Sunday 14 April 2013

தமிழ்மொழியை வளர்க்கும் திரைப்பட நகைச்சுவை எழுத்தாளர்கள்

வடிவேலு தன் நகைச்சுவைக் காட்சியில் பாவிக்கும் வசனங்கள் பல தமிழ்மொழியில் அன்றாடம் பாவிக்கும் சொற்தொடர்களாகிவிட்டன. இந்த வகையில் தமிழ்த் திரைப்படங்களிற்கு பாடல் எழுதுபவர்களை விட, வசனம் எழுதுபவர்களை விட தமிழ்ப்படங்களிற்கு நகைச்சுவை எழுதுபவர்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்கின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தம் தொடர்பாக நடந்த ஒரு மாநாட்டில் உரையாற்றிய சட்டத்துறை விரிவுரையாளர் 13வது திருத்தம் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பதைப்பற்றிக் குறிப்பிடும் போது " அது வரும் ஆனால் வராது" என்றார். 13வது திருத்தம் நிறைவேற்றும்படுமா என்ற கேள்விக்குச் சரியான பதிலைக் கொடுப்பதற்கு வடிவேலுவிற்கு நகைச்சுவை எழுதுபவர் உருவாக்கிய சொற்தொடர் அவருக்கு பெரிதும் உதவியது.  ஒரு மொழியின் நோக்கம் சிந்தனைப் பரிமாற்றம். ஒருவனின் சிந்தனைப்பரிமாற்றத் திறன் அவனது மொழியறிவிலும் அவன் பாவிக்கும் மொழியின் வளத்திலும் இருக்கிறது. மொழியின் வளத்திற்க்கு அதில் உள்ள சொற்களும் சொற்தொடர்களும் முக்கியமானவையாகும். ஒரு சாதாராண சொல்லாக இருந்த "கிளம்பீட்டான்யா"  என்ற சொல்லை ஒரு பெரும் செயலைச் செய்யப் போகிறான என்ற அர்த்தமுள்ளதாக மாற்றப்பட்டது தமிழ்த் திரைப்படத்தில்தான். இன்று பல முகவேட்டு நிலைக்கூற்றுக்களும் டுவிட்டுகளும் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை வசங்கள் நிறைய அடிபடுகின்றன. அரசியல் மேடைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

  • யாருமே இல்லாத கடையில் யாருக்கு ரீ ஆத்துறாய்
  •  அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
  • உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கிவிட்டாங்க
  • வரும் ஆனால் வராது
  • பார்க்கிற இடமெல்லாம் கண்ணி வெடி
  • பில்டிங் வீக் பேஸ்மென்ற் ஸ்ராங்
  • ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுறமாதிரி
  • எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்
இவை மாதிரிப்பல சொற்தொடர்களை மக்கள் அன்றாடம் பாவிக்க வைத்த நகைச்சுவை எழுத்தாளர்கள் அவர்களின் வசனங்களைப் பேசிப் புகழ் பெற்றவர்கள் போல் புகழ் பெறவில்லை என்பது வருந்தத்தக்கது. அவர்களில் ஒருவரின் பெயர் கூட எனக்குத் தெரியாது!

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...