Saturday, 9 February 2013

மானம் கெட்ட இந்தியாவும் கெடுகெட்ட இந்து மதமும் துப்புக் கெட்ட TESOவும்

ராஜபக்ச கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த போதும் கமலேஷ் ஷர்மா ஒழுங்கு செய்த பொதுநலவாய அமைப்பின் பொருளாதார மாநாட்டை ஆரம்பித்து வைக்க வந்த போதும் பிரித்தானியா வாழ் தமிழர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினார்கள்.

ராஜபக்சவின் பிரித்தானியப் பயணத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய பல தமிழர்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரித்தானியா வந்தனர். யாரும் எல்லையில் வைத்துக் கைது செய்யப்படவில்லை. எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. பிரித்தானிய அரசு தமிழர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு வசதி செய்வதற்கு தெருக்களில் வாகனங்கள் செல்வதைத் தடுத்தது. எவரையும் பிரித்தானிய அரசு கைது செய்யவில்லை. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு மூதாட்டி தமிழர்களுக்கு எதிராக செய்த அட்டூழியங்களை சொல்லி அழுத போது ஒரு காவற்துறை அதிகாரி கண்ணீர் வடித்தார். ஆனால் இந்தியாவில் நடந்தது என்ன? ஆர்ப்பாட்டக் காரர்கள் போகவிடாமல் தெருக்களை மூடினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. ஆர்ப்பாட்டக் காரர்கள் கைதுசெய்யப்பட்டனர். ராஜபக்சே செல்லும் பாதை எங்கும் இந்திய அரச செலவில் காவற்துறையினரும் உளவுத் துறையினரும் பல்லாயிரக் கணக்கில் குவிக்கப்பட்டனர் இதனால் இந்தியா தான் ஒரு மானம் கெட்ட நாடு என்பதை நிரூபிக்கிறது. இலங்கைப் போர்க் குற்றத்தில்தானும் ஒரு பங்காளி என்பதை இந்தியா உறுதி செய்கிறது.கேடுகெட்ட இந்து மதம்
இலங்கையில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இந்து ஆலயங்கள் ராஜபக்ச ஆட்சியில் அழிக்கப்பட்டுள்ளன. உள்ளன. பல நூற்றுக் கணக்கான  ஆலயங்கள் இடிக்கப்பட்டு புத்த விகாரைகளாக மாற்றப் பட்டுள்ளன. இந்து ஆலயங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆனாலும் ராஜபக்சவின் இந்தியப் பயணத்தை இந்து முன்னணி ஆதரிக்கிறது.  இந்துக்களின் மிக முக்கிய ஆலயத்திற்குள் அவர் அனுமதிக்கப்பட்டு ஆசி வழங்கப்பட்டுள்ளார். போருக்கு முன்னர் ராஜபக்சே தமிழர்களுக்கு எதிரான போரில் வெல்ல தமிழ்நாட்டிலேயெ 2008-ம் ஆண்டு பல யாகங்கள் நடந்தன. இன்னாளில் பொய்மைப் பார்ப்பனர் அவர் ஏதேனும் செய்து காசு பெறப்பார்ப்பர். சுப்பிரமணிய சுவாமி என்ற ஒரு பார்ப்பன நாதாரி ராஜபக்சவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதையிட்டு கவலை தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார். சில நாய்கள் போட்ட எலும்புத் துண்டுக்கு மேலாக குரைக்கின்றன.

சுப்ரபாதத்தின் முதல் வரியில் புலி
ராஜபக்ச திருப்பதியில் சுப்ரபாதம் படிக்கும் போது இருந்தாராம். சுப்ரபாதத்தின் முதல் வரியிலேயே புலி என்ற சொல் வருகிறது:
  • கோசலையின் தவப்புதல்வா ராமா கிழக்கில் விடியல் வருகின்றதே
    எழுந்திட்டு புலிபோல் மனிதா செய்திடுவாய் இறைகடமை

துப்புக் கெட்ட  TESO
மத்திய ஆட்சியில் இருந்து கொண்டே தமிழர்கள் இலட்சக் கணக்கில் கொல்லப்பட்ட போது உண்ணாவிரத நாடகமாடி தமிழரை ஏமாற்ற முயன்றவர் கலைஞர் கருணாநிதி. மருத்துவ சிகிச்சைக்கு வந்த மூதாட்டியை வர முதலில் அனுமதித்து விட்டு பின்னர் விமான நிலையத்தில் வேண்டுமென்றே நீண்ட நேரம் காக்க வைத்துவிட்டுப் பின்னர் திருப்பி அனுப்பிய அரசின் பங்காளி கருணாநிதி. அவரது அரசு ராஜபக்சே வருகைக்கு  சகல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்கிறது. அவரது TESO கும்பல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடாத்தியது. ஆந்திரா செல்லும் ராஜபக்சேவிற்கு சென்னையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதால் எந்த வித பயனும் இல்லை என அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இப்படி ஏதாவது செய்து கழகக் கண்மணிகளை ஏமாற்ற வேண்டும். இவர்கள் புதுடில்லியின் கொத்தடிமைகள். இவர்களால் புதுடில்லியை எதிர்த்து ஒரு விரலைக் கூட ஆட்ட முடியாது. அப்படிச் செய்தால் திஹார் சிறையில்தான் அவர்களது முழுக் குடும்பமும் இருக்க வேண்டிவரும். இலங்கையில் குண்டு வீசுவதை நிறுத்தி விட்டாரகள் என்று பொய் சொன்ன கருணாநிதியை இல்லை இப்போதும் குண்டு போடுகிறார்களே என்று கேட்ட போது மழை விட்டுவிட்டது தூவானம் அடிக்கிறது என்றார். கடந்த சட்ட சபைத் தேர்தலில் எதிர்கட்சித் தலைமை பதவி கூடக் கிடைக்காமல் உங்களுக்கு விழுந்த அடி தூவானம் மட்டுமே. 2014 மே மாதத்திற்கு முன்னர் நடக்க இருக்கும் பாராளமன்றத் தேர்தலில் உங்களுக்கு விழவிருக்கும் அடி பெரு மழையாக இருக்கும்.

கைது செய்யும் குண்டாச்சி
தமிழின உணர்வாளர்களின் ஆதரவால் ஆட்சிக் கதிரைக்கு ஏறிய குண்டாச்சி ராஜபக்சேவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்களைக் கைது செய்து கொண்டிருக்கிறார்.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...