Sunday 15 September 2013

மீண்டும் ஒரு அல் கெய்தாத் தலைவரைக் கொன்றது அமெரிக்கா

அமெரிக்காவின் ஆளில்லாப் போர்விமானத் தாக்குதலில் அரபு குடநாட்டிற்கான அல் கெய்தாவின் (al-Qaeda in the Arabian Peninsula - (AQAP) முன்னணித் தலைவர்களில் ஒருவரான கயீத் அல் தஹாப் (Qaeed al-Dhahab) யேமனில் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் இசுலாமிய சரியாமீதான போர் (U.S. “war on Islamic sharia”)
நடவடிக்கையின் ஒரு அம்சமாக கயீத் அல் தஹாப் கொல்லப்பட்டுள்ளார். யேமனின் தெற்குப் பகுதி மாகாணமான பெய்டாவில் உள்ள மனசே கிராமத்தில் மகிழூர்ந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கையில் கயீத் அல் தஹாப்பும் அவருடன் பயணித்துக் கொண்டிருந்த வேறு இருவரும் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு ஜூலை 28-ம் திகதிக்குப் பின்னர் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் 40இற்கு மேற்பட்ட தாக்குதல்களை யேமனின் தெற்கு, கிழக்கு தென் கிழக்குப் பிராந்தியங்களில் மேற்கொண்டு பலரைக் கொன்றுள்ளது.

கயீத் அல் தஹாப் அமெரிக்கா ஆக்கிமிப்பாளர்களுக்கு எதிராக ஈராக்கில் தீவிரமாகப் போராடிய் ஆயிரக்கணக்கான அல் கெய்தா போராளிகளில் முக்கியமானவர் ஆவர். அவர் பின்னர் யேமனில் செய்ற்பட்டுக் கொண்டிருதார்.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தற்போது உலகிலேயாஆபத்து மிக்க ஒரு அமைப்பாக அரபு குடநாட்டிற்கான அல் கெய்தா(AQAP) வைக் கருதுகிறது. கயீத் அல் தஹாப்பின் கொலையை அல் கெய்தாவும் ஒத்துக்கொண்டுள்ளது. 12-ம் திகதி வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்ட கயீத் அல் தஹாப் 14-ம் திகதி வியாழக்கிழமை கொல்லப்பட்டார்.

கயீத் அல் தஹாப் அமெரிக்காவில் பிறந்த இசுலாமிய மத போதகரும் தீவிர அல் கெய்தாச் செயற்பாட்டாளரும் அமெரிக்க ஆளில்லா விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டவருமான அன்வல் அல் அவலாக்கியின்( Anwar al-Awlaqi) திருமணமுறை மைத்துனருமாவார்(brother-in-law).

2011-ம் ஆண்டு யேமன் அதிபர் Ali Abdullah Salehஇற்கு எதிராக நிகழ்ந்த மக்கள் எழுச்சியை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திய அல் கெய்தா இயக்கத்தினர் யேமனின் தெற்குப் பிராந்தியத்தில் பெரும் நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்றுவரை பெரும் நிலப்பரப்பை அல் கெய்தா போராளிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...