Saturday 14 April 2012

பூகம்பத்தால் கூடாமல் போன கூடாங்குளம்

கூடாங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது எனச் சொல்லி வந்த அதிகாரிகள் சென்னையிலிருந்து 1500 கிலோமீட்டர் தொலைவில் இந்தோனேசியாவில் சுமத்ராவை மையமாகக் கொண்டு 8.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து காசிநாத் பாலாஜி தலைமையில் அணு மின் நிலையத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியது ஏன் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. பாதுகாப்பானது என்பதில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லையா?

 2004 வேறு 2012 வேறு
இந்தோனெசியாவில் 2004இல் ஏற்பட்ட பூமி அதிர்வு தமிழ்நாட்டில் உணரப்படவில்லை ஆனால் தமிழ்நாட்டை 24 மீட்டர் ஆழிப்பேரலை தாக்கியது. அதே இடத்தில் கிட்டத் தட்ட அதே அளவு நில அதிர்வு 2012இல் ஏற்பட்ட போது தமிழ்நாட்டில் அதிர்வு உணரப்பட்டது ஆனால் ஆழிப் பேரலை எங்கும் ஏற்படவில்லை. ஒரு மீட்டருக்கும் குறைவான அலை உருவானது. அது அந்தமான் தீவில் 35 செண்டி மீட்டராகக் குறைந்திருந்தது.

தகடுகளிடை அதிர்வும் தகட்டுள் அதிர்வும்
2004இல் நிகழ்ந்த அதிர்வு பூமித் தகடுகளிடை (inter plate) புறணிக் குமை பிராந்தியத்தில் (subduction zone) நிகழ்ந்த மேல் நோக்கிய அதிர்வு ( vertical movement). 2012இல் நிகழ்ந்த அதிர்வு இந்தியப் பூமித் தகட்டக்குள்(intra plate) நடந்தது ஒரு பக்கவாட்டு  (horizontal movement). சில ஆய்வாளர்கள் 2012இல் நடந்தது ஒரு புது விதமான அதிர்வாக இருக்கலாம். இதுபற்றிய ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அனர்த்தம் ஏற்படுத்தும் அனர்த்தம்
2004இல் ஏற்பட்ட அதிர்வு இந்தியப் பூமித் தகட்டின் மேற்பரப்பில் ஏறடுத்திய சிதைவுகளின் விளைவுதான் 2012இல் ஏற்பட்ட சிதைவு என்று சொல்லப்படுகின்றது. 2012இல் ஏற்பட்ட சிதைவு புதிதாக ஒரு பூமித் தகட்டை உருவாக்கியுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.  2012இல் ஏற்பட்ட அதிர்வு தகட்டு மேற்பரப்பில் மேலும் தகர்வுகளை ஏற்படுத்தி இருக்கலாம். இவ்விரண்டும் கூடாங்குளத்திற்கு அண்மையில் பூமித் தகடுகளிடை (inter plate) அதிர்வு ஏற்படும் சாத்தியத்தையும் பூமித் தகட்டக்குள்(intra plate) அதிர்வு ஏற்படும் சாத்தியத்தையும் அதிகரித்துள்ளது.

எச்சரிக்கைக் கருவிகள்
2004 இல் ஏற்பட்ட ஆழிப் பேரலையைத் தொடர்ந்து பல நாடுகளில் ஆழிப் பேரலை எச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்பட்டன. இவை 2012இல் சரியாக வேலை செய்து எச்சரிக்கையை விடுத்தன என்று சொல்லப்படுகிறது. இனி வரும் பூமி அதிர்வுக்கெல்லாம் ஆழிப் பேரலை எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தால் புலி வருகிறது என்ற கதையாகிப் போய்விடும். சாதாரணப் பூமி அதிர்வு வேறு ஆழிப் பேரலை கொண்டுவரும் பூமி அதிர்வு வேறு என்பதை 2012இல் நிகழ்ந்த பூமி அதிர்வு உணர்த்துகிறது. இவற்றைக் பாகுபடுத்தக் கூடிய கருவிகள் தேவை.

ஆழிப்பேரலையால் அழிந்த தமிழன்
தொன்று தொட்டே தமிழினத்திற்கு போராலும் சாவு நீராலும் சாவு. கூடாங்குளம் ஈழத்திற்கு அண்மையில் இருக்கிறது. மைலாப்பூரிலும் பார்க்க ஈழத்திற்கு அண்மையில் இருக்கிறது. கூடாங்குளம் பாதுகாப்பானது என்றல் புது டில்லியில் இந்தியப் பாராளமன்றத்திற்கும் தென்மண்டல அதிகார மையத்திற்கும் நடுவில் ஒரு அணு மின் உலையை அமைக்கலாம். அணு உலை வெடிப்பால் ஒரு அழிவு தமிழனுக்கு வேண்டாம்.

Friday 13 April 2012

ஒவ்வொரு நாளும் தமிழனுக்குப் புத்தாண்டாகும்


கால நதியின் வட்டத் தொடரோட்டத்தில்
அசைந்து செல்லும் ஒரு சிறு புள்ளி
அதைப் புத்தாண்டென்பர்
இன்று ஒன்றும் இங்கு முடியவில்லை
நாளை ஒன்றும் புதிதாகத் தொடங்கப் போவதுமில்லை
புத்தாண்டு எனப் புதிதாக ஒன்றும் இல்லை
வேதம் ஓதும் தமிழினக் கொலைக் கும்பல்
கூச்சலிடும் குள்ள நரி அரசியல் கூட்டம்
நேற்றும் அப்படியே நாளையும் அப்படியே
புத்தாண்டு எனப் புதிதாக இங்கொன்றும் இல்லை
தமிழன் நிலமெங்கும் சிங்களக் குடிகள்
தமிழன் தெருவெங்கும் சிங்களக் கடைகள்
இன்றும் அப்படியே நாளையும் அப்படியே
புத்தாண்டு எனப் புதிதாக இங்கொன்றும் இல்லை


மேடம் முதல் மீனம் வரை தொடரும் வட்டதில்
தொடக்கமும் இல்லை முடிவுமில்லை
இதில் பழையது எது?   புதியது ஏது?
குருவாய் இருக்க வேண்டிய இந்தியா
சிங்களத்தின் எருவாய் கழுவும் கலியாய் மாறியதால்
ஒன்பதாதிபனும் பதினோராதிபனும்
ஒன்றாய் கூடி இரட்டைக் கோபுரம் தகர்த்ததால்
ஆடிக் கூடி நின்ற பன்னாட்டுச் சமூகம்
பாதகன் வீட்டில் நீசனாகியதால்
தென் துருவத்துக் கடகத்தில் 2009இல்
திசைமாறிப் போனது எங்கள் ஞாயிற்று ஒளி

இரண்டாயிரத்துப் பதின்நான்கில் இந்தியாவில் 

இத்தாலிச் சனியனின் மாற்றம் நிகழ
மனித உரிமைக்கழகப் புதன்
ஐநாவிற்கு சரியாகப் பெயர்ச்சியுற
பான் கீ மூன் தேயும் மூன் ஆக

நீசர்கள் இடம் மாற நிலைமைகள் சரியாக
 தமிழர்க்குத் தொடங்கும் சுக்கிர திசை
ஆண்டாண்டாய் முடிவின்றித்
தொடரும் தமிழன் ஆட்சி
தை என்ன சித்திரை என்ன
ஒவ்வொரு நாளும்
தமிழனுக்குப் புத்தாண்டாகும்

Thursday 12 April 2012

ஆழிப்பேரலை(சுனாமி) ஏன் உருவாகவில்லை?

நேற்று (11-04-2012) நடந்த பூமி அதிர்வு ஏன் சுனாமி எனப்படும் ஆழிப்பேரலைய உருவாக்கவில்லை என்பதற்கு விஞ்ஞானிகள் விளக்கம் கொடுத்துள்ளனர். 2004-ம் ஆண்டு 9.1 ரிச்சர் அளவு கோலில் நிகழ்ந்த பூமி அதிர்வு 230,000 மக்களைப் பலி கொண்டது. அதில் இந்தோனெசியாவின் ஆசே மாகாணத்தில் மட்டும் 170,000 கொல்லப்பட்டனர்.

 2004இல் நடந்த அதிர்வு கடலடியின் கீழ் 14 மைல் ஆழத்தில் நிகழ்ந்தது. 2012 இல் 10 மைல் ஆழத்தில் நடந்தது. 2012 அதிர்வில் எவரும் கொல்லப்பட்டதாகத் தகவல் இதுவரை இல்லை. ஆனால் 2012 அதிர்வு பல நாடுகளில் உணரப்பட்டது.

நேற்று உள்ளூர் நேரம் பிற்பகல் 2.38 இற்கு இந்தோனொசியாவில் நிகழ்ந்த பூமி அதிர்வு 2004இல் நிகழ்ந்த பூமி அதிர்விலும் வித்தியாசமானது.

நிகழ்ந்த இடம் வித்தியாசமானது
2004-ம் ஆண்டு நிகந்த பூமி அதிர்வு subduction zoneஇல் நிகழ்ந்தது. subduction zone என்பது ஒரு பூமித் தகட்டின்(tectonic plate) ஓரம் இன்னொரு பூமித் தகட்டின் ஓரத்தின் கீழ் இருந்து அழுத்தம் கொடுக்கும் பிராந்தியம் ஆகும். 2004 அதிர்வு நடந்தஹ் subduction zoneஇன் பரப்பளவு அமெரிக்க கலிபோர்ணியா மாநிலத்திற்கு ஈடானது. கடல் நீருக்கு அடியில் கீழ்த் தகடு மேலுள்ள தகட்டை மேல் நோக்கித் தட்டும் போது ஏற்படும் அதிர்வில் கடல் நீர் பெரும் அளவில் மேல் நோக்கித் தள்ளப்படும். இப்படி மேல் நோக்கித் தள்ளப்படும் நீர் கடல் மேற்பரப்பில் பாரிய அலையை உருவாக்கும். இவ் அலை சுனாமி எனப்படும் ஆழிப் பேரலையாகும். இது கரையில் மோதும் போது பெரும் அழிவு ஏற்படும். நேற்று நிகழ்ந்த அதிர்வு subduction zoneஇல் இருந்து 100 மைல்(160கி.மீ) தொலைவில் நிகழ்ந்தது. இதனால் இது ஒரு பூமித் தகட்டுக்குள்(intraplate) நிகழ்ந்த அதிர்வாகும். இரு தடுகள் மோதுப்படுகையில் ஏற்படும் அதிர்விலும் பார்க்க ஒரு தகடு தனக்குள் ஏற்படுத்தும் அதிர்வு தாக்கம் குறைந்தது.
2004 அதிர்வு இந்தியத் தகடும் ஒஸ்ரேலியத் தகடும் சந்திக்கும் இடத்தில் நடந்தது. 2012 அதிர்வு இந்தியத் தகட்டில் நடந்தது.
2004 இல் நடந்த அதிர்வு இலங்கை போன்ற நாடுகளில் உணரப்படவில்லை. அது இந்தியத் தகட்டின் ஓரத்தில் நடந்தது. 2012இல் நடந்தது இந்தியத் தகட்டிலேயே நடந்ததால் அந்தத் தகட்டில் உள்ள நாடுகளில் அதிர்வு உணரப்பட்டது.

2004இல் நடந்த அதிர்வு 2012இல் நடந்த அதிர்வுடன் ஒப்பிடுகையில் ஆறு மடங்கு சக்தியை வெளிவிட்டது.

பக்கவாட்டு உரசலால் வரும் அதிர்வு ( strike-slip event)
நேற்று நடந்த அதிர்வில் ஏற்பட்ட ஆக கூடிய அளவு அலையின் உயரம் மூன்றடி மட்டுமே. இது இந்தியத் தகட்டின் மேற்பரப்பில்(crust) உள்ள குறைபாட்டால் தகட்டில் ஒரு பக்கவாட்டு அசைவு ஏற்பட்டதால் உருவான அதிர்வே நேற்று நடந்தது. இந்த அதிர்வு 2004இல் ஏற்பட்ட அதிர்விலும் சிறியதே.
பக்கவாட்டு உரசல்
 ஒரு தகட்டின் மேற்பகுதியில் உள்ள பாறைகள் தொடர்ச்சியாக ஒரே சீரான உறுதியுடன் இருக்காமல் அவை வேறு வேறு உறுதிப்பாட்டுடன் இருப்பதால் தகட்டின் மேற்பகுதியில் குறைபாடு ஏற்படும் இதனால் தகட்டின் இருபகுதிகள் பக்கவாட்டாக ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்ளும். இந்த உரசல் பெருமளவு கடல் நீரை மேல் நோக்கித் தள்ளாது. இதனால் பக்கவாட்டு உரசலால் பாதிப்புக் குறைவு. இந்தப் பக்கவாட்டு உரசல் தகட்டின் மேற்பகுதியில் ஒரு அதிர்வு அலையை(நீரலை அல்ல)  இயக்கத்தை உருவாக்கும். இந்த அதிர்வு அலை நீண்டதூரம் வரைச் செல்லும். இது lateral movement எனப்படும். பக்கவாட்டு அசைவு.

சுனாமி உருவாகும் அதிர்வு :
இரு தகடுகள் தண்ணீருக்குக் கீழ் சந்திக்கின்றன.

ஒரு தகடு மற்றத் தக்கட்டை மேல் நோக்கி அழுத்துகிறது. அதனால் அதிர்வு உருவாகிறது

அதிர்வு மேல் நோக்கி கடல் நீரைத் தள்ளுகிறது

மேல் நோக்கித் தள்ளப்பட்ட நீர் ஆழிப் பேரலையாகிறது.

மேல் நோக்கித்தள்ளப்படுவது vertical movement எனப்படும்.


சுனாமி உருவாக்காத அதிர்வு
பூமித் தகடுகளின் ஓரத்தில் நடக்காமல் தகடுகளின் மத்தியில் நடந்த பூமி அதிர்வுகளில் நேற்று நடந்த அதிர்வு இது வரை அ|றியப்பட்ட அதிர்வுகளில் பாரியது எனப்படுகிறது. இது ஒரு வித்தியாசமான அதிர்வாக இருக்கலாம் எனவும் சிலர் கருதுகின்றனர்.

நேற்று நடந்த ஒரு சில நிமிடங்களுக்குள் U.S. Pacific Tsunami Warning Center சுனாமி வருவதைக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவித்து விட்டது. இலங்கை இந்தியா பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ள சுனாமி எச்சரிக்கைக் கருவிகள் சுனாமி எச்சரிக்கையை உணர்த்தின.

Wednesday 11 April 2012

சுனாமிப் புரளிகளை நம்ப வேண்டாம்

பண்டா ஆசேயில் இருந்து 308மைல் தொலைவில் 20.5மைல் ஆழத்தில் ஒரு பூமி அதிர்வு ஏற்பட்டது. இதன் தாக்கம் இலங்கை வரை உணரப்பட்டது. இந்தியாவில், சென்னை மாவட்டத்தில் பல இடங்களில் இந்நில நடுக்கத்தினை உணர்ந்ததால் அனைத்துப் பணிமனைகளும் மூடப்பட்டன.
The quake struck 308 miles (500 km) southwest of the city of Banda Aceh, on the northern tip of Indonesia's Sumatra island, at a depth of 20.5 miles (33 km), the U.S. Geological survey said.


இதைத் தொடர்ந்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் ஒரு சுனாமியையிட்டுக் கவனமாக இருக்கும் படி அறிவிப்பு விட்டது. பல ஊடகங்கள் இதை சுனாமி எச்சரிக்கை என திரிபு படுத்தி விட்டன. 
சுனாமி அவதானிப்பிற்கும் சுனாமி எச்சரிக்கைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. A tsunami watch means there is the potential for a tsunami, not that one is imminent.


முதல் வந்த செய்தி: The first 8.6-magnitude quake off Aceh province, hours earlier, spawned a wave around 30 inches (80 centimeters) high but caused no serious damage. Two hours after the quake hit, however, there was no sign of the feared wave. Damage also appeared to be minimal.

நடந்தது ஒரு பக்கவாட்டு அதிர்வே மேல் நோக்கிய அதிர்வு அல்ல என அமெரிக்காவில் இருந்து அறிவிக்கப்பட்டது. மேல் நோக்கிய அதிர்வு மட்டுமே சுனாமியைக் கொண்டு வரும்.

இந்தோனொசியாவில் 30 செண்டி மீட்டர் அலை வந்ததை பல ஊடகங்கள் இந்தோனொசியவைச் சுனாமி தாக்கியது என்று எழுதின. இதுவரை எவரும் கொல்லப்படவுமில்லை, எங்கும் கட்டிடங்கள் உடைந்ததாகச் செய்திகளும் வரவில்லை.

 அந்த்மான் தீவில் வெறும் 35செண்டி மீட்டர் உயர் அலை ஒன்று வந்தது. பிலிப்பைஸ் சுனாமி இல்லை என்றது. தொடர்ந்து இந்தோனொசியாவும் சுனாமி இல்லை என்றது. இவ்விரு நாடுகளும் அதிர்வு நடந்த இடத்திற்குப் பக்கதில் உள்ள நாடுகள். இவை சுனாமி இல்லை என்று அறிவித்த பின்னரும் 
இந்தியாவிலும் இலங்கையிலும் ஊடகங்கள் தொடர்ந்து சுனாமி என்று ஊளையிட்டுக் கொண்டிருந்தன.  5 மணிக்கு தமிழ்நாட்டிற்கும் 6 மணிக்கு இலங்கையையும் சுனாமி அலைகள் தாக்கும் என ஊடகங்கள் அறிவித்துக் கொண்டிருந்தன.

Latest news:
The earthquake’s movement was horizontal, not vertical, and caused no apparent movement of the sea floor, which is what triggers tsunamis, Susanne Sargeant, a seismologist with the British Geological Survey (BGS) told Agence France-Presse.“We’ve had two blocks rubbing together, it’s called a strike-slip earthquake,” Sargeant said.“That means there hasn’t been any displacement of the sea floor. Although an earthquake of this magnitude has the potential to cause a large tsunami, the fact that we haven’t seen any drop of the sea floor, which is what generates the wave, it looks like the possibility of a tsunami being generated is low.”

Kevin McCue, director of the Australian Seismological Centre, said the “predominantly strike-slip” movement suggested “any tsunami would be small and local.” The US Geological Survey (USGS) said an 8.6-magnitude earthquake struck off the coast of Sumatra at 2:38 p.m. (0838 GMT) at a depth of 33 kilometers (14.2 miles).
Mok Hing-yim, senior scientific officer at the Hong Kong Observatory, said a “minor tsunami” of 31 centimeters, or about one foot, in height had been reported at Sabang, on the coast of Indonesia.

“It’s not very significant, but we cannot ignore that there will be some higher tsunami along the coast of Indonesia. The reading indicated that a tsunami has been generated,” Mok said. Geoscience Australia specialist Daniel Jaksa said “there’s definitely tsunami signals reaching the Sumatran coast.” “Off the coast off Indonesia at the moment there’s 50 centimeters,” or 20 inches, he said.

பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் முன்பு வெளிவிட்ட சுனாமிக் கண்காணிப்பையும் திரும்பப் பெற்றுள்ளது: The Pacific Tsunami Warning Centre cancelled the watch for most areas of the Indian Ocean about four hours after the first quake. It was still in effect for Indonesia, India, the Maldives, Sri Lanka and the island territory of Diego Garcia.

விடுதலைப் புலிகளின் கப்பல்களின் நடமாட்டத்தை அவதானித்து இலங்கைக்குப் போட்டுக் கொடுத்த  இந்தியச் செய்மதிகளால் பாரிய அலைகளை அவதானிக்க முடியாதா?

ஐநாவின் ஆலோசனைக் குழுவில் சவேந்திர சில்வா இல்லை

இலங்கைப் படையின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்தபோது போர்க்குற்றம் இழைத்தவராகக் கருதப்படும் சவேந்திர சில்வா தற்போது ஐக்கியநாடுகள் சபையின் அமைதி நிலைநாட்டலுக்க்கான ஆலோசனைக் குழுவின் கூட்டங்களில் கலந்து கொள்வது இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சவேந்திர சில்வா தற்போது  ஐநாவிற்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதியாகக் கடமையாற்றுகிறார். இவர் போர்க் குற்றம் இழைத்தமைக்கான நம்பகரமான ஆதாரங்கள் இருப்பதாக ஐநா பொதுச் செயாலர் பான் கீ மூன் இலங்கைப் போரின் போது நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக் விசாரிக்க நியமித்த நிபுணர்கள் குழு தெரிவித்திருந்தது.

சவேந்திர சில்வா ஆசியப்பிராந்திய நாடுகள் சார்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி நிலைநாட்டலுக்க்கான ஆலோசனைக் குழுவில் ஒரு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட போது அவரைப் போட்டியிட வேண்டாம் என ஐநாவிற்கான பங்களாதேசப் பிரதிநிதி ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனாலும் அவர் அப்பதவிக்குப் போட்டியிட்டதுடன் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட நேப்பாள தேசப் பிரதிநிதியையும் சவுதி அரேபியப் பிரதிநிதியையும் இலங்கை கெஞ்சிக் கேட்டுப் போட்டியில் இருந்து விலகச் செய்தது.

அமைதி நிலைநாட்டலுக்க்கான ஆலோசனைக் குழுக் கூட்டம் முதலில் கூடியபோது அதன் தலைவியான கனடியப் பிரதிநிதி சவேந்திர சில்வாவை வேண்டப்படாதவராக்கிவிட்டார். பின்னர் நடந்த கூட்டத்தில் சவேந்திர சில்வா பங்கு பற்றுவதில்லை. இது தொடர்பாக ஊட்கங்கள் பான் கீ மூனிடம் கேட்ட போது அது உறுப்பு நாடுகளைப் பொறுத்தது என்று தட்டிக் கழித்து விட்டார். இலங்கைப் பிரதி நிதி பாலித கொஹென்னவிடக் சவேந்திர சில்வா ஏன் அமைதி நிலைநாட்டலுக்க்கான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றவில்லை எனக் கேட்ட போது அவர் "ஊரில் இல்லை" அதனால் பங்குபற்றவில்லை எனப் பதிலளித்திருந்தார்.

கனடாவைச் சேர்ந்த Louise Frechette ஐக்கியநாடுகள் சபையின் அமைதி நிலைநாட்டலுக்க்கான ஆலோசனைக் குழுவின் தலைவியாக இருக்கிறார். இவர் சவேந்திர சில்வா தனது குழுவிற்குப் பொருத்தமற்றவர் என்று சொன்னார். ஏப்ரல் இரண்டாம் திகதி நடந்த ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் சவேந்திர சில்வா பங்குபற்றவில்லை எனக் கூறப்படுகிறது.

Tuesday 10 April 2012

பொறுமைத் தோட்டமும் பொறாமைத் தோட்டமும்

காதல் கொடிதாகும்
நீ காதலிப்பவள்
இன்னொருவனைக்
காதலிக்கும் போது



பொறுமைத் தோட்டத்தில்
பயிர்ச் செய்கை
மிகவும் சிரமம்
அறுவடையோ
அபரிமிதம
பொறாமைத் தோட்டத்தில்
பயிரிடல் இலகு
அறுவடை அழிவு

த.தொ. நுட்பம்
மட்டமான கருவிகளை
சாதுரியமாகப் பாவித்தது
கற்காலம்
சாதுரியமான கணனிகளை
மோசமாகப் பாவிப்பது
தகவல் தொழில்நுட்பகாலம்

தீயணை
உன் கண்கள் மூட்டிய தீ
உன் கையணைபில்தான் அணையும்

நம்ம ஊர்க் காதல்
அவன் காதலை
வெளிப்படுத்தத் தயங்குவான்
அவள் காதலிக்கவில்லை
என்பதை வெளிபடுத்தத்
தயங்குவாள்



உயரிய நட்பு
இதயத்துள் பாடும்
மௌனப் பாட்டின்
வார்த்தைகள் தடங்கும்போது
உரத்து உடன்பாடுவது
உயரிய நட்பு

Monday 9 April 2012

பங்களாதேசத்திற்குள் இந்தியப் படைகள் செல்லுமா?

கிழக்குப் பாக்கிஸ்தானிற்குள் இந்தியப் படைகள் புகுந்து அதைப் பாக்கிஸ்தானில் இருந்து பிரித்து பங்களாதேசத்தை தனி நாடாக்க உதவின. மீண்டும் இந்தியப் படைகள் பங்களாதேசத்துக்குள் ஊடுருவலாம் என இப்போது கருதப் படுகிறது. பங்களா தேச அரசின் அனுமதியுடன் இது நடக்கலாம். இது தொடர்ப்பன செய்திகள் இப்போது கசிந்துள்ளன.

இந்திய பங்களாதேச இணையவெளிப் போர்(Bangladesh-India Cyber War)
இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் Black Hat Hackers என்னும் பெயர் கொண்ட பங்களாதேசத்தின் இணைய ஊடுருவிகள்(Hackers) பாக்கிஸ்த்தான், சவுதி அரேபியா, மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய எமிரேட் அரசு ஆகிய நாடுகளின் இணைய ஊடுருவிகளின் உதவியுடன் இந்தியாவின் 25,000இற்கு மேற்பட்ட வலைத்தளங்களைத் தமதாக்கிக் கொண்டனர். இதில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவு உட்படப் பல முக்கிய இணையத் தளங்களும் அடங்கும். இவை இந்திய இணைய ஊடுருவிகள் பங்களாதேசத்தின் பல அரச இணையத் தளங்களை ஊடுருவியமைக்குப் பதிலடியாக அமைந்தது. பங்களாதேச இணைய ஊடுருவிகள் ஏழு கோரிக்கைகளை வைத்து இந்தியாவை மிரட்டினர்:
1. இந்தியா பங்களாதேச இணையத் தளங்களை ஊடுருவக் கூடாது.
2. இந்திய பங்களாதேச எல்லையில் அப்பாவி பங்களாதேசிகளைக் கொல்லக் கூடாது
3. திபாமுக் அணை கட்டுவதை இந்தியா நிறுத்த வேண்டும்.
4. பங்களாதேசத்துடன் நீர் பங்கீட்டு ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
5. இந்தியத் தொலைக்காட்சிச் சேவைகளை பங்களாதேசத்தில் ஒளிபரப்புதை நீக்க வேண்டும் அல்லது பங்களாதேச் தொலைக் காட்சிச் சேவைகள் இந்தியவில் ஒளிபரப்புவதற்கான தடையை நீக்க வேண்டும்.
6. பங்களாதேச எல்லையில் இந்தியாவின் படை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.
7. பங்களாதேச மக்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளக் கூடாது.

பங்களாதேச இணைய ஊடுருவிகள் பங்களாதேசத்தில் செயற்படும் இசுலாமியத்தீவிரவாதிகள் எனவும் இவர்களுக்கு பாக்கிஸ்த்தான், சவுதி அரேபியா, மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய எமிரேட் ஆகிய நாடுகளில் இருக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக இந்தியத் தரப்பு கருதுகிறது. பங்களாதேசத்தில் இருக்கும் தீவிரவாதிகள் பங்களாதேச ஆட்சியாளர்கள் இந்திய ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்றும் இதைப்பாவித்து இந்தியா பங்களாதேசத்தைச் சுரண்டுகிறது என்றும் கருதுகிறார்கள்.

ஒரு இந்திய ஆதரவாளரான பங்களாதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா தனது நாட்டில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளை இந்தியாவுடன் இணைந்து ஒளித்துக் கட்டத் திட்டமிடுகிறார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்புத் தூதுவர் சதிந்தர் லம்பா ஏப்ரல் 5ம் திகதி பங்களாதேசத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார். அவர் பங்களாதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் இசுலாமியத் தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க இருதரப்புப் படைத்துறை ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்திய பங்களாதேச எல்லையினூடாக தீவிரவாதம், கள்ளநோட்டுக்கள், ஆயுதங்கள், போதைப் பொருட்கள் போன்றவை இந்தியாவிற்குள் நுழைகின்றன. அது மட்டுமல்ல பாக்கிஸ்த்தானின் உளவுத் துறைக்குச் சேவை செய்யும் வியட்னாமியர் ஒருவர் நேப்பாள எல்லையூடாக பலகோடி இந்தியக் கள்ள பணத்தாள்களுடன் பிடிபட்டார்.

மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்தியப் படைகள் பங்களாதேசத்துக்குள் சென்று அங்குள்ள ஒரு இசுலாமியத் தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் விரைவில் ஈடுபடலாம்.


Sunday 8 April 2012

உயிர்த்தெழும் எம் ஞாயிறு


கல்வாரி மலையிலே
தொடர்ந்தது தேவன் பயணம்
கால்வாரி இந்தியாவை நம்பித்
தொடங்கியது எம் போராட்டம்

சிலுவை சுமந்து சென்றான் தேவன்
தீயாகங்கள் சுமந்து சென்றது எப்போராட்டம்

மன்னாதி மன்னனை தேவாதி தேவனைத்
தேசத் துரோகி என்றனர்
தியாகத்தின் உச்சித் திலங்கங்களை
பயங்கரவாதிகள் என்றனர்.

முட்கிரீடம் தாங்கிச் சென்றான் தேவன்
நச்சுப் பதக்கம் எந்தினர் எம் தியாகிகள்

முப்பது காசுக்காக காட்டிக்
கொடுத்தான் தேவாதி தேவனை
பிராந்திய ஆதிக்கத்திற்கு
கூடி அழித்தனர் எம் இனத்தை

சிலுவையில் அறையப்பட்டவன்
மூன்றாம் நாள் எழுந்தான்
முள்ளி வாய்க்காலில்
வனவாசம் முடித்து
அஞ்ஞாத வாசம் தொடங்கியவன்
வருவான் நாளை

கற்பிட்டியும் எதிரியின்
புதைகுழியாகும்
மன்னாரும் தமிழன்
இன்னார் என உரைக்கும்

பாலாவியில் எதிரி
ஆவிபோகும்
கீரிமலையும் திருமலையும்
எரிமலையாகும்

அம்பாறைக் கரும்பும்
இரும்பாய் மாறி
எதிரி மேற்பாயும்
படுவான் கரையும்
எழுவான் கரையாய் மாறும்
எழுவான் கரையில்
எதிரி விழுவான் நிரையாக

நம்பியிருங்கள்
உயிர்த்தெழும் எம் ஞாயிறு
கொதித்தெழும் எம் ஈழம்
பரலோக ஆட்சி
இகம் வரும் முன்பே
தமிழன் ஆட்சி
ஈழத்தில் மலரும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...