Friday 15 February 2013

வட கொரிய அணுக்குண்டு: உண்மைகளும் விளைவுகளும்

அணுக்குண்டு தயாரிக்கவில்லை தயாரிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு ஒரு அணு வல்லரசாக ஈரான் முயன்று கொண்டிருக்கையில் வட கொரியா 2013 ஃபெப்ரவரி 12-ம் திகதி மூன்று அணுக்குண்டுகளை வெடித்ததாகச் சொல்கிறது.

முடியைப் பிய்ந்துக் கொண்ட அமெரிக்கா
 நிலக்கீழ் அதிர்வுகளை (seismic activity) வைத்துக் கணிக்கையில் 6000 முதல் 7000 தொன் வரையிலான உயர் வெடி பொருள்கள் வெடித்தமைக்கு ஒப்பான நிகழ்வு ஒன்று வட கொரியாவில் நடந்திருக்கிறது என்பதை நிபுணர்கள் உறுதி செய்கின்றனர். ஆனால் இந்தக் கொண்டு ஜப்பானின் ஹிரோசிமாவில் அமெரிக்க போட்ட அணுக் குண்டுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறிய அளவானது என்று சொல்லப்படுகிறது. மேலும் தற்போதைய மற்ற நாடுகள் வைத்திருக்கும் அணுக்குண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிக மிகச் சிறிய அளவான அணுக்குண்டையே வட கொரியா வெடிக்க வைத்துள்ளது. ஆனாலும் எதிரியாகக் கருதப்படும் தென் கொரியாவின் தலைநகர் சேயோலிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய குண்டு அது என்கிறார் அமெரிக்க விஞ்ஞானப் பேரவைத் தலைவர். வட கொரியாவின் அணுக்குண்டுச் சோதனைகள் தொடர்பான சரியான தகவல்கல் பெற இன்னும் சிலகாலம் எடுக்கும் என்றும் கருதப்படுகிறது. வட கொரியாவின் அணுக் குண்டு வெடிப்புச் சோதனையில் பயன்படுத்தப்பட்டது புளூடோனியாமா அல்லது பதப்படுத்தப்பட்ட யூரேனியமா என்று தெரியாமல் ஐக்கிய் அமெரிக்க பாதுகாப்புத் துறையின முடியைப் பிய்த்துக் கொண்டனர்

வட கொரியப் பின்னணி
1910இல் இருந்து 1945வரை ஜப்பானிய அட்டூழிய ஆட்சிக்குக் கீழ் இருந்த கொரியாவை ஜப்பானிடம் இருந்து அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் பிடுங்கிப் பங்கு போட்டுக் கொண்டன. கொரியா வட கொரியா தென் கொரியா என இரு நாடுகளாகப் பிரிந்தன. 1950இல் அமெரிக்காவிற்காகவும் சோவியத்திற்காகவும் இரு கொரியாக்களும் பலமாக மோதிக் கொண்டன. இருபது இலட்சம் பேர் பலியாகினர். 1953-ல் போர் முடிவுக்கு வந்தது. பின்னர் இரு நாட்டுக்கும் இடையில் தொடர்ந்து முறுகல் நிலை இருந்து வருகிறது. தென் கொரியா பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி கண்டு ஆசியாவில் உள்ள அபிவிருத்தி அடைந்த இரண்டு நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இரு நாடுகளும் ஒன்றை ஒன்று பெரும் பகையாளிகளாகக் கருதுகின்றன. மோசமான பொருளாதரத்தைக் கொண்ட வட கொரியா தனது படை வலிமையை பெருக்கிக் கொண்டே இருக்கிறது. நீண்ட தூர ஏவுகணைகளையும் வட கொரியா பரிசோதித்து வெற்றிகண்டுள்ளது. தென் கொரியா அமெரிக்காவிடமிருந்து பெருமளவு படைக்கலனகளை வாங்கி வைத்திருப்பதுடன் அமெரிக்காவுடன் மிக நெருங்கிய உறவைப் பேணுகிறது. தென் கொரியாவில் அமெரிக்க படைத்தளமும் இருக்கிறது. 1953இன் பின்னர் மிகவும் கொதி நிலையில் இருக்கும் எல்லையாக  வட-தென் கொரிய எல்லை இருந்து வருகிறது. வட கொரியா தனது நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையை தனது படைபலப் பெருக்கத்தால் மறைத்து வருகிறது எனப்படுகிறது. இப்படிப் போட்டியுள்ள இரு நாடுகளில் ஒன்று அணுக் குண்டு தயாரித்தமை உலகை உலுக்கியுள்ளது.

உண்மையில் வட கொரியா தென் கொரியாவிற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒரு அணுக் குண்டைத் தயாரிக்க இன்னும் சில ஆண்டுகள் செல்லும் என்கின்றனர் அணுக் குண்டு நிபுணர்கள். அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய நிலையை வட் கொரியா அடைவதற்கு அதிலும் அதிக ஆண்டுகள் எடுக்கும் என்கிறார்கள் அவர்கள்.

தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சீனா ஜப்பான் உடபடப் பலநாடுகளுடன் கடல் எல்லைகள் தொடர்பாகவும் அக் கடல்களில் இருக்கும் தீவுகள் தொடர்பாகவும் பெரும் முறுகல் பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் வட கொரியா அணுக்குண்டை வெடிக்க வைத்து பரிசோதித்துள்ளது.

வட கொரிய அணுக்குண்டு தயாரிப்பின் நோக்கம்
இரண்டு உலகப் போரிற்குப் பின்னர் பல நாடுகள் தமது படைக்கலன்களை அதிகரிப்பதிலும் புதிய தொழில்நுட்பங்களை படைத்துறையில் உருவாக்குவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.  அநேக நாடுகள் தம்மீது மற்ற நாடுகள் போர் தொடுக்காமல் இருக்கவே தமது படைபலத்தைப் பெருக்குகின்றன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் அமெரிக்கா அணுக்குண்டைத் தயாரிக்க அதற்குப் போட்டியாக சோவியத் ஒன்றியமும் அணுக்குண்டைத் தயாரித்தது. இப்படி இரு நாடுகளும் ஒரு படைப்பலச் சமநிலையை பேண தமது படைபலத்தைப் பெருக்கிக் கொண்டிருந்ததால் போர் நிகழவில்லை. ஈராக்கைத் தவிர மற்ற நாடுகள் பெரும்பாலும் தமது படைப்பலத்தைப் பெருக்கியே போரைத் தவிர்த்தன. வட கொரியா தன்னை தென் கொரியாவில் இருந்து பாதுகாக்க மட்டுமல்ல அதை தன்னுடன் இணைக்கவும் பல தடவை முயன்றதுண்டு. வட கொரியாவின் புரவலர் (Patron) என விமர்சிக்கப்படும் சீனாவும் வட கொரியா அணுப் படைக்கலன்கள் உற்பத்தி செய்வ்தை விரும்பவில்லை. இதைச் சாட்டாக வைத்துக் கொண்டு ஐக்கிய அமெரிக்கா தனது படை பலத்தை சீனாவைச் சுற்றிப் பெருக்கும் என சீனா கருதுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபையில் சீனா உடனடியாகவே வட கொரிய அணுக்குண்டுத் தயாரிப்புக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து விட்டது. சீன வெளிநாட்டமைச்சர் வட கொரியத்தூதுவரை உடன் அழைத்து தனது கரிசனையையும் தெரிவித்தார். வட தென் கொரியாக்களிடையே வளர்ந்து வரும் பொருளாதாரப் பல இடைவெளியை வட கொரியா தன் படைப்பலப் பெருக்கத்தின் மூலம் நிரப்ப முயல்கிறது. கொரியத் தீபகற்பத்தின் தனது நிலையை ஒரு படைப்பல மிரட்டல் மூலம் உறுதி செய்ய முனைகிறது. வட கொரியாவின் இளம் தலைவரான கிம் ஜோங் யுன்அணுக்குண்டு உற்பத்தி தனது நாட்டின் இருப்பிற்கு முக்கியமானதும் பேச்சு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அவசியமனதென்றும் உறுதியாக நம்புகிறார்.

ஜப்பானின் மிரட்டல்
வட கொரியா அணுக்குணுட்களை வெடித்துப் பரிசோதனை செய்தவுடன் தனது நாட்டின் மீது வேறு எந்த நாடாவது தாக்குதல் நடாத்தும் என்ற தகவல் கிடைத்தவுடன் ஜப்பான் அந்த நாட்டின் மீது முன் கூட்டியே தாக்குதல் நடாத்தும் என்று எச்சரித்துள்ளது.

சீனாவின் தடுமாற்றம்
வட கொரியாவிற்கான தனது பொருளாதார உதவிகளை நிறுத்துதல், அதனுடனான வர்த்தகத்தைத் தடை செய்தல் அதற்கு வழங்கும் எரிபொருட்களை நிறுத்தல் போன்றவை வட கொரிய அரசை கவிழ்த்துவிடும் என்று சீனா அஞ்சுகிறது. அப்படிக் கவிழும் நிலையில் வட கொரியா தென் கொரியாவுடன் இணைந்து ஒரு ஐக்கிய அமெரிக்க சார்பு நாடாகி விடும் என சீனா கருதுகிறது. உலக வல்லரசுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்ட வல்லரசு சீனா எனச் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். தன் ஒரே நட்பு அயல் நாட்டை சீனா இழக்க விரும்பாது.

வட கொரியாவின் புதிய உத்தியா
அணுக்குண்டை சிறிய அளவினதாக்கும் உத்தியில் வட கொரியா ஈடுபட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. தென் கொரியாவில் பெரும் சேதம் விளைவிக்கக் கூடிய  நகரைத் தரைமட்டமாக்கும் (city-buster) குண்டுகள் எனப்படும் சிறுகுண்டுகளை வட கொரியா உற்பத்தி செய்யப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் வட கொரியா வெற்றியடையுமானால். அது அணு குண்டு வர்த்தகத்தை மற்ற நாடுகளுடன் மட்டுமல்ல தீவிரவாத இயக்கங்களுடனும் ஈடுபடலாம். இது பல நாடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கலாம். ஈரானும் வட கொரியா போல் சிறு அணுக்குண்டை உற்பத்தியாக்கினால் இஸ்ரேல்லுக்கு பெரும் அச்சுறுத்தலாகும்.

அணுக்குண்டைப் புஸ் வாணமாக்கும் முக்கூட்டுப் பாதுகாப்பு
அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஏவுகணைகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு முறைமைய ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத் தொழில் நுட்பம் இன்னும் வளர்ச்சி நிலையிலேயே இருக்கிறது. இஸ்ரேலில் ஹமாஸ் இயக்கத்தினரின் ஏவுகணை மற்றும் எறிகணைத்தாக்குதல்களில் இருந்து தடுக்க பாவிக்கப்பட்ட இரும்புக் கூரை எனப்படும் பாதுகாப்பு முறைமையில் சில குறைபாடுகள் காணப்பட்டன. இக் குறைபாடுகளைத் தவிர்த்து மேம்படுத்தப்பட்ட ஒரு ஏவுகணைகளுக்கு எதிரான பாதுகாப்புத் திட்டத்தை இந்த மூன்று நாடுகளாலும் உருவாக்க முடியும். அதற்குரிய தொழில்நுட்ப வளம் பொருளாதார வளம் இம்மூன்று நாடுகளிடமும் இருக்கின்றன. இந்தப் பாதுகாப்பு முறைமைத் தொழில் நுட்பம் வெற்றியளிக்கும் இடத்து அணுக்குண்டை ஏவும் நாட்டில் வைத்தே அதை வெடிக்க வைக்கச் செய்ய முடியும் எனக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் ஈரானும் வட கொரியாவும் உருவாக்கப் போகும் அணுக்குண்டுகள் அந்த நாடுகளுக்கே ஆபத்து விளைவிக்கக் கூடியதாக அமையும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...