Monday 6 May 2013

உணவே மருந்தாகும்

உணவியல் நிபுணர்கள் நாம் கட்டாயம் உண்ண வேண்டிய உணவுகள், எமது பசியை அடக்க உண்ண வேண்டிய உணவுகளை வகைப்படுதியுள்ளனர். அவற்றைப் பின்பற்றினால் எமது ஆரோக்கியம் பேணப்படும்.  சரியான முறையில் சரியானவற்றை உண்டால் உணவு எமக்கு மருந்தாகும்.

 கட்டாயம் உண்ண வேண்டிய உணவுகள்:
1. அவரைவகைகள் - பருப்பு, பீன்ஸ், அவரை எனப் பல வகையில் கிடைக்கும் உணவு இது. இதில் உள்ள நார் கொழுப்பைக் கரைக்கவல்லது.
2. நீலநெல்லி(Blueberries) - பழங்களிலேயே அதிக antioxidants கொண்டது இது.
3. தயிர் - உங்களுக்குத் தேவையான் கல்சியம் இதில் உண்டு. அத்துடன் உங்கள் குடலைச் சுத்தமாக வைத்திருக்க இதில் உள்ள  probiotics உதவுகிறது.
4. ஓட்ஸ் - இது கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
5. பூக்கோசு (broccoli) - மரக்கறி என்று சொல்கையில் முதல் தேர்வாக இருக்க வேண்டிய உணவு இது. இது எமது உடலில் enzymes(நொதியூக்கி) அதிகரிக்கச் செய்கிறது. Enzymes are large biological molecules responsible for the thousands of chemical interconversions that sustain life.
6. முட்டை - புரதம் நிறைந்த உணவு.
7. கீரை - இதில் vitamins A, C and K, fiber, iron, calcium, potassium, magnesium and vitamin E ஆகியவை உண்டு.
8. விதைக்கலவை (Mixed Nuts) - தற்போது கடைகளில் இவை நிறையக் கிடைக்கின்றன. அண்மைய ஆராய்ச்சிகளின்படி விதைகளை உண்பவர்கள் உண்ணாதவர்களிலும் பார்க்க இரண்டு ஆண்டுகள் அதிகம் வாழக்கூடிய சாத்தியம் இருக்கிறது எனக் கண்டறிபப்பட்டுள்ளது. அக்ரூட் பருப்பும் (Walnuts) பாதாம் பருப்பும் இவற்றில் முக்கியமானவை.
9. தோடம்பழம்: ஒரு தோடம்பழத்தில் ஒருவருக்குத் தேவையான விட்டமின் C உண்டு.
10. இஞ்சி: தமிழ்ச்சித்தர்கள் இஞ்சியையும் கடுக்காயையும் மிக முக்கியமாக உண்ண வேண்டும் என்றனர். கிருமிகளைக் கொல்லக் கூடியது. கொழுப்பைக் கரைக்கக் கூடியது.


பசியடக்கும் உணவுகள்: 
1. அவக்காடோ- இது இருதயத்திற்கு உகந்த monounsaturated fatஐக்கொண்டுள்ளது. இதை அளவோடு உண்ண வேண்டும்.
2. வற்றாளைக் கிழங்கு(Sweet Potatoes) - விட்டமின் ஏ, பி நிறைந்தது. இதில் உள்ள சர்க்கரை பசியை அடக்கும் அத்துடன் சர்க்கரையை சிறிது சிறிதாக இரத்தத்தில் சேரவைக்கும்.
3.  ஓட்ஸ் - காலை உணவாக ஓட்ஸை எடுத்தால் அது மதியம் வரை உங்கள் பசியை அடக்கி வைக்கும். இதில் உள்ள ghrelin சிறந்த பசியடக்கி.
4. தண்ணீர் - சாப்பிடமுன்னர் இரண்டு கிளாஸ் தண்ணீர் அருந்துப்வர்கள் குறைந்த அளவு உணவு உட்கொள்வதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
5. பாதாம் பருப்பு - இது antioxidants, vitamin E, and magnesium ஆகியவை நிறைந்தது. ஒரு கையளவு பாதாம் பருப்பு தினமும் உண்ண வேண்டும்.
6. முட்டை- காலை உணவாக முட்டையை உண்டால் அது நீண்ட நேரம் உங்கள் பசியை அடக்கி வைக்கும். புதிய ஆய்வுகள் முட்டையில் உள்ள கொழுப்பு இருதயத்திற்கு நன்மை பயக்கக் கூடியது என்று சொல்கிறது,.
7. கறுப்பு சாக்லெட் - இதில் உள்ள antioxidants நன்மை பயக்கக் கூடியது.
8. பச்சை தேநீர் - இதிலும் antioxidants உள்ளது.
9. இலவங்கப்பட்டை (கறுவா) - இது  உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் மட்டத்தை(blood sugar levels) குறைத்து உங்கள் பசியை அடக்கும். உங்கள் உணவுகளில் இதை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.
10. காப்பி - இது சோர்வைப் போக்கும் குணமுடையது. உங்கள் பசியால் வருவது சோர்வு. உங்கள் உடலின் metabolismஐ இது ஊக்குவிக்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...