Friday 29 November 2013

சீனா, ஜப்பான், அமெரிக்கா - போர் மூளுமா?

செங்காகு தீவுக் கூட்டத்தில் ஜப்பானியப் போர் விமானம்
சீனாவும் தனது ஒரு தலைப்பட்சமாக நிர்ணயித்த வான் பாதுகாப்பு வலயத்திற்கு தனது SU-30 மற்றும் J-11போர் விமானங்களையும் KJ-2000 வான் சார் கதுவி விமானங்களையும் அனுப்பியுள்ளது. சீனா 24-11-2013 கிழக்குச் சீனக் கடலில் பத்து இலட்சம் சதுர மைல் வான்பரப்பை தனது பிரதேசம் எனப் பிரகடனப் படுத்தி அதற்குள் பறக்கும் விமானங்கள் தனது அனுமதியைப் பெறவேண்டும் என்றும் அல்லது அவற்றின் மீது அவசர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தது.

சீனாவின் அறிவிப்பை அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, ஒஸ்ரேலியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தமது ஆட்சேபனையைத் தெரிவித்தன. சீனாவின் அறிவிப்பைத் தொடர்ந்து அதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக நவம்பர் 26-ம் திகதி முற்பகல் 11-00இல் இருந்து பிற்பகல் 1.22 வரை அமெரிக்கா தனது இரு பி-52 போர் விமானங்களை சீனா அறிவித்த வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பறக்க விட்டது. இது சீனா தனது வான் பாது காப்பு வலயம் என அறிவிப்பதற்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட பறப்பு என்றது அமெரிக்கா. இதைத் தொடர்ந்து ஜப்பானியப் போர் விமானங்களும் தென் கொரியப் போர் விமானங்களும் குறித்த வான்பரப்பிற்குள் பறந்து சென்றன.

போர் மூளுமா?
கிழக்குச் சீனக் கடலில் நடந்து கொண்டிருப்பது ஒரு மீசை முறுக்கலும் வேட்டியை மடிச்சுக் கட்டுதலும் தான். மோதலுக்கான ஆரம்பம் அல்ல. தமிழ்ப்படத்தில் வில்லன் டேய் எனக் கத்த கதாநாயகன் அதும் உரத்து டேய் எனக் கத்துவது போல்தான் இப்போது நடக்கிறது. இது ஒரு போராக மாறுவதை இதில் சம்பந்தப் பட்ட எந்த ஒரு நாடும் விரும்பவில்லை. ஒரு போர் மூளும் ஆபத்து இருந்தால் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிக்கும். பங்குகளின் விலைகள் சரியும். அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை. எந்த ஒரு நாடும் படைகளை நகர்த்தியதாக தகவல்கள் இல்லை. சீனா தொடங்கிய இந்த முறுகல் நிலையில் அது தோற்றுவிட்டதாக சீன மக்கள் உணர்வதை சீன ஆட்சியாளர்கள் விரும்ப மாட்டார்கள். சீனா தனது வான் பாது காப்பு அறிவிப்பை திரும்பப் பெற மாட்டாது. மாறாக இந்ந்த அறிவிப்பை தொடர்ந்து வலியுறுத்தாமல் நாளடைவில் அது நீர்த்துப் போகும்.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...