Saturday 24 November 2012

நகைச்சுவை: இத்தாலிச் சனியனும் மொக்கை காந்தியும்

 School test & DNA test
மொக்கை காந்தி school testஇல் பெயில் ஆகிவிட்டான். தேர்வில் தோல்வியடைந்ததைப்பார்த்த இத்தாலில் சனியன் ஆத்திரப்பட்டு இனிமேல் என்னை அம்மா என்று கூப்பிடாதே என்றாள். அதற்கு மொக்கை காந்தி அம்மா.. இது வெறும் school test தன் DNA test இல்லை.

இந்தியாவின் பிரதம மந்திரி
இத்தாலிச் சனியன் மோகன் மன்Shit ஐத் தனது வீட்டுக்கு அழைத்து முருகேஷ் கொம்பானியின் உத்தரவுகளைக் கட்டளையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். மோகன் மன்Shit வாய் மூடியபடி தலையை ஆட்டிக் கொண்டு கேட்டுகொண்டிருந்தார். அங்கிருந்த மொக்கை காந்தி உரத்த குரலில் அலட்டத் தொடங்கினான் "எனது அப்பா கடாய் ஆடாகவும் அம்மா மறி ஆடாகவும் இருந்தால் நான் ஒரு குட்டி ஆடாக இருப்பேன். எனது அம்மா பசுவாகவும் எனது அப்பா காளையாகவும் இருந்தால் நான் ஒரு கன்றுக் குட்டியாக இருப்பேன். எனது அம்மா.....". இத்தாலிச் சனியன் இடைமறித்து "அட கம்முன்னு இருடா. கம்மனாட்டி" என்றாள். ஆனால் மொக்கை காந்தி தொடர்ந்தும் "எனது அம்மா......" எனத் தொடர மோகன் மன்Shit இடைமறித்து "உனது அம்மா ஒரு கழுதையாகவும் உனது அப்ப ஒரு காண்டா மிருகமாகவும் இருந்தால் நீ என்னவாய் இருப்பாய்?" என்றார். அதற்கு மொக்கை காந்தி நான் இந்தியாவின் பிரதம மந்திரியாய் இருப்பேன்" என்றான்.

மொக்கை காந்தியின் தருமம்
மொக்கை காந்தியும் அவனது காதலியும் கொலம்பியா போதைப் பொருள் விற்பனையாளனின் மகளுமான சொறியோனிக்காவும் கை கோர்த்தபடி இத்தாலி ரோம் நகரில் நடந்து போய்க் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பிச்சைக்காரன் எதிர்ப்பட சொறியோனிக்கா தனது கைப்பையில் இருந்து ஐந்து பத்து டாலர் நாணயத்தாள்களை எடுத்துக் கொடுத்தாள்.  ராகுலுக்கு ஆச்சரியமும் பொறாமையுமாக இருந்தது. அதைப் பார்த்த சொறியோனிக்கா நீயும் இப்படிச் செய்ய வேண்டும் என்றாள். அதற்கு மொக்கை காந்தி ஆமென்று மோகன் மன்Shitஐப் போலத் தலையாட்டினான். அவர்கள் தொடர்ந்து நடந்து போய்க் கொண்டிருக்க இன்னொரு பிச்சைக்காரன் எதிரில் வந்தான்.  உடனே மொக்கை காந்தி சொறியோனிக்காவின் கைப்பையில் இருந்து ஐந்து பத்து டாலர் நாணயத் தாள்களை எடுத்து அதில் நாலைத் தனது பாக்கெட்டில் போட்டுவிட்டு மீதி ஒரு நோட்டை பிச்சைக்காரனுக்குக் கொடுத்தான். ஆச்சரியப்பட்ட சொறியோனிக்கா ஏன் இப்படிச் செய்தாய் என்றாள். இப்படித்தான் நம் நாட்டில் மோகன் மன்Shit செய்வார் என்றான்.

Friday 23 November 2012

கழுவ முடியாமல் தவிக்கும் கண்ணீர்த் துளிகள்

தான் பிறந்த மண்
மாசு படுவதைத்
தாங்காமல் உருகி
மீண்டும் கழுவ வருகிறது
முகில் மழையாக

XXXXXXX

இறங்காமல் தெரியாது
வாழ்க்கை ஆற்றின் ஆழம்
ஒரு பிரச்சனையில் இருந்து விடுபட
சிறந்த வழி இன்னொரு பிரச்சனை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயம்
பயங்களை வெல்வதே வாழ்க்கை

XXXXXXXX

வார்த்தைகள் எப்போதும்
திண்ணனார் சிவனுக்குக்
கொடுத்த இறைச்சி போலே
நாம் சுவை பார்த்து
சரி என்றபின்னர்தான்
மற்றவர்களுக்குப்
பரிமாற வேண்டும்

XXXXXXX

கண்ணில் கறையாகிய
உன் விம்பத்தை
கழுவ முடியாமல் தவிக்கும்
கண்ணீர்த் துளிகள்

Thursday 22 November 2012

Why we have to split For no reason?




We used to fight
We used to unite
We used to scream
We used to dream
But we never parted

We used to walk
We used to sit
We used to talk
We used to be quite
But we never parted

We used to kiss
We used to mess
We used to caress
We used to push
But we never parted

We used to hug
We used to exit
We used to cuddle
We used to muddle
But we never parted

Why we have to split
For no reason

Wednesday 21 November 2012

அஜ்மல் கசாப் தூக்குத் தண்டனை நாடகம்

பக்கிஸ்த்தானிய பஞ்சாப் மாநிலத்தில் ஃபரிட்கொட் என்னும் கிராமத்தில் பிறந்த அஜ்மல் கசாப் 2008 நவம்பர் 26-ம் திகதி மும்பையில் லஷ்கர் இ தொய்பா என்னும் பக்கிஸ்தானிய தீவிரவாத அமைப்பினர் நடாத்திய துணீகரத் தாக்குதலில் பங்க்கேற்ற பத்துப் பேரில் தப்பிய ஒரேஒருவராகும். அஜ்மல் கசாம் 21/11/2012 காலை இந்திய நேரப்படி 7.30இற்கு புனேயில் உள்ள யெர்வாடாச் சிறைச்சாலையில் இரகசியமாகத் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டான்.

பத்துப் பேர் கொண்ட குழு ஒன்று மும்பையின் முக்கிய பகுதியை 60 மணித்தியாலங்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தமை உலகின் 4வது பெரிய படையைக் கொண்ட் ஒரு நாட்டுக்கு பெருத்த அவமானமாக அமைந்திருந்தது.

25 வயதான அஜ்மல் கசாப்பின் கடைசி விருப்பம் என்ன என்று கேட்டபோது தனது தாயாருக்கு தன் இறப்புப்பற்றித் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னான். அவனுக்கு உயில் எழுதவும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டதாக இந்திய அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை கசாப் மறுத்துவிட்டான். முதலில் பதட்டத்துடன் இருந்த கசாப் தூக்குவதற்கு முன்னர் அமைதியாக இருந்தானாம். அஜ்மல் கசாப்பின் உடலை அவரது குடும்பத்தினரோ அல்லது பாக்கிஸ்த்தானிய அரசோ பொறுப்பு ஏற்க முன்வரவில்லை. அதனால் அவன் யெர்வாடாச் சிறையில் அடக்கம் செய்யப்பட்டான்.

கருணைக்கு இடமில்லை
கைதி எண் C-7096 அஜ்மல் கசாப்பிற்கு எதிரான வழக்கில் இந்திய அரசு தரப்பில் கசாப் தொடரூந்து நிலையம் மீது துப்பாக்கியால் சுடுவது கைக்குண்டு வீசுவது போன்றவற்றின் காணொளிப்பதிவுகள், கைரேகை அடையாளங்கள், டிஎன்.ஏ மாதிரிகள் ஆகியவை சாட்சியங்களாக முன்வைக்கப்பட்டன. முதலில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுகளை மறுத்த கசாப் பின்னர் தான் லஷ்கர் இ தொய்பாஅனுப்பிய தாக்குதலாளிகளில் ஒருவன் என்பதை ஒத்துக் கொண்டான். தனக்கு நீதியான விசாரணை இல்லை என்றும் தனக்கு சரியான சட்டப் பிரதிநிதித்துவம் இல்லை என்றும் வாதாடினான். வழக்கு உச்ச நீதமன்றம் வரை சென்றது. 2010 மே மாதம் கசாப்பிற்கு தூக்குத் தண்டனை வழ்ங்கப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனுவும் 2012/11/05இலன்று நிராகரிக்கப்பட்டது.அதன் பின்னர் அஜ்மல் கசாப் தொடர்பான நடவடிக்கைகள் எல்லாம் இரகசியமாகவே வைக்கப்பட்டன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிண்டே தான் ஒரு பயிற்றப்பட்ட காவல் துறையினன் என்பதால் எல்லாவற்றையும் இரகசியமாகவே வைத்திருந்ததாகச் சொன்னார். பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களின் தலையீடு இல்லாமல் செய்யவே இரகசியம் பேணப்பட்டது. கசாப் மீது எவரும் கருணை காட்டக் கூடாது என்பதில் இந்திய அரசு கவனமாக இருந்ததா? மனிதாபிமான அடிப்படையில் கசாப்பிற்கு எதுவும் நடக்கக் கூடாது என்பதில் இந்திய அரசு கவனமாக இருந்ததா? பன்னாட்டு தொண்டு நிறுவனங்களுக்கு அறிவிப்பதால் என்ன கெடுதல் ஏற்படும்?

இந்திய பாக்கிஸ்தானிய அரசுகளிடை இழுபறி
அஜ்மல் கசாப்பின் தூக்குத் தண்டனையை தூக்கிலிடுவதற்கு 48 மணித்தியாலங்களிற்கு முன்னரே பாக்கிஸ்த்தான் அரசிற்கு அறிவிப்பதாக இந்தியா முடிவெடுத்து அதன்ப்டியே செய்தது. இந்திய அரசின் கடிதத்தை பாக் அரசு ஏற்க மறுத்தது. பின்னர் தொலைநகல்(ஃபக்ஸ்) மூலம் பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துறை அமைச்சுக்கு அறிவிக்கப்ப்டடது. பாக்கிஸ்த்தானில் உள்ள இந்தியத் தூதுவரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்தியாவின் கடிதத்தை ஏற்றதாக பாக்கிஸ்த்தானும் ஏற்கவில்லை என இந்தியாவும் கூறுகின்றன.

ஒன்றும் தெரியாத இந்தியப் பிரதமர்
அஜ்மல் கசாப்பின் தூக்குப் பற்றி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சிச் செய்தியில் பார்த்துத்தான் அறிந்து கொண்டாராம். இதுபற்றி அவருக்கு எதுவுமே தெரியாதாம். இதைப்பற்றி டுவிட்டரில் ஒருவர் அம்பானிதானே நாட்டை நடத்துகிறார் என்று எழுதினார். ஆனால் சோனியா காந்திக்க்கு கசாப் தூக்கிலிடப்படப் போகிறான் என்று தெரியுமாம். மற்ற அமைச்சர்களுக்கும் தெரியாதாம்.

கசாப்பைப் புகழ்கிறது லஷ்கர் இ தொய்பா
லஷ்கர் இ தொய்பா இயக்கத்தினர் அஜ்மல் கசாப் ஒரு சிறந்த நாயகன். அவன் வழியைப் பலர் பின்பற்றுவார்கள். அவன் வழியில் பல தாக்குதல்கள் நடக்கும் என்கிறது. பல இசுலாமியத் தீவிரவாதிகளை கசாப்பின் தூக்குத்தண்டனை ஆத்திரமூட்டும் என்று கருதப்படுகிறது. பாக்கிஸ்த்தான் அரசுக்கு இது சங்கடத்தையும் ஏற்ப்படுத்தும். முதலில் கசாப் தனது நாட்டவன் அல்ல என்று பொய் சொன்ன பாக்கிஸ்த்தான் பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டது. இந்திய மண்ணில் ஒரு முசுலிம் மகன் கொல்லப்பட்டது அதிர்ச்சியைத் தருகிறது என்கிறது தலிபான் இயக்கம்.

அரசியல் இலாபம்
நாட்டில் அந்நிய முதலீடு தொடர்ப்பான சர்ச்சையைத் திசை திருப்பவும் கட்சிக்கு செல்வாக்குத் தேடவும் கசாப்பின் தூக்குத்தண்டனைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டது என்ற குற்றச் சாட்டும் எழுந்துள்ளது. இந்திய வரலாற்றிலேயே மிக விரைவாக நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனை அஜ்மல் கசாப்பின் தூக்குத் தண்டனையாகும். இது சிறிது சந்தேகத்தைக் கிளப்புகிறது.

காந்தியைக் கொன்ற நாட்டின் "கசாப்"புக் கடை
காந்தித் தொப்பி போட்டுக் கொண்ட அன்ன ஹசாரே அஜ்மல் கசாப்பை பொது இடத்தில் தூக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்றார். மும்பைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் கசாப்பின் தண்டனையை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். இந்தியாவில் பல இடங்களில் பட்டாசு கொழுத்தி  மக்கள் மகிழ்ச்சி கொண்டாடினர். அடுத்து அடுத்துஇரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு ஒருவர் பின்னூட்டமிட்டுள்ளார். மற்றவர் பால் தக்ரே. இன்னொருவர் 25000 அப்பாவி முசுலீம்களைக் கொன்ற குஜராத் பயங்கரவாதிக்கு எப்போது தூக்குத் தண்டனை என்று கேள்வி எழுப்பியுள்ளார். 1984இல் இந்திரா காந்தி கொல்லப்பட்ட போது கொல்லப்பட்ட அப்பாவிச் சீக்கியர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் என்கிறார்.

எமக்கு எப்போது நீதி கிடைக்கும்
 லஷ்கர் இ தொய்பா இயக்கத்தினர் நடாத்திய தாக்குதலில் எந்தப் பெண்ணும் கற்பழிக்கப்படவில்லை. பத்துப் பேர் கொண்ட தாக்குதல் அணி செய்த அட்டூழியங்களுக்கு இது கசாப்பின் தூக்குத் தண்டனை நீதி என்றால் ஐம்பதினாயினரர் கொண்ட ஒரு கொலை வெறிப்படையணி ஈழத்துக்குள் நுழைந்து 3,500 பெண்களைக் கற்பழித்து 5000இற்கு மேற்பட்டோரைக் கொன்று இலட்சக்கணக்கானோரின் வீடுகளை அழித்தமைக்கு என்று கிடைக்கும் நீதி?

சீனாவைச் சுற்றி வளைக்கும் அமெரிக்கா

சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கு ஒன்று பெரும் எதிரிகளல்ல. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாமல் சீனாவால் இருக்க முடியாது. சீனாவிடம் கடன் வாங்காமல் அமெரிக்காவால் இருக்க முடியாது. அமெரிக்காவிற்கு கடன் கொடுப்பது சீனாவிற்கு நன்மையளிக்கிறது. இரண்டுக்கும் இடையில் கடுமையான போட்டி உள்ளது. இரண்டுக்கும் இடையிலான போட்டியில் மோதலில்லாத ஒரு சமநிலையை எங்கு நிலை நிறுத்துவது என்பதில் இரண்டும் பெரு முயற்ச்சி செய்கின்றன.

சீனாவை சூழ உள்ள நாடுகள் சீனாவிற்கு பயப்படுகின்றன. போதாத குறைக்கு தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் உள்ள தீவுகள் யாருக்கு உரியது என்பதில் பெரும் சிக்கல். தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் ஒரு போர் மூளக் கூடிய சாத்தியமும் உண்டு. அவ்வப்போது ஜப்பான் - சீனா, பிலிப்பைன்ஸ் - சீனா, வியட்னாம் - சீனா ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கக் கூடிய சூழலும் ஏற்பட்டது. இது பற்றிய முன்னைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்: கொதிக்கும் தென் சீனக் கடல்

 அமெரிக்காவுடன் ஒரு படை மோதலை சீனா விரும்பவில்லை. அதன் பொருளாதார வளர்ச்சிக்கு இது பாதகமாக அமையும் என்று சீனா அறியும். தனது பொருளாதாரத்தை முற்றாக வளர்ச்சியடையச் செய்வதே சீனாவின் முதல் நோக்கம். வேகமாக வளரும் பொருளாதாரம், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம், மூன்று ரில்லியன் டாலர் வெளிநாட்டுச் செலவாணி இருப்பைக் கொண்ட பொருளாதாரம் என்ற பெருமைகள் சீனா இன்னும் ஒரு வளர்ச்சியடைந்த நாடு அல்ல. அதன் தனி நபர் வருமானம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவானதே. தனி நபர் வருமான அடிப்படையில் சீனா 93வது நாடாக இருக்கிறது. சீனாவிற்கு பொருளாதார வளர்ச்சி மிக முக்கியம். பொருளாதார வளர்ச்சியடைந்த சீனா ஒரு ஆபத்தான சீனா என்பதை அமெரிக்கா மட்டுமல்ல சீனாவைச் சூழவுள்ள நாடுகள் நன்கு அறியும்.

தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் உள்ள கொந்தளிப்புச் சூழலை மையமாக வைத்து அமெரிக்கா அப்பிராந்திய நாடுகளுடன் தனது படைத்துறை ஒத்துழைப்பையும் படைக்கலன்கள் விற்பனையும் அதிகரிக்கிறது.

அமெரிக்காவின் பசுபிக் தாண்டிய பங்காண்மை தந்திரம்.
சீனாவின் பொருளாதர வளர்ச்சிக்குக் காரணம் அதன் மக்கள் தொகையே. அதற்கு ஈடு கொடுக்க அமெரிக்கா TPP எனப்படும் பசுபிக் தாண்டிய பங்காண்மை (Trans-Pacific Partnership) ஐ உருவாக்கியுள்ளது.  இது சீனாவைச் சூழவுள்ள நாடுகளுடனான அமெரிக்காவின் உறவையும் வர்த்தகத்தையும் விரிவு படுத்தும் நோக்கம் கொண்டது. தாய்லாந்து பசுபிக் தாண்டிய பங்காண்மையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தேர்தலில் வென்றவுடன் முதல் செய்த பயணம் சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கே.ஆசியான் மாநாட்டுக்குச் சென்ற ஒபாமா வியட்னாம், மலேசியா, சிங்கப்பூர் உட்படப் பல சீனாவின் அயல் நாட்டுப் பிரதிநிதிகளுடன் பசுபிக் தாண்டிய பங்காண்மை பற்றி உரையாடினார். சீனாவின் அயலவர்களான தென் கொரியாவும் ஜப்பானும் பசுபிக் தாண்டிய பங்காண்மையின் இணையும் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளன. சிங்கப்பூரும் ஒஸ்ரேலியாவும் பல முனைகளில் அமெரிக்காவுடன் பொருளாதார ஒத்துழைப்பைச் செய்கின்றன. மேலும் அமெரிக்க நாடுகளான மெக்சிக்கோவும் கனடாவும் பசுபிக் தாண்டிய பங்காண்மையில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளன. பசுபிக் தாண்டிய பங்காண்மையின் அடுத்த சுற்றுப் பேச்சு வார்த்தை 2012 டிசம்பரில் நியூசிலாந்தில் நடக்கவிருக்கிறது. பசுபிக் தாண்டிய பங்காண்மை சீனாவை அமெரிக்கா பொருளாதார ரீதியில் சுற்றி வளைக்கும் தந்திரமே.

Tuesday 20 November 2012

Marketing and Salesmen Jokes

Third Way

The Optimist says, "The glass is half full."

The Pessimist says, "The glass is half empty."

The Marketing Consultant says, "Your glass needs re-sizing."


Different ways of marketing:
 1. You see gorgeous girl in party, you go to her & say I am rich marry me.
- That's Direct Marketing.

2. You attend party & your friend goes to a girl & pointing at you , tells her. He is very rich, marry him
- That's Advertising.

3. Girl walks to you & says you are rich,can you marry me ?
-That's Brand Recognition

4. You say I m very rich marry me & she slaps you
-That's Customer Feedback

5. You say I m very rich marry me & she introduces you to her husband
-That's Demand & Supply Gap

6. Before you say I m rich, marry me, your wife arrives
-That's Restriction from Entering New Market.


Marketing Two-Upmanship
A retailer was dismayed when a competitor selling the same type of product opened next-door to him, displaying a large sign proclaiming "Best Deals".

Not long after he was horrified to find yet another competitor move in next-door, on the other side if his store. It's large sign was even more disturbing- "Lowest Prices".

After his initial panic, and concern that he would be driven out of business, he looked for a way to turn the situation to his marketing advantage. Finally, an idea came to him. Next day, he proudly unveiled a new and huge sign over his front door. It read,

"Main Entrance"!

The Pope and KFC
A Marketing Consultant employed by KFC gained an audience with the Pope, and offered him a million dollars if he would change 'The Lord's Prayer' from "give us this day our daily bread" to "give us this day our daily chicken." The Pope refused the offer.
Two weeks later, the consultant offered the Pope 10 million dollars to change it from "give us this day our daily bread" to "give us this day our daily chicken" and again the Pope refused the generous offer.
Another week later, the consultant offered the Pope 20 million dollars, and finally the Pope accepted.
The following day, the Pope briefed his staff.
"I have some good news and some bad news. The good news is, that we have just received a check for 20 million dollars. The bad news is, we lost the Wonder Bread account!'

LAWN MOWER
A new sales assistant was hired at a large department store. On his first day, the sales manager took him around to show him the ropes. They were passing by the gardening section, when they heard a customer asking for grass seed. The sales manager stepped in.Sales manager: Excuse me, but will you be needing a hose to water your lawn?
Customer : I guess so. I'll take one.
Sales manager: And how about some fertilizer and weed-killer?
Customer : Um, okay.
Sales manager: Here's a couple of bags. You'll also need a lawn mower to cut the grass when it starts growing too long.
Customer : I'll take one of those too.
After the customer left, the sales manager turned to the assistant. "You see?" he said, "that's the way to make a good sale. Always sell more than what the customer originally came in for."
Impressed, the assistant headed off for the pharmaceutical section, where he was to work. Soon, a man strolled in.
Man: I'd like to buy a pack of Tampax, please.
Sales assistant: Sure, and would you like to buy a lawn mower too?
Man: Why would I want to do that?
Sales assistant: Well, your weekend's shot to hell anyway, so you might as well mow the lawn.

A BLIND SALESMAN IS NOT BLIND
A nun is undressing for a bath and while she's standing naked, there's a knock at the door. The nun calls, "Who is it?"
A voice answers, "A blind salesman."
The nun decides to get a thrill by having the blind man in the room while she's naked so she lets him in. The man walks in, looks straight at the nun and says, "Uhhhh, well hello there, can I sell you a blind, dearie...?"


UNBREAKABLE COMB 

A salesman was demonstrating unbreakable combs in a department store. He was impressing the people who stopped by to look by putting the comb through all sorts of torture and stress.
Finally to impress even the skeptics in the crowd, he bent the comb completely in half, and it snapped with a loud crack. Without missing a beat, he bravely held up both halves of the 'unbreakable' comb for everyone to see and said, "And this, ladies and gentlemen, is what an unbreakable comb looks like on the inside."

TWO COMPUTERS

Salesman: This computer will cut your workload by 50%.
Office Manager: That's great, I'll take two of them.

Monday 19 November 2012

எம்மைக் கொல்லும் எமது பழக்கங்கள்

மது அருந்துதல், புகைப்பிடித்தல் கண்ட உணவுகளையும் அருந்துதல் மட்டும் எமது உடல் நலனுக்கு கெடுதலான பழங்கங்கள் அல்ல. வேறும் பல பழங்கங்கள் எமது ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கக் கூடியவை. நாம் கெடுதல் இல்லை என்று நினைக்கும் சில பழக்கங்கள் எமக்கு உயிராபத்து விளைவிக்கக் கூடியவை.

1. பொய் சொல்லக் கூடாது தாத்தா
நீங்கள் வாங்கிய ஆடைகளின் விலைகளைப் பற்றியோ, உங்கள் வயதைப்பற்றியோ பொய் சொல்வது அல்லது உங்கள் நண்பர்களைப்பற்றி பொய்யாகப் புகழ்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு கெடுதலானது. நொற்றே டேம் பல்கலைக்கழகத்தில் செய்த ஆராய்ச்சியின் படி பொய் சொல்வது உங்கள் மன அழுத்தத்தைக் கூட்டும், தலையிடி வரச் செய்யும், தொண்டைக் கரகரப்பு ஏற்படுத்தும்.

2. நீங்கள் வேலை செய்யும் மேசையில் இருந்த படியே உண்ணுதல்
உங்கள் பணிமனையில் உங்கள் மேசையில் இருந்த படியே உங்கள் மதிய உணவை உண்ணுதல் உங்கள் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. இது உங்கள் மன அழுத்த மட்டத்தை உயர்த்தும். உங்களை அதிகம் உண்ணச் செய்யும். உங்களின் உடற் செயற்பாட்டையும் குறைக்கும். அரிசோனா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆய்வின் படி உங்கள் பணி மனை மேசையில் அதிக பக்டிரியாக்கள் இருக்கின்றன என்று அறியப்பட்டுள்ளது. பணிமனை மேசையில் கழிப்பறை இருக்கையில் இருப்பதிலும் பார்க்க பல மடங்கு நுண் கிருமிகள் இருக்கின்றனவாம்.

3. வீட்டு வேலைகள்
பணிமனையில் இருந்து வீடு திரும்பியவுடன் வீட்டு வேலைகளில் ஈடுபடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு கெடுதலானது. வீட்டு வேலைகளை வீட்டில் உள்ள மற்றவர்களுடன் கூடிச் செய்யுங்கள்.

4. ATM machines 
வங்கிகளில் உள்ள ATM machines இல் அடிக்கடி பணம் எடுப்பது ஆரோக்கியத்திற்கு கெடுதல். பணம் எடுத்தால் வங்கியில் பணம் குறைவதால் ஆரோக்கியம் கெடுகிறது என்று நினைக்க வேண்டாம். ATM machines அதிக அளவு நுண் கிருமிகள் இருக்கின்றன. அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு கெடுதலானது. ATM machines பாவித்தவுடன் கைகளை நன்கு சோப் போட்டுக் கழுவுங்கள்.

5. உங்கள் திட்டங்களை அடிக்கடி ஒத்தி வைத்தல்
உங்கள் நடவடிக்கைகளை நன்கு திட்டமிடவும். பின்னர் இயன்ற அளவு அத்திட்டத்தின் படி நடந்து கொள்ளவும். செய்ய வேண்டியவற்றை ஒத்தி வைக்காமல் செய்யவும். திட்டங்களை நேரத்திற்கு முடிக்காததால் உங்கள் சமூக வாழ்வு பாதிக்கப்படுகிறது. அதனால் உங்கள் ஆரோக்கியத்திற்கு கெடுதல் ஏற்படுகிறது.

உங்கள் ஆரோக்கியத்திற்கு உகந்த சில பழக்கங்கள்:

1. அடிக்கடி ஒளிப்படம் எடுத்தல்.
உங்கள் மகிழ்ச்சியான தருணங்களை ஒளிப்படம் எடுத்துப் பதிவு செய்து வைத்துக்கொள்ளுதல் நல்லது. பின்னர் அதை திரும்பிப் பார்க்கும் போது உங்கள் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

2. சிறு கோபம் பெரும் போகம்
அவ்வப் போது உங்கள் நியாயமான கோபங்களை அடக்காமல் வெளிப்படுத்துவது உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

3. சிறு மன அழுத்தத்திற்கு உள்ளாவது சிறந்தது.
அவ்வப் போது சிறு "டென்ஷன்" இற்கு உள்ளாவதும் சிறந்தது. அது உங்கள் நோய் எதிர்ப்பு வலுவை அதிகரிக்கும்.


4. வலையமப்பா மூளைக்கு வலுவப்பா
சமூக வலயத் தளங்களில் நேரம் செலவழிப்பதும் பிரபலங்கள் பற்றிய கிசு கிசுக்களை வலயத் தளங்களில் அறிந்து கொள்வதும் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது என்கின்றனர் லொஸ் ஏஞ்சலிஸில் உள்ள கலிபோர்ணியா பல்கலைக் கழக்த்தினர். நடுவயதினருக்கும் வயதானவர்களுக்கும் இவை மூளை முதுமை அடைவதைத் தடுக்குமாம். அதுமட்டுமல்ல வலய உலாவருபவர்களின் மூளையின் பல பகுதிகள் செயற்பாட்டிற்கு உள்ளாகின்றன. அது தீர்மானம் எடுக்கும் திறனையும் ஞாபக வலுவையும் மொழித்திறனையும் அதிகரிக்கின்றது.


5 அழுது தீருங்கள்
அவ்வப்போது கண்ணீர் சிந்துவதும் ஆரோக்கியத்திற்கு உகந்தது. புளோரிடாப் பல்கலைக் கழக்த்தின் ஆய்வின் படி 88.8%மானவர்கள் அழுதபின்னர் ஆறுதலடைகின்றனர். மன அழுத்தத்தின் போது எமது உடலில் உருவாகும் வேதிப் பொருட்கள்(chemicals) அழுவதால் அகற்றப்படுகின்றனவாம். தொலைக்காட்சி நாடகங்கள் அல்லது திரைப்படங்கள் பார்த்து அழுவதும் இதில் அடங்குகின்றன.

6. திருமணம் தரும் நலம்
பல ஆய்வுகள் திருமணமானவர்கள் திருமணம் ஆகாதவர்களிலும் பார்க்க  நீண்ட காலம் வாழ்வதாகத் தெரிவிக்கின்றன. பிள்ளைகள் இருப்பது இன்னும் சிறப்பாம். 1.5 மில்லியன் பேர்களை வைத்துச் செய்த ஆய்வின்படி இரு பிள்ளைகள் இருக்கும் தாய்மார்களுக்கு புற்று நோய் இருதய நோய் போன்றவை வருவது குறைவாம்.


7 வீட்டு வேலை சிறந்த உடற்பயிற்ச்சி
Cancer Research UK செய்த ஆய்வின்படி உடற்பயிற்சி செய்வதிலும் பார்க்க வழமையான் வீட்டு வேலைகள் செய்வது உடலுக்கு ஆரோக்கியமானது.

Sunday 18 November 2012

கொதிக்கும் தென் சீனக் கடல் தீவுகள்

தென் சீனக் கடலானது பசிபிக் பெருங்கடலுக்கும் இந்துப் பெருங்கடலுக்கும் இடையில் இருக்கும் 3.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் கடற்பரப்பாகும். இது வடக்குத் தெற்காக 1800 கிலோ மீட்டர்  நீளத்தையும் கிழக்கு மேற்காக 900 கிலோ மீற்றர் நீளத்தையும் கொண்டது. தென் சீனக் கடலில் பல குட்டித் தீவுகள் உள்ளன. இவற்றில் பல தீவுகள் கடல் பெருக்கெடுக்கும் போது முற்றாக நீரில் மூழ்கிவிடும்.

உலக கடற் போக்கு வரத்தில் மூன்றி ஒரு பகுதி தென் சீனக் கடலினூடாக நடை பெறுகிறது. தென் சீனக் கடலானது கப்பல் போக்கு வரத்திற்கும் கனிம வள இருப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி விட்டது. அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கிறதென்ற செய்தி அப்பிராந்தியத்தை பல நாடுகள் முட்டி மோதக்கூடிய களமாக்கிவிட்டது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  கடலுணவு வளமும் அங்கு நிறைய உண்டு.

சரித்திரப் பின்னணி
1951-ம் ஆண்டு 48 நாடுகள் சன் பிரான்சிஸ்கோ நகரில் கூடி இரண்டாம் உலகப்போரை அதிகாரபூர்வமாக முடிவுற்கு கொண்டு வரும் சன் பிரான்சிஸ்கோ உடன் படிக்கையில் கையொப்பமிட்டன.  மாநாட்டில் கலந்து கொண்ட சோவியத் ஒன்றியம், போலந்து, செக்கோஸ்லாவாக்கியா ஆகிய நாடுகள் கையொப்பமிட்டன. மாவோ சே துங் பெரும் உள்ளூர்ப் போரில் ஈடுபட்டிருந்தபடியால் சீனா கலந்து கொள்ளவில்லை. மாநாடு ஜப்பானிற்கு பாதகமானது என்று சொல்லி இந்தியா கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஜப்பான் கலந்து கொண்டு கையொப்பமிட்டது. சன் பிரன்சிஸ்க்கோ உடன்படிக்கையின் படி ஜப்பானின் ஆதிக்கத்தில் இருந்து கொரியா, தாய்வான்,  பேஸ்கடோர்ஸ், ஹாங்காங், அண்டார்டிக்கா, ஸ்பிரட்லி தீவுகள், கியூரில் தீவுகள் ஆகியவை உத்தியோக பூர்வமாக விடுவிக்கப்பட்டன. தென் சீனக் கடலில் உள்ள தீவுகள் யாருக்கு சொந்தம் என்று சன் பிரான்சிஸ்கோ உடன்படிக்கையில் வரையறை செய்யவில்லை. அப்பகுதியில்  பொனின் தீவுகளும் ஒக்கினாவா அமானி, மியக்கோ யேயாமா ஆகியவற்றை உள்ளடக்கிய ரியாக்கு தீவுகளும் (Bonin Islands and the Ryukyu Islands, which included Okinawa and the Amami, Miyako and Yaeyama Islands groups) அமெரிக்காவின் நம்பிக்கைப் பொறுப்பில் விடப்பட்டன.

பன் முக மோதல்கள்
இப்போது தென் சீனக்கடலில் 90% கடற்பரப்பை சீனா தன்னுடையவை என்று அடம் பிடிக்கிறது. தென் சீனக் கடலில் உள்ள தீவுகளிற்கு சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ். புரூணே, மலேசியா, வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. அத்தீவுகளில் உள்ள மீன்வளம், கனிம வளம் மட்டும் இந்த உரிமைப்பிரச்சனையைக் கொண்டு வரவில்லை. எண்ணெய் வளம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு உரிமை கொண்டாடுபவர்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. 1974இலும் 1988இலுன் சீனாவும் வியட்னாமும்  ஸ்பிரட்லி தீவுகளுக்காக மோதிக் கொண்டன. பிலிப்பைன்ஸ் வியட்னாமுடனும் மலேசியாவுடனும் மோதக் கூடிய நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன. ஜப்பானிய சீன கடற்படைக் கலன்கள் நேருக்கு நேர் மோதக் கூடிய சூழ்நிலையும் தென் சீனக் கடலில் உருவாகி உள்ளது. சீனாவும் பிலிப்பைன்ஸும் மோதக் கூடிய சூழலும் உருவாகியிருந்தது. ஜப்பான் அரசு தனது நாட்டுக் குடிமகன் ஒருவரிடம் இருந்து செங்காக்குத் தீவுகளை வாங்கியது சீனாவை ஆத்திரப்படுத்தியது. ஜப்பானிய மக்கள் சீனாவிற்கு எதிராகவும், சீனர்கள் ஜப்பானுக்கு எதிராகவும் கிளர்ச்சிகள் செய்தனர். ஸ்பிரட்லி தீவுகளில் மட்டும் 225 பில்லியன் பிப்பாய் எண்ணெய்க்கு ஈடான எரிவாயு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

படை நகர்த்தும் சீனா
தென்சீனக் கடல் தீவுகளில் ஒன்றான யொங்சிங் எனப்படும் தீவை தனது ஒரு நகரமாக அறிவித்து அங்கு தனது படையையும் அனுப்பியது. தென் சீனக் கடலில் தனது ரோந்துப் படகுளையும் நடமாடவிட்டுள்ளது. அடுத்தடுத்து சீன ஊடகங்கள் வாஷிங்டனுக்கு தென் சீனக் கடலுக்கு உரிமை கொண்டாடும் நாடுகளுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என எச்சரிக்கைகளும் விடுக்கிறது. தென் சீனக் கடலில் சீனக் கடற்படையினர் பெரும் ஒத்திகைகளையும் நடாத்தினர். சீன அரசு தனது பலத்தை தனது மக்களுக்கு புலப்படுத்தும் முயற்ச்சிக்கு தென் சீனக்கடலைப் பாவிக்கிறது. தென் சீனக் கடலுக்கென்றே 5400 தொன் எடையுள்ள கப்பல் ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது.

ஒன்பது துண்டுக் கோடும் பதினொரு துண்டுக் கோடும்
ஒவ்வொரு நாடுகளும் வரைந்த எல்லைகள்

1947-ம் ஆண்டில் இருந்த சீன ஆட்சியாளர்கள் தென் சீனக் கடலில் தங்கள் ஆதிக்கத்தை ஒரு 11துண்டுக் கோடுகள் வரைபடத்தின் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர் 1949இல் சீனாவில் ஆட்சிக்கு வந்த பொதுவுடமை ஆட்சியாளரான சூ என் லாய் ஒரு 9 துண்டுக் கோடுகள் மூலம் தென் சீனக் கடலில் தமது ஆதிக்கத்தை வரையறை செய்தார். இதன்படி பரசெல்ஸ் தீவுகளும் ஸ்பிராட்லி தீவுகளும் தன்னுடையவை என்றது. பரசெல்ஸ் தீவுகள் தம்முடையவை என வியட்னாமும் தாய்வானும் சொல்கின்றன. பரசெல்ஸ் தீவுகளில் சில தமது நாடுகளுக்கு அண்மையில் இருப்பதால் அவை தம்முடையவை என்கின்றன இந்தோனேசியாவும் பிலிப்பைன்ஸும் புரூனியும், மலேசியாவும். 

தாய்வானும் சீனாவும் ஸ்பிராட்லி தீவுகளையும், பரசெல்ஸ் தீவுகளையும் தம்மிடம் ஜப்பான் கையளிக்க வேண்டும் என்கின்றன. தாய்வான் 1947இல் செய்யப்பட்ட 11 துண்டுக் கோடுகள் வரைபடத்தை ஒட்டி நிற்கிறது. சீனாவினதும் தாய்வானினதுக் கோரிக்கைகளிற்கு எந்த ஒரு பன்னாட்டு உடன்படிக்கையும் அடிப்படையாக அமையாவில்லை என வியட்னாம் வாதாடுகிறது. முழுத் தாய்வானும் தன்னுடையது என்று சீனா சொல்வதால் மேலும் சிக்கல்கள் இருக்கின்றன.

The United Nations Law of the Sea Convention
1982இல் ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட கடல் மரபொழுங்குச் சட்டத்தின்படி  (The United Nations Law of the Sea Convention) தென் சீனக் கடலில் உள்ள 40 தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என வியட்னாமும் மலேசியாவும் இணைந்து ஐநாவிடம் ஒரு மனுவைச் சமர்ப்பித்தன. உடனே சீனாவும் தனது ஒன்பது துண்டுக் கோட்டு வரைபடத்தை இணைத்து ஒரு மனுவை ஐநாவிடம் சமர்ப்பித்தது. சீனாவின் மனுவை எதிர்த்து வியட்னாம் தனது அறிக்கையை ஐநாவிடம் சமர்ப்பித்தது.

பிலிப்பைன்ஸின் சமாதான முயற்ச்சி
தென் சீனக் கடல் முரண்பாட்டில் அதிக அக்கறை காட்டி வரும் பிலிப்பைன்ஸ் கடல் மரபொழுங்குச் சட்டத்தின்படி ஒரு "சுதந்திர, சமாதான, அமைதி, ஒத்துழைப்பு, நட்புறவுப் பிராந்தியம்" என்னும் முன் மொழிவை முன் வைத்துள்ளது. அதில் எவை யாருக்குச் சொந்தமானவை என்பதையும் எவை முரண்பாட்டிற்கு உட்பட்டவை என்பதையும் வரையறை செய்தது. தென் சீனக் கடற்பிராந்திய்த்தின் 90%இற்கு உரிமை கொண்டாடும் சீனா இதை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

சீனாவின் ஒன்பது துண்டுக் கோட்டு வரைபு

சீனாவின் ஒன்பது துண்டுக் கோட்டு வரைபு சட்டபூர்வமற்றது என Dr. Hasjim Djala என்னும் பிரபல இந்தோனேசிய சட்ட நிபுணர் கூறுகிறார். ஒரு நாட்டின் கடல் ஆதிக்கம் அதன் தரையில் இருந்து மூன்று கடல் மைல்கள் வரையுமே இருக்கிறது. ஆனால் சீனா தனது கடல் எல்லை சரித்திர பூர்வமானது என்கிறது. தென் சீனக் கடல் மீது தனக்கு இருக்கும் ஆட்சியுரிமை 2000ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்கிறது சீனா.

மோதல் வெடிக்குமா?
சிங்கப்பூரில் செயற்படும் தென் கிழக்காசிய நாடுகளுக்கான கற்கை நிலையத்தின் இயன் ஸ்ரோறி தென் சீனக் கடலில் ஒரு மோதல் வெடிப்பதற்கான சாத்தியம் அதிகரித்து வருகிறது என்கிறார். மீன் பிடி உரிமை எண்ணெய் வள் ஆயவு உரிமைதொடர்ப்பாக் நாடுகளுக்கிடையில் மோதல் உருவாகலாம் என்கிறார் அவர். மோதல் ஒரு சிறு அளவின் நடக்கலாம் ஆனால் அது பெரும் போராக மாறும் சாத்தியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். வேறு சில நிபுணர்கள் சீனா தனது கடலாதிக்கத்தை விரிவுபடுத்த முனைகிற வேளையில் தன்னை ஒரு பிராந்தியத் தொல்லையாளனாக காட்ட விரும்பவில்லை என்கிறார்கள். அத்துடன் தென் சீனக் கடல் தொடர்பாக முரண்படும் எந்த ஒரு நாட்டின் மீதாவது தாக்குதல் நடாத்துவது சீனாவின் நீண்டகால தந்திரோபாயங்களுக்கு உகந்தது அல்ல என்றும் சொல்கின்றனர். தனது கடல் வழங்கற்பாதை பாதுகாப்பானதாகவும் அச்சுறுத்தல் இல்லாததாகவும் இருக்க சீனா விரும்புகிறது.

குழம்பிய தென் கடலில் மீன் பிடிக்கத் துடிக்கும் அமெரிக்கா
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் அமெரிக்கா தென் சீனக் கடல் மோதலைச் சும்மா விடுமா?  ஏற்கனவே அமெரிக்காவுடன் நெருக்கமான உறவைக் கொண்ட தென்கொரியாவும் ஜப்பானும் அமெரிக்காவுடன் மேலும் நெருங்கி வருகின்றன. அவை அமெரிக்காவுடன் தொழில்நுட்ப மற்றும் உளவுத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்கின்றன. பிலிப்பைன்ஸும் தென் சீனக் கடல் முறுகலைத் தொடர்ந்து அமெரிக்காவுடனன தனது உறவைப் பலப்படுத்துகிறது. தாய்வான் தனது இருப்பிற்கு அமெரிக்காவைப் பெரிதும் நம்பி இருக்கிறது. தென் சீனக் கடல் பற்றிய முரண்பாடுகள் அமைதியாகவும் பேச்சு வார்த்தைய் மூலமாகவும் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தென் சீனக் கடல் தொடர்பாக அமெரிக்கா நடுநிலை வகிக்கிறது என்றும் 2012 செப்டம்பர் சீனா சென்ற அமெரிக்க அரசத் துறைச் செயலர் ஹிலரி கிளிண்டன் கூறினார். மற்ற நாடுகளுக்கு சென்றபோது அந்த நாடுகள் ஒன்று சேர்ந்து சீனாவுடன் பேச்சு வார்த்தை நடாத்த வேண்டும் என ஹிலரி தெரிவித்தார். ஆனால் சீனா தென் சீனக் கடல் தொடர்பாக சமபந்தப் பட்ட நாடுகளுடன் தனித் தனியாக மூடிய அறைக்குள் மட்டுமே பேச்சு வார்த்தை நடாத்தப்படும் என்றது. பன்னாட்டு தீர்ப்பாயங்கள் மூலமாகப் பேச்சு வார்த்தை நடாத்துவதற்கு சீனா மறுத்துள்ளது. அமெரிக்கா இந்த நூற்றாண்டை ஆசிய பசுபிக் நாடுகளின் நூற்றாண்டாகப் பார்க்கின்றது. உலக மக்கள் தொகையில் அரைவாசி ஆசிய பசுபிக் நாடுகளில் இருக்கின்றனர். அவர்களின் பொருளாதார வளர்ச்சி வேகமானதாக இருக்கிறது. அமெரிக்க வர்த்தகத் துறையினர் இதைப் பார்த்து நாக்கைத் தொங்கப் போடுகின்றனர். தென் சீனக் கடல் முரண்படு அமெரிக்க படைக் கலன் வர்த்தகத்தையும் அதிகரித்துள்ளது. தேய்வடையும் ஐரோப்பாவும் வளர மறுக்கும் ஆபிரிக்காவும் அமெரிக்காவின் கவனத்தை ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பால் திருப்பியுள்ளன. சீனாவின் ஆதிக்க வளர்ச்சியைத் தடுக்க தென் சீனக் கடல் முரண்பாட்டை அமெரிக்கா பயன்படுத்துகிறது. இந்தியா, ஒஸ்ரேலியா, நியுசிலாந்து ஆகியவற்றுடன் தென் சீனக் கடல் பிராந்திய நாடுகளையும் இணைத்தால் சீனாவிற்கு எதிரான ஒரு பெரும் சிலந்தி வலையை அமெரிக்காவால் உருவாக்க முடியும்.

ஆசியான் மாநாடு
17/11/2012 தொடங்கிய ஆசியான் நாடுகளின் மாநாடு சீனாவுடன் தென் சீனக் கடல் தொடர்பாக ஒரு உடன் தொலைபேசித் தொடர்பை (South China Sea hotline) ஏற்படுத்துவதன் நேடடி மோதல்களைத் தவிர்க்கலாம் என்று  அறிவித்தது. ஆசியான் மாநாட்டில் சீனப் பிரதமரும் அமெரிக்க அதிபரும் கலந்து கொள்கின்றனர். தென் சீனக் கடற்பிரச்சனை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஆசியான் நாடுகளிடை பெரும் முறுகலை உருவாக்கியுள்ளது. ஆசியான் உறுப்பு நாடான கம்போடியா சீன சார்பாகச் செயற்படுகிறது. கம்போடியாவில் இருக்கும் மக்களில் 5%மானோர் மட்டுமே சீனர்கள் ஆனால் கம்போடியப் பொருளாதாரத்தில் 80% அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பல அமைச்சர்களும் இருக்கிறார்கள்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...