Sunday 3 February 2013

ஈரானின் அசத்தலான போர் விமானம்

ஒரு குரங்கை விண்வெளிக்கு அனுப்பியதைத் தொடர்ந்து ஈரான் Qaher F313 என்னும் பெயருடைய Stealth Fighter ரக போர் விமானங்களை உருவாக்கியுள்ளது. உலகிலேயே சிறந்த ரக Stealth Fighter தன்னுடைய Qaher F313போர் விமானம் என ஈரான் தெரிவித்துள்ளது. கதுவி(ராடார்)களால் அடையாளம் காண முடியாத தொழில் நுட்பம் கொண்ட போர் விமானங்களை Stealth Fighter எனப்படும்.

Qaher என்பது ஆதிக்கம் என்னும் பொருள்படும் எனப்படுகிறது. அணுக் குண்டு உற்பத்தியில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ள ஈரான் தொலைதூர ஏவுகணைகள் ஏவும் தொழில் நுட்பதிலும் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது பல நாடுகளைக் கவலையடைய வைக்கலாம்.குரங்கு ஒன்றைக் கொண்ட ஈரானின் விண்வெளி ஓடம் 120கிமீ(75மைல்கள்) உயரம் வரை சென்று விண்ணில் சுற்றி விட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளது. ஈரான் இது தொடர்பாகக் காட்டிய படங்களில் குரங்கு போகும் போது அணிந்திருந்த ஆடையும் திரும்பும் போது அணிந்திருந்த ஆடையும் வித்தியாசமாக இருந்ததாக சில மேற்கத்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டின. குரங்கு விண்ணில் இறந்து விட்டது அல்லது விண்ணிற்கு ஓடம் செல்லவே இல்லை என்கின்றன அந்த ஊடகங்கள்.

ஈரானை அணுக்குண்டு உற்பத்தி செய்ய விடாமல் தடுக்க  அதன் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என இஸ்ரேல் கருதுகிறது. ஆனால் அது தன் மீது இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலை அதிகரிக்கச் செய்யும் என அமெரிக்கா அஞ்சுகிறது. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால் பல பிரச்சனைகளை ஈரான சந்தித்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து தன் படைக்கலன் உற்பத்தியைப் பெருக்குகிறது.

1979இல் அமெரிக்க கைக்கூலியாகக் கருதப் பட்ட மன்னர் ஷா மொஹமட் பஹ்லவியின் ஆட்சிக்கு எதிராக ஈரானிய மத போதகர்கள் செய்த புரட்ச்சியின் நினைவிநாளில் Qaher F313போர் விமானங்களை உருவாக்கியுள்ளது.

மனன்ர் ஷாவின் ஆட்சிக்குப் பின்னர் வந்த மத அடைப்படைவாத ஆட்சியாளர்களுக்கு எதிராக படைக்கலங்கள் விற்பனைத் தடையை மேற்கு நாடுகள் அமூல் படுத்தியதைத் தொடர்ந்து ஈரான் தானாகவே படைக்கலன்களை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டது. டாங்கிகள், ஏவுகணைகள், அணுக் குண்டு உற்பத்திக்கான இல்மனைற் பதனிடுதல் என்பவற்றில் முன்னேற்றம் கண்ட ஈரான் போர் விமான உற்பத்தியிலும் தனது அறிவியல் முன்னேற்றதை நிரூபித்துள்ளது.



ஈரானின் Qaher F313 இன் தன்மைகள்:
ஒற்றை இருக்கை மட்டும் கொண்ட சிறிய விமானம்.
புதியரக படைக்கலன்களைத் தாங்கிச் செல்லக்கூடியது.
தாக்குதலும் வேவும் செய்யக்கூடியது.
விமானத்தில் இருந்து விமானத்திற்கும் விமானத்திலிருந்து தரைக்கும் தாக்குதல் நடத்தக் கூடியது.
தற்கால போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில் இதன் cockpit பெரியதாக இருப்பதுடன் அடிப்படையானதாகவும் இருக்கிறது.
மூக்குப் பகுதி மிகச் சிறியதாக இருக்கிறது. இதில் ரடார் பொருத்த முடியாது.

இதற்கு எதிரான கருத்துக்கள்:
  •     The thickness of the wing is nuts. It's not an airfoil for supersonic flight.
  •     The air intakes are tiny.
  •     As others have noted: it's just too small up front, there's no room up there for radar, and I don;t see any thing like passive FLIR and other sensors poking out up there.
  •     There's little room for any sort of meaningful fuel or weapon load-out.
  •     If you look at tail end of the thing, it's designed to give the look of a thrust vectoring solution, but clearly is not.
  •     And why the all the English signage on it? "Warning," etc. That makes no sense.

It reminds me a lot of the "Have Blue" prototype in terms of scale. If anything, that's what this is, a sub scale demonstrator.

ஈரான் வெளிவிட்ட  Qaher F313 தொடர்பான காணொளியில் அதன் take off and landing எதுவும் இல்லாதது சில சந்தேகங்களை நிபுணர்கள் மனதில் கிளறியுள்ளது.


ஈரானின் Qaher F313 விமானங்களால் வளைகுடாவில் வலம் வரும் விமாம்தாங்கிக் கப்பல்களுக்கு ஆபத்து என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் 1980-ம் ஆண்டு உருவாக்கிய விமாங்களுக்கு ஈடான விமானமான Qaher F313 விமானங்களை எப்படி எதிர் கொள்வது என்ற தொழில்நுட்பம் அமெரிக்காவிடம் இல்லாமல் போகுமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

சிய முசுலிம் நாடான ஈரானின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கக் கூடிய படைக்கலன்களை சுனி முசுலிம் நாடான சவுதி அரேபியா அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யும். முசுலிம்களுக்கு இடையிலான மோதல் அமெரிக்காவின் வியாபாரத்தைப் பெருக்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...