏவப் போவதில்லை என்றார். கருணாநிதியும் ப சிதம்பரமும் இலங்கையில் போர் நிறுத்தம் வந்து விட்டது என்றனர். கனிமொழி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முழங்கினார் தனது தந்தை 4 மணித்தியால உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நிறுத்தம் வந்து விட்டது என்று. போர் முனையில் பதுங்கு குழிக்குள் ஒளித்திருந்த அப்பாவிப் பொது மக்கள் வெளியில் வந்தனர் இலங்கை விமானப்படையும் இந்தியா செய்து கொடுத்த குறுந்தூர ஏவுகணைகளும் அவர்கள் மீது வீசப்பட்டன. பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும் அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அப்போது இலங்கையில் போர் நிறுத்தம் என்றீர்களே இப்போதும் குண்டு வீசிக் கொல்கிறார்களே என்ற கேள்விக்கு கனிமொழி சொன்ன பதில் "இல்லை அங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது". கருணாநிதி சொன்ன பதில் "மழை விட்டு விட்டது. இப்போது தூவானம் அடிக்கிறது". இந்தக் கனிமொழிக்கு இலங்கைத் தமிழர்களைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது. தெலுங்கு இரத்தம் தமிழர்கள் மீது அக்கறை காட்டுமா? தமிழ் நாட்டு மக்கள் கடந்த சட்ட சபைத் தேர்தலில் உங்கள் கட்சிக்கு கொடுத்த அடி வெறும் தூவானம் மட்டுமே. 2014இல் நடக்க இருக்கும் பாராளமன்றத் தேர்தலில் காத்திருக்கிறது பெருமழை.

Wednesday 20 February 2013

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவு கூடுகிறது

 சென்ற ஆண்டு மனித ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்குச் சார்பாகச் செயற்பட்ட நாடுகளான சீனா, இரசியா, கியூபா போன்ற நாடுகள் சுழற்ச்சி முறையில் தமது வாக்களிக்கும் உறுப்புரிமையை இழந்து விட்டன. இதனால் இனி வரும் மனித உரிமைக் கழக கூட்டத் தொடர்களில் இலங்கை பல நெருக்கடிகளைச் சந்திக்கும் என சிலர் கூறுகின்றனர். இதன் உண்மையைப் பார்ப்போம்.

தற்போது ஐநா மனித உரிமைக் கழகத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள நாடுகள் 47:
Angola, Argentina, Austria, Benin, Botswana, Brazil, Burkina Faso, Chile, Congo, Costa Rica, Ivory Coast, Czech Republic, Ecuador, Estonia, Ethiopia, Gabon, Germany, Guatemala
India, Indonesia, Ireland, Italy, Japan, Kazakhstan, Kenya, Kuwait, Libya, Malaysia, Maldives, Mauritania, Montenegro, Pakistan, Peru, Philippines, Poland, Qatar, Republic of Korea
Republic of Moldova, Romania, Sierra Leone, Spain, Switzerland, Thailand, Uganda, United Arab Emirates, USA, Venezuela


2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் திகதி அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவு: 24 நாடுகள்       எதிர்ப்பு: 15  நாடுகள்   வாக்களிப்பில் கலந்துகொள்ளாதவை: 8 நாடுகள்

 ஆதரித்த நாடுகள்:
Benin,Cameroon, Libya, Mauritius, Nigeria, India, Chile, Costa Rica, Guatemala, Mexico, Peru, Uruguay, Austria, Belgium, Italy, Norway, Spain, Switzerland, USA, Czech Republic, Hungary, Poland, Moldova, Romania

எதிர்த்த நாடுகள்:
Congo (Brazzaville), Mauritania, Uganda, Bangladesh, China, Indonesia, Kuwait, Maldives, Philippines, Qatar, Saudi Arabia, Thailand, Cuba, Ecuador, Russia

வாக்களிக்காதவை:
Angola, Botswana, Burkina Faso, Djibouti, Senegal, Jordan, Kyrgyzstan, Malaysia

இலங்கைக்கு எதிராக வாக்களித்த 24 நாடுகளில் பின்வரும்  9நாடுகள் சுழற்ச்சி முறையில் தமது உறுப்புரிமையை இழந்து விட்டன:
Cameroon, Mauritius, Nigeria, Mexico, Uruguay, Belgium, Norway, Hungary.

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 15 நாடுகளில் பின்வரும் 5 நாடுகள் சுழற்ச்சி முறையில் தமது உறுப்புரிமையை இழந்து விட்டன:
Bangladesh, China, Saudi Arabia, Cuba, Russia,

புதிதாக இணைந்து கொண்ட நாடுகள்:
ஒரு குறிப்பிட்ட ஒரு பிராந்தியத்தில் இருக்கும் ஒரு நாடு சுழற்ச்சி முறையில் தனது உறுப்புரிமையை இழக்கும் போது தனக்குச் சார்பான ஒரு நாட்டை புதிதாக இணைத்துக் கொள்வதில் உறுதி செய்து கொள்ளும். இரசியா தனது உறுப்புரிமையை இழந்தவுடன் அதன் இடத்திற்கு Kazakhstan நாட்டை புது உறுப்பினராக இணைத்து விட்டது. CIS என்னும் Commonwealth of Independent Statesஇல் ஒரு உறுப்புரிமையுள்ள நாடு Kazakhstan ஆகும். இது போலவே கியூபா நாடு தனது இடத்திற்கு வெனிசுவேலா நாடு வருவதை உறுதி செய்து கொண்டது. சீனாவின் இடத்திற்கு அதற்கு ஆதரவான ஒரு நாடும் வந்ததாகத் தெரியவில்லை. இதனால் சீனாவை உலகிலேயே மிகவும் தனித்த வல்லரசு என்பர் சில பன்னாட்டு அரசியல் ஆய்வாளர்கள். இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த ஐந்து நாடுகள் உறுப்புரிமையை இழந்தாலும் புதிதாக வந்த 17 நாடுகளில் கென்யா, சேரா லியோன், கஜக்ஸ்த்தான், பாக்கிஸ்த்தான், ஆர்ஜெண்டீனா, வெனிசுவேலா ஆகிய ஆறு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என நிச்சயமாகச் சொல்ல முடியும். ஐவரி கோஸ்ட், யுனைட்டெட் அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் இலங்கைக்கு சாதகமாக வாக்களிக்கும் சாத்தியம் உண்டு.

சென்ற ஆண்டு கொண்டு வந்த தீர்மானதில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் ஐந்து உறுப்புரிமையை இழக்க புதிதாக வந்த நாடுகளில் ஆறுக்கு மேற்பட்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும். ஆகக் கூடியது மொத்ததில் புதிதாக வந்த எட்டு நாடுகள் இலங்கைக்கு சாதகமானவை எனலாம். இலங்கையின் நிலை பலமடைந்துள்ளது.

புதிதாக வந்த நாடுகளில் ஜப்பானும், தென் கொரியாவும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக ஒரு போதும் வாக்களிக்க மாட்டாது எனக் கூறலாம். அவை அமெரிக்காவிற்கு சாதகமாக வாக்களிக்கும். அதிலு தென் சீனக் கடல் சீனாவிற்கு உரியது என கோத்தபாய ராஜபக்ச சொன்ன பின்னர் அவை இலங்கைக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. மெக்சிக்கோவின் இடத்திற்கு வந்த பிரேசிலும் அமெரிக்காவிற்கு ஆதரவாகவே வாக்களிக்கும்.

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று ஏற்கனவே அறிவித்த படியால் புதிதாக வந்த எஸ்டோனியா, ஜேர்மனி, அயர்லாந்து ஆகிய நாடுகள் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை கோரி நிற்கும் மொன்ரிநிக்ரோ நாடும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்.

புதிதாக வந்த நாடுகளில் ஏழு நாடுகள் அமெரிக்காவிற்கு நிச்சயம் வாக்களிக்கும். தமிழர் தரப்பு தகுந்த பிரச்சாரம் செய்தால் எதியோப்பியா அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்.

இலங்கைக்கு சென்ற ஆண்டுகள் கிடைத்த வாக்குகளிலும் பார்க்க மூன்று வாக்குகள் கூடக் கிடைக்கும் வாய்ப்புண்டு. வாக்கெடுப்புக்க்கு விடப்பட்டால் அமெரிக்காவின் தீர்மானம் 25 நாடுகளின் ஆதரவுடனும் 18 நாடுகளின் எதிர்ப்புடனும் வெற்றி பெறும். இதை உணர்ந்த இந்தியா தனக்கு ஏற்படும் சங்கடங்களைத் தவிர்க்க இலங்கையை தீர்மானத்தை எதிர்க்காமல் விடும்படி கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் வக்கெடுப்பின்றி நிறைவேறும் சாத்தியம் இருக்கும் அதே வேளை இந்தியா மீண்டும் தீர்மானத்தின் கடுமையைக் குறைக்கும் அத்துடன் இலங்கைக்குத் தேவையான கால அவகாசத்தையும் பெற்றுக் கொடுக்கும். சிங்களப் பேரினவாதிகளின் கண்டனத்தில் இருந்தும் இந்தியா தப்பிக்கொள்ளும்.

Tuesday 19 February 2013

என்ன இந்த அமெரிக்காவின் செயன் முறைத் தீர்மானம் (procedural resolution)?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் 22வது கூட்டத் தொடர் 25/02/2013இலிருந்து 22/03/2013 வரை நடை பெறவிருக்கிறது. இதிலும் ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வரவிருப்பதாகச் சொல்கிறது. ஏற்கனவே கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதுவும் நடக்கவில்லை.

அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரப்போகிறதென்றவுடன் பல ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு எழுதத் தொடங்கிவிட்டன.
  •  "அச்சத்தில் இலங்கை"
  • "கலக்கத்தில் மஹிந்தா"
  • "மஹிந்தவின் கழுத்துக்கு வீசப்படும் பாசக் கயிறு" 
  • அமெரிக்கத் தீர்மானத்தால் இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தல்.
என்றேல்லாம் எழுதப்படுகின்றன. என்ன தீர்மானம் வரப்போகிறது என்று அறியுமுன்னரே இவர்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.

2009-ம் ஆண்டு போர் முடிந்தவுடன் இதே மனித உரிமைக் கழக்த்தில் போரின்போது மனித உரிமை மீறல்கள் நடந்ததால் இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்த போது அமெரிக்கா நடுநிலை வகுத்தது. இந்தியாவும் தென் ஆபிரிக்காவும் சீனாவுடன் இணைந்து அதை இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக மாற்றியது. அப்போது போருக்குப் பின்னரான அபிவிருத்தி என்ற போர்வையில் இலங்கையைப் பொருளாதார ரீதியில் சுரண்ட அமெரிக்கா தனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும் எனக் காத்திருந்தது. ஆனால் போருக்குப் பின்னர் இலங்கையில் சீனாவே அதிக முதலீடுகளைச் செய்தது. அரச பணிகள் பல ஒப்பந்தக் கோரிக்கைக்ள்(tender) இல்லாமல் சீனாவிற்கு வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அமெரிக்கா இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. இதுபற்றிய முன்னைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்: அவிற்பாகம்

சென்ற முறை இலங்கைக்கு கால அவகாசத்துடன் கூடிய சில வேண்டு கோள்களை விடுவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட இருந்தது அதில் இருந்து கால அவகாசத்தை இந்தியா அமெரிக்காவிடம் வலியுறுத்திக் கேட்டு நீக்கிவிட்டது. இம்முறை வரவிருக்கும் தீர்மானத்தின் சாரல் இந்தியப்பத்திரிகை ஒன்றில் வெளிவிடப்பட்டுள்ளது, அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் தீர்மானம் இந்தியாவின் கலந்தாலோசித்த பின்னரே கொண்டு வரப்படவிருக்கிறது என்று தெரிகிறது. இம்முறையும் தீர்மானம் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் சுற்றியே இருக்கிறது. அத்துடன் வழமையான மனித உரிமை மீறல்கள், காணாமல் போவோர், ஐநா அதிகாரிகளை தடையின்றி இலங்கை சென்று நிலமைகளை ஆராய அனுமதித்தல் போன்றவையே இருக்கின்றன.

இம்முறை ஒரு செயன் முறைத் தீர்மானம் (procedural resolution) கொண்டுவரப் போவதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது. என்ன இந்த செயன் முறைத் தீர்மானம் (procedural resolution)? ஐக்கிய நாடுகள் சபையைப் பொறுத்தவரை இருவகைத் தீர்மானங்கள் உள்ளன. அவை தன்னிலையான தீர்மானம் (Substantive resolution) என்றும் செயன் முறைத் தீர்மானம் (procedural resolution) எனப்படும். இதற்கான விளக்கம்:
  • Substantive resolutions apply to essential legal principles and rules of right, analogous to substantive law, in contrast to procedural resolutions, which deal with the methods and means by which substantive items are made and administered.
 தன்னிலையான தீர்மானங்கள் என்பன எழுதப்பட்ட சட்டங்கள் போல் முக்கிய சட்ட தத்துவங்களுக்கும் உரிமை விதிகளுக்கும் பிரயோகிக்கப்படும் மாறாக செயன் முறைத் தீர்மானங்கள் தன்னிலையான தீர்மானங்களை நிர்வகிப்பதற்கான முறைகளையும் வகைகளையும் கொண்டது.

ஐக்கிய அமெரிக்கா கொண்டுவரும் செயன் முறைத் தீர்மானம் (procedural resolution) என்பது ஏற்கனவே கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எப்படி நிர்வகிப்பது என்பது தொடர்பாகவே இருக்கும். புதிதாக ஏதும் செயன் முறைத் தீர்மானம் (procedural resolution)என்பதில் இருக்க முடியாது.

2012 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துமாறு இலங்கை அரசைக் கோரும் அதே வேளை பொருத்தமான சட்டரீதியான கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து இலங்கையருக்கும் நீதி,சமத்துவம்,என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல் வேண்டும்.

2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் சர்வதேசச் சட்டம் மீறப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நடவடிக்ககைகளை துரிதமாக மேற்கொள்வதோடு ஒட்டுமொத்தமான நடவடிக்கைத் திட்டத்தை இலங்கை அரசு சமர்ப்பிக்க வேண்டும்.


3. மேற்படி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாராய்ந்தும் இணக்கப்பாட்டின் அடிப்படையிலும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தையும் தொடர்புபட்ட விசேட நடைமுறை ஆணையைக்கொண்ட தரப்பினரையும் ஊக்குவிப்பதுடன் மனித உரிமைகள் பேரவையின் 22வது அமர்விற்கு மேற்படி ஏற்பாடுகளைப் பற்றிய ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனவும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை வேண்டுகின்றோம்.



இலங்கைக்காக நேரம் திருடும் அயோக்கிய இந்தியா
இதற்கு இப்போது இலங்கை அரசு சொல்லும் பதில் Lessons Learnt and Reconciliation Commission இன் பல பரிந்துரைகளை நாம் நிறைவேற்றி விட்டோம். எஞ்சியவற்றிற்கு எமக்குக் கால அவகாசம் தேவை என்பதே. சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கால அவகாசம் எதுவும் கொடுக்காமல் அயோக்கிய நாடாகிய இந்தியா பார்த்துக் கொண்டது. இலங்கை இப்பொதும் காலம் கடத்தும் தந்திரத்தை இந்தியாவும் இலங்கையும் இணைந்து கையாளுமா?

நவி பிள்ளை
2012இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முக்கியமான ஒரு அம்சம் ஐநா மனித உரிமைக்கழக ஆணையாளர் தான் இலங்கைக்கு வழங்கிய உதவிகள் பற்றி 22வது கூட்டத் தொடரில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவேண்டும் என்பதாகும். மனித உரிமைக் கழக ஆணையாளர் நவநீதம் பிள்ளை சமர்ப்பிக்கவிருக்கும் அறிக்கைக்கு இலங்கை 39 திருத்தங்களை முன்வைத்துள்ளது. நவி பிள்ளையின் அறிக்கையை இந்த இணைப்பில் காணலாம்: http://www.ohchr.org/Documents/HRBodies/HRCouncil/RegularSession/Session22/A-HRC-22-38_en.pdf . இனி வரும் நாட்களில் இலங்கையில் நவி பிள்ளைக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் தொடர்ந்து வரும். அவர் ஒரு புலி ஆதாரவாளராகச் சித்தரிக்கப்படுவார்.

பொத்திக்கிட்டு இருக்கும் தந்திரம்
சென்ற முறை அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்த இலங்கையை இந்த முறை எதிர்க்காமல் அமைதியாக இருக்கும் படி இந்தியா ஆலோசனை கூறியுள்ளது. இந்த நல்ல பிள்ளைத்  தந்திரம் பல பாதகமான வாசகங்கள் வராமல் இருக்க உதவும் என இந்தியா எதிர்பார்க்கிறது.  அத்துடன் மனித உரிமைக் கழக ஆணையாளர் நவநீதம் பிள்ளை சமர்ப்பிக்கவிருக்கும் அறிக்கையின் பாதகமான விளைவுகளையும் சமாளிக்க உதவும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தியாவின் இணக்கப்பாடு
இந்த முறை அமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை எதிர்க்காமல் இருக்கும் படி இந்தியா இலங்கையை இரக்சியமாக வேண்டியுள்ளபடியால வாக்கெடுப்புக்கு விடாமலேயே அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேற்றப்படலாம். அதற்கேற்ப அமெரிக்காவும் தீர்மானத்தின் கடுமையை மீண்டும் இந்தியாவின் நிர்பந்தத்திற்கு ஏற்ப குறைக்கும். இலங்கை அண்மையில் இந்தியாவிற்கு அம்பாந்தோட்டையில் ஒரு சீனித் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. எல்லாமே தட்சணைக்காகத்தான்!!!!

Monday 18 February 2013

புதுமையடையும் படைக்கலன்களும் எல்லை தாண்டிய பயங்கரவாதமும்.

பாக்கிஸ்த்தானின் வஜ்ரிஸ்த்தான் பிராந்தியத்தின் வட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தலிபான் போராளிகள் மூவர் இருக்கின்றனர். தொலைக்காட்சியில் மல்லிகா ஷெரவாத் ஒரு இந்திப் பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருக்கிறார். அதை இரசித்தபடி அவர்கள் தங்கள் தாக்குதல் திட்டமொன்றை வகுத்துக் கொண்டிருக்கின்றனர். குறித்த வீட்டில் தலிபான் போராளிகள் இருக்கிறார்கள் என்ற தகவல் அமெரிக்க உளவுத் துறைக்குக் கிடைக்கிறது. குறித்த வீட்டின் புவியியல் நிலையைத் துல்லியமாகக் கணித்து ஆப்கானிஸ்த்தானில் உள்ள ஒரு சிஐஏயின் ஆளில்லாவிமானத் தளத்திற்கு தகவல் அனுப்பப்படுகிறது. அங்கிருந்து சிறுவர்களின் பட்டம் அளவுள்ள சிறு ஆளில்லா விமானங்கள் வட வஜ்ரிஸ்த்தானில் உள்ள குறித்த வீட்டை நோக்கிப் புறப்படுகின்றன.

குறித்த வீட்டை அடைந்த விமானங்கள் மேலிருந்தபடியே அங்கிருந்து வரும் வெப்பத்தை அளவிட்டு வீட்டில் மூன்றுபேர் இருக்கின்றனர் என்ற தகவலையும் அவர்களின் இருப்பிடங்களையும் அறிந்து கொள்கிறது. உடன் ஒரு விமானம் அந்த வீட்டு சாளரம்(ஜன்னல்) கதவை உடைக்கிறது. இன்னொரு சிறு விமானம் உள் நுழைந்து அங்கிருப்பவர்களில் ஒருவரின் மடியில் இறங்கி வெடிக்கிறது. மூவரும் இறக்கின்றனர்.

ஆப்கானிஸ்த்தானின் எல்லையுடன் அமைந்துள்ள ஒரு பாக்கிஸ்த்தானிய கிராமத்தில் அல் கெய்தாவினர் பெருமளவில் கூடி இருப்பதாக அமெரிக்க உளவுத் துறைக்குச் செய்தி கிடைக்கிறது. ஆப்கானிஸ்த்தானின் மறைவான இடமொன்றில் இருக்கும் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானத் தளத்தில் இருந்து ஒரு ஆளில்லா விமானம் புறப்பட்டுச் சென்று அக் கூட்டத்தினர் மீது ஏவுகணைக் குண்டுகளை வீசுகிறது. பலர் கொல்லப்படுகின்றனர். அந்த இடத்தில் இரு இனக் குழுமங்களிடையே கனிம வளங்கள் தோண்டுதலுக்கான உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிணக்கைத் தீர்க்க கிராமத்துப் பெரியவர்கள் கூட்டிய கூட்டம் அது. அதில் அல் கெய்தா உறுப்பினர்கள் எவரும் இல்லை. அமெரிக்க ஆளில்லா விமானத்தில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவிப் பொதுமக்கள் என அமெரிக்கா அறிந்து கொள்கிறது.

தற்போதைய ஆப்கானிஸ்த்தான் போர்க்கள நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இதெல்லாம் விஸ்வரூபத்தில் காட்ட முடியாது. நாடுகளுக்கு இடையிலான இறைமை தொடர்பாக Westphalian international legal order என்னும் ஒழுங்கு இருக்கிறது. அதன்படி:

1. எல்லா நாடுகளும் தமது உள்நாட்டு விவகாரங்களை தாமே பார்த்துக் கொள்ளும் உரிமையுடையன.
2. ஒவ்வொரு நாடும் சட்ட ரீதியாக சமமானவை
3. ஒரு நாட்டுக்குள் மற்ற நாட்டுப்படைகள் புகுந்து தாக்குதல் நடத்த முடியாது.

அமெரிக்க ஆளில்லா விமானங்களின் தாக்குதல்கள் அப்பட்டமான ஒரு எல்லை தாண்டிய பயங்கரவாதமே.  அமெரிக்காவுடன் பாக்கிஸ்த்தான் அரசு, படைத்துறை, உளவுத்துறை ஆகியன இரட்டை வேடம் போடுகின்றன. ஒரு புறம் அமெரிக்காவை தமது நாட்டுக்குள் புக அனுமதிக்கின்றன மறுபுறம் அதை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்கின்றன. பின் லாடன் கொலை தவிர அமெரிக்கா பாக்கிஸ்த்தானூக்குள் புகுந்து நடத்தும் தாக்குதல்கள் எல்லாம் பாக்கிஸ்த்தானின் அனுமதியுடனே நடக்கின்றன. மேற்கூறியவை போன்ற அமெரிக்க ஆளில்லா விமானங்களின் தாக்குதல்கள் யேமன், சூடான், சோமாலியா, எதிரித்தியா ஆகிய நாடுகளில் நடந்து கொண்டே இருக்கின்றன. பாக்கிஸ்த்தானைப் போலல்லாமல் இந்த நாடுகளில் அரசுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலேயே நடக்கின்ற எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களே.

பராக் ஒபாமாவிற்குப் பிடித்த தாக்குதல்கள்
பராக் ஒபாமா பதவிக்கு வந்ததில் இருந்தே அவர் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் அதிக விருப்பமும் அக்கறையும் காட்டி வருகிறார். அமெரிக்கப் படையினருக்கு கணனி விளையாட்டுப் போன்ற ஆளில்லா விமானத் தாக்குதல்களால் ஆப்கானிஸ்தானிலும் யேமனிலும் பல அல் கெய்தா மற்றும் தலிபான் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆளில்லாப் விமானத் தாக்குதல்களிற்கு தனக்கு பொறுப்பும் கூறும் வகையற்ற ஒரு தான் தோன்றித்தனமான அதிகாரம் இருக்கிறது என்றும் இருக்க வேண்டும் என்றும் பராக் ஒபாமா கருதுகிறார். சில அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் இத் தக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க இரகசிய நீதி மன்றங்கள் தேவை எனக்கருதுகின்றனர்.

ஆபிரிக்காவில் மேலும் தளங்கள்
வட ஆபிரிக்காவில் அண்மைக் காலங்களாக அல் கெய்தா இயக்கத்தினர் தமது நடவடிக்கையை விரிவு படுத்தியமையைத் தொடர்ந்து அமெரிக்கா அங்கு பல புதிய ஆளில்லாப் போர் விமானத் தளங்களை அமைத்து வருகிறது. மாலியில் அல் கெய்தா தனது கைவரிசையைக் காட்டியமையைத் தொடர்ந்து நிகர் நாட்டில் அமெரிக்கா தனது ஆளில்லாப் போர் விமானத்தளத்தை அமைக்க நிகர் நாடு ஒத்துக் கொண்டுள்ளது. மாலிக்கு நடந்தது தங்களுக்கும் நடக்கக் கூடாது என நிகர் நாட்டு அமெரிக்க சார்பு ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். நிகர் நாட்டில் தளம் அமைக்கும் திட்டம் வெள்ளை மாளிகையின் உத்தரவிற்கு காத்திருக்கிறது. 

அமெரிக்கக் குடி மக்களைக் கொல்லலாமா?
அமெரிக்கக் குடியுரிமையுடைய இசுலாமியர்கள் அல் கெய்தாவில் இணைந்து ஆப்கானிலும் யேமனிலும் செயற்பட்டு வருகின்றனர். இவர்களையும் தேடிக் கொன்றுள்ளன அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள். 2011இல் யேமனில் கொல்லப்பட்ட அன்வர் அவ்லாக்கி என்னும் அல் கெய்தாவின் முக்கிய தலைவரும், அல் கெய்தாவின் பிரச்சாரப் பீராங்கியான சமீர் கான் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்க அமெரிக்கக் குடிமகனக்ளாகும். இது அமெரிக்க நீதிமன்றில் விசாரிக்கப் படவேண்டிய ஒன்று என்று சில சட்ட அறிஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் நோபல் பரிசு பெற்ற தென் ஆபிரிக்க மனித நேயச் செயற்பாட்டாளர் டெஸ்மண்ட் டுடு அவர்கள் "அமெரிக்க மக்கள் தமது உயிர்களிலும் பார்க்க மற்ற நாட்டு உயிர்கள் பெறுமதி குறைந்தது என்று எண்ணுகிறார்களா?; நாங்கள் உங்களைப் போல் மனிதரகள் இல்லாமல் அடிமைகளா?" என்று கேள்விகள் எழுப்பியுள்ளார். அனைவரும் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு குற்றவாளிகளாகக் காணப்பட்ட பின்னரே தண்டிக்கும் உரிமை அமெரிக்காவிற்கு இருக்கிறது என்பது அவரின் விவாதம்.

சட்டங்களுக்கு அப்பாற்பட்டது
அமெரிக்க உளவுத் துறையின் ஆளில்லாப் போர் விமானங்களின் நடவடிக்கைகள் அமெரிக்காவினதோ அல்லது வேறு எந்த ஒரு நாட்டினதோ நீதித் துறையின் நியாயாதிக்கத்திற்கு உள்பட்டதல்ல என்று கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை இது தொடர்பாக விசாரிப்பதாகச் சொன்னது. சில மனித உரிமை அமைப்புக்கள் சாட்டுக்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்தின.

வட வாஜிரிஸ்த்தான்
அமெரிக்காவின் விமானத் தாக்குதல்களால் வட வாஜிரிஸ்த்தான் பிராந்தியத்தில் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக தனக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் படி பாக்கிஸ்த்தானியப் பிரதம நீதியரசர் தோஸ்த் முகமட் கான் பாக் அரசிடம் உத்தரவிட்டார். பாக் பிரதி சட்டமா அதிபர் சமர்ப்பித்த அறிக்கையின் படி:
  • 2008-ம் ஆண்டு 8 தாக்குதல்களில் 52 பேரும், 
  • 2009-ம் ஆண்டு 9 தாக்குதல்களில்  82 பேரும், 
  • 2010-ம் ஆண்டு 73 தாக்குதல்களில் 424பேரும், 
  • 2011-ம் ஆண்டு 38 தாக்குதல்களில் 241 பேரும், 
  • 2012-ம் ஆண்டு 19 தாக்குதல்களில் 95பேரும் கொல்லப்பட்டனர். மொத்தத்தில் 24 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த அறிக்கை சரியானதல்ல என பாக்கிஸ்த்தானிய உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இது பாக்கிஸ்த்தானிய அரசின் இரட்டை வேடத்தை எடுத்துக் காட்டுகிறது. பாக்கிஸ்த்தானில் மட்டும் ஆளில்லாப் போர் விமானத் தாக்குதலால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500இல் இருந்து 3500 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. வாஜிரிஸ்த்தான் மக்கள் அடிக்கடி பாக் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதுண்டு. கொல்லப் படுபவர்களில் 18 முதல் 23 % ஆனவர்கள் பொது மக்களே என்கிறது சி.என்.என் செய்தி நிறுவனம். எல்லாம் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்னும் போர்வையிலேயே அரங்கேற்றப்படுகின்றன. பாக்கிஸ்த்தான் ஆடும் இரட்டை வேட நாடகத்திற்குப் பரிசாக ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து பல பில்லியன் டொலர்களை நிதி உதவியாகப் பெறுகிறது.

08-02-2013 பிற்பகல் மூன்று மணியளவில் தனது எல்லைக்குட்பட்ட கடற்பிராந்தியத்திற்குள் இரு ரசிய Su-27 விமானங்கள் அத்து மீறிப் பிரவேசித்ததாக ஜப்பான் அறிவித்தது. இவ்வாறே சீன விமானங்கள் அடிக்கடி ஜப்பானியப் பிராந்தியத்துக்குள் நுழைவதுண்டு.

12-02-2013 அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது இந்த ஆண்டுக்கான அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையினதும் மூதவையினதும் உறுப்பினர்களுக்கான உரையாற்றத் தயாராக இருக்கும் வேளையில் இரசிய விமானப் படையின் Tu-95 “Bear” bombers வெனிசுலேவியாவின் எல்லை ஓரமாக இருந்த அமெரிக்க எல்லைப் பகுதியில் ஊடுருவின.  அவற்றை அறிந்து கொண்ட அமெரிக்கப் பாதுகாப்புப் பிரிவினர் தமது விமானங்களை அனுப்பி அவற்றை விரட்டினர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பன்னாட்டரங்கில் தனது முக்கியத்துவம் குறைந்து விடவில்லை என்பதைக் காட்டுவதற்காக இரசியா அடிக்கடி அமெரிக்க மற்றும் பிரித்தானிய வான் பரப்புக்களுக்குள் தனது விமானங்களை அனுப்புவதுண்டு.  இதற்கென தனது விமானங்களின் தொழில் நுட்பத்தைப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது இரசியா.

சீனப் படையினர் இந்திய எல்லைகளுக்குள் நுழைந்து தமது முகாம்களையே அமைப்பதுண்டு. பல நூறு சதுர மைல்களை சீனப் படைகள் அருணாச்சலப் பிரதேசத்தில் ஆக்கிரமித்து விட்டன.

எல்லை தாண்டிய இணைய வெளிப்போர்
 பல நாடுகள் கணனி நிபுணர்களைத் தம் படைப்பிரிவில் இணைத்து ஒரு இணையவெளிப் படைப்பிரிவுகளை உருவாக்கியுள்ளன. இவை மற்ற நாட்டுக் கணனி வலையமைப்புக்குள் நுழைந்து தகவல்கள் திருடுவது, அங்கு கணனிகளை செயற்படாமல் செய்வது, அந்த நாடுகளின் மக்களிற்கான வழங்கற் கட்டமைப்புகளை செயற்படாமல் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன. இது ஒரு புதிய வகையான எல்லை தாண்டிய பயங்கரவாதம். அமெரிக்கா தனது மரபு வழிப்படையினருக்கு வழங்குவது போல் தனது ஆளில்லாப் போர் விமானப் படையினருக்கும் இணைய வெளிப் படையினருக்கும் பதக்கம் வழங்கும் முறையை முதலில் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் பராக ஒபாமா அமெரிக்காவின் படைத்துறை, நிதி நிறுவனங்கள், பயணிகள் போக்குவரத்து விமானங்களிற்கும் விமான நிலையங்களுக்கும் இடையிலான தகவற் தொடர்புகள், மற்றும் பொதுமக்களுக்கான வழங்கல்கள் போன்றவற்றை அன்னியர்களின் இணையவெளிப் படையினர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் உளவு பார்ப்பதில் ஈடுபட்டுள்ளன. 61398 எனப்படும் சினப்படையின் இரகசியப் பிரிவு ஒன்று உலகெங்குமுள்ள 141 நிறுவனங்களின் பெருமளவு தகவல்களைத் திருடியுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதற்கின அமைக்கப்பட்ட சிறப்பு வேவுப் பிரிவு இதைக் கண்டுபிடித்துள்ளது. படைத்துறை, தொழிற்துறை, தொழில்நுட்பத்துறை உடபடப் பலதரப்பட்ட பெறுமதி மிக்க தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மறுத்த சீனா தனது நாட்டில் இருந்துதான் பெருமளவு தகவற் திருட்டு நடப்பதாகத் தெரிவிக்கிறது.

Sunday 17 February 2013

இலங்கை அரசுக்கு எதிரான மாநாடு பிரித்தானியப் பாராளமன்றத்தில்

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான மாநாடு 2013 பெப்ரவரி 27-ம் திகதி நடைபெறவுள்ளது. இதில் சனல் - 4 தொலைக்காட்சியின் புதிய சூடற்ற பிரதேசம்(No Fire Zone) என்ற ஆவணப்படத்தின் முன்னோட்டம் திரையிடப்படவுள்ளது.

இதில் சனல் - 4 தொலைக்காட்சியின் புதிய சூடற்ற பிரதேசம்(No Fire Zone) என்ற ஆவணப்படம் பின்னர் ஜெனிவா மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரின்போது முழுமையாகத் திரையிடப்படும்.

உலகத் தமிழர் பேரவை ஒழுங்கு செய்த மேற்படி மாநாட்டில் 2013 மார்ச் மாதம் நடக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள நாடுகளின் வெளிநாட்டமைச்சின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். பிரித்தானியாவில் இருந்து செயற்படும் பன்னாட்டு மன்னிப்பு சபையும் அமெரிக்காவிற் செயற்படும் மனித உரிமைக் கண்காணிப்பகமும் இந்த மாநாட்டில் ஜெனிவா மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரில் தாம் சமர்ப்பிக்கவிருக்கும் அறிக்கைகளை வெளியிடவுள்ளன

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க அமைத்த நிபுணர்குழுவின் முன்று உறுப்பினர்களில் ஒருவரான யஸ்மின் சூக்காவும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார். இலங்கைத் தமிழர்களை ஏமாற்ற அனுப்பப்பட்ட மாயமானாகிய நேர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் இதில் பங்குபற்றலாம் என எதிர்பார்க்ப்படுகிறது. இவர் தமிழர்களுக்கு எதிராக ஏதாவது குற்றங்களை மீண்டும் முன்வைப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சர்ச்சைகுரியவர்களான இரா சம்பந்தனும். எஸ் சுமந்திரனும் இந்த மாநாட்டில் பங்கு பற்றுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இவர்கள் மீண்டும் புலிகள் பயங்கரவாதிகள் என்று சொல்வார்களா? சிங்கக் கொடியை அம்மனின் கொடி என்பார்களா? அல்லது இந்தியா சொல்லிக் கொடுத்ததைச் சொல்வார்களா?

பிரித்தானியாவின் பிரதிப் பிரதம மந்திரி நிக் கிளேக், எதிர்க் கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட், எதிர்க் கடசியின் நிழல் வெளிநாட்டமைச்சர் டக்ளஸ் அலெக்சாண்டர் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கு பெறவிருக்கின்றனர்.


Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...