Tuesday, 28 May 2013

தள்ளாடும் ஐரோப்பா விழுமா?

நான்கு நூற்றாண்டுகள் உலகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஐரோப்பா, பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களை உலகிற்கு கொடுத்த ஐரோப்பா, மக்களாட்சி உட்படப் பல நாகரீக வளர்ச்சிகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஐரோப்பா இப்போது பொருளாதார ரீதியில் தள்ளாடுவது உண்மை. அது வீழ்ச்சியடைய சீனாவும் இந்தியாவும் எழுச்சியடைந்து உலகத்தை ஆட்டிப்படைக்குமா? 

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது
ஐரோப்பிய நாணயக்கட்டமைப்பு மருத்துவ மனையில் கிரேக்கமும் ஸ்பெயினும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தன. யூரோ நாணயத்தால் பாதிக்கப்ப்பட்ட மற்ற நாடுகளான அயர்லாந்து, போர்த்துகேயம், இத்தாலி ஆகிய நாடுகள் பூரண சுகமடைய முன்னரே மருத்துவ மனையில் இருந்து விலகி விட்டன. கிரேக்கம் யூரோ நாணயக் கட்டமைப்பில் இணையும் போது தனது பொருளாதார நிலை பற்றி திரிக்க்கப்பட்ட தகவல்களை வழங்கியிருந்தது. இதனால் பல பொருளாதார நெருக்கடிகளை அது சந்திக்க வேண்டியிருந்தது. இப்போது கிரேக்கமும் ஸ்பெயினும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து விலக்கப்பட்டு சாதாரண சிகிச்சைப்பிரிவில் இருக்கின்றன. ஐரோப்பாவின் இத்தனை பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அரபு வசந்தத்தின் போது துனிசியாவிலும் எகிப்திலும் அரசியல் மாற்றம் ஏற்படுத்துவதற்கு தமது பங்களிப்பை வழங்கத் தயங்கவில்லை. கடாஃபியைப் பதவில் இருந்து தூக்கி எறிய தமது படைகளை ஈடுபடுத்தி முன்னின்று போர் தொடுக்கவும் தயங்கவில்லை. சிரியப் போரைத் திசை மாற்றும் வல்லமை பிரித்தானியாவிற்கும் பிரான்ஸுக்கும் உண்டு. 

தலை தப்பிய யூரோ நாணயம்
பல நாடுகளை ஒரு பொருளாதாரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஒரு புது முயற்ச்சியில் ஈடுபட்டன 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள். அவற்றில் 17 நாடுகள் ஒரு பொது நாணயத்தை தமதாக்கி ஒரு புதுப் பொருளாதார பரீட்சையில் இறங்கின. கிரேக்க நாடு யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து விலகும் யூரோ நாணயம் ஒழிந்துவிடும் என்று ஓர் ஆண்டுக்கு முன்னர் எதிர்வு கூறியவர்கள் அது இப்போது தவறு எனக் கூறத் தொடங்கி விட்டனர். அமெரிக்காவிலும் ஜப்பானிலும் உள்ளக ஏற்றத்தாழ்வுகள் குறைவு. ஆனால் ஒரு நாடாக இல்லாத ஐரோப்பிய ஒன்றியத்தில் வேறுபட்ட பொருளாதார நிலையில் உள்ள 27 நாடுகள் இருக்கின்றன.

பொலியும் போல்டிக்
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள போல்டிக் நாடுகள் மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் 2013இல் பெரும் பொருளாதார வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. லத்வியாவும் எஸ்ரோனியாவும் 3 விழுக்காட்டிலும் அதிக பொருளாதார வளர்ச்சியை 2013இல் எட்டும். அவற்றை ஒட்டி மற்ற ஐரோப்பிய நாடுகளில் வளர்ச்சி பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு 0.6 விழுக்காடு பொருளாதாரத் தேய்வைக் கண்ட யூரோ வலய நாடுகள் 2013இல் 0.4 விழுக்காடு தேய்வை மட்டுமே அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலை நிமிரும் தல
ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய பொருளாதாரமான ஜேர்மனி 2013இல் தனது உள்நாட்டு கொள்வனவு வலுவால் பொருளாதாரத் தேய்வில் இருந்து தப்பித்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேர்மனியின் கார் உற்பத்தியை வோல்க்ஸ் வகன் நிறுவனம் இனிவரும் நாட்களில் பெரிதும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்க குடும்பம் ரெம்பப் பெருசு
உலகிலேயே பெரிய பொருளாதாரம் ஐரோப்பிய ஒன்றியமாகும். 2012 அதன் மொத்த பொருளாதார உற்பத்தி US$16.566 ட்ரில்லியன்களாகும். தனி நபர் வருமானம் என்று பார்க்கையில் ஐரோப்பிய ஒன்றை நாடுகளின் வருமானம் சீனா, இந்தியா போன்ற நாடுகளிலும் பார்க்க பல மடங்கானதாகும். தனிமனித சுதந்திரம் பேணல், போன்றவற்றில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் உலகில் முன்னணியில் இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் அதையே பின்பற்றுகின்றன. மனித உரிமை பேணல், சமூக நலன் பேணல் போன்றவற்றில்உலக வல்லரசுகள் ஐந்தில் இரண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் இரண்டு பெரும் போர்களின் பின்னர் தமது எல்லைகளையும் நாடுகளிற்கிடையிலான உறவுகளையும் முற்றாகச் சரிப்படுத்தி விட்டன.  யூரோவலய நாடுகளின் கடன் பளு அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. உலகப் பொருளாதாரப் போட்டியிடுதிறன் சுட்டியில் (Global Competitiveness Index) பின்லாந்து, ஒல்லாந்து, ஜேர்மனி, பிரித்தானியா, சுவீடன் ஆகிய நாடுகள் முதல் பத்துக்குள் வருகின்றன. சீனாவின் மிகப்பெரும் பொருளாதார பங்காளி (trading partner) ஐரோப்பிய ஒன்றியமாகும். இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரப் பங்காளி. ஆசியான் நாடுகளின் இரண்டாவது பெரிய பொருளாதாரப் பங்காளி. ஜப்பனின் மிகப்பெரிய பொருளாதாரப் பங்காளி. ஐரோப்பியப் பொருளாதாரம் தேய்மானமடைந்தால் அது அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதிக்கும் என்பதை இந்த நாடுகள் நன்கு அறியும். மொத்த உலகின் பாதுகாப்புச் செலவீனத்தில் 20 விழுக்காடு ஐரோப்பிய நாடுகளினுடையது. சினாவின் விழுக்காடு 8 மட்டுமே. பிரான்ஸும் பிரித்தானியாவும் உலகின் எந்தப் பகுதியிலும் சென்று போர் புரியும் வல்லமையையும் மிகவும் புதிய தர படைக்கலன்களையும் கொண்டுள்ளன.

வயதுப் பிரச்சனை
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இளையோர் தொகை குறைவாகவும் முதியோர் தொகை அதிகமாகவும் இருக்கிறது என்ற குறை சொல்லப்படுகிறது. இந்த வயதும் பிரச்சனை பல நாடுகளைப் பாதிக்கிறது. 2030-ம் ஆண்டு சீனர்களின் சராசரி வயது தற்போது உள்ள35 இல் இருந்து 43 ஆக உயரவிருக்கிறது.by 2030, ஜப்பானில் இது 45 இல் இருந்து 52இற்கு உயரும், ஜேர்மனியில் 44 tஇல் இருந்து49இற்கு உயரும். ஆனால் பிரித்தானியாவில் 40 இல் இருந்து 42இற்கு மட்டுமே. உயரும். பிரன்ஸும் சுவீடனும் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் ஊக்கங்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தி விட்டன.

விழ விழ எழுவோம்
தற்போதையப் பொருளாதாரச் சரிவில் இருந்து மீள எழுச்சி(bounce back) பெறக்கூடிய அனுபவம், அறிவு, திறமை போன்றவை ஐரோப்பியர்களுக்கு இருக்கிறது. உள்ளக அரசியில் புரட்ச்சிகளையோ எழுச்சிகளையோ சமாளிக்கக் கூடிய நிர்வாகத் திறனும் ஆட்சியாளர்களிடம் இருக்கிறது. அரபு வசந்தம் ஐரோப்பாவிற்கு பரவும் என எதிர்பார்த்தனர் சிலர்!
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...