Tuesday 23 April 2013

வேற்றுலகங்கள் மூன்று கண்டு பிடிக்கப்பட்டன. மனிதர்கள் உண்டா

பூமியில் இருந்து 1200ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி நாம் வாழும் பூமியை ஒத்த கிரகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் விண்வளி ஆய்வு நிறுவனமான நாசாவின் கெப்லர் செய்மதித் தொலைநோக்கி மூலமாக பூமியை ஒத்த ஏழு கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் மூன்றில் உயிரனங்கள் இருப்பதற்குரிய சூழ் நிலை நிலவுகிறது.

கெப்லர்-62 என்பது ஐந்து கிரகங்கள் சுற்றிவரும் ஒரு நட்சத்திரம். அந்த ஐந்து கிரகங்களில் ஒன்று கெப்லர்69C எனப் பெயரிடப்பட்டுள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சுக்கிரனும் புதனும் இருக்கின்றன. அதைப் போலவே 69Cஇற்கும் அது சுற்றும் நட்சத்திரத்திற்கும் இடையில் ஒரு கிரகம் சுற்றுகிறது.  ஆனால்ல் கெப்லர் 69C மிகவும் வெப்பமான கிரகமாகக் கருதப்படுகிறது. கெப்லர் 62E, கெப்லர் 62 F ஆகிய இரு கிரகங்களும் கெப்லர்69C இலும் பார்க்க சிறியன.  இவை கெப்லர் 69C இலும் பார்க்கக் குளிர்ச்சியானவை.

அண்ட வெளியில் பல் எமது சூரியன் போல் பல பில்லியன்கள் நட்சத்திரங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் சுற்றி பல கிரகங்கள் இருக்கின்றன. அவற்றில் சாதகமான வெப்பநிலை, ஒட்சிசன்(Oxygen) போன்ற தேவையான வாயுக்கள், நீர், காந்த மண்டலம் ஆகியவை இருந்தால் அங்கு உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சிலி நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறிய உடலின் டி.என்.ஏக்களை ஆய்வு செய்து அது மனித உடல் அல்ல என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது வேற்றுக் கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்தவர்களில் ஒருவரின் உடலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

வேற்றுக் கிரகங்களுக்கு நாம் பயணம் செய்வது சாத்தியமற்ற ஒன்றாக இப்போது இருக்கிறது. ஆனால் அவர்கவிரைவில் வேற்றுலகங்களில் வாழும் மக்களுடன் தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொள்வோமா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...