Thursday 6 June 2013

படைப்பாளிகளும் படைப்பாற்றல் மேம்படுத்தலும்.

ஒரு விளையாட்டுவீரனுக்கு பயிற்ச்சி எவ்வளவு முக்கியமோ படைப்பாளிக்கும் படைப்புப் பயிற்ச்சி அதே அளவு முக்கியமாகும் . தினசரி தனது படைப்புக்களை அவன் செய்து கொண்டே இருக்க வேண்டும். தன் படைப்பை தானே இரசிக்கும் மனப்பாங்கும் அவனுக்கு வேண்டும். ஜஸ்ரின் மஸ்க் என்னும் நாவலாசிரியர் எந்த சந்தர்ப்பத்திலும் காலையில் மூன்று பக்கங்கள் எழுதாமல் அவர் இருப்பதில்லை. இந்தப் பயிற்ச்சி தனது மனதிற்கு ஒரு திறவு கோலாக அமைகிறது என்கிறார் அவர். படைப்பாளி தன் படைப்பாற்றலை மேம்படுத்தச் செய்ய வேண்டியவை:

1. அமிழ்ந்து போதல்: தனது படைப்பில் படைப்பாளி முற்றாக அமிழ்ந்து போக வேண்டும்.  Michelle Ward என்ற படப்பாற்றல் பயிற்ச்சியாளர் முற்றாக படைப்பில் அமிழ்ந்து போவதைப் போல் சிறந்தது எதுவுமில்லை என்கிறார்.

2.  இசை கேட்டல்: இசை கேட்டல் படைப்பாற்றலை வளர்க்கிறது என்கின்றனர் பல படைப்பாளிகள். இசை கேட்கும் போது படைப்பாற்றல் தூண்டப்படுகிறது என்கின்றனர் அவர்கள்.

3. உகந்த இடத்தைத் தேர்ந்தெடுங்கள்: உங்கள் படைப்பாற்றலை தூண்டி விடக் கூடிய இடத்தைத் தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். இது அவரவரைப் பொறுத்து வேறுபடலாம். சிலருக்கு பூங்காவாகவும், சிலருக்கு நல்ல சூழலுடன் கூடிய அறையாகவும், சிலருக்கு தனிமையான வெளியாகவும் இருக்கலாம்.  பயிற்ச்சியினாலும் அனுபவத்தாலும் இந்த இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

4. காரியத்தில் இறங்குதல்: என்ன எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருப்பதிலும் பார்க்க ஒரு பேனாவையும் தாளையும் எடுத்துக் கொண்டு காரியதில் இறங்கினால் கற்பனை தானாகவே வருகிறது என்கின்றனர் பல எழுத்தாளர்கள்.  தொடங்கினால் தடையின்றித் தொடர்வதே படைப்பாளிகளின் தன்மையாகும்.

5. காத்திருக்கும் வேளைகளைப் பயன்படுத்துதல்
: பேருந்து நிலையத்திலோ தொடரூந்து நிலயத்திலோ காத்திருக்கும் போது படைப்பாற்றலைத் தூண்டி விடுங்கள்.

6. குறிப்பெடுத்தல் முக்கியம்
: படைப்புத் திறன் சில சமயங்களில் எதிர்பாராமல் பொங்கி எழும். அப்போது குறிப்பெடுத்துக் கொள்ளுதல் முக்கியம்.

7. உகந்த நேரத்தைக் கண்டுபிடியுங்கள்
: உங்கள் படைப்பாற்றல் பொங்கி எழும் நேரங்களை அனுபவத்தின் மூலமும் தன்-அவதானிப்பு மூலமும் அறிந்து கொள்ளலாம். அந்த நேரத்தை உங்கள் படைப்பிற்காக ஒதுக்குங்கள்.

8 . ஊக்கமளிக்கக் கூடியவர்களுடன் பழகுங்கள்: உங்கள் படைப்புத்திறனை ஊக்கமளிக்கவர்களைக் கண்டறிந்து அவர்களுடன் பழகுங்கள். சிலர் உங்கள் படைப்புத்திறனை மழுங்கடிக்கக் கூடியவர்களாகவும் இருப்பர். அவர்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

9. உங்கள் உள்ளுணர்வுகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளுங்கள். உள்ளுணர்வில் இருந்து எழுவதே சிறந்த படைப்பு. உங்கள் உள்ளுணர்வை தூண்டிவிடவும் அதைப் புரிந்து கொள்ளவும் பழகுங்கள்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...