Wednesday 17 April 2013

நகைச்சுவை: கோழிக்குஞ்சும் கோத்தபாயவும்

தனது நோயாளியை அழைத்த மனோதத்துவ நிபுணர் உன்னை என்னால் விரைவில் குணப்படுத்த முடியும் ஆறு மாதத்துக்குள் நீ நல்ல முன்னேற்றம் அடைந்துவிட்டாய் என்றார்.

அதற்கு அந்த நோயாளி ஆறு மாததிற்கு முன்னர் நான் இந்த நாட்டின் பிரதம மந்திரியாய் இருந்தேன். இப்போது வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறேன். இதைப் போய் முன்னேற்றம் என்கிறீர்களே என்றான்.

xxxxxxxxxx

டேவிட் ஒரு அப்பாவி எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்காதவன். அவன் ஒரு நாள் காரை வேகமாக ஓட்டிச் செல்லும் போது குறுக்கே வந்த ஒரு முயலை மோதிவிட்டான். திடீரென காரை நிறுத்தி இறங்கிப் பார்த்தபோது அந்த முயல் இறந்து கிடந்தது. டேவிட் உடனே நிலத்தில் விழுந்து அழத் தொடங்கி விட்டான். அந்த வழியே வந்த் இன்னொரு கார் அங்கு நிறுத்தப்பட்டு அதில் இருந்து ஒரு பெண் இறங்கி வந்தாள். நடந்ததை விசாரித்த அவள் இதற்குக் கவலைப்படாதே எனச் சொல்லி தனது கைப்பையைத் திறந்து அதனுள் இருந்து ஒரு spray can ஐ எடுத்து அந்த முயலின் மீது spray பண்ணினாள் உடனே முயல் (hare) எழுந்து பாய்ந்து கொண்டு சிறிது தூரம் சென்று பின்னர் நின்று அவர்களைப்பார்த்து கை அசைத்தது(wave). மீண்டும் சிறிது தூரம் சென்று பின்னர் நின்று அவர்களைப்பார்த்துக் கையசைத்தது. இப்படி தொடர்ந்து செய்து கொண்டே இருந்தது. ஆச்சரியப்பட்ட டேவிட் அந்தப் பெண்ணைப்பார்த்து என்ன spray பண்ணினாய் என ஆச்சரியத்துடன் கேட்டாள். அதற்கு அந்தப்பெண் அந்த spray canஇல் எழுதி இருந்ததை வாசித்தாள்: "Hair spray. Restores life to dead hair(hare). Adds permanent wave."


xxxxxxxxx

 கோழிக்குஞ்சு ஏன் தெருவைக் கடந்து சென்றது என்ற கேள்விக்கு இவர்கள் அளித்த பதில்:

இந்திய வெளியுறவுத்துறை: தெருவைக் கோழிக்குஞ்சு கடக்காவிடின் சீனா கடந்துவிடும்.

அமெரிக்க வெளியுறவுத்துறை: கோழிக்குஞ்சை பாதுகாப்பாக தெருவைக் கடக்க இரண்டு பக்கமும் வரும் வாகனங்களை நிறுத்த வேண்டும் என ஒரு தீர்மானத்தை நாம் ஐநா மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவர இருந்தோம். இந்தியாவுடனான கேந்திரோபாய நட்புறவைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் நிர்ப்பந்தத்தின் பேரில் "வாகனங்களை நிறுத்த வேண்டும்" என்றபதம் நீக்கப்பட்டுவிட்டது.

கருணாநிதி: அந்தப் பக்கம் டெசோ மாநாடு நடப்பதால் அது கோழிக்குஞ்சுக்குப் பாதுகாப்பான இடம். தேர்தலுக்குப் பின்னர் கழகக் கண்மணிகளுக்கு கோழி சூப் இலவசமாக வழங்கப்படும்.

ஞானதேசிகன்: தேர்தலில் காங்கிரசு தனித்துப் போட்டியிடமுடிவு செய்துள்ளது அதனால் கோழிக்குஞ்சு தெருவைக்கடந்தது.

சூனா சுவாமி: இந்தப் பக்கம் porkis இருக்கிறாள். 

ப சிதம்பரம்: காங்கிரசை யாரும் தனிமைப்படுத்த முடியாது என்பதை கோழிக்குஞ்சு உணர்ந்து கொண்டதால் அது தெருவைக் கடந்து செல்கின்றது.

கோத்தபாய ராஜபக்ச: அது ஒரு ஆயுதமேந்திய பயங்கரவாதி. It is a legitimate target to be attacked and destroyed. அதனால் கோழிக்குஞ்சு தெருவைக்கடக்க முன்னர் கொல்லப்படவேண்டும்.


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...