Saturday 8 June 2013

பாஜக குழு தட்சணை பெற இலங்கை போனார்களா?

பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் தன்னுடன் ஐந்து பேர்களை இணைத்துக் கொண்டு  ஜூன் 4முதல்ஐந்து நாள் பயணமாக இலங்கைக்குச் சென்றுளார். 1. சிவசேனைத் தலைவர் சுரேஷ் பிரபு, 2. மூத்த ஊடகவியலாளரான ஸ்வபன் தாஸ் குப்தா, 3. ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி விவேக் கட்ஜு, 4. ஆர்.எஸ்.எஸ்.ஸின் ராம் மாதவ், மனித உரிமை ஆர்வலர் மோனிக் அரோரோ.

சிங்களவர்கள் சீதையை இராவணனிடமிருந்து மீட்கத் தங்களுக்கு உதவியவர்கள் எனக் கருதும் பஜக கும்பல் வானரப்படை என வால்மிகி கூறியது திராவிடர்களே என எழுதிய விவேகானந்தரின் 150பிறந்த நாளை ஒட்டி இலங்கையில்  தபாற்தலை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றதாகச் சொல்லப்படுகிறது. இலங்கையில் இந்துக் கோவில்களில் அடாவடித்தனம் புரியும் அமைச்சர் மேர்வின் சில்வாவையும் பஜகவினர் சந்தித்தனர். இலங்கையில் ஆயிரக் கணக்கான இந்துக் கோவில்கள் அழிக்கபப்ட்டதைப் பற்றி பஜகவினர் கண்டுகொள்வதில்லை.

காவிக்கும்பல் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் வராது என்பதை புது டில்லித் தென்மண்டலப் பார்ப்பனக் கும்பல் சுஸ்மா சுவராஜ்ஜை அனுப்பி ராஜபக்சேக்களுக்கு உறுதி மொழி வழங்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்திய ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு தமது பயண ஏற்பாடுகளைச் செய்ததாகச் செய்திகள் வெளிவந்தன. இப்படி ஒரு குழு வருகின்றது என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரகத்திற்கும் தெரியாமல் இருந்தது. ரவிசங்கர் பிரசாத் தமது பயணம் பாஜகவின் அதிகார பூர்வ பயணம் அல்ல தனிப்பட்ட ஒரு பயணம் என்றார். அத்துடன் தனது பயணம் இலங்கையில் தமிழர்கள் தொடர்பாக பஜகவின் நிலையைத் தெளிவாக்க உதவும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இலங்கை சென்ற பஜக குழு இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்க இந்தியாவிடம் மந்திரக் கோல் இல்லை என்று சொன்னார்கள். "பயங்கரவாதத்தை" ஒழித்தமைக்காக அவர்கள் ராஜபக்சேவிற்கு பாராட்டும் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கருத்து வேறு விதமாக இருந்தது. இலங்கையில் தமிழர்கள் காணிகள் அபகரிக்கப்படுவதை குழுவினர் உறுதி செய்ததாக அவர்கள் தன்னிடம் கூறியதாக சம்பந்தர் தெரிவித்தார். பஜகவினர் தமிழ் மக்களைச் சந்திக்கும் போது இலங்கைப்படையினரும் இந்திய உளவாளிகளும் மக்களோடு மக்களாகக் கலந்து கொண்டனர். இது சில தமிழர்களை ஆத்திரப்படுத்தியது. இலங்கை அரசிடம் விருந்துண்ண வருபவர்களை எங்களைச் சந்திக்க அழைத்து வராதீர்கள் என யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரிடம் அவர்கள் கடிந்து கொண்டனர் என்கின்றன செய்திகள்.

"இந்தியத் தூதுவர் ஒழுங்கு செய்த சந்திப்பு" எனச் சொல்லி தமிழ் மக்களை அழைத்த போதிலும் உண்மையில் இலங்கைப் படைத்துறையினரே இந்த இந்திய பஜக குழுவினரினர் உடனான ஏற்பாடு செய்திருந்தனர்.

பஜகவினரைப் பொறுத்தவரை மூன்று முனையில் இலங்கைப் பிரச்சனையை எதிர் கொள்கின்றனர். முதலாவது புது டில்லி தென்மண்டல பூனூல் கும்பல்களின் சொல்லைக் கேட்டு தமது வெளிநாட்டுக் கொள்கையை வகுக்க வேண்டும், இரண்டாவது தமிழ்நாட்டில் வாக்கு வேட்டை அரசியல் நடத்த வேண்டும், மூன்றாவது இலங்கை ஆட்சியாளர்களிடமிருந்து தட்சணை பெற வேண்டும். பஜக அறுவர் குழுவின் இலங்கைப் பயணம் மூன்றாவது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...